திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 11

சிபிஐ விசாரணை விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக தான்.. மக்களுக்காக அல்ல.. உமாபதி விளக்கம்!!

0

TVK : கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில், விஜய் உச்சநீதிமன்றத்தை அடைந்ததன் முக்கிய நோக்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தெரிவித்திருந்த கடுமையான கருத்துக்களை நீக்கச் செய்வதே என்று கூறினார்.

இது வழக்கின் விசாரணை குறித்து அல்ல, அவரின் தனிப்பட்ட மரியாதையும், அரசியல் இமேஜையும் காப்பாற்றும் முயற்சி என்று அவர் தெரிவித்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்னர் சிபிஐ விசாரணை உத்தரவு வந்தது. ஆனால் அதனைச் சுற்றி பாஜக மற்றும் தவெக இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உமாபதி சுட்டிக்காட்டினார். நயினார் நாகேந்திரன் விஜய்க்கு பாதுகாப்பு தேவை என கூறுகிறார்.

ஆனால் அதே கட்சியை சேர்ந்த  அண்ணாமலை அதற்கு எதிராகப் பேசி, அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறுகிறார். இது அவர்களுக்குள் உள்ள போட்டியையும், அரசியல் வயிற்றெரிச்சலையும் காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார். அதிமுக குறித்து பேசும் போது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவை நோக்கி செல்கிறது. கூட்டணி அரசியலின் திசை மாறிவிட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் கூட அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என உமாபதி கூறினார்.

மேலும், ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு படம் பவந்த் கேசரியின் ரீமேக் என்றும், அதன் படப்பிடிப்பின் போது கரூர் நெரிசல் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விஜய் தற்போது தன் அரசியல் முகத்தை காப்பாற்றிக் கொள்ளவே நீதிமன்றத்தை நாடுகிறார். அவர் உண்மையில் கரூருக்கு செல்வாரா, இல்லையா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என உமாபதி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

இறுதி முடிவில் பிரேமலதா.. எம்.பி பதவி யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி!!

0

DMDK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வியம், தவெக, பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை காட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான். தற்போது தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாமகவும் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிக யார் பக்கம் செல்வதென்று  தெரியாமல் யோசித்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவுடன் ஏற்பட்ட ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதனுடனான உறவு முறிந்தது. அதனால் பிரேமலதா மீண்டும் அதனை வலியுறுத்துவதாக தகவல் வந்துள்ளது. மேலும் அதிக தொகுதிகளையும், 8 எம்.எல். களையும் தருவதற்கு யார் சம்மதிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதில் பிரேமலதா தெளிவாக உள்ளார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த கோரிக்கையை அதிமுக, திமுக என இரண்டு பக்கத்திலும் தெரிவித்துள்ளதாகவும், இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தான் தனது கூட்டணி முடிவை பிரேமலதா ஜனவரியில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அதிமுக கூட்டணி தற்சமயம் வலுப்பெற்று வருவதை உணர்ந்த பிரேமலதா, அதிமுக விடம் வைக்கப்பட்ட கோரிக்கையை விட திமுகவிடம் அதிகம் கேட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக கூட்டணி பலமடைந்து வருவதால் திமுகவும் பிரேமலதாவின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். 

நாங்க விசாரிச்ச விஜய்க்கு எதிராக தான் தீர்ப்பு வரும்.. சட்டசபையில் பளிச்சென்று பேசிய ஸ்டாலின்!!

0

DMK TVK: சட்டமன்ற தேர்தலை விட கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோகம் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரித்து வந்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. இந்த சம்பவம் கரூரில் நடைபெற்றதால், இதற்கு காரணம் திமுக அரசு தான் என எதிர்க் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர்.

இதனால் இந்த வழக்கை தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று அனைவரும் நினைத்தனர். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் சிபிஐ விசாரணையை கேட்டதன் அடிப்படையில் சிபிஐக்கு உத்தரவிட்டது. இது மாநில அரசுக்கு பேரிடியாக இருந்தது. தற்போது இந்த வழக்கை தமிழக அரசு விசாரித்தால் அது விஜய்க்கு எதிராக தான் திரும்பும் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது எதிர்பாராத விதமாக நடந்தது என்று கூறினார். ஆனால் இன்று, சட்டசபையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அப்போது விளக்கமளித்த அவர், கரூர் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்பை விட கூடுதலாகவே வழங்கப்பட்டது.

