பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதவி நீக்கம்!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

0
93
BJP National General Secretary CD Ravi sacked!! Sudden announcement!!
BJP National General Secretary CD Ravi sacked!! Sudden announcement!!

பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதவி நீக்கம்!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து கொண்டிருப்பவர் தான் சி.டி.ரவி ஆவார். இவர் கடந்த 2004  ஆம் ஆண்டு  நடைபெற்ற கர்நாடகாவின் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

அதில், சிக்மகளூர் சட்ட மன்ற தொகுதியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக பதவி கொடுக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மிகவும் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்போது இவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சில நீட்களுக்கு கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் சி.டி.ரவி சரியாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது.

மேலும், அணில் ஆண்டனி, முன்னாள் ஏஎம்யு துணை தலைவர் தாரிக் மன்சூர் உள்ளிட்ட பலரும் பாஜக கட்சியில் துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் தலைவரான பண்டி சஞ்சய் குமார் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சி.டி.ரவி, திலீப் கோஷ், ராதா மோகன், திலீப் சேத்தியா, ஹரீஷ் திவேதி, சுனில் தியோதர் மற்றும் வினோத் சோங்கர் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக வின் தேசிய தலைவரான ஜெபி நட்டா வெளியிட்டுள்ள பட்டியலில் மொத்தம் 13  துணைத் தலைவர்கள் மற்றும் 9  பொதுச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக பொறுப்பாளராக வேறு யாராவது பதவி வகிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

Previous article “இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! 
Next articleதங்கம் வெள்ளி  வாங்குவோர் கவனத்திற்கு விலை சற்று உயர்வு!!