Home Blog Page 9

கை கோர்க்கும் தவெக-விசிக.. விஜய்க்கு கிரீன் சிக்னல் காட்டிய திருமா.. மாறும் திமுக கூட்டணி..

0

TVK VSK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் சூழலில், அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல் ஒரு கட்சியால் ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். இதற்காக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் வேறு வகையான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், நடிகர் விஜயின் அரசியல் வருகையால், காங்கிரஸ் தவெக உடன் இணையும் போக்கிய காட்டி வரும் வேலையில், அடுத்ததாக நீண்ட நாட்களாக திமுக உடன் இருந்து வரும் விசிகவும் விஜய் உடனான கூட்டணி முடிவை நோக்கி நகர்கிறது என்றே சொல்லலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. விசிகவின் தலைவர் திருமாவளவன் விஜய்யின் வருகையை பாராட்டி வருவது மட்டுமல்லாமல், விஜய்க்கு முதலில் வரவேற்பு அளித்தது நாங்கள் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், இவர் திமுகவில் இருந்து கொண்டு விஜய்யை விமர்சிக்காதது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.

இவ்வாறான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக கூட்டணிக்கு விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் வருகிறார்கள் என்பதே உண்மை என்று கூறியுள்ளார். தவெக-விசிக கூட்டணி அமைக்குமா என்ற விவாதத்திற்கு, செங்கோட்டையனின் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. இதனால் தேர்தலுக்கு முன் விசிக, விஜய் முன்னிலையில் தவெகவில் சேரும் என்பது நிரூபணமாகியுள்ளது.

பீரங்கியாக வெடித்த ஜோதிமணி ட்வீட்.. அதிர்ந்து போன செல்வப்பெருந்தகை.. காங்கிரஸில் புதிய திருப்பம்..

0

CONGRESS: பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்ததாக தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது என்றே சொல்லலாம். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் இம்முறை விஜய் வருகையால் சற்று தடம் மாறி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விஜய் காங்கிரசுக்கு மிகவும் நெருக்கம் என்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியதாலும் காங்கிரஸ்-தவெக கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து மீண்டும் காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு அச்சராமிட்டார்.

இவ்வாறு ஆட்சி பங்கிற்காகவும், அதிக தொகிகளுக்காகவும் விஜய்யுடன் சேரும் போக்கை காங்கிரஸ் காட்டி வந்ததால் திமுக தலைமை மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தான் விஜயுடன் கூட்டணி சேர வேண்டுமெனவும், திமுக கூட்டணியில் தான் தொடர வேண்டுமெனவும் தமிழக காங்கிரசில் சலசலப்பு நிலவியது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் திரைமறைவில் சில கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் பரவியது. தற்போது இதனை கரூர் எம்.பி ஜோதிமணி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். தமிழக காங்கிரசில் நிலவும் சச்சரவு குறித்து கருத்து பதிவிட்ட அவர், தமிழ்நாடு காங்கிரசில் எந்தவித கட்டுபாடுமற்று தொடரும் உட்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனசோர்வை ஏற்படுத்துகிறது என்றும் தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும்  பல்வேறு கருத்துகளை வெளிபடுத்தியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் போன்றவற்றில் பிரச்சனை இருந்தது உண்மை தான். இது குறித்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தியும் இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணியின் இந்த கருத்து ஆச்சரியமளிக்கிறது என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இவ்வாறான நிலை நிலவுவது அதன் நிலைமையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

திமுக கூட்டணி உடைவது நிச்சயம்.. மோதி கொண்ட விசிக-காங்கிரஸ்.. வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..

0

DMK CONGRESS VCK: தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக சென்ற முறை தோல்வியடைந்த தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்து கண்காணித்து வருகிறது. மேலும் நான்கரை ஆண்டுகளில் திமுக மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நியாபகப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தனது கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நீண்ட காலமாக திமுக உடன் அங்கம் வகித்த வரும் காங்கிரஸ் விஜய் வருகையை வைத்து திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு வருகிறது. விஜயுடன் இணையும் போக்கை காட்டுவதற்காக காங்கிரஸின் முக்கிய புள்ளியான பிரவீன் சக்ரவர்த்தி விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது கூட்டணிக்குரிய சந்திப்பாக தான் இருக்கும் என்று அனைவரும் கூற, பிரவீன் சக்ரவர்த்தி இதனை அறவே மறுத்து வந்தார். இந்நிலையில் தான் திமுக அரசுக்கு எதிராக அவர் பதிவிட்டிருந்த கருத்து பரவலானது.

