Home Blog Page 154

மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி; உடனே முந்துங்கள்!

0

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் ,புத்தகப் பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.

இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 48.95 கோடி கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தங்களது பள்ளியின் மூலம் அணுகி விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் உயர்கல்வி மாணவர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!

0

இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கு உரிய நேரத்தில் போதிய மருத்துவ வசதியும் சுகாதார பராமரிப்பும் எளிதாக கிடைக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து வரும் நிலையில் குழந்தையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கின்றது. இத்தகைய கடுமையான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சுரர்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக சிறந்த முறையில் தரமான மருத்துவ சேவைகளை வழங்க இந்திய அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இந்த மகப்பேறு நலத்திட்டத்தை தொடங்கியது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவைப்படும் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் பொது சுகாதார மையங்களில் சிசேரியன் மற்றும் சாதாரண முறையில் குழந்தை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும். கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி தருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற பெண்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், மேலும் மருத்துவமனையில் இருந்து பெண்களின் கர்ப்ப விவரங்கள் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

கலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!

0

DMK: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் எந்தெந்த கட்சி ஆறுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரை பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் திமுக கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்தது மாற்றம் ஏதும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தான் பெரிய மாற்றம் உண்டாகப் போவதாக அதிகாரப்பூர்வ அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

அதாவது திமுக கூட்டணியான காங்கிரஸ் மற்றும் வைகோ உள்ளிட்டோர் மிகவும் அதிருப்தியில் உள்ளார்களாம். அதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பல மேடைகளில் நாம் எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பது தனித்துப் போட்டியிட வேண்டாமா என்று பேசியுள்ளார். அதேபோல நேரடியாக தேமுதிக கூட்டணியில் இணைந்து கொள்ள அழைப்பும் விடுத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விடுத்து வெளியேறலாம்.

முன்னதாகவே பாமக தேமுதிக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவைகள் ஒன்றிணையும் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில் இவர்களுடன் மதிமுக மற்றும் காங்கிரசும் இணைய அதிக வாய்ப்புள்ளதாம். அதனுடைய அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் மறைமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜம்மு வை பாகிஸ்தானுடன் இணைத்த இஸ்ரேல்.. வெகுண்டெழுந்த இந்தியர்கள்!! திடீரென்று வந்த அறிவிப்பு!!

0

India: இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் மோதல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதன் தீவிரமானது அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரானும் தொடர்ந்து ட்ரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்குகிறது. இருவருக்குமிடையே தினசரி மோதல் போக்கானது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்க பலமான ஆதரவையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இஸ்ரேல் நாடானது நேற்று புகைப்படத்துடன் கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினால் எவ்வளவு தூரம் செல்லும் என்பது குறித்து விவரத்திருந்தது. அந்த புகைப்படத்தில் இந்தியா உள்ள இடத்தில் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் உடன் இணைந்தது போல் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த இந்தியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது ரீதியாக தற்போது இஸ்ரேல் வாய் திறந்து உள்ளது.

நாங்கள் வெளியிட்ட மேப்பில் சில தவறுகள் உள்ளது துல்லியமான எல்லைகளை கூறுவதில் தவறு நடந்து விட்டது. இதனால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் எனக் கூறியுள்ளனர். இஸ்ரேலின் மன்னிப்பு அறிவிப்பு பிறகு தான் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை நிறுத்தியுள்ளனர்.

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

0

India: இந்தியாவின் தற்போது நான்கு வரி விகிதம் உள்ளது. அதில் பொதுமக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5%, ஆடம்பர பொருள்களுக்கு 12%, மேற்கொண்டு 18 மற்றும் 24% என்ற விகிதத்தில் கட்டுமான பொருட்கள், உயர்தர ஹோட்டல்களில் தங்கப்படும் அறை, பிளைட்டில் எக்னாமிக் வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான அமைப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்த 12 சதவீதத்திற்கு கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், முட்டை, மீன், டிரிங்கிங் வாட்டர், வாக்கி டாக்கி, காண்டாக்ட் லென்ஸ், டேட்ஸ், நட்ஸ், சாசேஜ், டூத் பேஸ்ட்,பவுடர், குழந்தைகளுக்கு உபயோகிக்கும் பீடிங் பாட்டில், குடைத், தொட்டில், சைக்கிள், அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தும் பலவகை பொருள்களுக்கும் இந்த வரி விகிதம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சமநிலைப்படுத்தும் வகையில் இனி 12 சதவீத வரி விதிப்பு தேவை இருக்காது என்ற முடிவை இதன் நிர்வாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். மாறாக பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவை பொருட்கள் அனைத்தையும் ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். அதேபோல மற்ற ஆடம்பர வரிசையில் வரும் அனைத்திற்கும் 18 சதவீதம் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சமநிலை வரி விகிதத்திற்கு பல மாநில அரசு அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரீதியாக வரும் 23ஆம் தேதி வருமான வரித்துறையின் முதன்மை தலைமை நிர்வாகிகளை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஆலோசனைக்கு பிறகு நான்கு அடுக்குகளாக இருக்கும் வரி விகிதம் மூன்று அடுக்குகளாக குறையும் என கூறுகின்றனர்.

உரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!

