Home Blog Page 14

விஜய்க்கு நெருங்கும் ஆபத்து.. ஒட்டு மொத்த பாஜகவும் தவெகவில் ஐக்கியம்.. ட்விஸ்ட் உடைத்த KAS!!

0

TVK BJP: தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதனை மிஞ்சும் அளவிற்கு தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி அரசியல் அரங்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் இம்முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பெருகும் ஆதரவு அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு அதன் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி கடுமையாக விமர்சித்து வருவதால் இது பாஜகவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தம்மை கொள்கை எதிரி என்று கூறினாலும் பரவாயில்லை என விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்தது. ஆனாலும் பாஜக உடன் கூட்டணி சேர முடியாது என்பதால் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இவ்வாறு தவெகவை கூட்டணியில் சேர்க்க முடியாமல் தவிக்கும் பாஜக, அவர்களின் பி டீம் மூலம் விஜய்யை கூட்டணியில் சேர்க்க திட்டம் தீட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதலில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரும் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியும் வருகின்றனர். இந்த சுழலில், இவர்கள் அனைவரும் தவெகவில் இணைவது ஒட்டு மொத்த பாஜகவையும் கட்சியில் இணைப்பதற்கு சமம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து இவர்கள் மூலம் மெல்ல மெல்ல விஜய்யையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவது தான் மத்திய அமைச்சர்களின் திட்டம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தவெகவில் துணை முதல்வர் பதவி தான் வேண்டும்.. விஜய்யை திக்குமுக்காட வைத்த கண்டிஷன்!!

0

TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில் வேறு எந்த கட்சியும் சேராதது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும் தனித்த திசையில் செயல்பட்டு கொண்டிருப்பது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக அதிமுகவிலிருந்து நீக்கபட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு டிசம்பர் 24 வரை கெடு விதித்த நிலையில், நேற்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் இருக்கும் கூட்டத்தில் இணைய போவதில்லை என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் தான் தவெக உடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ், விஜய்யிடம் துணை முதல்வர் பதவியை கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தபடாத நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே ஒரு முறை முதல்வராக இருந்தவர் என்பதால், துணை முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய பதவியை மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு தருவது தவெகவில் உட்கட்சி பிரச்சனையை ஏற்படுத்தும் என்று விஜய் யோசிப்பதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய்யிடம் கண்டிஷன் போட்ட டிடிவி தினகரன்.. தவெக-அமமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல்!!

0

TVK AMMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை ஈடுபட தொடங்கிவிட்டன. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும், வேட்புமனு தாக்கல் செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி, இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

இவ்வாறான சூழலில் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அவரை வீழ்த்த வேண்டுமென பல்வேறு யுக்திகளை கையில் எடுத்துள்ளார். மேலும் NDA கூட்டணியில் இருந்த தினகரன், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் பாஜகவில் இணைவோம் என்று கூறிய வந்த இவர், முதல்வர் வேட்பாளர் மாற்றப்படாததால் தற்போது தவெகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரன் விஜய்யுடன் பேசிகொண்டுள்ளார் என்று அக்கட்சியின் நிர்வாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தினகரன் தவெகவில் இணைய விஜய்யிடம் ஒரு கண்டின் போட்டுள்ளாராம். இபிஎஸ்யை வீழ்த்த விஜய்யால் மட்டுமே முடியும் என்பதால், அதிமுகவையும் விமர்சிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தான் அதிமுக வாக்குகளை கவர முடியும் என்றம் அவர் கூறியுள்ளாராம். மேலும் இபிஎஸ்யை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் அதிமுக பலமிழந்து அக்கட்சி பல பிரிவுகளாக பிளவுரம் என்று தினகரன் திட்டம் தீட்டுகிறார்.  

கை கோர்த்த தவெக-காங்கிரஸ்.. பரபரப்பை ஏற்படுத்திய மீட்டிங்!! திசை மாறும் திமுக கூட்டணி!!

0

TVK CONGRESS DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென ஆளுங்கட்சியாக உள்ள திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளை பலப்படுத்தி வரும் திமுகவிற்கு புதிய கட்சியான தவெக எல்லா வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் விஜய்யின் வருகையால் திமுகவிலிருந்து பிரியும் நிலையில் உள்ளது. விஜய்யும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே விஜய்யை பயன்படுத்தி வந்தது. ஆனாலும் கூட தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அண்மையில் காங்கிரஸின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசி, தவெக-காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டார். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் தான் இந்த கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக தவெக நிர்வாகிகளும், காங்கிரஸின் முக்கிய தலைகளும் ஒரு மேடையில் சந்தித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் நடந்த கிறிஸ்துவ சமத்துவ விழாவில், தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் கலந்து கொண்டது கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜய், காங்கிரஸை எந்த இடத்திலும் விமர்சிக்காமல் இருப்பதும், பாஜகவை கொள்கை எதிரி என்று கூறுவதும், இவர்களின் இந்த சந்திப்பும் தவெக- காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான சமிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவை உதறிய ஓபிஎஸ்.. இபிஎஸ் இல்லாத கூட்டணி தான் வேண்டும்!! ஆடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்!!

