ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!

Photo of author

By Rupa

ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!

தற்போதெல்லாம் கூலி படையை ஏவி தாக்குவது சகஜமாகிவிட்டது.பஜாக நிர்வாகி ஒருவர் தொழில் எற்பட்ட விரோதம் காரணமாக கூலி படையை ஏவி தாக்கிய சம்பவம்  சென்னையில் தற்போது அரங்கேறியுள்ளது.சென்னையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் ஓர் சூப்பர் மார்கெட் ஒன்றை கொரட்டூரில் நடத்தி வருகிறார்.இவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு எதிரே இவரது இடம் ஒன்று உள்ளது.அந்த இடத்தில் பல வருடகாலமாக ஜெகதீஷ் என்பவர் டீ-க்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அந்த இடத்தின்  உரிமையாளர் கந்தசாமி  அந்த இடத்தில் வேறொரு தொழில் தொடங்குவதற்காக ஜெகதீஷ் இடம் கடையை காலி செய்யும் படி பல நாட்களாக கூறி வந்துள்ளார்.ஆனால் ஜெகதீஷ் கடையை காலி செய்யவில்லை.

கடையை காலி செய்ய வேண்டுமென்றால் மூன்று மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.இவர்களுக்கான இந்த பேச்சுவார்த்தை சென்ற வாரம் நடந்தது.ஆனால் இந்த பேச்சுவார்த்தை இருவருக்கிடையே கைகலப்பில் முடிந்தது.அதில் ஜெகதீஷ் கந்தசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.தாக்கியதையடுத்து கந்தசாமி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆனால் காவல்துறையினர் அதனை சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை.நாளடைவில் இருவருக்கிடையே விரோதம் அதிகரிக்க தொடங்கியது.உட்சக்கட்டமாக ஜெகதீஷ் கூலி படையை ஏவி தாக்க முயன்றுவிட்டார்.

நேற்று இரவு கந்தசாமி மற்றும் அவரது மனைவி மட்டும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்துள்ளனர்.அந்த சமையம் அங்கே வந்த கூலி படை,சக வாடிக்கையாளர்களைப் போல பொருட்களை எடுத்து தருமாறு அவரது மனைவியிடம் கூறியுள்ளனர்.அவரது மனைவியும் அவர்கள் கேட்ட பொருட்களை எடுக்க உள்ளே சென்றுள்ளார்,இந்த நேரத்தை தன்வசம் படுத்திய அந்த கூலி படை,அவர்கள் கொண்டு வந்த ராடால் கந்தசாமியை சரமாரியாக தாக்கினர்.தலையில் தாக்கியதால் கந்தசாமி அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

அவர்கள் கந்தசாமியை கொடூரமாக தாக்கிய வீடியோ கடையில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.பிறகு அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜெகதீஷ் மற்றும் அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.