அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

Photo of author

By Savitha

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக கட்சி சரித்திரம் படைக்கும் என்று அந்த கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் பாஜக அரசு 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக கர்நாடக மாநில தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் இது தொடர்பாக பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “அடுத்த  ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும். நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையில் கலந்து கொள்ள 1,36,000 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பாதயாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு என் தலைமையில் நான் மேற்கொள்ளவிருக்கும் ‘என் மக்கள் என் பயணம்’ பாதயாத்திரை ஜூன் 2வது வாரத்தில் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.