Home Blog Page 104

ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் கொடுக்கும் டிடிவி.. உறுதியான கூட்டணி!

0

AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதிலும், மக்களிடம் தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக சாடி வந்த நிலையில், ஒருங்கிணைப்பு தொடர்பாக இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது குறித்து பேசிய தினகரன் எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த சண்டையும் இல்லையென்றும், டிசம்பரில் நல்ல செய்தியை சொல்லப்போகிறேன் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நல்ல உறவு இருப்பதாகவும் கூறினார். இதனால் இவர் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினகரன் ஏற்கனவே ஒருமுறை விஜய் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.

தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கவும், இபிஎஸ்யை பழிவாங்கும் நோக்குடனும் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமமுகவின் அரசியல் பலத்தை நிலைப்படுத்தவும் இது மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக-திமுக என இரு பெரிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் மூன்றாவது பெரிய அணியாக உருவாக தினகரன் விஜய்யை நாடியுள்ளார் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் அது பாஜகவிற்கும், இபிஎஸ்கும் பெரிய சவாலாக அமையுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

கூட்டணி கட்சிகளின் புதிய அழுத்தம்.. திணறும் திமுக!

0

DMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த முறை கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெறுவோம் அதோடு சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும் என்று கூறியிருப்பது பெரும் விவாதமாகியுள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் தனது வலிமையை கூட்டணிக்குள் நிலைப்படுத்த முயல்கிறது எனவும், திமுக தலைமையை நோக்கி அழுத்தம் கொடுக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அதிமுக போல் இல்லாமல் திமுக தனது கூட்டணியில் பிளவு ஏற்படாமல் அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி செல்கிறது என்று கூறப்பட்ட தருணத்தில் கே.எஸ். அழகிரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சியும் அதேபோன்று கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளன. ஏற்கனவே விசிகவின் தலைவர் திருமாவளவன் திமுகவின் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுக்கள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறி விவாதத்தை கிளப்பியிருந்தார். எதிர் கட்சிகள் திமுக தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது, அதனால் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என விமர்சித்து வருகின்றனர்.

சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில், திமுக உள்ளதால் அடுத்த நடைபெறும் கலந்துரையாடலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவே, சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நிலையையும், கூட்டணியின் வலிமையையும் தீர்மானிக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

பிரச்சாரம் ஒதுக்கி வைக்கப்பட்டதன் பின்னணி.. அதிமுகவில் பெருகும் குழப்பங்கள்!

0

ADMK: அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலை விட அதிமுகவின் பிரச்சனைகளில் தான் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை தர்மபுரியில் நடைபெறவிருந்த பிரச்சாரத்தை வானிலையை காரணம் காட்டி ஒதுக்கி வைத்து விட்டு, டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்குவது குறித்தும் இபிஎஸ் பேசியதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுகவின் சுற்றுப்பயணம் நாமக்கல் மாவட்டத்தில் 20.9.2025, 21.9.2025 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் அது ஒதுக்கி வைக்கபட்டுள்ளது. வானிலை காரணமாக இது ஒதுக்கி வைக்கபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதிமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் திமுகவில் இணைவதும், கட்சியிலிருந்து விலகுவதுமாக உள்ளனர்.

இதனால் கட்சி பலவீனமடைவதை உணர்ந்த இபிஎஸ் எஞ்சியுள்ளவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் அமித்ஷாவை சந்திக்க உள்ளார் என்றும், சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை கேட்டதால் அதிமுக உள்ளகத்தில் சச்சரவு நிலவி வருகிறது. அதனை சமரசம் செய்வதற்காக டெல்லி செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை இது நிகழ்ந்தால் அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் மற்றும் கட்சியின் வலிமையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம் பி! இபிஎஸ்க்கு அடிமேல் அடி!

0

DMK ADMK: சமீப காலமாக பெரிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாற்று கட்சியை நாடியுள்ளனர். நேற்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுகவில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர்.

முன்னதாக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்பி மைத்ரேயன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்ற மருது அழகுராஜாவும் நேற்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மேலும் பலர் அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைய போகிறார்கள் என்றும் கூறினார்.

மருது அழகுராஜா திமுகவில் இணைந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்கள் பலரையும் திமுகவின் பக்கம் ஈர்க்கும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்து யார் யார் திமுகவில் இணைய போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உறுப்பினர்கள் கட்சி மாறுவதை விட கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மாற்று கட்சி தேடுவது மிகவும் ஆபத்தானதாகும். இந்த சூழ்நிலையில், தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி குறித்து தினகரன் சிக்னல்.. ஆலோசனையில் அமமுக!

0

AMMK BJP: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடியாரால் அதிமுகவில் இருந்து நீக்கபட்டதிலிருந்தே அவரை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் டெல்லி சென்ற இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு சாத்தியமில்லை என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் எனக்கும், இபிஎஸ்க்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவித விரோதமும் இல்லை என்றும், வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. தினமும் நாங்கள் உரையாடுகிறோம். அண்ணாமலையின் குணமும் என் குணமும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன என்று கூறியுள்ளார். அண்ணாமலையுடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியது, பாஜக உடனான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் பாஜக, அமமுக கூட்டணி அமையும் என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

பாஜக தமிழகத்தில் வலுவான அடித்தளத்தை தேடி கொண்டிருப்பதாலும், தினகரனுக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு அதிகம் இருப்பதாலும் இந்த கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அண்ணாமலை-தினகரன் இடையிலான தொடர்பு, அதற்கான சிக்னலாக கருதப்படுகிறது. அதே சமயம், ஓபிஎஸ் அணியுடனான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.

ஓபிஎஸ்-செங்கோட்டையன் சந்திப்புக்குப் பிறகு, தினகரனும் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம், தினகரன் தனித்து புதிய கூட்டணியை உருவாக்குவாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால், டிசம்பரில் தினகரன் அறிவிக்கவிருக்கும் செய்தி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என்பது தெளிவாகிறது.

