Home Blog Page 101

உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டு காட்டிய திமுக எம்பி.. தொடரும் பிரிவினை!!

0

DMK: கரூர் மாவட்டத்தில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திமுகவின் எம்பி திருச்சி சிவா கலந்து கொண்டார். இவர் 1996 முதல் இன்று வரை திமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். தமிழகத்தின் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.

இக்கூட்டத்தில் அதிகளவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி சிவா பேசி கொண்டிருக்கும் போது செந்தில் பாலாஜி வந்ததால் மேடையில் இருந்த தலைவர்களும், கீழே இருந்த தொண்டர்களும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வரவேற்பளித்தனர்.

இதனை கண்ட திருச்சி சிவா “யோவ் யாரா இருந்த என்ன? இங்க பாரு, அவர் பாட்டுக்கு வராரு, நீங்க ஏன் அங்க பாக்குறீங்க, நான் அடி வயிற்றிலிருந்து பேசிட்டு இருக்கேன்” என கோபமாக பேசியிருக்கிறார். பிறகு செந்தில் பாலாஜி அவரிடம் மன்னிப்பு கேட்டு சால்வை அணிவித்தார். திருச்சி சிவா கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே திமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகளும் திமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. திருச்சி சிவாவின் இந்த செய்கை செந்தில் பாலாஜிக்கும், இவருக்கும் ஏற்கனவே சண்டை நடந்ததற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த சண்டை தொடரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் சிக்கி தவிக்கும் திமுகவிற்கு இது புதிய சர்ச்சையாக எழுந்துள்ளது.

செங்கோட்டையனின் கோட்டையில் தலை தூக்கும் இபிஎஸ்.. அதிகரிக்கும் ஆதரவு!!

0

ADMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்திற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக இன்று நீலகிரிக்கு சென்ற இபிஎஸ்-க்கு கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிகாலம் முதல் இன்று வரை கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனின் முகமாக கருதப்பட்டு வருகிறது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

அப்போதிலிருந்து இப்போது வரை அந்த பகுதியில் இவர் செல்வாக்கு மிக்கவராகவும், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றும் நல்ல தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் வனத்துறை, வேளாண்மை துறை, சுற்றுசுழல் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஒருங்கிணைக்க வேண்டுமென்று 10 நாட்கள் கெடு விதித்திருந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரும் அவரை சந்தித்து வந்தனர். நேற்று முன்தினம் கூட 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் செங்கோட்டையனின் வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதால் அவரின் தொகுதியில் அதிமுக தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் இபிஎஸ்க்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு வரவேற்பு அளிக்கப்பட்டது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் செங்கோட்டையனின் குரலுக்கு அப்பகுதி மக்கள் செவிசாய்க்கவில்லை என்பதையும், அங்கு இன்னும் அதிமுக ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டாக இது உள்ளதென இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டணி இணைப்பு தொடர்பாக புதிய திருப்பம்.. பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் முக்கிய புள்ளி!!

0

NDA ADMK: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் நயினார் நாகேந்திரன். மரியாதையை நிமித்தம் காரணமாகவே இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறினார். இதற்கு பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவையும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவையும் சந்தித்தார். மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜே.பி. நட்டாவையும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் முடிந்த வரை வருகிறேன் என்று கூறியதாகவும் கூறினார். கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

யார் யாருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, யாரெல்லாம் கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர் என்பது பற்றி ஜே.பி. நட்டா கேட்டறிந்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார். தற்போது பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னேடுத்துள்ள வீயூகங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த டெல்லி பயணம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

GST ரீபிரேக்!! ஒரே நாடு, ஒரே வரி!! மத்திய அரசின் புதிய GST மாற்றங்கள்!!

0

GST: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை “ஒரு நாடு, ஒரு வரி” என்ற கொள்கையின் கீழ் எளிமைப்படுத்தியது.

செப்டம்பர் 22 முதல், அரசாங்கம் தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அடுக்குகளை (5%, 12%, 18%, 28%) அகற்றி, அவற்றை மிகவும் எளிமையான இரட்டை கட்டமைப்பான 5% மற்றும் 18% உடன் மாற்றியுள்ளது. இது இந்தியாவின் வரி அமைப்பில் ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது, இது குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலிவான வீட்டு அத்தியாவசிய பொருட்கள்

பால், தயிர், பனீர், உலர் பழங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்டுகள் போன்ற தினசரி நுகர்வு பொருட்கள் இப்போது 12% க்கு பதிலாக 5% மட்டுமே ஜிஎஸ்டியை ஈர்க்கும். இந்த நடவடிக்கை மாதாந்திர வீட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும்.

