BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!!

0
707
BJP PMK ADMK alliance confirmed.. Sudden call from Edappadi!! AIADMK gave way to BAM!!
BJP PMK ADMK alliance confirmed.. Sudden call from Edappadi!! AIADMK gave way to BAM!!

BJP PMK ADMK கூட்டணி உறுதி.. எடப்பாடிக்கு வந்த திடீர் அழைப்பு!! பாமக-வுக்கு வழி விட்ட அதிமுக!!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி அடுத்தபடியாக தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தலும் வந்துவிட்டது.இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாமக உடன் கூட்டணி வைத்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தது.ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் பாமகவானது அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது.அதேசமயம் என்டிஏ கூட்டணியிலிருந்தும் அதிமுக விலகியது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக யார் போட்டியிடுவார் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகளவில் காணப்பட்டது. அந்த வகையில் பாஜக கூட்டணியுடன் பாமக விக்கிரவாண்டி தேர்தலை எதிர்கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் பாமக விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து நின்று 40 ஆயிரம் வாக்குகளை பெற்றது.அந்தத் தொகுதியில் பாமகவிற்கான ஆதரவு அதிகம் என்ற காரணத்தினாலே பாஜக அங்கு நிற்கவில்லை.

இதனை மையப்படுத்தியே அதிமுகவும் இந்த தேர்தலை எதிர்கொள்ளவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.அந்த வகையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான பா சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது,
பாமக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அதிமுக ஒதுங்கி விட்டதாக கூறியுள்ளார்.அதற்காகத்தான் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக உடன் இணைந்து அதிமுகவும், பாமக வெற்றிக்கு வழிவகை செய்கிறது ஆனால் திமுக வெற்றியை அதிமுக கட்டாயம் உறுதி செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த தேர்தலில் புறக்கணித்தது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இவர்களது முக்கனி என்ற கூட்டணி இருக்கும் என்ற சந்தேகம் இல்லை எனவும் கூறுகின்றனர்.