இது குறித்து திமுக கூட்டணி கட்சிகளான விசிகவும், மதிமுகவும் காங்கிரசை கடுமையாக சாடி இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் எங்க உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாமென கூறியிருக்கின்றனர். இவ்வாறு திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதி கொள்வது கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஸ்டாலின் எந்த கருத்தும் கூறாமல் இருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பியூஷ் கோயல் போட்ட பக்கா பிளான்.. கதிகலங்கிய இபிஎஸ்.. மாறும் தேர்தல் களம்.. 

0

BJP ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மாநில கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும்  முழு முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள போகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான இந்த கூட்டணி அடுத்து எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளது. மேலும் பாஜகவிற்கு உண்டான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு டெல்லி மேலிடம் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய, தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்துள்ள பாஜக அவர் மூலம்  எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்ததாக ஜனவரி முதல் வாரத்தில் பியூஷ் கோயல் மீண்டும் சென்னை வருகை தரவுள்ளார். இதில் பாஜகவிற்கு 60 தொகுதிகளுக்கு மேலே ஒதுக்க வேண்டும் என்றும், ஒபிஎஸ் மற்றும் தினகரன் இருவரையும் அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் விஜய் கட்சிக்கு செல்வதாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து விவாதிப்பது பேசு பொருளாகியுள்ளது.

அறிய வாய்ப்பை தவற விட்ட விஜய்.. பயமுறுத்தி பார்க்கும் பாஜக.. அரசியலில் அடுத்த திருப்பம்..

0

TVK BJP ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இம்முறை அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக திராவிட கட்சிளுக்கு இணையாக தவெக வளர்ந்து வருகிறது. விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கும், ஆட்சி கட்டிலில் இருக்கும் திமுகவிற்கும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜகவிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாகவும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற நிபந்தனைகளால் அதிமுக- தவெக கூட்டணி இழுபறியிலேயே இருக்கிறது. பாஜகவும் விஜயை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் அது கை கூடவில்லை. இதனால் விஜய் நல் வாய்ப்பை தவற விடுகிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். அந்த வகையில் தற்போது புதிதாக பாஜக கூட்டணியில் தொடர்ந்து வரும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் விஜய் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காதது குறித்து அவரது கருத்தை கூறியுள்ளார்.

விஜய் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அறிய வாய்ப்பை  விஜய் தவற விடுகிறார் என்ற பயம் எனக்கு உள்ளது என்று கூறிய அவர், ஒரு முறை வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் கிடைப்பது கடினம். விஜய் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜக விஜயை பயமுறுத்தும் தோணியில் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2025 யில் நடக்க போகும் திருப்புமுனை.. ரீ என்ட்ரி கொடுக்கும் பாஜக மாஸ்டர் மைன்ட்.. முடிவுக்கு வரும் இபிஎஸ் ஆட்டம்..

0

BJP ADMK: ஒரு வாரத்திற்கு முன்பு தமிழகம் வருகை புரிந்த பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனை தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சென்னை வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இரு கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருப்பது பாஜகவிற்கு தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழக தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில் ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் கசிந்தது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஜனவரி 4 அல்லது 5 ஆம் தேதிகளில் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளார்.

இந்த சந்திப்பில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்குமாறு அவர் நிபந்தனை விதிக்க இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். பாஜகவிற்கு தமிழகத்தில் போதிய அளவு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் கொங்கு மண்டல பகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கினால் அங்கும் அதிமுக தோல்வியை தான் தழுவும் என்பதால் இபிஎஸ் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது மட்டுமல்லாமல் சென்ற முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில் இம்முறையும் இது தோல்வியடைந்தால் பாஜக – அதிமுக கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுக்கான தொகுதிகள் நியாயமாக இருக்க வேண்டும்.. பாஜக கூட்டணி கட்சி போட்ட வெடி..

0

BJP IJK: சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பல ஆண்டுகளாகவே பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழக மக்கள் பாஜகவின் இந்துத்துவ வாதத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இதனால் தமிழ்நாட்டில் செல்வாக்கு உள்ள கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க போகிறது. மேலும் பாஜக கூட்டணியில் தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் நிலவு வரும் மோதல் போக்கு பாஜகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி மேலிடம் நினைக்கிறது.

இதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்ட பாஜகவிற்கு இது தோல்வியிலேயே முடிந்தது. இதனால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. பீகார் வெற்றியை மையமாக வைத்து தமிழகத்தில் நிலைபெறலாம் என்று நினைத்த பாஜகவிற்கு அதன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் மிகவும் அதிருப்தியில் இருந்த டெல்லி மேலிடத்திற்கு தற்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஐஜேகே தற்போது வரை பாஜக உடன் தான் தொடர்கிறது.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசிய ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை 7 முதல் 8 தொகுதிகள் வரை கேட்போம் என்றும், மூன்று முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முறை வென்றுள்ளோம். அதனால் எங்களுக்கு 7 முதல் 8 தொகுதிகள் ஒதுக்குவது தான் நியாயமாக இருக்கும் என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை காரணமாக பாஜக குழம்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி வாய் திறந்தது மேலும் புகைச்சலை உண்டாக்கியுள்ளது.

