Home Blog Page 105

அதிமுக-பாஜக கூட்டணியில் சீட் ஒதுக்கீடு பரபரப்பு! இ.பி.எஸ்யின் பதில் என்ன?

0

ADMK BJP: அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிப்பதற்காக டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, அமித்ஷாவுடன் நடத்திய சந்திப்பில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவிற்கு 40 முதல் 50 தொகுதிகள் ஒதுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 4 இடங்களை கேட்டதாகவும், குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியை கட்டாயம் தங்களுக்கே தர வேண்டும் என வலியுறித்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்காக அமித்ஷா நேரடியாக பேசியதாகவும், அதற்கு எடப்பாடி ஒப்புதல் அளித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் பாஜக 10 தொகுதிகளில் 4 இடங்களை பிடிக்கத் திட்டமிட்டு இருப்பது அதிமுகவுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி எப்படி அமையுமென்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

எ.வ.வேலுவின் கோட்டையில் அதிமுக அதிரடி! அதிர்ச்சியில் திமுக..

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னணி கட்சிகளான அதிமுக, பாமக போன்றவை உட்கட்சி பூசலிலும், தலைமை போட்டியிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் ஆளுங்கட்சியான திமுக இவ்வாறான பிரச்சனைகளில் சிக்காமல் கூட்டணி கட்சியுடன் ஒத்துழைத்து வந்தது. இதனால் மக்களுக்கு அதன் மேல் நம்பிக்கை பெருகி வந்த சமயத்தில் திடீர் திருப்பமாக சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இது பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய பலம் சேர்க்கும் வகையில், திமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்தனர்.

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் வலிமை குறையக்கூடும் என்றும், அதிமுக அணி பலம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவிலிருந்து விலகியவர்கள் கட்சியின் செயல்பாடுகளில் எங்களின் பங்கீடு குறைந்துள்ளது, அதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம் என்றும், ஆதரவாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் செல்ல முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் மூத்த அமைச்சர் எ.வ.வேலுவின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. அங்கு நடந்த இந்த அதிமுக இணைவு, வேலுவின் வலிமையை சவாலுக்கு உள்ளாக்கும் அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் திமுக அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படுமென்பது இதிலிருந்து தெளிவாகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்நிகழ்வு அதிமுகவுக்கு முக்கிய அரசியல் பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

புகழேந்தியின் புதிய பாதை! கவலைக்கிடமான நிலையில் அதிமுக..

0

A.D.M.K T.V.K: அதிமுகவில் தொடர்ந்து பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வரும் நிலையில் அதனை சரி செய்ய முடியாமல் இ.பி.எஸ் தவித்து வருகிறார். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இவரின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்ததற்குப் பிறகு, அவர் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி வந்தார். ஏற்கனவே ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், புகழேந்தியின் விலகலும் அதிமுகவின் வலிமையை குறைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினார். இது அதிமுகவிற்கு பெரிய சவாலாக அமைந்தது. அதிமுகவின் தற்போதைய சூழ்நிலையில் புகழேந்தியும் தவெகவில் இணைந்தால் அது இக்கட்சிக்கு இன்னொரு பின்னடைவாக அமையுமென்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் இவரின் இந்த முடிவு அடுத்த அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

தவெகவில் இணையும் அதிமுக தலைவர்! இ.பி.எஸ்க்கு புதிய அதிர்ச்சி?

0

ADMK TVK: அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி, தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவர் திமுக அல்லது தவெக உடன் இணையும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புதிய கட்சிகளை தேடி தங்கள் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழேந்தியும் தவெக இணைந்தால் அது அக்கட்சிக்கு வலுவான ஆதரவை அளிக்கக்கூடும். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான் தவெகவில் இணையவில்லை.

ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது. அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு பாதகமாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இவர் தவெகவில் இணையப் போகிறார் என்பதற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது தவெகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் என மதிப்பிடப்படுகிறது. புகழேந்தி தவெகவில் இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியாகும் பட்சத்தில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தவெக புதிய வளர்ச்சியை அடையும் வாய்ப்பு அதிகம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீக்கப்பட்டவர்களின் அடுத்த நகர்வு என்ன? கூட்டணியா அல்லது தனித்த பாதையா? தொடரும் கேள்விகள்!

0

ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைவரது எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அதிமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளிடையே தலைமை போட்டி அதிகரித்துள்ளது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் தான் டெல்லி வரை சென்று இந்திய அளவில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பேசிய இ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கியவர்களை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதோடு, தேவைப்பட்டால் தே.ஜ கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கட்சியில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் எந்த பதிலும் கூறாமல் உள்ளனர். சமீபத்தில் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய டி.டி.வி தினகரன், முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜக தான் எங்களை காப்பாற்றியது என்று கூறிய இ.பி.எஸ்-ன் கருத்துக்கு ஓ.பி.எஸ்-ம், டி.டி.வி தினகரனும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற இவர்கள், அவர் கூறியதை ஏற்று தே.ஜ கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக செயல்படுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அமித்ஷாவிடம் இ.பி.எஸ் பேசியது என்ன? அதிமுகவின் ஒருங்கிணைப்பு சாத்தியமா?

0

A.D.M.K B.J.P:அதிமுகவின் தற்போதைய நிலையைப்  பார்த்தால் அது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர் கட்சியாக கூட மாற வாய்ப்பில்லை என்று அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா செங்கோட்டையன் என பலரும் அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் நிலையில் கட்சி மிகவும் வலுவடைந்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கட்சியின் இந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் நிலையாக உள்ளார். இதற்கு காரணம் அவருக்கு தலைமையின் மேல் உள்ள பயம் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் அமித்ஷா இ.பி.எஸ்யிடம் கட்சியிலிருந்து நீக்கியவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறித்தியதாகயும், அதற்கு மறுத்த இ.பி.எஸ் அவர்களை மீண்டும் இணைத்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என கூறியதாகவும், என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்காதவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வேண்டுமென்றால் தே.ஜ.கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த கருத்துக்கு பிரிந்து சென்றவர்களின் பதில் என்னவாக இருக்கும், இ.பி.எஸ் கூறியது போல் தே.ஜ.கூட்டணியில் இணைவார்களா இல்லை தனித்து செயல்படுவார்களா அல்லது திமுக உடனோ, தவெ.க உடனோ கூட்டணி அமைப்பார்களா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதிமுக-பாஜக உறவில் விரிசலா? இ.பி.எஸ்யின் இறுதி முடிவு!

0

A.D.M.K B.J.P: ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அப்போது இருந்த ஒற்றுமை இப்போது இல்லை என்பதற்கேற்ப சச்சரவு தொடர்கிறது. இதனால் அதிமுக அதன் உள்வட்டாரத்தில் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாக்கபட்டது. இதனை தொடர்ந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். இதனால் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வேண்டுகோள் வைத்தார். இதனை தொடர்ந்து இ.பி.ஸ்யும் அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவரும் அமித்ஷாவை சந்தித்து அதிமுக உள்விவகாரங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அமித்ஷா பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறித்தியதாகவும், அதற்கு இ.பி.எஸ் மறுப்பு தெரிவித்ததாகவும், கட்சியில் சேர்க்க முடியாது வேண்டுமென்றால், தே.ஜ.கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் தகவல் கூறுகிறது.மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கூறியும் இ.பி.எஸ் தந்து முடிவில் உறுதியாக இருப்பது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களை கட்சியில் இணைத்தால் அவரின் தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் தான் இபிஎஸ் அவர்களை கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், இவரின் இந்த பிடிவாதம் இந்த கருத்தை உறுதி செய்வதை போல் உள்ளதென சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான உறவு வருங்காலத்தில் எப்படி இருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுகவை காப்பாற்றியது பாஜக தான்.. இபிஎஸ்-ன் பேச்சுக்கு டிடிவி ஓபிஎஸ் பதிலடி!