0

ADMK: அடுத்த வருடம் நடைபெற போகும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் உட்கட்சி பிரச்சனைகளால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு, அக்கட்சி பலமிழந்து காணப்படுகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக 11 முறை தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அதிமுக தலைமையும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளும் தான் என பலரும் கூறினார்கள். அப்போதும் கூட அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால்,  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து, கட்சியிலியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

இதற்கு பின் டெல்லி சென்று வந்த ஓபிஎஸ் தனது கெடுவை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்று இருந்த பெயரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றியமைத்தார். இதனால் இவர் தனிக்கட்சி துவங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதியான இன்று, ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்யின் ஆதரவாளர் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி இல்லாத கூட்டணியில் ஒன்றிணைவோம் என்று கூறியிருந்தார்.

எப்படியாவது மீண்டும் அதிமுகவில் நுழைய வேண்டுமென ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் இவரின் இந்த கருத்து, ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணையும் பணியை கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. மேலும் ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் பலரும் இபிஎஸ் இல்லாத கூட்டணியை விரும்புவதால், திமுக அல்லது தவெக, இந்த இரண்டு கட்சியில் எந்த கட்சியால் சேரலாம் என ஓபிஎஸ் தீவிர ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் எடுக்க போகும் முடிவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

விஜய்யால் அதிமுகவுக்கும் எங்களுக்கும் பாதிப்பு தான்.. சொந்த கட்சியை டேமேஜ் செய்த பாஜக தலை!!

0

TVK BJP ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் மிகவும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. இதற்காக அதிமுக உடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து வேறு எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அக்கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே இவருக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. மேலும் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய இவர் தற்போது வரை அந்த நிலையிலிருந்து மாறாமல் உள்ளார். ஆனால் பாஜகவோ தம்மை கொள்கை எதிரி என்று விஜய் கூறினாலும் பரவாயில்லை என்று அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது மட்டுமில்லாமல், பாஜக எம்பிக்கள் 8 பேர் கொண்ட தனிநபர் குழுவையும் அமைத்து விசாரித்து வந்தது. ப்போதும் கூட விஜய் பாஜக உடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

தவெக ஒரு கட்சியே இல்லை. கவுன்சிலர் கூட இல்லாத கட்சி என்று கடுமையான வார்த்தைகளை முன் வைத்தனர். இவ்வாறான நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் நயினாரிடம் செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது, விஜய்யை ஸ்பாயிலர் என்று சொல்லிவிட முடியாது. அவர் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பதன் அடிப்படையில் தான் அதனை தீர்மானிக்க முடியும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தவெகவால் அதிமுக, பாஜக என இரண்டு கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை நிரூபித்துள்ளது. ஏனென்றால் இத்தனை நாளாக விஜய்யை விமர்சித்து வந்த பாஜக தற்போது இவ்வாறான கருத்தை கூறியுள்ளது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஓபிஎஸ் தினகரனை விமர்சிக்க தயங்கும் அதிமுக அமைச்சர்.. காரணம் இது தானா!! ஷாக்கான இபிஎஸ்!!

0

ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. பாஜகவின் இந்துத்துவ வாதத்தை தமிழக மக்கள் ஏற்காததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு இருக்கும் சமயத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அதிமுக அமைச்சர்கள் சிலர் விரும்பவில்லை. அதில் முக்கியமான நபர், அமைச்சர் ஜெயக்குமார் தான். சென்ற சட்டமன்ற தேர்தலில் தான் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் என்று கூறிய அவர், சில காலமாகவே அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். இதனால் இவர் அதிமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைய போகிறார் என்று பலரும் கூறினார்கள். இதனை ஜெயக்குமார் அறவே மறுத்து வந்தார். ஆனால் தற்போது அவர் கூறியுள்ள கருத்து, இவர் அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ், தினகரனுடன் இணைவதற்கான சாத்திய கூறுகளாகவே பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ், டிடிவி இணைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களின் இணைப்பு குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. எங்களை குறித்து கடுமையான விமர்சனங்கள் இல்லாததால் அவர்களை விமர்சிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர்களை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்று கூறினார். இபிஎஸ் இவர்கள் இருவரையும் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அக்கட்சியில் இருக்கும் ஜெயக்குமார் ஓபிஎஸ், தினகரனை விமர்சிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக ஜெயக்குமார் ஓபிஎஸ், தினகரனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு பக்கபலமாக இருக்கும் தேசிய கட்சி.. ஆடிப்போன ஸ்டாலின்!! ஓப்பனாக பேசிய ஆதவ்!!

