கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய சர்ச்சையான கருத்து இன்றுவரை தமிழகத்தில் புகைச்சலாகி வருகிறது. ரஜினியின் மீது ஒரு பக்கம் வழக்கு தொடுத்தாலும் தினந்தோறும் இதைப்பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி, தற்போது ரோட்டில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
பெரியார் தலைமையில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் ராமர் மற்றும் சீதையின் உருவங்களை நிர்வாணமாக கொண்டு வந்த சம்பவத்தை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசியது தொடர்பாக காவல் நிலையங்களில் திகவினர் வழக்கு தொடுத்தனர். பின்னர் 15 நாட்கள் கால அவகாசம் முடியும் முன்னரே சென்னை உயர்நீதிமன்றத்திலும் திகவினர் வழக்கு போட்டதால் நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். இது சம்பந்தமாக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிட அமைப்பு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுப்பியது.
நான் உண்மையைதான் பேசினேன் என்னிடம் ஆதாரம் உள்ளது என்றும், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் தனக்கே உரித்த பாணியில் தெரிவித்தார். இதையடுத்து, திராவிட கழகத்தினரால் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. இச்சம்பவத்தின் நீட்சியாக பகவத் கீதையை இழிவுபடுத்திய கி.வீரமணியின் படத்தை வைத்து பாஜகவின் மகளிர் அணியினர் இன்று செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து தனது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், திராவிட கழகத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொள்ளாச்சியில் பெரியாரின் உருவ பொம்மையை எரித்து தனது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். உருவ பொம்மை எரிப்பு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் ரஜினிக்கு ஆதரவாக இருப்பது இச்சம்பவத்தின் மூலமாக தெரியவந்துள்ளது