தடுமாறும் டெல்லி.. தவெகவில் இணையும் பாஜகவின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு கூடும் பலம்..

0

BJP TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் வேகமேடுதுள்ளன. மேலும் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறான சூழலில் பல முக்கிய பிரமுகர்களும் சொந்த கட்சியை விட்டு மாற்று கட்சியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில், மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் போன்றோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று கூறியிருந்த நிலையில் அதற்கான வேலைபாடுகளை செய்து வருகிறார். முதலில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணனையும், மரியமுல் ஆசியாவையும் தவெக வலையில் வீழ்த்திய நிலையில் அடுத்ததாக பாஜகவை சேர்ந்தவர்களையும் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் அக்கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும்,  தமிழகத்தில் அண்ணாமலை, நயினார், வானதி ஸ்ரீனிவாசன், போன்றோருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதில் இவருக்கு உடன்பாடு இல்லையென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு எல்லா இடத்திலும் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில், பாஜகவிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்த நினைக்கும் தவெகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்  கிடைத்துள்ளது. தவெக மக்களின் ஆதரவை அதிகளவில் பெற்று வருவதால் பொன். ராதாகிருஷ்ணன் விஜய்யுடன் கை கோர்க்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

பாஜக போட்ட மாஸ்டர் பிளான்.. தனித்து விடப்பட்ட இபிஎஸ்.. கை கோர்த்த அண்ணாமலை-நயினார்..

0

BJP ADMK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கூட்டணி கணக்குகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளது. 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமெனவும், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதிலும் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொறுப்பை ஏற்றதிலிருந்தே தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுகவிற்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தேசிய கட்சியான பாஜகவிற்கு இந்த தேர்தல் முக்கியம். தமிழகத்தில் பாஜகவிற்கான எதிர்ப்பு அதிகளவில் உள்ள சமயத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் பாஜகவிற்கு பாதகமாக அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சந்தர்பத்தில் முக்கிய முகங்களை நீக்கி வரும் இபிஎஸ் டெல்லி மேலிடத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கூடாது என்றும் கூறி விட்டார். இவ்வாறான நிலையில் விஜயை கூட்டணியில் சேர்த்தால் வெற்றி பெறலாம் என நினைத்த பாஜகவிற்கு இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இது மட்டுமல்லாமல், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என பியூஸ் கோயல் கூறியும் இபிஎஸ் இதனை ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

அதிமுக பல பிரிவுகளாக இருப்பது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த பாஜக இபிஎஸ்யை தனித்து விட முடிவு செய்துள்ளதாக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதற்காக தற்போதய தமிழக பாஜக தலைவர் நயினாரையும், முந்தய மாநில தலைவர் அண்ணாமலையும் ஒன்று சேருமாறு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனை நயினார் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். அண்ணாமலை இபிஎஸ்க்கு எதிராக இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் ஒன்றிணைவது முழுக்க முழுக்க  இபிஎஸ்க்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

தொகுதி பங்கீடு குறித்து அறிவித்த மதிமுக.. பதற்றத்தில் ஸ்டாலின்.. முறியும் கூட்டணி..

0

DMK MDMK: இன்னும் 4, 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் களமும், மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கூட்டணி குறித்த பேச்சுகள் தற்போது அதிக வேகமேடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் திமுகவை வீழ்ச்சியை நோக்கி தள்ளுகின்றன.

அந்த வகையில் காங்கிரஸ் பல ஆண்டு காலமாக திமுக உடன் இணைந்து தேர்தலை சந்தித்து வரும் சூழலில், விஜய்யின் வருகையால் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. காங்கிரசை தொடர்ந்து விசிகவும் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகிறது. திமுக தலைமையில் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்று ஸ்டாலின் அறிவித்த நிலையில், மதிமுகவை சேர்ந்த துரை வைகோ ஒரு கருத்தை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், திமுக உடன் 9 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். மதிமுக எத்தனை சீட்டுகளில் போட்டியிடும் என்பதை தலைமை முடிவு செய்யும். உரிய எண்ணிக்கையிலான சீட்டை திமுக எங்களுக்கு வழங்கும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து இந்த தேர்தலில் மதிமுக அதிக தொகுதிகளை கேட்கும் என்பதை உறுதி செய்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் ஏற்படுவது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.