0

ADMK: சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருந்தார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை சிதைக்க பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக தான். அந்த நன்றியை மறக்காமல் இருக்கிறோம் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அவரை காப்பாற்றியது பாஜக இல்லை என்றும் அப்போது சட்டசபையில் இருந்த 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் தான் என்றும் கூறினார். பாஜகவிற்கு நன்றியோடு இருப்பதாக இ.பி.எஸ் கூறுகிறார். ஆனால், அவர் ஆட்சியில் அமர காரணமாக இருந்தவர்களை மறந்து விட்டு, அவருக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்து கொண்டார் என்றும் இ.பி.எஸ். மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டி.டி.வி தினகரனின் இந்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் ஆதரவு தெரிவித்தது இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்றிணைய உள்ளனர் என்பதை விளக்கிக் கூறுவது போல உள்ளதென அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இது சட்டமன்ற தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவிற்கு எடப்பாடி வைத்த டிமாண்ட்..! இதை செய்தால் கூடுதல் சீட் வழங்க ஒப்புதல் – டெல்லி விசிட்டின் சீக்ரெட்

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் போது அதிமுக-வில் இருந்த முன்னணி தலைவர்களான டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் பல அணிகளாக பிரிந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கிய பின் அவர் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து இ.பி.எஸ்-ம் பாஜக தலைவர்களை சந்திப்பார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில், தனது பிரச்சாரத்தை வானிலை காரணம் காட்டி தள்ளி வைத்து விட்டு, நேற்று டெல்லி சென்று பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், இனி அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடக்கூடாது என்று இபிஎஸ் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிமுக, பாஜக கூட்டணிக்குள் இ.பி.எஸ் தனது தனித்துவத்தை வெளிகாட்ட முயற்சிப்பது தெளிவாகிறது.

இந்த கோரிக்கைக்கு பாஜக ஒப்புக்கொண்டால், பாஜகவிற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டுகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையும் நடந்ததாக பரவலாக பேசப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியின் எதிர்காலம் குறித்து நீண்ட நாளாக சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், இ.பி.எஸ் எடுத்த இந்த முடிவு இரு கட்சிகளின் உறவை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

திடீரென காரில் கட்சி கொடியை மாற்றிய ராமதாஸ்.. வெளியான விளக்கம்

0

PMK: பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை பதவி அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதனால் பாமக நிர்வாகிகளும்,தொண்டர்களும் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் பாமக கட்சி கொடி இல்லாதது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கமாக அவர் எங்கு சென்றாலும், காரில் கட்சிக்கொடியுடன் செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இன்று ராமதாஸ் காரில் பாமக கொடி இல்லாமல் இருப்பது தொடர்பாக சிலர் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலாக அவர் வன்னியர் சங்க கொடியை வைத்திருந்தார். இதனால் “கொடியை மாற்றியது ஏன்?” என்ற விவாதம் கிளம்பியது.

முன்னதாக பாமக தலைவர் யாரென விவாதம் எழுந்த நிலையில் அதற்கு அன்புமணி தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக ஒரு கடிதத்தை வெளியிட்டு புயலை கிளப்பியிருந்தனர். இந்நிலையில் ராமதாஸ் காரில் கட்சி கொடி இல்லாதது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியது.

இது குறித்து விளக்கம் அளித்த ராமதாஸ் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்க்கு போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சி கொடியை மாற்றியதாக கூறினார். 1987 செப்டம்பர் 17 ஆம் தேதி வன்னியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றிக்கு 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் தலைமை தாங்கினார். மேலும் பல்வேறு போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் தியாகிகளின் நினைவாக தான் இன்று கட்சி கொடியை மாற்றியதாக உறுதிப்படுத்தியுள்ளார்.