இதேபோல், முன்பு 28% ஜிஎஸ்டியைக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் இப்போது 18% வரம்பிற்குள் வரும். ஆடைகள் மற்றும் காலணிகளும் 12% இலிருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளன, இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்க வாய்ப்பளிக்கிறது.

சமையல் எண்ணெய், சோப்பு, டூத் பேஸ்ட் மற்றும் ஹேர் ஆயில் போன்ற அடிப்படை பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டது, இப்போது வெறும் 5% வரி விதிக்கப்படும்.

வணிகர்கள் மற்றும் எம். எஸ். எம். இ. களுக்கு நிவாரணம்

வணிகங்களைப் பொறுத்தவரை, இந்த சீர்திருத்தம் என்பது சிக்கலான வரி நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். நான்கு அடுக்குகளில் இருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டதன் மூலம், இணக்கச் சுமைகள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் செயல்முறைகள் விரைவாக இருக்கும், மேலும் பல படிவங்கள் மற்றும் தரவு சமர்ப்பிப்புகளுக்கான தேவை குறைக்கப்படும். சிறு வணிகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மிகவும் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலத்துடன் ஒரு முரண்பாடு

காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்தியாவில் கலால் வரி, வாட், சேவை வரி, நுழைவு வரி போன்ற பல வரிகள் இருந்தன, மேலும் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த முறையைப் பின்பற்றியது. இது குழப்பம், நடைமுறைத் தடைகள் மற்றும் ஊழலுக்கான வாய்ப்பை உருவாக்கியது.

மோடி அரசின் சீர்திருத்தம், “ஒரு நாடு, ஒரு வரி” தொலைநோக்குப் பார்வையின் கீழ், இப்போது 99% பொருட்களை 5% வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இது வரிவிதிப்பை வெளிப்படையானதாகவும், எளிமையானதாகவும், உலகத் தரம் வாய்ந்ததாகவும் மாற்றும் என்று அரசாங்கம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் துறை வாரியான தாக்கம்

தொழில் மையமாக இருப்பதால், தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் ஆதாயம் அடையும்ஃ

ஜவுளித் துறைஃ பருத்தி, நூல் மற்றும் துணி உற்பத்தியாளர்கள்-குறிப்பாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில்-ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் காரணமாக ஏற்றுமதி போட்டித்திறன் மேம்படும்.

தோல் மற்றும் காலணிகள்ஃ காலணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கான வரி 12% முதல் 5% வரை குறைக்கப்பட்டுள்ளது, இது ஆம்பூர் மற்றும் வேலூரில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும்.

மீன்வளம்ஃ உலர்ந்த மீன்களுக்கு விலக்கு தொடர்கிறது, அதே நேரத்தில் மீன்பிடி உபகரணங்கள் இப்போது மலிவானதாக இருக்கும்.

ஆட்டோமொபைல்கள்ஃ சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 28% முதல் 18% ஜிஎஸ்டிக்கு நகர்கின்றன, இது சென்னை மற்றும் ஓசூர் போன்ற ஆட்டோமொபைல் மையங்களுக்கு ஒரு உந்துதலை அளிக்கிறது.

அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம்

“சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்” (அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை) என்ற மோடியின் தொலைநோக்குப் பார்வையின் விரிவாக்கமாக இந்த சீர்திருத்தத்தை அரசு முன்வைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் கால வரிவிதிப்பு முறை குழப்பமானதாகவும், ஊழலுக்கு ஆளாகக்கூடியதாகவும் விவரிக்கப்பட்டாலும், பாஜக அரசு இந்த ஜி. எஸ். டி வரிவிதிப்பை எளிமைப்படுத்துவதை வெளிப்படையானதாகவும், மக்கள் சார்பு கொண்டதாகவும், வணிக சார்பு கொண்டதாகவும் முன்னிலைப்படுத்துகிறது.

