Home Blog Page 13

சேலம் பிரச்சாரத்தில் விஜய் வைக்க போகும் ட்விஸ்ட்.. நயினார் கேள்விக்கு பதிலடி!! அப்செட்டில் பாஜக!!

0

TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய் என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் விஜய் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் அறுவடை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் தான் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று விஜய் அறிவிக்க, பாஜகவை எல்லா இடத்திலும் மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்து வந்தார்.

ஆனால் விஜய்க்கு இருக்கும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அப்போதும் கூட பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதில் விஜய் தெளிவாக இருந்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் வேளையில் விஜய் கூட்டணி அதற்க்கு பக்க பலமாக இருக்கும் என்று டெல்லி மேலிடம் நினைத்தது. ஆனால் விஜய் இதனை ஏற்றுக்கொள்ளாததாலும், பாஜகவை எதிரி என்று கூறியதால் பாஜகவின் வாக்கு வங்கியும் விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதால்  ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யை விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார், விஜய்யால் யார் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? 234 தொகுதிகளில் 10, 15 வேட்பாளரின் பெயரை  வரிசையாக சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஏளனமாக பேசி இருக்கிறார். இதன் காரணமாக, தவெக அடுத்ததாக சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பாதியளவு தொகுதிகளின் வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். விஜய்யின் இந்த செயல் நயினாருக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.

எடப்பாடியுடன் மீட்டிங் நடத்திய தேதிமுகவின் டாப் தலை.. முடிவை மாற்றிய பிரேமலதா!! அதிமுக ரூட் கிளியர்!!

0

ADMK DMDK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் வேட்பு மனுக்களை அளிக்கும் பணியும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகின்றன. அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பு பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அண்மையில் தமாகா-வும் இணைந்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளான பாமகவும், தேமுதிகவும் இன்னும் கூட்டணி முடிவு அறிவிக்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளார். ராஜ்ய சபா சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா உறுதியாக கூறி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, சென்னை வருகை புரிந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர், பியூஷ் கோயல் இபிஎஸ்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு 23 தொகுதிகளும், ஓபிஎஸ், தினகரனுக்கு குறிப்பிட்ட தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமலதா, நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவே இல்லை. எந்த கட்சி இந்த மாதிரியான செய்திகளை வெளியிட்டதோ, அவர்களின் அழிவு காலம் ஆரம்பம் என்று கூறியிருந்தார்.

தனால் அதிமுக- தேமுதிக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று நினைத்த சமயத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கடலூரில் நடைபெற உள்ள விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பின் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை கூட்டணிக்குறியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேதிமுகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதற்கு இபிஎஸ் சம்மதித்து விட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அதிமுக உடன் பிரேமலதாவிற்கு இருந்த கருத்து வேறுபாடுகள் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜெயிக்க இது ஒன்னு தான் வழி.. வாழ்வா சாவா போராட்டத்தில் தவெக!! வெளியான கருத்து கணிப்பு!!

0

TVK: அடுத்த 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், தமிழக அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் பிரபல நடிகரான விஜய் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறது. இந்த செய்தி வெளியானதிலிருந்தே தவெக பற்றிய பேச்சு தான் அனைத்து ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று அறிவித்தாலும் கூட இது நாள் வரை தவெக உடன் எந்த கூட்டணியும் உறுதியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், இப்போது தான் முக்கிய முகங்களும், அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்களும் தவெகவில் இணைய தொடங்கியுள்ளனர். விஜய்க்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இதனால் இந்த ஆதரவு அத்தனையும் ஓட்டாக மாறுமா என்பது சந்தேகமாவே உள்ளது.

இதன் காரணமாக விஜய் தேர்தல் முடிவில், பூஜ்ஜியமாக்கப்படுவார் இல்லையென்றால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று நிலை நிறுத்தப்படுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜய்யின்  இலக்கு முதல் தேர்தலிலேயே ஆட்சியில் அமர்வது தான். ஆனால் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் தவெக சார்பில் தீவிரமாக நடைபெறுவதாக தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் காங்கிரஸ் மற்றும் விசிக உடன் தவெக கூட்டணி அமைத்தால் மட்டுமே விஜய்யால் வெற்றி பெற முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.  

