மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது!

0
132
a-total-of-1027-vehicles-seized-vehicles-should-not-be-stopped-on-the-road-like-this
a-total-of-1027-vehicles-seized-vehicles-should-not-be-stopped-on-the-road-like-this

மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது!

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து சிதறியது.அதில் ஒருவர் பலியானார்.அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையிலும் பாதுகாப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரோந்து பணியை ஈடுபட்டனர்.அப்போது காவல் ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் சாலையோரம் நீண்ட நாட்களாக யாரும் கண்டுக்கொள்ளதா நிலையில் கிடக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதனையடுத்து அனைத்து காவல் நிலைய சட்டம் ,ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலையில் யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 1027 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் அந்த வாகனங்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K