தவெக சார்பில் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு பிரச்சாரத்திற்கு வராமல் 7 மணி நேரம் தாமதமாக வந்தார் என்றும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இந்த வழக்கை முதல்வர் அமைத்த  குழுவின் கீழ் விசாரித்தால் அந்த அறிக்கை விஜய்க்கு எதிராகவே திரும்பும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையின் மூலம் நிரூபித்துள்ளார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். 

அமலாக்க துறைக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

DMK: தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்  துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதற்கான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை  தெரிவித்ததோடு  சில கேள்விகளையும் எழுப்பியது.

தலைமை  நீதிபதி பி.ஆர். காவாய் இங்கு கூட்டாட்சி என்பது என்ன? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் பறிக்கவில்லையா? உங்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் மாநில அரசின் குற்றத்தை விசாரிக்கவில்லை என்று நினைத்து கொண்டு, நீங்கள் நேரடியாக விசாரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கடந்த 6 வருடங்களாக நான் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறேன். தற்போது இது குறித்து ஏதாவது சொன்னால், அது பெரிய செய்தியாகிவிடும் என்றும் கூறினார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட்ட கபில் சிபில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை ஏன் இடையில் நுழைகிறது என்று கேட்டார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அமலாக்கத்துறை வக்கீலான எஸ்.வி ராஜா மாநில அரசு ஏற்கனவே  47 வழக்குகளை  பதிவு செய்துள்ளது. இருப்பினும், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது.

இதனால் இதனை அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து இரு தரபிப்பினருக்கும் வாதங்கள் பெருகி கொண்டே போனதால் டாஸ்மாக் வழக்கை விசாரிக்க அமலாக்க துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தற்போது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

பாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பு.. வாய் திறக்காத இபிஎஸ்.. பரபரப்பில் தேர்தல் களம்!!

0

ADMK PMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முன்னணி கட்சிகளைனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாமகவை சேர்ந்த தொண்டர்கள் பாமக கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, சேலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அப்போது ஜலகண்டாபுரம் வழியாக செல்லும் போது, அங்கு அதிமுக கொடி மட்டுமல்லாது பாமக கொடியும் வரவேற்புக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை பாமக நிறுவனர் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்த இபிஎஸ் அவரிடம் சுமார் அரைமணி நேரம் பேசினார்.

இது குறித்து கேட்டபோது அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் தற்போது சேலத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் பாமக-அதிமுக கூட்டணி புதிதாக உருவெடுத்துள்ளது என்பதை காட்டுகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றும், தவெக தொண்டர்கள் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் அதிமுக பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

நாங்கள் தலைமையின் அனுமதி பெற்று வருமாறு அறிவுறித்தினோம் என்றும் கூறினார். இந்நிலையில் பாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பளிக்கப்பட்டது கூட்டணி கணக்குகளின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி .சண்முகம்.. தொடரும் கண்டனங்கள்!!

0

ADMK DMK: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பூத் கமிட்டி கூட்டத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சி.வி சண்முகம் அதிமுக கூட்டத்தில் வழக்கம் போல் திமுக அரசை வஞ்சித்து பேசியதோடு, அவர்களின் செயல்பாடுகளுக்கும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் திமுக அரசு மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்றவற்றை இலவசமாக தருவதை சுட்டி காட்டி பேசிய அவர், இந்த பொருட்கள் போலவே தேர்தல் நேரத்தில் திமுக ஆளுக்கொரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள் என்று பெண்களை தரக்குறைவாக, இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய திமுகவை சேர்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சி.வி சண்முகம் மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர் என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மேலும் திராவிட மாடல் அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் நலனை உயர்த்தி வருகிறது. ஆனால் அரசின் இலவச திட்டங்களோடு பெண்களை ஒப்பிட்டு அறுவருக்கதக்க கருத்தை வெளியிட்டிருக்கிறார் சி.வி சண்முகம்.

இதன் மூலம் அதிமுகவுக்கு பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது சிவி சண்முகம் இப்படி பேசி இருக்க முடியுமா? அப்படி பேசியிருந்தால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இபிஎஸ் இதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. பெண்கள் பயணம் செய்யும் பேருந்தை இழிவாக பேசியவர் தானே எடப்பாடி பழனிச்சாமி. அப்படி இருக்க அவர் எப்படி இதற்கு கண்டனம் தெரிவிப்பார் என்றும் கூறினார்.

உருவாகும் அதிமுக-தவெக கூட்டணி.. கழட்டி விடப்பட்ட பாஜக.. இபிஎஸ்யின் திடீர் முடிவு!!

