பிரியாணிக்கு ‘நோ’ சொன்ன மருத்துவமனை – கொரோனா நோயாளி செய்த பயங்கர செயல்

0
158

கோயம்புத்தூரில் 27 வயது நபருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மனைவி மட்டும் அவருக்கு உணவுகள் கொண்டு வந்து கொடுத்து அவரை கவனித்துக்கொண்ட நிலையில் பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று மனைவியிடம் கூறியுள்ளார்.

அவரது மனைவி கொரானா சிகிச்சைப் பிரிவை கண்காணிக்கும் மருத்துவரிடம் பிரியாணி கொண்டு வந்து கொடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் அனுமதி இல்லை என்றும் இந்த சூழ்நிலையில் இவ்வாறு கேட்பதே தவறு என்றும் கண்டித்துள்ளார்.

மருத்துவர் இவ்வாறு தன்னை கண்டித்ததை மனைவி அவரிடம் சொல்ல, கோபமடைந்த கணவர் சிகிச்சை வார்டில் இருக்கும் தீயணப்பானை எடுத்து அறையில் இருக்கும் கண்ணாடி ஜன்னலில் வீச, கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கண்ணாடி உடைந்த சத்தம் அங்கிருக்கும் பிற நோயாளிகளை பாதித்த நிலையில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மனைவி அவரிடம் உணவு வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.

Previous articleஇன்ஸ்டாகிராமில் புரட்சி செய்யும் ஜூலி – குவியும் ரசிகர்கள்
Next articleஒருவருக்கு ரூபாய் 5000! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு