புடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

0
144
17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding
17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்.. டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

ஒரு வருடத்தில் எத்தனையோ திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் சில திருமணங்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதற்கு ஏதாவது ஒரு வித்தியாசமான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நாட்டின் டாப் 10 பணக்காரர்களே வியந்த ஆடம்பர திருமணம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம்.

அதன்படி கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராணி ரெட்டிக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் தேவ ரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நடந்த திருமணம் தான் இந்தியாவில் தான் நடந்த ஆடம்பர திருமணத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இவர்களின் திருமணம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அன்றைய தேதிக்கு இந்த திருமணத்திற்கு கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. அதன்படி 5 நாட்கள் நடந்த இந்த திருமணத்தை காண உலகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 விருந்தினர்கள் வந்திருந்தனர். 

விருந்தினர்கள் தங்குவதற்காக பெங்களூரில் உள்ள 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்களில் சுமார் 1500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. விருந்தினர்களை அழைத்து செல்ல 2000 கார்கள் மற்றும் 15 ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு அடித்துள்ளனர். 

இதுதவிர மணப்பெண் பிராணி ரெட்டி தங்க நூல்களால் வடிவமைக்கப்பட்ட காஞ்சிபுரம் புடவையை அணிந்திருந்தார். அதன் விலை 17 கோடியாம். இதுதவிர மணப்பெண்ணின் ஒரு நெக்லஸ் மட்டுமே 25 கோடி என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மணப்பெண்ணின் நகைகள் 90 கோடி ரூபாய் மதிப்பு. அதேபோல மணப்பெண்ணின் மேக்கப்பிற்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் செலவாகி இருப்பதாக கூறுகிறார்கள். நிச்சயமாக இது இந்தியாவின் ஆடம்பர திருமணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.