முட்டுக்காட்டில் சொகுசு பங்களா, 2 கார்கள்… 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Photo of author

By CineDesk

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடன் ஜோடி நடித்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கும் பிறகும் சினிமாவில் நடித்து வந்த குஷ்பு, அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் தொகுதியில் குஷ்பு களமிறங்கியுள்ளார். நேற்று ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வேட்புமனுவை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, எனது அகராதியில் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லை என கெத்து காட்டினார்.

இதனிடையே குஷ்பு நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் இந்தி, தமிழ், தெலுங்கு, சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை கொண்ட குஷ்பு வெறும் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளாராம். தன் மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

சொத்து விபரத்தை பொறுத்தவரை 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள், ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரொக்கம் இருப்பதாக கூறியுள்ளார். கணவர் சுந்தர் சி பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி, கையிருப்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது பெயரில் 4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், கணவர் பெயரில் 1.83 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் குழந்தை பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், இரண்டாவது குழந்தை பெயரில் 12 லட்சத்து 560 ரூபாய மதிப்பிலான சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முட்டுக்காடு, திருக்கழுகுன்றத்தில் சொகுசு பங்களாவும், கணவர் பெயரில் மேடவாக்கம், கோவையில் பங்களாவும் இருப்பதாகவும், தனக்கு 16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் சுந்தர் சிக்கு 17 கோடியே 99 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும், தனக்கு 3.45 கோடியும், கணவருக்கு 55 லட்சமும் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்