Home Blog Page 11

தவெகவில் ஓபிஎஸ் தினகரன் என்ட்ரி.. தேதியை சொன்ன செங்கோட்டையன்!! விஜய் ஹேப்பி அண்ணாச்சி!!

0

TVK AMMK ADMK: தமிழக அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவிற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய்க்கு கரூர் சம்பவம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இதனால் சில காலம் முடங்கி இருந்த விஜய் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வெளியே வந்தார்.

கரூர் விபத்து தவெகவின் அரசியல் அறியாமையால் நிகழ்ந்தது, விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்னும் கருத்து மேலோங்கி இருக்க, இதனை அடியோடு நசுக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் இவர் கட்சியிலிருந்தும், அவரது பதவியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த இவர் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்திருந்தார்.

இதற்காக அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் செங்கோட்டையன் தற்போது அரசியல் களத்தை திருப்பி போடும் வகையில் ஒரு செய்தியை கூறியிருக்கிறார். அண்மையில் NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ், தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்ட சமயத்தில் பொங்கலுக்கு முன்பு இவர்கள் இருவரும் தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று கூறிய செங்கோட்டையன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் இணைவு தவெகவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

பெயர் சொல்லாமலே விஜய்யை தாக்கிய அதிமுக அமைச்சர்.. தவெகவை பார்த்து அதிமுக கலக்கம்!!

0

ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு குறித்த செயல்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளிலும் திராவிட கட்சிகள் வேகமெடுத்துள்ளன. இவ்வாறான நிலையில் அரசியல் அரங்கை ஆட்டம் காண வைக்கும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது.

இந்த ஆதரவு இவரை முதல்வராக்காவிட்டாலும், எதிர்க்கட்சி தலைவராக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் இவரை கட்சியில் சேர்க்கவும், இவரது கட்சியில் இணையவும் அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதிலும் முக்கியமாக திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், இபிஎஸ் தவெகவை நேரடியாகவே கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை அதிமுக ஏற்காததால் இந்த கூட்டணி கிடப்பிலேயே இருக்கிறது. விஜய்-அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபையை ஒரு முறை கூட பார்க்காதவர்கள் அதிமுகவை பற்றி பேசுகின்றனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று ஒன்று பட்ட கருத்துக்கள் உள்ள யாரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த மறைமுக கருத்து விஜய் மேலுள்ள பயத்தை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் விஜய்யை நேரடியாக விமர்சித்து விட்டால் அவர் வளர்ச்சி அடைந்து விடுவாரோ என்ற நோக்கில் அதிமுக விஜய்யை விமர்சிக்காமல் இருந்த நிலையில் ஜெயக்குமாரின் பேச்சு தவெகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்று பலரும் கூறுகின்றனர்.

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி.. தவெகவில் இணைந்த கொங்கு மண்டல முன்னாள் எம்எல்ஏ!! சொன்னதை செய்த KAS!!

0

TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இறந்த பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்றே சொல்லலாம். இம்முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போராடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தலைமை பதவியே ஆபத்தாக அமைந்து விடும் என்று பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு கட்சியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்த நாளே விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். மேலும் அதிமுகவின் முக்கிய முகங்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கான வெளிப்பாடுகளை செய்து வரும் செங்கோட்டையன் அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிலும் முக்கியமாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டல எம்எல்ஏ-க்களை குறி வைத்த செங்கோட்டையன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணனை தவெக வலையில் வீழ்த்தியுள்ளார்.

இன்று பல்பாக்கி கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ் அவரை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவில் பணியாற்றி வந்த இவர் 1989 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.  தற்போது சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் இவர், தவெகவில் இணைந்தது இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கொங்கு மண்டல தலைகளை குறி வைத்து வரும் செங்கோட்டையனால், அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. 

டிடிவி கண்டிஷனுக்கு தலையசைத்த விஜய்.. டாப் 1-யில் இருக்கும் தவெக!! லீஸ்ட்டில் இபிஎஸ்!!

0

ADMK TVK AMMK: 2026 யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் வேகமெடுத்துள்ள நிலையில், மக்களை சந்தித்து தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் திராவிட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதிமுகவின் வருகையாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார். இவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை.

இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளரக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று திடமாக கூறி வந்தார். ஆனால் இப்போது வரை இபிஎஸ் மாற்றப்படாததால் ஆத்திரமடைந்த தினகரன், தவெகவில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஆண்டிபட்டி தொகுதியை அமமுகவிற்கு எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். இல்லையென்றால் தனித்து நின்று களம் காணுவோம் என்று தினகரன் கூறியிருக்கிறார். அதிமுக வாக்குகளை விஜய் குறி வைப்பதாலும், அதில் சில பகுதிகளை தினகரன் தன் கையில் வைத்துள்ளதாலும் தினகரனின் கோரிக்கைக்கு விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.

மேலும் ஆண்டிபட்டி தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியை அவருக்கு ஒதுக்குவதன் மூலம், தவெக அங்கு சுலபமாக நிலை பெற முடியும் என விஜய் நினைக்கிறார். இதன் காரணமாக அமமுக-தவெக கூட்டணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளால் அக்கட்சி பலமிழந்துள்ள நிலையில், தற்போது தினகரனும் விஜய் கூட்டணியில் சேர்ந்தால், இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என்று  அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

எங்களை அவமானப்படுத்தியது திமுக தான்.. டென்ஷன் ஆன காங்கிரஸ் தலை!! விரக்தியில் ஸ்டாலின்!!

0

DMK CONGRESS: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் அயராது உழைத்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியடைந்த தேசிய கட்சியான காங்கிரஸும் தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது என்றே சொல்லலாம். இதற்காக இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை எதிர்க்கொள்ள போகிறது.

இந்நிலையில் திமுகவிற்கு பாதகமாகவும், காங்கிரஸுக்கு சாதகமாகவும் விஜய் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியடைந்ததை மையப்படுத்தி அதன் கோரிக்கைகளை திமுக மறுத்து வருகிறது. இதனால் இவர்கள் திமுகவிலிருந்து விலகி, விஜய் கட்சியில் இணையும் போக்கை காட்டி வருகின்றனர். காங்கிரஸுக்கு தமிழகத்தில் அதிகளவில் செல்வாக்கு இல்லாவிட்டாலும், அது திமுகவில் இருப்பது ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்தது. இந்த சூழலில் இவர்கள் தவெகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ், திமுக இடையே கருத்து வேறுபாடும், கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் சமயத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் தொண்டர்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு உரிய இடங்களை வழங்காமல் திமுக அவமானப்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சில எம்எல்ஏ-க்கள் மட்டும் தான் திமுக கூட்டணியை விரும்புவதாகவும், பெருவாரியான தொண்டர்கள் தவெக கூட்டணியை விரும்புவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஸ்டாலினுக்கு மேலும் ஒரு சிக்கல்.. புகைச்சலை கிளப்பிய கூட்டணி கட்சி!! கடுப்பான திமுக!!

0

DMK SMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை போல இந்த முறையும் நடக்க வேண்டுமென ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்து வரும் திமுக பல்வேறு சிக்கல்களையும் சந்தித்துள்ளது. அதில் முதலாவது விஜய்யின் வருகை. இவர் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, திமுக எதிர்ப்பு வாக்குகளையும், இளைர்களின் வாக்கு, பெண்களின் வாக்கு போன்ற எல்லாவற்றையும் அறுவடை செய்ய காத்திருக்கிறார். இதுவே திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் போன்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றன.

மேலும் திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகாரால் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர், எர்ணாவூர் நாராயணன், இந்த சட்டமன்ற தேர்தலில் வைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக இன்னும் தீவிரப்படுத்தாத நிலையில், இவர் தொகுதியை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த செய்தி திமுக தலைமைக்கு பேரிடியை இறங்கியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது திமுகவிற்கு அதிமுக, தவெக, பாஜக போன்ற கட்சிகள் ஸ்டாலினுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் வேளையில் இவரின் இந்த கருத்து அதனை மேலும் வலுப்பெற செய்துள்ளது. இதன் காரணமாக திமுகவின் உள்ளகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும், சமத்துவ மக்கள் கட்சி கடும் கண்டனத்திற்கு ஆளானதாவும் தகவல் வெளிவந்துள்ளது.

காங்கிரஸ் வைத்த செக்.. ஸ்டாலின் தலையில் இறங்கிய இடி!! முறியும் கூட்டணி!!