இந்த இரட்டை அடுக்கு ஜிஎஸ்டி குடும்பங்களுக்கு குறுகிய கால சேமிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தேசிய அளவிலும், தமிழ்நாட்டின் தொழில்துறை எதிர்காலத்திலும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு களம் அமைக்கிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

டிடிவி தினகரனுக்கு எதிராக திட்டம் தீட்டும் இபிஎஸ் நயினார்.. ஓபிஎஸ்யின் பதிலை எதிர்நோக்கும் அரசியல் களம்!!

0

ADMK AMMK: தே.ஜ.கூட்டணியிலிருந்து ஓபிஎஸ்-யும், டிடிவி தினகரனும் வெளியேறியதிலிருந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டிடிவி தினகரன் ஓபிஎஸ்-யை பயன்படுத்தி அதிமுகவையும், பாஜகவையும் வீழ்த்திவிடலாம் என திட்டம் தீட்டி வந்ததாக பேசப்பட்டது. இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன் மீதும், இபிஎஸ் மீதும் தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்தி வந்தார் டிடிவி தினகரன். NDA கூட்டணியிலிருந்து விலகியதற்க்கும் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று கூறினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ்யை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு சில நிபந்தனைகளுடன் இபிஎஸ் சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவு டிடிவி தினகரனுக்கு எதிரான சதித்திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் ஓபிஎஸ்யை கட்சியில் இணைத்துக் கொண்டால் தினகரன் தனித்து நிற்பார் என்பது தான் இவர்களது திட்டம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. தற்போது ஓபிஎஸ் என்ன பதிலளிப்பார் என்று அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் டிடிவி தினகரன்.

ஏற்கனவே அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கிறது, அதோடு அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது என்று கூறப்பட்டு வரும் வேளையில் இவர்களின் சந்திப்பில் மேலும் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய்யை மையமாக வைத்து காய் நகர்த்தும் கூட்டணிகள்.. லாபமடையும் அதிமுக!!

0

DMK TVK ADMK: கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணி குறித்து ஜனவரியில் தான் முடிவு எடுக்கவேண்டும் என்று விஜய் உறுதியாக உள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தனக்கான ஆட்சி பங்கையும், அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து கொள்வோம் என்று கூறி வருகின்றனர்.

இது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென தீவிரமாக உழைத்து வரும் திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வருவதால், கூட்டணி கட்சிகளின் வாக்கும், திமுக மீது அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களின் வாக்கும் தவெகவிற்கு செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் மற்றொரு புறம் திமுகவிற்கு மாற்று அதிமுக தான் என நினைக்கும் தொண்டர்களின் வாக்கு அதிமுகவிற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் பிரச்சாரமும், திமுக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளும் ஒரு வகையில் அதிமுகவிற்கு சாதகமாக மாற வாய்ப்பிருக்கிறது.

TVK திடீர் முடிவு.. கூட்டணி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

TVK: தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவிலும், அதிமுகவில் இருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கிறது. அதிலும் உட்கட்சி பூசல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளது.

அதற்கு முடிவு எட்டப்படாத நிலையில் பாஜகவை அனைவரும் நாடுகின்றனர். சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடும் உள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தங்களுடன் யார் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என கூறியுள்ளது. ஆனால் தற்போது அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் 30 சதவீத வாக்கு வங்கியில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.

அந்த வகையில் இவர்கள் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது ரீதியாக அவர் பேசுகையில், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றனர். இதில் ஏதேனும் மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் உள்ளது. அதேபோல 40 கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெறும் கட்சியால் மக்கள் நன்மை பெற முடியாது, இனிவரும் நாட்களில் ஏதேனும் நன்மை நடக்க வேண்டுமென்றால் அது தமிழக வெற்றிக் கழகம் வந்தால் தான் முடியும்.