ஸ்டாலின் அரசை கண்டித்த திமுக கூட்டணி கட்சி.. கூட்டத்தில் அசிங்கப்பட்ட ஆளுங்கட்சி!!

0

DMK VCK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், அதிமுக வசம் உள்ள கொங்கு மண்டலத்தை திமுக வசம் கொண்டு வருவதற்கான பணிகளும், சென்ற முறை தோல்வியடைந்த இடங்களில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளும், விஜய் பக்கம் உள்ள இளைர்கள் வாக்குகளை திசை திருப்பவது போன்ற ஏகப்பட்ட முயற்சிகள் திமுகவால் செய்யப்பட்டு வருகிறது.

இப்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் மிகவும் கவனமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக உடன் பல ஆண்டுகளாகவே அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீப காலமாக திமுக தலைமையிடம் கறார் காட்டி வருகிறது. விசிகவிற்கு இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு கேட்போம் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இவ்வாறான நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்ற பெயரை கிராமின் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மசோதா இயற்றப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் இந்த செயலை கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடந்த போது, அதில் விசிகவும் பங்கேற்றது. அப்போது விசிகவின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பாஜக அரசை கண்டிக்கிறோம் என்பதற்கு பதிலாக, ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டு சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இவரின் இந்த முழக்கத்தால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பிய டாப் தலை.. கோவையில் பறக்கும் அதிமுக கொடி!! குஷியில் இபிஎஸ்!!

0

ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் பல்வேறு திருப்பங்களையும் எதிர் கொண்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் மோதல் போன்றவை இந்த சமயத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் வேளையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய முகங்களின் விலகலும் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரபரப்பை கூட்டினார். இவ்வாறு அதிமுகவிலிருந்து பலரும் விலகி வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்த கட்டத்தில், தற்போது புதிதாக அதிமுகவிலிருந்து விலகிய, வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வலதுகரமாக இருந்த இவர், 2025 ஏப்ரல் மாதம் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கோவை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவரும், நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழின் பதிப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் இருந்த இவர் அதிமுகவிலிருந்து விலகியது கோவையில் அதிமுகவிற்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது இவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது கோவையில் அதிமுகவிற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. அதிமுகவில் பல்வேறு அதிருப்திகள் நிலவி வரும் சந்தர்ப்பத்தில் இவரின் இந்த இணைவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிமுக பாஜகவின் அழிவு காலம் ஆரம்பம் .. அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா!! ஆட்டத்தை கலைத்த தேமுதிக!!

0

ADMK BJP DMDK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் பாமக தேமுதிக போன்ற போன்ற மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. பாமக தற்போது இரு பிரிவாக உள்ள நிலையில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை புரிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

எந்த கட்சி சார்பாக இப்படியான தொகுதி பங்கீடு குறித்த செய்தி வெளியானதோ, இதுவே அந்த கட்சிக்கு அழிவு காலத்தை உண்டாக்கும். இது தொடர்பாக அதிமுக-பாஜக தான் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். எப்போது தேமுதிக பெயர் பேசப்பட்டதோ அப்போதே எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை வந்து விட்டது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக ரெட் சிக்னல் காட்டியதை போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.. பளிச்சென்று பேசிய ராமதாஸ்!! மாறும் அரசியல் களம்!!

0

PMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் சென்ற ராமதாசுக்கு அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது.  அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்காத நீதிமன்றம், பாமகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளதால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் வரும் என்பதால், பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்கி வைப்பதாக கூறியது.

இவ்வாறு உட்கட்சி மோதல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும், அன்புமணியின் பொய் இனிமேல் எடுபடாது என்றும் கூறினார். மேலும் 99% பாமகவினர் தற்போது தான் பக்கம் நிற்கின்றனர் என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். பாமக என்னுடையது என்று அன்புமணி கூறி வர, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லையென்று ராமதாஸ் கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-பாஜக கூட்டணி.. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!! தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன!!

