பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

0
191

பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் போது முழுநேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், பாஜக சார்பில், அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை எனவும், அமைச்சருக்கு கமிஷன் கொடுப்பதற்காக மட்டுமே மின்சார வாரியம் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு என தொடர்ந்து கூறி வந்த தமிழக அரசு தற்போது 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசியை கையிருப்பு வைத்துள்ளதாக தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சேகர்பாபு அண்மையில் கை வைத்து இருக்கிறோம் என கூறி இருந்ததாகவும், நீங்கள் கை வைப்பதற்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் எனவும், வைத்துப்பார்த்தால் தானே பாஜக என்பது என்ன என்று உங்களுக்கு தெரியும். பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Previous articleதூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?
Next articleபாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா விலகல்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!