சோமாலியாவில் குண்டுவெடிப்பு

Photo of author

By Parthipan K

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.இந்த குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.