இரத்த கட்டு: அடிபட்ட இடத்தில் இரத்தம் கட்டிக்கிச்சா? அப்போ உடனே இதை செய்து வலி வீக்கத்தை குறைச்சிடுங்கள்!!
உடலில் அடிபட்டால் அவ்விடத்தில் இரத்த கட்டு ஏற்பட்டு பெரிய தொந்தரவை கொடுத்து விடும்.இந்த இரத்த கட்டு பாதிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி குணப்படுத்திக் கொள்வது நல்லது.
தீர்வு 01:
1)விளக்கெண்ணெய்
2)நொச்சி இலை
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 நொச்சி இலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெய் இரத்த கட்டு மீது தடவினால் அவை வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.
தீர்வு 02:
1)மஞ்சள் தூள்
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை உடலில் இரத்த கட்டு ஏற்பட்டு வீங்கிய இடத்தில் பூசி ஒரு காட்டன் துணியால் கட்டுப்போட்டால் அவை சில தினங்களில் குணமாகும்.
தீர்வு 03:
1)அமுக்கிரா கிழங்கு சூரணம்
2)பசும்பால்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இரத்த கட்டு குணமாகும்.
தீர்வு 04:
1)புளி
உரலில் ஒரு துண்டு புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பூசினால் அவை சில தினங்களில் குணமாகும்.
தீர்வு 05:
1)கருஞ்சீரகம்
2)வெள்ளை துணி
3)அரசி
இரண்டு தேக்கரண்டி அரிசியை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த அரிசிப்பொடியை சேர்த்து காய்ச்சவும்.
பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்.இதனை தொடர்ந்து ஒரு காட்டன் துணியில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டு மூட்டை போல் கட்டி கஞ்சியில் போட்டு 5 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் அந்த மூட்டையை நீக்கி விட்டு கஞ்சியை குடிப்பதினால் இரத்த கட்டு குணமாகும்.