மக்களை அச்சுறுத்த களமிறங்கிய மற்றொரு காய்ச்சல்!! இந்தியாவில் ஒருவர் பலி!!

Photo of author

By Jayachithra

டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு மத்தியில், பறவைக் காய்ச்சலும் மக்களை அச்சப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கேரளா, ராஜஸ்தான் ,ஹரியானா மத்தியப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும் ஏவியன் இன்ஃபுளுயன்சா எனும் பறவை காய்ச்சல் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் பறவைகள், காகங்கள், வாத்துகள் ஆகியன உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பறவைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது பறவைக்காய்ச்சல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவின் இந்த ஆண்டு பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் மரணம் இந்த சிறுவனின் மரணமாகும். அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைத்து ஊழியர்களும் தனிமையில் உள்ளனர் என்று அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரி டாக்டர் ஏ.எஸ்.ரனாடே ஜனவரி மாதம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் சென்றால் வைரஸ் உடனடியாக இறந்து விடும் என்று கூறியிருந்தார். அதனை அடுத்து இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் நன்கு சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.

இது 100 டிகிரி செல்சியசுக்கு மேல் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது. இதனால் மனிதர்கள் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடவதன் மூலமாக வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அரிதாகும் என்று அவர் கூறினார்