சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல அனைவரையும் அனைத்து செல்லும் கட்சி தான் பாஜக – ராம்தாஸ் அத்வால்!!

0
189
#image_title

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல அனைவரையும் அனைத்து செல்லும் கட்சி தான் பாஜக – ராம்தாஸ் அத்வால்!!

பா.ஜ.க. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பலர் கூறுகின்றனர்; ஆனால் அப்படி இல்லை அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க-மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி.

இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே, வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பிடிக்கும். உலக நாடுகள் போற்றும் தலைவர்களில் முதல் இடத்தில் பாரத பிரதமர் மோடி இருக்கிறார். சென்னையில் இன்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தில் உள்ள இந்திய குடியரசு கட்சியின் தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பா.ஜ.க. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி இல்லை அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. சிறுபான்மையினர் அதிகம் வாழும் உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வையே வரவேற்கின்றனர், ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சிலை வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தான் கோரிக்கை வைப்பதாக கூறினார்.

தமிழகத்தில் கலப்பு திருமணத்தால் ஏற்படக்கூடிய சாதிய மோதல்கள், கொலைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். தற்போது வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தலித் கட்சிகளுக்காக தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மோடி தலித் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறும் நீங்கள் உங்களுடைய நண்பர் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலித் மக்களுக்கு எதிரானவர் என தொடர்ந்து மேடையில் பேசி வருகிறாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு.

திருமாவளவன் இருக்கும் கூட்டணி கட்சியின் காரணமாக அவ்வாறு அவர் பேசுகிறார் இது அரசியல் சார்ந்த விவகாரம் என்பதனால் அவ்வாறு செயல்படுகிறார் 50 சதவீத தலித் மக்கள் மோடியை விரும்புகிறார்கள் என பதில் அளித்தார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு 30 நாட்கள் பணியும் அதற்கு உண்டான ஊதியம் கிடைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினருக்கு ஐந்து நாட்கள் மட்டுமே பணியும் அதற்கு உண்டான ஊதியம் கிடைக்கும் கிடைப்பது அதை உறுதி செய்து தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இவர்களுடைய பணி நிரந்தரம் போதிய ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன் என கூறினார்.