வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை

0
132
BJP Person Misbehave with School Child
BJP Person Misbehave with School Child

சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியில் உள்ள கொள்ளுமேடு என்ற இடத்தில் வசித்து வரும் தம்பதிக்கு பதினாறு வயதில் பெண் உள்ளார். இந்த பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். அவரது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த 16 வயதாகும் சிறுமியை சீரழித்த விவகாரம் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து கைதுக்கு பயந்து கொண்டு பதுங்கியிருந்த 45 வயதாகும் இந்த பாஜக நிர்வாகியை சென்னை காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த அந்த பாஜக கட்சியை சேர்ந்தவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.45 வயதாகும் இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த இவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை கற்பழித்துள்ளார்.இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். மாலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை அவர்களிடம் கூறி அந்த சிறுமி அழுதுள்ளார்.

சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.. அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில்,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியான சீனிவாசனை தேடி வந்தனர்.

காவல் துறையினரின் தேடலில் தலைமறைவாக ஒரு இடத்தில் பதுங்கி கொண்டிருந்த அவரை தேடி பிடித்து கைதும் செய்துவிட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட இந்த சீனிவாசனின் வீடு செங்குன்றம் சாலையில் இருப்பதாக கூறியுள்ளார். 16 வயதாகும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதனக்கு எதிராக செயல்பட்ட சினிமா அரசியலைப் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட 80-களின் டாப் ஹீரோ!
Next articleதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!