Home Blog Page 150

மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசு; இலவச வீட்டு மனை பட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

0

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் பிற மாநகராட்சிகளிலும் புறம்போக்கு நிலங்களில் வசிக்க கூடியவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பொறம்போக்கு பகுதியில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கு வசிக்க வேண்டும்.

அந்த இடத்தில் எந்தவித ஆட்சியபசனையும் இருக்கக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மூன்று லட்ச ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நகரப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரையில் வழங்கப்படும்.

மேலும் அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இந்த புறம்போக்கு இடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடங்களில் நீர் நிலைகளோ, கோவில் நிலமும் கால்வாய் போகும் இடமாக இருந்தால் பட்டா வழங்க முடியாது.

அங்கு வசிக்கும் மக்கள் பட்டாவிற்கு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பட்சத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

0

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் மிக எளிய முறையில் விண்ணப்பித்து என் ஓ சி பெரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு கூறுகையில் simpleGov  முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்த இருக்கின்றன, அடையாளச் சான்றிதழ் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றது..

அரசு ஊழியர்கள் விரிவான முறையில் ஆவணங்களை சேகரித்து சமர்ப்பிப்பது சவாலான ஒன்றாக உள்ள நிலையில் ஆவணங்கள் ஒவ்வொன்றும் பெறுவதற்கான நடவடிக்கையில் படிநிலையில் தாமதமாகி வருகின்றது.

துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பிரச்சனைகள் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்று பெறுவதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு என்பது அவசியம் தேவைப்படுகின்றது. போதிய தகவல் பகிர்வு இல்லாதது , ஒத்துழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சான்று பெறுவது காலதாமதம் ஆகும்.

அதிகப்படியான ஆவணங்களை கையாளும் வகையில் தள்ளிவிடப்படுகின்றது இதனால் வாய்ப்புகள் தவற விடுதல், பொறியியல், மருத்துவம் அளித்த பல்வேறு துறைகளைச் சார்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், சர்வதேச கருத்தரங்கங்கள் சர்வதேச அறிவு மையங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பாஸ்போர்ட் பெரும் நடைமுறைகளில் அதிக சிக்கல் இருப்பதால்தான் வாய்ப்புகளை தவற விட்டு வருவதாக கூறப்படுகின்றது. தனிப்பட்ட பயணங்கள் மற்றும் குடும்பமாக வெளிநாடு பயணிக்க திட்டமிடும்பொழுது அதில் ஒருவர் அரசு ஊழியராக இருந்தால் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் போதிய அனுமதிச்சான்ற பெறுவதில் நிலவும் சிரமங்கள், காலதாமதம் ஆகுவதால் பயணங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் தமிழக அரசு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரை செய்தது.

மேலும் அவசரகால நடவடிக்கையாக விவரங்கள் தேவைப்படும் சூழலில் துறை தலைமையே என்ஓசி அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கையில்  ஈடுபடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று விதிகளில் திருத்தம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!

0

தேர்தலின் பொழுது அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது..

அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது.

ஆனால் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மீண்டும் இதற்கான முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. ஜூன் மாதத்தில் 9000 முகாம்கள் மூலம் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மகளிர் உரிமை பெற்று வரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு வரும் மகளிர் உரிமை தொகை ரத்து செய்யப்படலாம் என அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்நிலையில் தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொண்டு விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 45 நாட்களுக்குள் மகளிர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு முடிவு எடுக்கப்படும்.

ஜூலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. உள்ளூர் அளவில் தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து ஸ்டாலின் திட்டத்தை பற்றி உங்களுக்கு கூறுவார்கள். நீங்கள் இந்த  திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், ஆவணங்கள் என்ன சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வின் முக்கிய நிர்வாகிக்கு திடீர் நெஞ்சுவலி.. கட்சிக்குள் தொடர் பரபரப்பு!!

0

PMK: பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக் கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி தான் ஏற்க போகிறார் எனக் கூறிய மறுநாளே நான் தான் சாகும் வரை தலைவர் என்று நிலை தடுமாறி மாற்றி பேசி வருகிறார். அன்புமணியும் மற்றொரு பக்கம் பொதுக்குழு கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான்தான் அதனால் தலைவர் பதவி எனக்கு தான் எனக் கூறுகிறார்.

இதனிடையே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவர்களின் இருவரின் சண்டையால் கட்சியின் மதிப்பானது குறைந்து கொண்டே வருவதாக அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் இவர்கள் மீண்டும் இணைய வேண்டுமென எண்ணி சேலம் மாவட்டத்தின் எம்எல்ஏ அருள் இவர்கள் இணையவில்லை என்றால் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இப்படி கட்சிக்குள் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாளை சேலத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் பட்சத்தில் இன்று சேலம் எம்எல்ஏவான அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2026 யில் ஹிட்டடிக்கும் தவெக.. சிதறும் திமுக கூட்டணி!! பக்கா பிளானை இறக்கிய விஜய்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் யாருடன் மெகா கூட்டணி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை ஒத்து வராத நிலையில் அதிமுக பாஜகவுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதேபோல பாஜக மற்றும் திமுக இருவரும் விஜய்யின் அரசியலுக்கு எதிரி.

