Home Blog Page 144

சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!

மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

RTI மூலம் வெளியான புள்ளி விவரம்:

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் 2024-25 வரை:

  • சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மத்திய அரசு செலவிட்டது: ₹2,532.59 கோடி

  • அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 செம்மொழிகளுக்கு சேர்த்து செலவிட்டது: ₹147.56 கோடி

அதாவது:

  • சமஸ்கிருதுக்கு வருடத்திற்கு சராசரியாக ₹230 கோடி

  • 5 செம்மொழிகளுக்கெல்லாம் சேர்ந்தே வருடத்திற்கு ₹13.41 கோடி மட்டுமே!

“தமிழுக்கு வாய்ப்புகள் அல்ல, வெறும் வாக்குகள்!” – சு.வெங்கடேசன்

சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தும், அந்த மொழிக்காக 2,500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதை சுட்டி காட்டிய சு.வெங்கடேசன், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்:

“தமிழ், தமிழர்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு வாக்கு மட்டும்! நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கே!”

தமிழ், தெலுங்கு, கன்னடம் – வெறும் சதவீதங்கள் தான்!

புள்ளிவிவரங்களை பொருத்தவரை:

  • உருது: ₹837.94 கோடி

  • ஹிந்தி: ₹426.99 கோடி

  • சிந்தி: ₹53.03 கோடி

  • தமிழ்: ₹113.48 கோடி (GPIL மூலமாக முந்தைய ஆண்டுகளில்)

  • கன்னடம், தெலுங்கு: முறையே 0.5% மற்றும் 0.2% மட்டுமே!

முக்கிய தகவல்:
2004ல் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ், இலக்கிய, வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பதால் அதிக நிதி கிடைக்க வேண்டியிருந்தாலும், மத்திய அரசின் உள்நோக்கங்கள் காரணமாக குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவை பெற்ற மொழிகள்… மறுப்பு!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் – மொத்த இந்திய மக்கள்தொகையில் 22% பேர் பேசும் மொழிகள். ஆனால், இவற்றுக்கான மத்திய நிதி பங்களிப்பு, சமஸ்கிருதத்தின் நிழலும் எட்டவில்லை!

“பாஜகவின் சமஸ்கிருத மேலாதிக்க வெறி” – அரசியல் விமர்சனம்

மொழி சார்ந்த மதிப்பீட்டில் தமிழுக்கு மட்டும் அல்லாமல் மற்ற செம்மொழிகளுக்கும் புறக்கணிப்பு நிலை மத்திய அரசின் திட்டமிட்ட அரசியல் நோக்கத்தையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. வருகிற நாட்களில் இது மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை!

தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து, போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகியுடன் தொடர்பு?

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணையின்போது, ஸ்ரீகாந்த், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து கொகைன் வாங்கியதாக போலீசார் கூறுகின்றனர்.

இவர்கள் இருவரும் “தீங்கிரை” என்ற படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, பிரசாத் தயாரிப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் நெருக்கம் அதிகமாகி, 3 முறை போதைப்பொருள் வாங்கியதாகவும், 4-வது முறையிலும் வாங்க முயன்றதாகவும் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனையிலும் உறுதி!

போலீசாரின் சம்மனுக்கு , ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணையில், போதைப் பழக்கம் இல்லை என மறுத்து வந்த அவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவலுக்கு எடுத்துச் சென்றனர்.

“தவறு செய்துவிட்டேன்” – ஸ்ரீகாந்தின் ஒப்புதல்

பிரசாத் தன்னிடம் சம்பளமாக ₹10 கோடி பாக்கி வைத்திருந்ததாகவும், அதை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில்தான் போதைப்பொருள் வாங்கியதாகவும் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “தவறு செய்துவிட்டேன்” என ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை எந்த விதமான விமர்சனத்திற்கும் ஆளாகாமல் இருந்த நடிகர் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியுள்ளது தமிழ் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய்.