மற்ற கட்சியை காட்டிலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சேரும் கூட்டம் மிகவும் வித்தியாசமான ஒன்று. மற்றவர்கள் பணத்தைக் காட்டி கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால் இங்கு தன்னெழுச்சியாக கூட்டம் கூடுகிறது. அதேபோல கடந்த 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் 33 சதவீத வாக்குகளுடன் ஆட்சி அமைத்தார். அச்சமயம் நான்கு முனை போட்டி இருந்தது. அதுவே இம்முறை பல முனைப் போட்டி இருந்தும் தமிழக வெற்றிக் கழகம் 35% வாக்கு பெற்று தனி பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

மேலும் மற்ற கட்சியை போல் எங்களுக்கு மத்திய அரசோடும் சமரச செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிறர் கட்சியினர் தங்களின் ஊழலை மறைக்கவே பாஜகவுடன் கைகோர்க்கின்றனர். ஆனால் எங்களின் கொள்கை எதிரியே பாஜக தான். தொடர்ந்து திமுக குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து பேசியும் உள்ளார். இவர் கூறியதைப்போல் தனி பெரும்பான்மையுடன் 35 சதவீதம் அளவில் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு வங்கியை நிரப்பும் பட்சத்தில் கூட்டணிக்கான அவசியம் அவர்களுக்கு தேவைப்படாது.

திமுகவின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி கொள்ளும் தேமுதிக.. பதறும் ஸ்டாலின்.. பிரேமலதா விதித்த நிபந்தனை!

0

DMK DMDK: 2026 தேர்தலையொட்டி தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக கூட்டணி கட்சிகள் தங்களுக்குரிய ஆட்சி பங்கையும், தொகுதிகளையும் ஒதுக்க வேண்டுமென்று திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றன.

இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவதாக கூறி வந்தனர். இந்நிலையில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை முன் வைத்ததாகவும், அது குறித்து திமுக தலைமை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த நிபந்தனை என்னவென்றால் பொதுவாக திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் தான் தேர்தலை எதிர் கொள்வார்கள். ஆனால் தேமுதிக அவர்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

திமுகவின் உட்கட்சி பூசலை பயன்படுத்தி கொண்டு பிரேமலதா விஜயகாந்த் இந்த நிபந்தனையை விதித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் கூட்டணியை விட்டு விலகுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவின் இந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை தழுவும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் இணையும் ஓபிஎஸ்.. அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்!!

0

ADMK: இபிஎஸ் முதல்வரான பிறகு அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பலரையும் கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவர் தான் ஓபிஎஸ். கட்சியின் சின்னமான இரட்டை இலை இபிஎஸ்க்கு செல்லுமா இல்லை ஓபிஎஸ் அணிக்கு செல்லுமா என்று கேள்வி எழுந்த போது, அது இபிஎஸ்க்கு தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்று பலரும் கூறி வந்த நிலையில் செங்கோட்டையனும் இதனையே கூறினார். இது தொடர்பாக டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்தார். இவருக்கு பிறகு டெல்லி சென்ற இபிஎஸ் பிரிந்தவர்களை இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

அடுத்ததாக தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் சேலம் வந்திருந்த போது இபிஎஸ் வீட்டிற்கு சென்றார். இவர் என்ன பேசி இருப்பார் என்று கேள்விகள் எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக பேசியதாக கூறினார்.

ஆனால் இவர்களின் சந்திப்பு பற்றி அரசியல் வல்லுனர்களின் கருத்து என்னவென்றால், ஓபிஎஸ்யை மீண்டும் கட்சியில் இணைக்க இருப்பதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும், விவாதங்கள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு இபிஎஸ்யும் ஒப்பு கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஓபிஎஸ் என்ன பதிலளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பாஜக திட்டமா? சசிகலாவிற்கு ட்விஸ்ட் கொடுத்த  வெண்மதி!! அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை!

0

ADMK: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கிறது. அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அவர்கள் பக்கம் நின்றனர். இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த சசிகலா செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு குரல் கொடுக்க முன்வந்தார்.

இதனை தொடர்ந்து சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இன்னமும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதால் என்னால் என்னுடன் இருப்பவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை என்றும், அதனால் அவரிடம் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவை பாஜக தான் திட்டமிட்டு பிரிந்திருப்பதாகவும் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார். சசிகலாவை விட அவரது முக பாவனைகளே அதிகம் பேசப்பட்டன. இதனை தொடர்ந்து வெண்மதி செங்கோட்டையன் அல்லது டிடிவி தினகரன் உடன் இணைவார் என்று பேசப்படுகிறது. இது சசிகலாவின் அரசியல் பயணத்தை பின்னுக்கு தள்ளும் முதற்படியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.