பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Photo of author

By Rupa

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Rupa

BJP district executive meeting in Periyakulam! Fulfillment of new resolutions!

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில், பாஜக மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, மா நில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில்,மாவட்ட பொது செயலாளர் பாலு வரவேற்புரையாற்றினார். தேனி மாவட்டத்தை சேர்ந்த பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரங்கத்தில், புதிதாக பாஜக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலாளர்கள் மாரிச்சாமி, மலைச்சாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, பெரியகுளம் பாஜக நகர தலைவர் முத்துப்பாண்டி நன்றியுரையாற்றினார்.