2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் விஜய்யுடன் கூட்டணிக்கு வரலாம் என தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் கடைசி நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்று விடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. கடைசி நேரத்தில் விசிக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த கே.சி.கருப்பண்ணன் திமுக விஜய்க்கு கொடுத்த ஒரு கூட்டணி ஆஃபர் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ரூபாய் 500 கோடி தருவதாக சொல்லி விஜய்க்கு திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், விஜய் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார் கருப்பண்ணன். விஜய் திமுக கூட்டணிக்கு எப்போதும் செல்லமாட்டார் என்றும், ஒரு வேலை விஜய் திமுகவின் கூட்டணிக்கு சென்றுவிட்டால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் பேட்டி கொடுத்துள்ளார் கே.சி.கருப்பண்ணன்.

ரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!

0

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல தனுசுடன் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். குபேரா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நாகர்ஜுனா மற்றும் தனுஷின் நடிப்பை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும்போதும், படப்பிடிப்பு தளத்திலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். தனுஷ் மற்றும் ரஜினி எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் அந்த கதாப்பாத்திரமாவே மாறிடுவாங்க. தனுஷ் கொஞ்சம் வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் பேச மாட்டார். யாராவது அவரிடம் சென்று பேசினால் பேசுவார். மற்ற எல்லா நேரங்களிலும் அந்த கதாப்பாத்திரமாகவே தனுஷ் மாறிவிடுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது யாரிடமும் பேசமாட்டார். மற்ற எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சாங்க. ஏன்னா நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எல்லாரிடமும் சகஜமாக ஜாலியா பேசிக்கிட்டே இருப்பேன் என பேட்டி கொடுத்துள்ளார் நாகார்ஜூனா.

அதிமுக பாஜகவுடன் மதிமுக கூட்டணி?  விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ!

மறுமலர்ச்சி முன்னேற்றக்கழகம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ எங்களுக்கு இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் எனவும், இது பற்றி திமுகவுடன் பேசுவோம் எனவும், நிறைய தொகுதிகள் கொடுத்தால் எங்கள் பலத்தை காட்டுவோம் எனவும் பேட்டி கொடுத்தார்.

அதேபோல பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கியமான கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்த கட்சி மதிமுக தான் எனவும், வைகோ பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வது உறுதி எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வதந்தி அனைத்திற்கும் வைகோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திராவிட இயக்கத்தை காப்பதற்காக 2017ஆம் ஆண்டு திமுகவுடன் கைகோர்த்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் மதிமுக கட்சிக்கு இல்லை. ரகசியமாக கூட்டணி பற்றி பேசும் பழக்கமும் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை எனவும் பேட்டி கொடுத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ.

ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? தளபதி ரசிகர்களுக்கு நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ் !

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்த ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார்.

2024 ஆம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். ஜனநாயகன் படம் தான் தான் நடிக்கும் கடைசி படம் என்றும் இந்த படத்திற்கு பிறகு விஜய் வேறு எந்த படத்திலும் நடிக்கமாட்டார் எனவும், முழு நேர அரசியலில் இறங்கப்போகிறார் எனவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மமிதா பைஜூ விஜய்யின் சினிமா பயணம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஜனநாயகன் தான் உங்களின் கடைசி படமா என மமிதா பைஜூ விஜய்யிடம் கேட்டுள்ளார். அதைப்பற்றி இப்போ எனக்கு தெரியல, தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் எல்லாம் தெரியும் என்று விஜய் சொல்லி இருக்கிறார்.

ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கின் போது எல்லோரும் எமோஷனலாகி விட்டோம். விஜய் சாரும் எமோஷனலாகி விட்டார் என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் திருமண நாளை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்! தொண்டர்களுக்கு ஏமாற்றம் 

