திராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா
கடந்த முறை பாஜக ஆட்சி அமைத்ததை விட இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது தமிழக அளவில் திராவிட அரசியல் பேசும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திராவிட கழக தலைவர் வீரமணி போன்றோர் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் எதாவது காரணம் கூறி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் விமர்சனத்தில் பெரியார் கொள்கை,திராவிடம்,திராவிட மண்,பெரியார் மண்,திராவிட அரசியல் என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் திராவிட அரசியல், பெரியார் மண் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அரசியல் நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் எவையெல்லாம் திராவிட அரசியல் என்று பட்டியலிட்டு ஹெச். ராஜா திமுகவை விமர்சனம் செய்திருக்கிறார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் திமுகவின் திராவிட அரசியல் என்ன என்பதை பட்டியலாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது.
- சாராய ஆலையை நடத்தியபடியே, ‘டாஸ்மாக்’கை மூடச் சொல்வது.
- இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளி நடத்திகொண்டு, இந்தியை எதிர்ப்பது.
- கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லையென போராட்டம் நடத்தியபடியே, ஜோலார்பேட்டை தண்ணீரை சென்னைக்கு தர மாட்டேன் என அறிவிப்பது.

- தன் பிள்ளைகளை பல லட்சம் ரூபாய் கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து, அதே கல்வியைக் கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும், ‘நவோதயா’வை எதிர்ப்பது.
- இந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, பிற மதக் கூட்டங்களில் பங்கேற்பது.
- கோடிக்கணக்கான ரூபாய் குவித்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் திராவிட அரசியல்.
ட்விட்டரில் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ள இந்தப் பட்டியல்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.