சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 10

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கா? ரஜினியின் உடன்பிறப்பு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் தன்னுடைய கடைசி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இனி தீவிர அரசியலில் விஜய் இறங்கப்போவதாக அறிவித்து தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்திற்குள் புகுந்துவிட்டார்.

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன். இவர் ஆன்மீகத்தில் ரஜினிகாந்தை போலவே அதிக நாட்டம் கொண்டவர். பாஜக கட்சியின் விசுவாசியும் கூட. இவரை வைத்து எப்படியாவது ரஜினியை அரசியலில் இறக்கி பாஜகவிற்கு ஆதரவான சூழலை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என்று ஆஎஸ்எஸ் முயற்சி செய்தது.

ஆனால் எப்பவும் போல ரஜினிகாந்த் எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம், என்னை விட்டுருங்க என்று ஒதுங்கிக்கொண்டார். சத்தியநாராயணன் பெங்களூரில் வசிக்கிறார். அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சத்யநாராயணனிடம் நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பு இருக்கா என்று கேள்வி கேட்டனர்.

நடிகர் விஜய் அரசியலில் ஜொலிப்பது ரொம்ப கஷ்டம் என்றும், தமிழகத்தில் அண்ணாமலை அரசியலில் ஜொலிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் பேட்டி கொடுத்தார். அதேபோல உங்கள் சகோதரர் ரஜினிகாந்திற்கு எம்.பி. பதவி பாஜக சார்பில் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவியை கொடுக்க முயன்றார்கள், எனக்கு அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கி விட்டார் என்று பேட்டி கொடுத்துள்ளார் சத்தியநாராயணன்.

அரசியலுக்கு வருவேன் என கடைசி வரை சொல்லி தன்னுடைய ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றிய ரஜினியின் சகோதரர் பேச்செல்லாம் இங்க நம்ம தமிழ் நாட்டில் எடுபடாது என தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்தின் சகோதரரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்த அதிமுக பிரபலம்! அதிமுக எடுத்த அதிரடி ஆக்சன்!

0

அதிமுக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற எம்.பி பதவி வகித்தவர் அன்வர் ராஜா. இவர் ஆரம்பம் முதலே பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் அதிமுக தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என்று பேட்டி கொடுத்தார்.

பாஜவுடன் இணைவது மிகப்பெரிய தோல்வியில் போய் முடியும் என்கிற மாதிரியான கருத்துக்களை அண்மையில் அன்வர் ராஜா தெரிவித்து வந்தார். இவரின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணையப்போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவை விட்டு திமுகவில் இணைகிறார் அன்வர் ராஜா என்னும் செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அன்வர் ராஜாவை அதிமுகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி உள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியையும் பழனிசாமி பறித்துவிட்டார். இதனால் 21.7.2025 அன்று அன்வர் ராஜா திமுகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி என்பது புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மூலக் கட்டத்தில் உறங்கிக் கிடக்கும் புற்றுநோய் செல்களை விழித்தெழச் செய்து, நோயை உடலின் பிற பாகங்களுக்கு பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, பல மார்பக புற்றுநோயாளிகள் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கூட மறுமுறையாக நுண் பாகங்களில் புற்று பரவல் ஏற்படக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

ஆய்வுப் படிப்பு மற்றும் முக்கியமான விவரங்கள்:

இந்த ஆய்வுத் தகவல்கள், ஜூலை 3ஆம் தேதி வெளியான Cancer Cell என்ற உயர்மட்ட மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கிமோதெரபி மருந்துகளான டாக்ஸோரோபிசின் மற்றும் சிஸ்பிளாடின் போன்றவை, உறங்கிக்கிடக்கும் மார்பக புற்று செல்களை (Dormant Cells) தூண்டி lung metastasis (மூளை, நுரையீரல் போன்ற பகுதிகளுக்குப் பரவல்) ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.

அறிந்துகொள்ள வேண்டியவை:

Dormant Cancer Cells என்பது உடலின் பிற பகுதிகளில் அடக்கம் ஆகி, வளர்ச்சி நிறைந்து நிதானமாயிருக்கும் புற்று செல்களாகும்.

இவை புதிய வளர்ச்சியோ, பரவலோ இல்லாமல் அமைதியாக இருக்கலாம். ஆனால் கிமோதெரபி போன்ற சிகிச்சை இதனை மீண்டும் செயல்பட வைக்கும் அபாயத்தை உருவாக்கும்.