0

ADMK TVK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி கை கோர்த்து விட்டது. ஆனாலும் அவர்களுக்குள் வெளிவராத பல்வேறு சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

தற்போது நடிகர் விஜய்யின் தவெக உதயமாகி உள்ள நிலையில், பாஜகவும் அதிமுகவும், தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கூறி வருவதால் இதனை ஏற்க மறுக்கிறார். இந்த சமயத்தில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், கொங்கு மண்டலத்தையும் கேட்டதாகவும் இதற்கு இபிஎஸ் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் இபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விடலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். மேலும், ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் சில சச்சரவு நிலவி வருவதாலும், தவெகவின் வளர்ச்சி பெருகி வருவதாலும் இபிஎஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் அதிமுக பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பலரும் விமர்சித்து வந்தனர்.

அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அதிமுக கூட்டணிக்கு வந்தால் இபிஎஸ் பாஜகவை கழட்டி விட்டு விடுவார் என்று கூறியிருந்தார். தற்போது இபிஎஸ்யின் நிலைப்பாடு தினகரனின் வாதத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

விஜய்யிக்கு ஆதரவு என்பதை விட திமுகவுக்கு எதிர்ப்பு என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

0

BJP DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு சார்பாக தனிநபர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் திமுக அரசு தான் என்று தவெக தரப்பு கூறி வந்த நிலையில், இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கூறிய தவெக சிபிஐ விசாரணையை கேட்டு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசை கடுமையாக சாடினார். போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒரு மாதிரியாகவும் பாதுகாப்பும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் கூறினார். மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 2 பேர் சிபிஐ விசாரணையை கேட்டுள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பயனும் இல்லையென்று திமுக வழக்கறிஞர் கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக நிற்கும் என்றும், விஜய்யிக்கு நேர்ந்தது போல கொடூரம் திமுக அரசால் இங்கு பல கட்சிகளுக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நிற்பதை விட, திமுக அரசுக்கு எதிராக இருக்கிறோம் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. ஆதவ் அர்ஜுனா பகீர்!!

0

TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த நாளின் நிகழ்வுகளை விளக்கமாக பகிர்ந்தார்.

விஜய் தாமதமாக வந்தார் என்பது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில் காவல்துறையினரே எங்களை வரவேற்றனர். காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு முன் எங்கும் எங்களை வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் வரவேற்பு நிகழ்ந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கூட்ட நெரிசல் நிகழ்ந்ததும், மாவட்ட எல்லையில் நாங்கள் காத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் வந்தால் கலவரம் ஏற்படும் என காவல்துறையினர் கூறியதால் நாங்கள் செல்ல முடியவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார். மேலும், தவெகவை முடக்க திமுக திட்டமிட்டு செயல்பட்டது. தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து கட்சியைக் குற்றம்சாட்டும் வகையில் பேட்டி அளித்தனர். அதையெல்லாம் இப்போது சுப்ரீம் கோர்ட் கண்டறிந்து, எங்கள் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும், 41 உயிரிழந்த குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக முடிவு செய்துள்ளார். அவர்களுடன் இணைந்து பயணிப்பது எங்கள் கடமை என்றும், அவர்களுக்கு முழுமையான நீதியினை பெற்றுத் தரும் வரை தவெக தொடர்ந்து போராடும் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதி பூர்வமாக தெரிவித்தார்.

கூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வர போகிறார்கள்.. பொடி வைத்து பேசும் வானதி சீனிவாசன்!!

0

BJP: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி கூட்டணி வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக அரசை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய் திமுகவை கடுமையாக சாடி வருகிறார்.

மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் இவர் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஏனென்றால், கரூர் விவகாரத்தில் பாஜக அமைத்த குழுவை பற்றி விஜய் இது வரை எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிபிஐ விசாரணையை கோரியுள்ளார். இந்நிலையில் நேற்று கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிபிஐ பாஜகவின் கைப்பாவை என்று விஜய் விமர்சித்துள்ளார். ஆனால் கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கை கேட்டுள்ளார். மேலும் விஜய் பாஜகவின் பின்னணியில் தான் இயங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது என்று கேட்ட கேள்விக்கு, விஜய் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நம்புகிறார். அவர் அதையே பாலோ பன்னட்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரத்திற்கு இபிஎஸ் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பிய போது அதை பற்றி நாங்களே கவலைப்படவில்லை என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர், பாஜகவிற்கு ஒரு பெரிய கூட்டணி வரபோகிறது, நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவரையே வைத்து கொள்ளுங்கள் என்று மரைமுகமாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது தவெகவை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய்க்கு பாஜக வலை வீசுகிறது என்ற கேள்விக்கு நாங்கள் யாருக்கும் வலை வீச வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அது போன்ற கட்சியும் கிடையாது என்று கூறி முடித்தார்.