0

BJP TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் மேற்கொண்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், பாதியளவு தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் பீகார் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாஜக தமிழகத்தில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று தான் மக்கள் ஆதரவை பெற்ற கட்சியான தவெகவை கூட்டணியில் சேர்ப்பது.

பாஜகவின் வெற்றிக்கு அதிமுக கூட்டணி மட்டுமே போதாது என்பதை அறிந்த பாஜக மேலிடம் விஜய்க்கு எல்லா வகையிலும் ஆதரவு தெரிவித்து வந்தது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதை கூட கண்டுகொள்ளாத டெல்லி மேலிடம், தவெகவை கூட்டணியில் சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும் இறுதியில் அது தோல்வியிலேயே முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டது. இதனால் தவெகவை சேர்க்கும் பணியை பாஜக கைவிட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்தது.

ஆனால் தற்போது மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்து விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் பணியை பாஜக இன்னும் கைவிடவில்லை எந்தை நிரூபித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுபவர்கள் நிச்சியம் வெற்றி பெறுவார்கள் என்றும் அரசியலில் தனித்து போட்டியிடுவதை விட மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதால் வெற்றி இன்னும் எளிதாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் இந்த கருத்து விஜய்க்கும் பொருந்தும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். இவரின் இந்த பேச்சு தவெக பாஜகவில் இணையும் வரை விஜய் பற்றிய பேச்சுக்கள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

புதுசா வந்தவங்களுக்கு முக்கிய பொறுப்பா.. டென்ஷன் ஆன தவெக தலைகள்!! குழப்பத்தில் விஜய்!!

0

TVK: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் இணைவதற்கு சிறிய கட்சிகள் திட்டம் தீட்டி வரும் வேளையில், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க திராவிட கட்சிகளும் முயன்று வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இ

வ்வாறான நிலையில் தான் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் இக்கட்சி தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அண்மையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, தற்போது தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியை வகித்து வருகிறார்.

மாற்று கட்சியிலிருந்து வந்தவருக்கு இவ்வளவு பெரிய பதவி வழங்கியது தவெகவினுல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபிஎஸ், தினகரன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் வேளையில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பதவிகளை வழங்குவதற்கான ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளாராம். ஏற்கனவே செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பதவியில் பலருக்கும் விருப்பம் இல்லையென்று கூறப்பட்ட நிலையில் தற்போது, ஓபிஎஸ், தினகரனுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூவி கூவி அழைக்கும் பாஜக.. கண்டுகொள்ளாத விஜய்!! ஸ்டன் ஆன டெல்லி மேலிடம்!!

0

TVK BJP ADMK: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி திரும்பியுள்ள பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக அதிமுக கூட்டணி மட்டும் போதாது என்று நினைத்து மக்கள் ஆதரவு பெற்ற கட்சியான தவெகவையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருக்கிறார். மேலும் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அப்போதும் கூட விஜயை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை பாஜக கைவிடவில்லை.

இதற்காக கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், விஜய் கேட்காமலேயே அவருக்கு ஆதரவாக 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இவ்வாறு ஏகப்பட்ட செயல்களை விஜய்க்காக செய்தும் கூட அவர் பாஜக கூட்டணியை புறக்கணித்து வந்தார். இந்நிலையில் தான் NDA கூட்டணியிலிருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் கூறி பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரையும் மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது நிறைவேறவில்லை. இப்போது இவர்கள் விஜய்யுடன் இணைவது டெல்லி மேலிடத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதிமுகவிலிருந்து இன்னும் சில தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் இது பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதிமுகவின் வருகையாலும், தவெகவின் எதிரிப்பாலும், பாஜக கூட்டணி பலமிழந்து காணப்படுகிறது. மேலும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் தற்சமயம் வரை கூட்டணிக்கு பச்சை கொடி காட்டாததால் பாஜக இம்முறையும் தமிழகத்தில் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.