புற்றுநோயின் முதன்மை கட்டத்தில் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தாலும், இந்த உறங்கிய செல்கள் மீண்டும் செயல்பட்டு பக்கத்துப் பகுதிகளில் புற்று பரவலை உருவாக்கும்.

மூளைக்கழி மற்றும் நுரையீரலில் தாக்கங்கள்:

சீனாவின் Shanghai Institute of Nutrition and Health மற்றும் Fudan பல்கலைக்கழகம், Shandong பல்கலைக்கழகத்தின் Qilu மருத்துவமனை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். Hu Guohong தலைமையிலான குழு, சோதனை எலி மாதிரியில் இந்த நிகழ்வுகளை உறுதி செய்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மூலம், மார்பக புற்றுநோய் செல்கள் எப்படி உறங்கி கிடந்த நிலையிலிருந்து விழித்து, நுரையீரலுக்கு பரவுகின்றன என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய சிகிச்சை நோக்கங்கள்:

இந்த கிமோதெரபி செல்கள், உடலில் உள்ள ஃபைப்ரோபிளாஸ்ட் எனும் தொடர்பு திசுக்களில் மூப்பு (Senescence) நிலையை உருவாக்குகிறது. இந்த மூப்புப் பாதிக்கப்பட்ட செல்கள், சுற்றுச்சூழலை மாற்றும் புரதங்களை வெளியிடுகின்றன, இது நியூட்ரோபில்கள் எனும் நோய் எதிர்ப்பு அணுக்களில் வலைவடிவ அமைப்புகளை உருவாக்க வைக்கின்றன. இதுவே உறங்கிய புற்று செல்களின் வளர்ச்சியை மீண்டும் தூண்டும் சூழலை உருவாக்கும்.

இந்த தாக்கங்களைத் தடுக்க, senolytic drugs எனும் மூப்பு செல்களை அழிக்கும் மருந்துகளையும் கிமோதெரபியுடன் சேர்த்து பயன்படுத்தியுள்ளனர். இது டாக்ஸோரோபிசினுடன் பயன்படுத்தும் போது மூப்புசார்ந்த செல்களின் எண்ணிக்கையை குறைத்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை தொடக்கம்:

இக்கண்டுபிடிப்பின் அடிப்படையில், தற்போது மார்பக புற்றுநோயின் ‘Triple Negative’ வகையினரை நோக்கமாகக் கொண்டு, Dasatinib மற்றும் Quercetin எனும் senolytic மருந்துகளுடன் கிமோதெரபியை இணைத்துப் பயன்படுத்தும் மருத்துவ பரிசோதனை (Phase 2 trial) நடைபெற்று வருகிறது.

Triple Negative வகை என்பது மரபணு ஹார்மோன் சிகிச்சைக்கு பதிலளிக்காத, தீவிரமான புற்றுநோயின் ஒரு வகை.

சுருக்கமாக:

கிமோதெரபி புற்றுநோயைத் தடுக்கிறது என்றாலும், தவறான பக்கவிளைவாக உறங்கிய செல்களை விழிப்பித்து நோயை பரப்பக்கூடும்.

இது எதிர்பாராத மாற்றான விளைவுகள் உருவாக்கலாம், குறிப்பாக பிற உறுப்புகளில் மறுசுழற்சி பரவலை தூண்டும்.

இதற்கான தீர்வாக, மூப்பு செல்களை அழிக்கும் மருந்துகளுடன் சேர்த்து கிமோதெரபியை வழங்கும் சோதனை பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன.

இது எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் ஒரு புதிய வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

இது புற்றுநோய் சிகிச்சை நோக்கில் புதிய புரிதலை உருவாக்கும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

 

அதிமுக பாஜக கூட்டணிக்குள் விழும் விரிசல்.. சைலன்ட் மோடில் தாக்கும் அண்ணாமலை!!

0

ADMK BJP: தமிழக அரசியல் களமானது நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்தவகையில் ஆளும் கட்சி முதல் எதிர் கட்சி வரை அனைவரது கூட்டணியும் ஒரு வித குழப்பத்திலேயே உள்ளது. முதலில் ஆளும் கட்சி தங்களது கூட்டணி பலமாக உள்ளது என கூறி வருகின்றனர். ஆனால் தற்போது காங்கிரசுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது.மேலும் பாஜவுடன் கூட்டணியிலிருக்கும் அதிமுக-வும் சரியான தெளிவான முடிவில் இல்லை.