பாமக உட்கட்சி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படாமல் நாளுக்கு நாள் பிரச்சனையானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்பா மகனுக்குமிடையேயான இந்த பிரச்சனையில் கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இதற்கு காரணமாக அமைந்த இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் எடுத்த முடிவில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்குமரன், பின்னர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரனான முகுந்தன் நியமிக்கப்பட்ட போதும் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் மேடையிலிருந்த அவர் கையிலிருந்த மைக்கை வீசி தான் தனி அலுவலகம் திறந்துள்ளதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் பொது வெளியில் அறிவித்தார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு கிளப்பியதை கேட்டு சுதாரித்து கொண்ட அவர் தலைவர் பொறுப்பில் இனிமேல் தானே செயல்படுவதாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு செயல் தலைவர் பதவியை அளித்தார். ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் இந்த அறிவிப்பை ஏற்காமல் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் அவர்களுக்கு எதிராக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த சூழலில் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சி தலைவர்கள் என பலரும் சமாதானம் செய்ய முயற்சித்தும் மருத்துவர் ராமதாஸ் இந்த விவகாரத்தில் சமாதானம் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தனக்கு கட்டுப்படாத கட்சியின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் என பழைய நிர்வாகிகளை மாற்றி தனக்கு ஆதரவான புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். அந்த வகையில் நாளை மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் திருமண நாளான இன்று அன்புமணி ராமதாஸ் பெற்றோரிடம் ஆசி வாங்க வருவார். அதனால் இப்பிரச்சனையில் ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது வரை அன்புமணி ராமதாஸ் பெற்றோரை சந்திக்க வரவில்லை எனவும், திருமண நாளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

2026 தேர்தல் கருத்து கணிப்பு; வெற்றி கனியை பறிக்கும் கட்சி எது தெரியுமா?

0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என பல்வேறு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் சட்டம் ஒழுங்கு சரியில்லை அன்றாடம் கொலைகள், கொள்ளைக்கார சம்பவங்கள், காவல் நிலையம் மீதான தாக்குதல் ஜாதி மோதல்களை அனைத்தும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றது.

அதனால் வரும் 2026 ஆம் தேர்தலில் திமுக ஆட்சியை விரட்டுவோம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கேட்கும் பொழுது திமுக ஆட்சியை மீண்டும் தொடரும் என கூறி வருகின்றனர்.

மேலும் தற்போது அதிமுக மற்றும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது வழக்கம் போல புரட்சி பாரதம் உள்ளது. அதனால் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படாத அதிருப்தியில் இருப்பதினால் தனது நிலைபாட்டை பிறகு சொல்வதாக அறிவித்திருக்கின்றனர் என யோசனை செய்து வருகின்றனர்.

பாஜகவில், அமுமுக, ஏசி சண்முகம் கட்சி, ஜி கே வாசனின் தாமாக, ஓபிஎஸ்-யின் அதிமுக மீட்பு குழு இடம் பெற்றுள்ளன நிலையில் பாமக பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டுமென அன்புமணி விரும்புகிறார், ஆனால் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மறுப்பு தெரிவித்து வருகின்றார் கூறி வருகின்றார் ,

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கூட்டணிகள் தெரியவரும் என கூறப்படுகின்றது. இத்தனை கட்சிகள் உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் அண்மையில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை நோக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அவர் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட போட்டி கட்சிகள் உள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் வெற்றியடையுமா எனவும் எதிர்பார்ப்பும். மக்களிடையே அதிகரித்துள்ளது.

இருப்பினும் விஜய் தற்போது வரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை அவருக்கு எப்படி 60 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என மக்கள் மத்தியில் கூறப்படுகின்றது. என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவர் களத்தில் இறங்கி பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு எத்தனை இடங்களை வெல்லப் போகிறார் எனவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

0

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் தள்ளுபடிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை ஜூன் 25ஆம் தேதி இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் 20 தவணையை ஒரு சிலரால் மட்டுமே பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

தற்போது வரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை எப்போது வரும் என விவசாயிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த eKYC செய்த நபர்களுக்கு இருபதாவது தவணை பணம் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிஎம் சம்மன் கிசான் யோஜனா திட்டத்தில்   eKYC சரி பார்ப்பதற்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அங்கு eKYC விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் ஆதார் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்

இதற்குப் பிறகு மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம் இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக eKYC சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு சரிபார்க்க முடியவில்லை என்றால் இருபதாவது தவணை பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

0

இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்களை இந்து முன்னணி நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர்.

அதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பல்ஹாம் தாக்குதல் பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு, குன்றம் குமரனுக்கு சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோவில்கள் அமைக்கப்பட்டது.

இந்த கோவில்களில் அந்தந்த கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முருகனின் ஆறுபடைவீடு, மாதிரி கோயில்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்தபட்ட கலை நிகழ்ச்சியில் குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.