இதனால் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. ஆனால் திமுக கூட்டணி கட்சிக்களிக்கிடையே சில அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. அதாவது மாற்றுக் கட்சிகளில் கூட்டணிகளுக்கு கொடுக்கும் தொகுதி பங்கீடு வைத்து திமுகவிலும் கேட்கிறார்களாம். அதிலும் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் வழக்கம்போல் ஆறு தொகுதி வேண்டாம் என கேட்டுள்ளது. இதற்கு அடுத்து காங்கிரஸும் தொகுதி பங்கிட்டு காரராக உள்ளார்களாம்.

ஆனால் வழக்கமான பங்கீட்டிலிருந்து திமுக நிலை மாறுவதாக தெரியவில்லை. இதனால் திருமா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறுவதாக கூறுகின்றனர். அப்படி வெளியேறும் கட்சிகளை தன் வசப்படுத்த விஜய் திட்டம் தீட்டி உள்ளாராம். அதிலும் இவர்களுடன் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளதாம். இந்த கூட்டணி மட்டும் இணையும் பட்சத்தில் திமுக வை எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என கூறுகின்றனர். அதிலும் முதலாண்டு விஜய் முதல்வராகவும் இவர் கூட்டணியில் இருப்பவர்கள் துணை முதல்வராகவும் இருப்பதாக பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாம்.

அடுத்தடுத்த வருடம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வராக ஆட்சி செய்வார்களாம். தேர்தல் நெருங்கும் பட்சத்தில் தான் இது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மையாக மாறும் என்பதை பார்க்க முடியும்.

எஸ்பிஐ கார்டு இருக்கா..கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; உடனே இத நோட் பண்ணிக்கோங்க!

0

எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களில் அதிக தொகையை செலுத்த நேரிடலாம் அபராதங்களை தவிர்க்க வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை நிறுவனம் கணக்கிடும் முறையில் கடந்த வாரம் மாற்றம் செய்தனர்.

இந்நிலையில் இந்த திருத்தம் பில் செலுத்துதலை விரிவுபடுத்த வழிவகை செய்யும். பணப்புழக்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்ச தொகையை செலுத்தும் பயனர்களுக்கு இது சுமையாக அமைய கூடும் எனவும் கூறப்படுகின்றது.

ஸ்பிஐ கார்டின் அறிவிப்பின்படி குறைந்தபட்ச கட்டணத் தொகையில் தற்போது வரைந்த அளவிலான கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இஎம்ஐ தொகை, இஎம்ஐ மற்றும் கார்டு மீதான கடன் உட்பட 100 சதவீத கட்டணங்கள் ,100% நிதி வட்டி வரம்பை மீறி தொகை மீதமுள்ள நிலுவைத் தொகுதி இது 2% முன்னதாக இஎம்ஐ மற்றும் கட்டணங்களில் ஒரு பகுதி மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய தொகையை செலுத்தி மீதமுள்ள தொகையை அடுத்த மாதத்திற்கு மாற்ற அனுமதித்தது. புதிய முறையில் அதிக நிலுவைத் தொகைகள்  அல்லது இஎம்ஐ உள்ள பயனர்களுக்கு குறைந்தபட்ச மாத செலவை கணிசமாக உயர்த்த வழங்கப்பட்டுள்ளது.

தற்போது திருத்தப்பட்ட கட்டண முறையில் குறைந்தபட்ச கட்டணத் தொகையின் மாற்றத்துடன் sbi  கார்டு பணம் செலுத்தப்படும் முறையையும் புதுப்பித்துள்ளது. ஜிஎஸ்டி, இஎம்ஐ தொகை கட்டணங்கள் நிதி இருப்பு, சில்லறை செலவுகள் இந்த திருத்தப்பட்ட வரிசை வட்டி மற்றும் அபராதங்களில் உருவாக்கும் கூறுகள் முதலில் திருத்தப்படுவதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு வட்டி சுமை குறைகிறது. புதிய மாற்றத்தின் மூலம் கட்டணங்கள் முதலில் தீர்க்கப்படுவதால், உங்கள் அசல் கடன் விரைவில் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். நிதி ஒழுங்கு இந்த மாற்றங்களை பயனர்களை செலவுகளையும் மிகவும் விவேகத்துடன் நிர்வாகிக்க தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்பநிதி-யை புதிய பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் முதல்வர் குடும்பம்..திமுக தொண்டர்கள் உற்சாகம்!

0

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகின்றார். இந்நிலையில் சினிமாவில் இருந்த தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது பரப்புரை செய்தார். அப்போது அவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முதலில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்தார் அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஸ்டாலின் உடன் சேர்ந்து திமுக ஆட்சியை நடத்தி வருகின்றார் இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேரனும் துணை முதலமைச்சரின் மகனும் ஆன இன்பநிதிக்கு கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இவர் தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.3௦ மணி வரை பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாக தொடர்பான கட்டப்படைப்பை படித்து வந்த நிலையில் படிப்பை முடித்தவுடன் ஜூன் மூன்றாம் தேதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்திற்கு இன்பநிதியை அவருடைய தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் தலைமை நீதி அதிகாரியாக இருக்கும் நிலையில் அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் மகன் இன்பநிதியை அமர வைத்து அவருக்கு கிருத்திகா வாழ்த்து கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிகள் குறித்து அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன்  தினந்தோறும் இன்பநிதி ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

பிஎப் பணம் வாங்கிட்டீங்களா..அப்போ பென்சன் தொகை பெற முடியாது?

