பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை!

0
362
#image_title

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இதற்காக வேட்புமனு அளித்திருந்த நிலையில் நேற்று வேட்புமனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்தனர் தேர்தல் அதிகாரிகள் அப்போது அண்ணாமலையின் வேட்புமனுவில் குளறுபடி இருந்ததாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவின் தொடர் எண்களான 15மற்றும் 17ஆகிய எண்களுக்கு பதிலாக15மற்றும் 27ஆகிய எண்களில் பதிவேற்றம் செய்ததாகவும் அதனால் குளறுபடி ஏற்பட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் நேற்று இரவு, 15மற்றும் 27ஆகிய தொடர் வரிசை எண்ணில் தனது வேட்பு இருந்ததாக கூறியுள்ளார் இதனால் தொடர்பு வரிசை எண்ணில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே அண்ணாமலையின் வேட்பு மனு தொடர் வரிசை எண் என்ன 17 அல்லது 27 என்பதில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Previous articleஅங்கன்வாடியில் மொத்தம் 1100 காலிப்பணியிடங்கள்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleமத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!