பாஜக வின் அமித்ஷா உள்ளிட்டோர் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர். அவரைப் போலவே சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலையும், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை கூறி விட்டார். இனிநான் என்ன கூறுவது, அவர் சொன்னதை என்னால் மாற்றி கூற முடியாது. அதிமுக வேண்டுமானால் அவரிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும். இரு தலைவர்களும் தான் பேசி முடிவு பன்ன வேண்டும்.

அதாவது ஆட்சிக்கு முன் மற்றும் பின் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெல்லாம் என்ற கருத்தை அண்ணாமலை வைத்தார். இவ்வாறு அவர் கூறியது, அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியதுடன் இந்த கூட்டணி ஒத்துவராது என்ற முடிவையும் எடுக்க வைத்துள்ளது. இதனால் கூடிய விரைவிலேயே அதிமுக பாஜக கூட்டணியை கை கழுவி விடும்.

அண்ணாமளையால் தான் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு வர போகிறது. இதனால் அண்ணாமலைக்கு பழைய தலைவர் பதவியும் கிடைக்குமாம். நயினார் ஓர் பொது நிகழ்ச்சியில் தனக்கு கட்சிக்குள் மரியாதையே இல்லை என்பதை கூறியிருந்தார். இவையனைத்தும் அண்ணாமலை இல்லை என்ற வெறுப்பின் உச்சக்கட்டம் தான். இதனை சரிசெய்யும் வகையில் அவரையே மீண்டும் தலைவராக நியமிக்கலாம்.

தேர்தல் நேரம் நெருங்குவதால் போலீசார் இதை செய்ய வேண்டாம்! காவல்துறைக்கு தமிழக அரசு கொடுத்துள்ள அறிவுரை!

0

வருகிற 2026ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அனுதினமும் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி சர்ச்சையில் மாட்டிக்கொள்கின்றனர். அதனை தங்களுக்கு சாதகமாக அதிமுக, தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன.

அனுதினமும் திமுக நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோர் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றனர். அதேநேரத்தில் காவல்துறையும் தங்கள் பங்குக்கு எதாவது ஒன்றை செய்து திமுக அரசை சிக்கலில் மாட்ட வைத்துவிடுகிறது. குறிப்பாக சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை லைசென்ஸ் இருக்கா, ஹெல்மெட் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என்று சோதனை செய்து மக்களுக்கு பிரச்சனையை கிளப்புகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி போலீசார் மக்களை தொந்தரவு செய்தால் அது வெறும் காவல் துறையை மட்டும் பாதிக்காது. மாறாக தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியையும் வெகுவாக பாதிக்கும். எனவே தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு ஆளும்கட்சி கடிவாளம் விதித்துள்ளது.

மாறாக போக்குவரத்து மிதிமீறல்களில் ஈடுபடும் பொதுமக்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அமரவைத்து போக்குவரத்து விதிமீறல்களை நீங்கள் மீறுவதால் எந் மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதை பாடமாக எடுக்கும்படி அரசு காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இனி நிறைய இடங்களில் காவலர்கள் பொதுமக்களை ஹெல்மெட் போடவில்லை,வண்டிக்கு லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லை என்று தொல்லை படுத்தும் நிகழ்வு அதிகம் நடக்காது என்றும் சொல்லப்படுகிறது.

“காப்பாத்துங்க”.. விஜய்யிடம் ஓடும் இபிஎஸ் காங்கிரஸ்!!டீலில் தள்ளப்படும் பாஜக மற்றும் திமுக!!

0

TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சியில் மாற்றம் உண்டாகும் என்பது தற்போது உள்ள நிலையை வைத்து கணிக்க முடிகிறது. திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கூறி வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் உடன் இருந்த நல்லுறவை முடிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் சமரசம் உண்டாகவில்லை. எடப்பாடி எங்கள் தலைமையில் தான் கூட்டணி என கூறி வருகிறார்.

ஆனால் பாஜக இலை மீது தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி என்கின்றனர். இதிலேயே இரு கட்சிகளுக்கிடையே விரிசல் உண்டாகியுள்ளது. இதனால் எடப்பாடி பிரம்மாண்ட கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்குள் வரப்போவதாகவும் எடப்பாடி கூறுகிறார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கையில் முடிச்சு போடும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் தான் உள்ளது. திமுகவுடன் காங்கிரஸும் பாஜகவுடன் அதிமுகவும் வெளியேறி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்.