0

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ என்ற திட்டத்தின் மூலமாக அவசர காலங்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி  வழங்குகின்றது.. பிஎஃப் தொகையை எடுத்துக் கொண்டால் அது பென்சன் தொகையை பாதிக்குமா என பலரும் சந்தேகத்தில் உள்ள நிலையில் இபிஎப்ஓ என்ற பென்ஷன் திட்டம் அதில் தான் சேர்ந்து செயல்படும் என்பதை அறியவில்லை.

பென்சன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வராது, அதனால் நம்முடைய பிஎஃப் தொகை எடுத்துக் கொண்டால் அது எதிர்காலத்தில் நம்முடைய பென்சன் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஷன்  தொகை தொடர்ந்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் சில நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் அதை திரும்ப பெறவும், புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும்.

இபிஎப் திட்டத்தில் பணியாளரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் பணம் செலுத்தி வரும் நிலையில் நிறுவன பங்களிப்பில் ஒரு பகுதி இ பி எஸ் எனப்படும் பென்ஷன் திட்டத்திற்கு செல்கின்றது. இபிஎப் தொகை வட்டியுடன் சேர்ந்து வரும் தொகையாக உள்ள நிலையில் அதனை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் இபிஎப் தொகை நம் ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்கின்றது. அதற்கு வட்டி கிடைக்காது இபிஎப்ஒ திட்டத்தில் பென்ஷன் பெற விரும்பினால் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பது அவசியம்.

58 ஆண்டுகள் நிரம்பியவர் என்றால் முழுமையாக பென்ஷன் பெற முடியும். அதுபோலவே பத்து ஆண்டுகள் பிஎஃப் தொகையை முழுமையாக எடுத்து விட்டால் பென்சன் தொகை தானாகவே சேராது.

இந்நிலையில் பார்ம் 10சி என்பதை கொண்டு இபிஎப்  தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவத்தை இபிஎப்ஓ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். இதற்கு ஆதார்  மற்றும் கேஒய்சி அப்டேட் செய்திருப்பது அவசியம். குறிப்பாக பிஎஃப் தொகையை எடுத்தாலும் இபிஎப் திட்டத்தில் நீங்கள் பென்ஷன் பெரும் உரிமையை இழக்க முடியாது 58 வயதிற்கு பிறகு form 10 D மூலமாக பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்.

கொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!

0

கொரோனா பரவல் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிய நிலையில் பலரும் பாதிப்படைந்தனர். அதனால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. நோய் தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை கையெடுத்தனர்.

மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்த நிலையில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி கொண்டுவரப்பட்டு படிப்படியாக கொரோனா பரவல் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை சார்பாக கூறுகையில் கொரோனா பரவல் வந்தாலும் வீரியமற்ற கொரோனா என்பதால் பயப்பட வேண்டாம் எனவும் முககவசம் அணிவது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் ஊரடங்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் என இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் நெடிஷன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அளித்த விளக்கத்தில் இணையத்தில் வைரலாக கூடிய போட்டோ கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியிடுவது போல பரப்பி வருவதாககொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!வும் தெரிவித்துள்ளனர்.

லோன் வாங்கித்தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய திமுகவினர்!

0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தவெகவில் தங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் தவெவில் இருந்து விலகி திமுக கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதாகவும், தவெக கட்சி துண்டு மற்றும் கொடியை தூக்கி எரிவதை போலவும், தவேக உறுப்பினர் அடையாள அட்டையை கிழித்தெறிவதை போலவும் வீடியோ வெளியாகி வைரலானது.

இவர்கள் அனைவரும் தவெகவில் இருந்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டதை போல வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மை என நினைத்து நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரவ செய்தனர். இந்நிலையில் இந்த விடீயோவின் உண்மை முகம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது திருவொற்றியூரில் லோன் வாங்க சென்ற மக்களை உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி திமுகவினர் அழைத்து சென்று இந்த மாதிரி வீடியோ எடுக்கணும், அதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணுங்க என்று வற்புறுத்தியுள்ளனர்.

அங்கே சென்ற மக்களும் வேறு வழியே இல்லாமல் இந்த செயலை செய்துள்ளனர். அங்கு சென்ற மக்களே இன்று இந்த விடீயோவின் உண்மை நிலை குறித்து பேட்டி கொடுத்துள்ளனர்.

எங்களுக்கு வேற வலி தெரியல, அதே மாறி அந்த இடத்தை விட்டு எங்களால் நகரக்கூட முடியல, சுத்தியும் திமுக கட்சிக்காரங்க நின்னாங்க, அதனால வேறு வழியே இல்லாம அந்த வீடியோவில் அவங்க சொன்ன படி நடித்து முடித்தோம் என்று பேட்டி கொடுத்துள்ளனர்.