குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

0
227
BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!
BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. அப்படி இருக்கும்போது இப்போது மட்டும் எதற்காக வரவேண்டும்? 

மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மட்டும் தான் பாஜக இப்படி செய்கிறது. மேலும் அதிமுக தலைவர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டால், அதிமுகவினரின் வாக்குகளை பெற்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வருகிறார்கள். அது பகல் கனவு ஒரு நாளும் பலிக்காது. 

தமிழகத்தில் போட்டியே அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான். வடமாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதி, மதம், இனம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டது. அதேபோல் தான் அதிமுகவும். எனவே பாஜக குட்டிக்கரணமே போட்டாலும் தமிழ்நாட்டில் அவர்களின் வாக்கு 5%க்கும் கீழ் தான்” என கூறியுள்ளார். 

மேலும், பாஜகவை பொறுத்தவரை மோடியும் தலைவர் இல்லை அண்ணாமலையும் தலைவர் இல்லை. பாஜகவினர் ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் தான் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் அதிமுகவில் இணைந்து விடலாம் என விமர்சனம் செய்துள்ளார்.

Previous articleஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!
Next articleபுடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!