இவர்களுடன் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய உள்ளது. அதிலும் பாமக வானது, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு விஜய் தான் காரணமாம். அரசியலுக்குள் நுழைந்த உடன், எங்களுடன் கூட்டு வைப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் எனக் கூறியது விஜய் தான். இவரைத் தவிர மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என கூறவில்லை. இதை வைத்துப் பார்க்கையில் பாமக கூறுவது விஜய்யின் கூட்டணி தான்.

அதாவது வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக அதிமுக காங்கிரஸ் பாமக தேமுதிக என அனைவரும் விஜய்யுடன் கூட்டு வைக்க போகிறார்கள்.

இந்த சாரையாவது கைது செய்யுமா திமுக அரசு? வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரபலம்!

நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். போலீஸ், நீதிமன்றம் எதற்கும் அடிபணிய மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற ரீதியில் செயல்படுவார்கள். குறிப்பாக தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த மாதிரியான அதிகார துஸ்பிரயோக செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் திமுக கட்சியின் மேடைப் பேச்சாளர். பிரச்சார நேரங்களிலும், திமுக மேடைகளிலும் இவர் திமுகவிற்கு ஆதரவாக மேடை பேச்சுக்களை பதிவு செய்வார். இவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவர் கிட்னி திருட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணத்தேவை இருக்கும் ஏழை எளிய மக்களை அணுகி அவர்களிடம் பேரம் பேசி தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்து சென்று கிட்னி விற்கும் வேலையை இவர் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவருக்கு இன்னொரு பேர் இருக்கு, புரோக்கர் ஆனந்தன். இந்த கிட்னி திருட்டு சம்பவத்தில் இவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா, அல்லது இன்னும் யாரேனும் முக்கிய பிரபலங்களும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்று தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய நெட்ஒர்க் என்றும், பல ஆளும்கட்சி புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இந்த திமுக சார் ஆனந்தன் மீதாவது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? இல்ல, எப்பவும் போல இதையும் கண்டு கொள்ளாமல் போய்விடுமா என்று எதிர்க்கட்சியினர் திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

வம்படியாக வாயை கொடுத்து எடப்பாடியிடம் வசமாக மாட்டிக்கொண்ட முதல்வர்!

0

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பழனிசாமி அவர்கள் பேருந்தில் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி பயணம் செய்யும் பேருந்து சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் டப்பா பஸ்ஸை போல இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிண்டல் செய்தார். இந்நிலையில் ஸ்டாலின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நான் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போன்ற ஒரு பேருந்தில் வருவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நான் ஒரு விவசாயி, என்னால் இந்த மாதிரி பேருந்தில் தான் வரமுடியும். நான் உங்களின் தந்தையை போன்ற ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகன் இல்லை. நான் பேருந்தில் வந்து மக்களை சந்திப்பதை எல்லோருக்கும் பிரபலப்படுத்தியத்திற்கு நன்றி. நாட்டு நடப்பை பற்றி பேச சொன்னால் நான் பஸ்ஸில் வருவதை பற்றி முதல்வர் பேசுகிறார்.

இந்த பஸ்ஸை பற்றிய கவலையை விடுங்கள், தமிழ்நாட்டில் ஓடும் எல்லா பேருந்துகளும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ்ஸை போலத்தான் ஓடுகின்றன. பாதி வழியில் டயர் கழண்டு செல்வதையும், அரசு பேருந்தின் மேற்க்கூரை பறந்து செல்வதையும், மழை நேரத்தில் பேருந்துக்குள் அமர்ந்து செல்லும் மக்கள் குடை பிடித்துக்கொண்டு செல்வதையும் மக்கள் பார்த்துகிட்டு தான் இருக்கிறாங்க என்று முதல்வர் ஸ்டாலினை வசைபாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இபிஎஸ்ஸின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்! கோபத்தில் பள்ளி பேருந்தை கொளுத்திய உறவினர்கள்!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 7 ஜூலை 2025 அன்று பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை திட்டி நாளை நீ பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வா என்று மிரட்டியுள்ளார்.

பெற்றோரை அழைத்து வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தான். பின்னர் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர்.

17 ஜூலை 2025 அன்று அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி மீதும், அந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த தனியார் மருத்துவமனை இருந்த ரோட்டில்(நெல்லை பாபநாசம் சாலையில்) 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் மாணவரின் உறவினர்களை சமாதானப்படுத்தி நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் தனியார் பள்ளிக்கு சென்று நள்ளிரவில் இரண்டு பள்ளி பேருந்துகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இரண்டு பேருந்துகளும் தீயில் முழுமையாக கருகி சேதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.