EPSக்கு எதிராக உருவாகும் கூட்டணி ! எடப்பாடிக்கு ஆபத்தா ?

0

ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நன்கு அறியப்பட்டவர். அப்போதிருந்த ஆட்சியில் அவருக்கு நல்ல முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அது தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் இபிஎஸ்.

இதனை தொடர்ந்து பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இவரை தொடர்ந்து இபிஎஸ்யும் டெல்லி சென்றார். அவர் அமித்ஷாவிடம் பேசிய போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்கு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு எந்த விதமான கருத்தையும் கூறாமல் இருந்தார் செங்கோட்டையன்.

இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று செங்கோட்டையனை நேரில் சந்தித்துள்ளனர். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது வெறும் சந்திப்பு மட்டுமல்ல. அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் செங்கோட்டையன், ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அடுத்த கட்டமாக டிடிவி தினகரனும், சசிகலாவும் ஆலோசனையில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதியானால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒரு அணியாக செயல்படும் வாய்ப்பு உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அடுத்த அரசியல் கூட்டணி உருவாகும் சத்தியம் அதிகரித்துள்ளது. இது இபிஎஸ்க்கு எதிரான ஒரு வலுவான அணியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கருதுகின்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா, ஆகியோரின் ஒருங்கிணைப்பு அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

சேலத்தில் சூடேற்றிய அதிமுகவின் இணைப்பு .. திமுகவிற்கு அதிர்ச்சி!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னணி கட்சியில் சேர்வதும், கட்சியை விட்டு விலகுவதுமாக உள்ளனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற அதிமுக விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார்.

குறிப்பாக தவெக திமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் இணைந்ததாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர் அதிமுக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களை நினைவுப்படுத்தி, மக்களின் அன்பும் நம்பிக்கையும் அதிமுகவிற்கே உள்ளது, அதனை வரவிருக்கும் தேர்தலில் வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டும் என்றும், அதிமுக எப்போதும் மக்கள் நலனுக்காகவே செயல்பட்டு வந்த கட்சி.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் உரிமைக்காக எப்போதும் போராடி வருகிறோம் என்றும், இன்று அதிமுகவில் இணைந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் வெற்றிக்கு பங்களிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார். புதியதாக இணைந்தவர்கள், அதிமுக கொடியை ஏற்றுக்கொண்டு, கட்சிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்தனர்.

கொங்கு மண்டலத்தில் காலூன்ற வேண்டுமென நினைத்த திமுகவிற்கு இந்த உறுப்பினர் சேர்க்கை பெரிய சவாலாக உள்ளது. சேலம் மாவட்டம் பாரம்பரிய ரீதியாக அதிமுகவின் வலுவான கோட்டையாக கருதப்படும் நிலையில், இந்த உறுப்பினர் சேர்க்கை, அதிமுகவின் வலிமையை மேலும் கூட்டும் வகையில் அமையுமென பேசப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் சூடுபிடிப்பு.. பதிலுக்கு பதில்!

0

ADMK DMK:அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் கொங்கு மண்டலம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தந்தது பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்தது.

அவர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கு திமுகவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இதனால், அதிமுக வாக்காளர்கள் திமுக பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்திற்கு வந்துள்ளார்.

அரசியல் ரீதியாக, உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடியின் விஜயம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆதிக்கம் குறையவில்லை என்பதையும், இந்த பகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்பதையும் வலியுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் வருகை அமைகிறது.

குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்காளர்களை நிலைப்படுத்த தீவிரமாக செயல்படும் நிலையில், கொங்கு மண்டலத்தை கைப்பற்றும் போட்டி அதிமுக-திமுக இடையே மேலும் தீவிரமடைந்துள்ளது.

இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக பரிந்துரைத்தவரே இவர் தான்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..

0

ADMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் இன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று முதல் முதலில் பரிந்துரைத்தவரே டிடிவி தினகரன் தான். அப்போது அவர் முழுமையாக ஆதரவு அளித்தார். பின்னர் அரசியல் காரணங்களுக்காக திசை மாறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திகழ்கிறது என்றும், மக்களிடையே இபிஎஸ்க்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு சாதகமாக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரன் கூறி வந்த நிலையில் இவரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதொடு, டிடிவி தினகரனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுகவில் உட்கட்சி சிக்கல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி ஆதரவா? கட்சி அடித்தளமா? பாஜக கோரிக்கையால் தவிக்கும் இபிஎஸ்!

0

ADMK BJP:அதிமுக-பாஜக இடையிலான சீட் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுகவின் பாரம்பரிய பகுதிகள் என கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளை கேட்பது, எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக மாறியுள்ளது.

குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள், பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கட்சியின் வலுவான வாக்கு வங்கியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவின் நிலை ஆபத்தாகும் என்ற கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் நெருக்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கும், சட்டமன்றத் தேர்தலில் சவால்களை சமாளிப்பதற்கும் பாஜகவின் கோரிக்கைக்கு இ.பி.எஸ் சம்மதிப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது. மறுபுறம், கட்சியின் பாரம்பரிய கோட்டைகளை விட்டுக் கொடுக்கும் போது, அது எடப்பாடிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அவசியம் என்று யோசிக்கிறார், ஆனால் கட்சியின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் அளவுக்கு அதிக சீட்டுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணியை காக்க வேண்டுமா? அல்லது அதிமுகவின் வலுவான அடித்தளத்தை பாதுகாக்க வேண்டுமா? என்ற பிரச்சினையை எதிர்கொள்கிறார். எடப்பாடி எடுக்கும் இறுதி முடிவு தான் கூட்டணியியையும், அதிமுகவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.