0

DMK CONGRESS: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் தனது கூட்டணியை பலமாக்கும் பணியை செய்து வரும் திமுக, கூட்டணி கட்சிகள் வைக்கும் நிபந்தனைகளையும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே திமுகவில் அங்கம் வகித்து வரும் விசிக, இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக கூறி வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்கள் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம், அதனை ஒதுக்க வேண்டியது திமுகவின் கடமை என்று கூறியிருந்தது. இவ்வாறான நிலையில், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. தமிழகத்திலாவது நிலைபெற வேண்டுமென நினைக்கும் காங்கிரஸ், திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேச காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள நிலையில், தற்போது புதிதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் விருப்பம் என்று கூறி ஸ்டாலின் தலையில் இடியை இறக்கியுள்ளார். கூட்டணி என்பது தேர்தல் முடிவும் வரை தான். மற்றபடி ஆட்சியில் பங்கு என்ற மரபே தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டதில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வர, திமுகவோ அதனை மறுத்து வருகிறது. எனவே விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியதால், காங்கிரஸ் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்படுகிறது.

EPS இருந்தால் அதிமுக தேறாது.. அமித்ஷாவிடம் பியூஷ் கோயல் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!!

0

ADMK BJP: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளிலும், மக்களை சந்திக்கும் பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேசிய கட்சியான பாஜக, பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழக தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை சீரமைக்கவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆராயவும், டெல்லி மேலிடம் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயிலை நியமித்திருந்தது. அண்மையில் தமிழகம் வருகை புரிந்த இவர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பேசியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜவிற்கு 23 தொகுதிகள், தேமுதிகவிற்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ், தினகரனுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் என நிர்ணயிக்கபட்டதாக தகவல் கசிந்தது.

இதனை இவர்கள் மூவரும் அறவே மறுத்த நிலையில், பியூஷ் கோயல் அமித்ஷாவிடம் இபிஎஸ்யிடம் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி கலந்துரையாடியுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்புக்கும், தேர்தல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் பாஜகவின் நிபந்தனைகளுக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால், இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக முன்னேறாது என்று அவர் கூறியுள்ளாராம். இதனால் டெல்லி மேலிடம் இபிஎஸ் மீது கடும் அதிருப்த்தியில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். 

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும்.. பளிச்சென்று பேசிய காங்கிரஸ் தலை!! முழிக்கும் விஜய்!!

0

DMK TVK CONGRESS: 2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தொடக்க புள்ளியாக இருப்பது விஜய்யின் அரசியல் வருகை. இவர் ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அனைத்து ஊடகங்களிலும் தவெக தான் தலைப்பு செய்தியாக உள்ளது. விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அத்தனையும் தொண்டர்கள் கூட்டமாக மாறிவிட்டது. இவர் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறியதுடன், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு மிகவும் நெருக்கம் என்பதாலும், ஆட்சியில்  பங்கை விரும்புவதாலும் தவெக உடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது கூட்டணிக்குரிய சந்திப்பாக தான் இருக்கும் என்று அரசியல் ஆர்வர்கள் கூறினார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்காது, திமுக உடன் தான் தொடரும் என்று பா.சிதம்பரம் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இவர், திமுக உடன் அரசியல் ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் தொடரும். காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு தமிழக முதல்வருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை முடித்த நிலையில், திமுகவும் தனிக்குழு அமைத்த உடன் பேச்சுவார்த்தைகள் வேகமெடுக்கும் என்று கூறியுள்ளார். தவெக உடன் தற்போது வரை எந்த கூட்டணியும் இணையாத காரணத்தினால் காங்கிரஸை மட்டுமே விஜய் நம்பி இருந்தார். ஆனால் தற்போது பா. சிதம்பரத்தின் கருத்தால் இதுவும் கை நழுவி சென்றதால் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பலரும் கூறுகின்றனர்.

எடப்பாடி எடுத்த அதிரடி ஆக்சன்.. தூக்கி வீசப்பட்ட முக்கிய முகங்கள்!! சிதறும் அதிமுக!!

0

ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் மோதிக்கொண்டுள்ள நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகியுள்ளது. இவ்வாறு 2026 தேர்தல் களம் பல்வேறு திருப்பங்கள் எதிர்கொண்டு வரும் சமயத்தில், அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும், ஒவ்வொரு திசையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடன், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டனர். மேலும் அதிமுக பல பிரிவுகளாக இருப்பதால் தான் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று கூறிய செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் முதலில் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலுமிருந்து நீக்கினார்.

இவ்வாறு தொடர்ந்து முக்கிய முகங்களை நீக்கி வரும் இபிஎஸ், கழகத்தின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, வடசென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசுவாசி, துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை ஏ.ஏ. கலையரசு, எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிரணி செயலாளர் இளவரசி, பகுதி மாணவரணி செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர், புரசை கிருஷ்ணன் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அதிமுகவிற்கு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யூகிக்கப்படுகிறது.