0

PMK: அன்புமணி மற்றும் ராமதாஸ் என இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் ஆனது அதிகரித்து வருகிறது குறிப்பாக தலைவர் பதவி யாருக்கு என்பதுதான் எந்தன் போட்டியே உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை தலைவராக நான் தான் இருப்பேன். அதன் பின் அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் எனக் கூறினார்.

அவ்வாறு கூறிய அடுத்த நாளை சாகும் வரை நான் தான் தலைவர் அதற்காக வனவாசம் செல்லவில்லை செயல் தலைவராக செயல்பட்டு நான் சொல்வதை கேட்டால் போதும் எனக்கு உரியதோடு அன்புமணியை பார்த்தாலே பிபி எகர்கிறது என க் கூறினார். இப்படி ராமதாஸ் ஒரு பக்கம் தனது நிர்வாக தலைமையை காட்டி வரும் பட்சத்தில் அதனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அன்புமணி மற்றொரு பக்கம் அப்பாவுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் ராமதாஸ் பிறந்தநாளன்று திமுகவை கண்டிக்கும் வகையில் மக்கள் உரிமை மீட்பு பேரணி நடத்த உள்ளார். பாமகவிற்கு அதிக ஆதரவுள்ள விழுப்புரம் கடலூர் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 100 நாட்களுக்கு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்தப் பேரணி அழைப்பிதழில் ஒரு இடத்தில் கூட ராமதாஸ் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை.

மாறாக அன்புமணி புகைப்படம் மட்டுமே உள்ளது. இதனைப் பார்த்த தொண்டர்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தேகம் எழுந்துள்ளது. கட்சியை முழுவதையும் அபகரிக்க அன்புமணி முயற்சிப்பது இதன் மூலமே தெரிகிறது என பேசி வருகின்றனர். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை கக்கும் இந்த செயலால் பாமகவின் மவுஸானது மற்ற கட்சிகளை காட்டிலும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தையல் தெரிந்த பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணபியுங்கள்!!

0

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை என பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுயவேலை வாய்ப்புக்கு கடன் உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய முடியும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய முடியும் என்பதால் அவர்களுடைய பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தொழில் கூட்டுறவு சங்கங்களில் சமுதாயத்தில் பின்தங்கிய 18 வயதிற்கும் மேல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாக சேர முடியும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்கள் இந்த சங்கங்களில் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தையல் தெரிந்திருந்தால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால் மட்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு அருகே உள்ள இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

0

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் டிஏ நிலுவை தொகை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையை பெறுவார்களா எனவும் கேள்வி எழுந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக இழப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா எனவும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் அண்மையில் டி ஏ உயர்வு அறிவிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது.

மேலும் தேசிய குழுவின் நிரந்தரக் குழுவின் 63வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் அதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டிஏ மற்றும் டி ஆர் நிலுவைத் தொகை வழங்குவதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 2020 மார்ச் முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாதங்களுக்கான டிஏ மற்றும் டி ஆர் தொகையை தொற்று நோய்களின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதனை ஊழியர்களுக்கு உடனடியாக தர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நிலுவை டிஏ மற்றும் டி ஆர் வழங்குவதை சாத்தியமில்லை. எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதன் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆதார் அட்டையில் இந்த அப்டேட்டை உடனே பண்ணுங்க; இன்று தான் கடைசி நாள்!

0

இந்தியாவில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் மட்டும் இருந்தால் போதுமானது இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி அதாவது இன்று ஆதார் விவரங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நாளை அப்டேட் செய்யும் நபர்கள் அனைவரும் கட்டணம் செலுத்திய அப்டேட் செய்து கொள்ள முடியும். அதனால் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் ஆதார் கார்டை தனிநபரின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டில் ஒரு சில நபர்களுக்கு ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனடியாக திருத்தி கொள்வது அவசியம். அதனால் அரசு வழங்கக்கூடிய இலவச அப்டேட்டை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களது ஆதாரில் உள்ள திருத்தங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!

0

India Pakistan: பாகிஸ்தானியர்களுக்கு நீரின் ஆதாரமாக விளங்குவது இந்த சிந்து நதி தான். பகல்ஹாம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்தது. இதனால் கொந்தளித்த பாகிஸ்தானியர் இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடும் என சவால் விட்டனர். ஆனால் அவர்களின் தாக்குதல் எதுவும் இந்தியாவிற்கு பாதிப்பை தரவில்லை. இந்த போரை முடித்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் கை கொடுக்காததால் உலக நாடுகள் மத்தியில் உதவி கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியா சிந்தூர் என்ற ஆப்ரேஷனை செய்து வெற்றியடைந்ததை அடுத்து கட்டாயம் சிந்து நதிநீரை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். அதன்படி சிந்து நதி நீர் இந்தியாவில் பஞ்சாப், இமாச்சல பிரதேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் எந்த நீரும் சென்று விடக்கூடாது என்பதற்காக சிந்து நிதியை இந்தியாவின் பிரதி பிஎஸ் நதிகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மெகா கால்வாய் மூலம் நீரை இறக்கி பஞ்சாப்பிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த சிந்து நதிநீரானது கங்கை வரை கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த பணி முடிவடைய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். மற்றொருபுறம் நீர் தேக்கம் அதிகமாகி பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்பதற்காக ஹரியானா கால்வாயில் உள்ள சேதங்களையும் சரி செய்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் தான் உச்சகட்ட பிரச்சனையில் உள்ளது.