துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

கோயமுத்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரதீப் ஜெகதீசன், இவருடைய மனைவி சவுமியா, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருக்கும் பிரதீப் ஜகதீசன் அவருடைய பிறந்த நாளை அன்மையில் கொண்டாடினார். அந்த சமயத்தில் தன்னுடைய மனைவி சௌமியா உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

அந்த புகைப்படத்தில் அவரது மனைவி கையில் நாட்டு துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதோடு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் கையில் நாட்டு துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகிய காரணத்தால், கோயமுத்தூரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.