0

TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026 தேர்தல் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களை சந்திப்பை தீவிரப்படுத்திய விஜய்க்கு, கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் கருப்பு தினமாக மாறியுள்ளது என்பதே உண்மை.

கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு தவெகவின் அறியாமை தான் காரணம் என்று திமுக கூற, திமுகவின் சதித்திட்டம் தான் காரணம் என்று தவெக கூறி வந்தது. இந்த நிகழ்வில் விஜய் மீது தவறு இருந்தாலும் கூட மக்களின் ஆதரவு விஜய் பக்கமே இருந்தது. மாறாக திமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டது. அதிமுக, அமமுக, நாதக, பாஜக போன்ற அனைத்து கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வந்தனர்.

இவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியினர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆகவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விஜய்க்கு எதிராக பேசாதது காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஒரு கருத்தை கூறியுள்ளார். தவெக சார்பில், கிறிஸ்தவ விழா கொண்டாடப்பட்டது.

அதில் பேசிய ஆதவ், கரூர் துயரம் நிகழ்ந்த போது, எங்கள் தலைவர் விஜய்க்கு முதல் போன் கால் ராகுல் காந்தியிடம் இருந்து தான் வந்தது. அப்போது அவர்,   brother, I am always with you , don’t worry  என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்து விட்டதாக கூறிய அவர், இதனால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். கரூர் சம்பவத்தின் போது, விஜய், ராகுல் இடையே போன் கால் பேசப்பட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. மேலும் தவெகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸை பற்றி பேசுவது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

நயினார் கொடுத்த சீக்ரெட் சிக்னல்.. இபிஎஸ் தரப்போகும் சர்பிரைஸ்!! டிடிவி-க்கு பச்சை கொடி காட்டிய அதிமுக!!

0

ADMK AMMK BJP: அடுத்த 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல அரசியல் அரங்கும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் போன்றவை தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது. இந்த வரிசையில் மிக முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியை தொடங்கி NDA கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். இந்த சமயத்தில் தான் பாஜக- அதிமுக கூட்டணி அமைத்தது. இதன் பிறகு நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காததாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறியும் தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார்.

இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக உடன் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில், டிடிவி தினகரன் பாஜகவில் மீண்டும் சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது போன்ற கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். டிடிவி தினகரனும், இபிஎஸ்யும் ஒரே கூட்டணியில் வர முடியுமா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர், ஒரு காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக திமுக கருப்பு கொடி காட்டியது.

ஆனால் சில மாதங்களில் அதே திமுக இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தது. எனவே அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று கூறியுள்ளார். தினகரன் கூட்டணியில் சேர்வது தொடர்பான கேள்விக்கு, இவர் மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால், தினகரன் கூடிய விரைவில் பாஜக கூட்டணியில் இணைவார் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும் நேற்று தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இபிஎஸ்யிடம் இதை பற்றி தான் பேசி இருப்பார் என்பதும் நிரூபனமாகியுள்ளது. இதனால் தினகரன் NDA கூட்டணியில் இணையும் செய்தியை இபிஎஸ் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவுக்கு அடித்த மெகா ஆஃபர்.. ஸ்டாலினுக்கு கை கொடுத்த பிரம்மாண்ட கட்சி!!

0

DMK NMMK: தற்சமயம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டுமென முயன்று வருகிறது. இதற்காக மக்கள் சந்திப்பை குறைத்து விட்டு, நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், சென்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்து அப்பகுதி மக்களை கவரும் பணியையும் திமுக கையில் எடுத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தையும் திமுக வசம் ஈர்க்கும் பணியையும் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ள திமுக, தனது கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக உடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகளினால் திமுக கூட்டணி இப்போது வரை பலமான கூட்டணியாக உள்ளது. இப்போது இருக்கும் நிலைமையில் எந்த ஒரு கட்சியாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் திமுக அதன் கூட்டணி கட்சிகளை பலப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்டாலினுக்கு மேலும் பலத்தை கூட்டும் நோக்கில் “நமது மக்கள் முன்னேற்ற கழகம்” கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் சேராத நிலையில், திமுகவில் அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது இந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.