Home Blog Page 155

கொடுத்த கடனை திருப்பி கேட்டால் 5 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை.. ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

0

Tamilnadu Gov: தமிழக அரசு பல்வேறு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு முன் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் நீதிமன்றம் நாடி அவை அனைத்திற்கும் ஒப்புதல் வாங்கினர். நீதிமன்ற வழக்கை அடுத்து தொடர்ந்து ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி சட்டப்பேரவையில் கடன் ரீதியாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றினார். இனிவரும் நாட்களில் கடன் கொடுத்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் துன்புறுத்தி கடனை வசூல் செய்யக்கூடாது. மேற்கொண்டு வசூல் செய்யும் பட்சத்தில் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என வரையறுத்துள்ளனர்.

வரம்பு மீறுபவர்களுக்கு இது இரண்டும் கூட கிடைக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கடன் வாங்கியவர்களுக்கு சற்று பொறுமையுடன் கடனை தர சூழல் உருவாகும். குறிப்பாக கடன் பிரச்சனையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் குறையக்கூடும். இந்த கடன் வசூலிக்கும் மசோதாக்கு தான் தற்பொழுது ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கடன் தரும் நிறுவனங்கள் வசூலிக்கும் முறை மாற்றி கட்டபஞ்சாயத்து செய்பவர்கள் என பலரிடம் அந்த பொறுப்பை கொடுத்து விடுகின்றனர். இதனால் 1 தவணை கட்ட முடியவில்லை என்றாலும் கடன் வாங்கிவர்களை மிகவும் அவதூறாக பேசி விடுகின்றனர். இதனால் தற்கொலைகள் அதிகரிக்க தொடங்கவே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

காலையிலேயே மாணவர்களை குஷிப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை; இந்த ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறை!

0

தமிழகத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆகியவற்றில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கூட ஆகாமல் மீண்டும் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளுக்கான தேதி வெளியானது மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பள்ளி கல்வித்துறை கூறுகையில் வாரத்தில் இரண்டு விளையாட்டு வகுப்புகள் ஒதுக்கீடு செய்வது அவசியம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் புதிதாக ஈஸி இங்கிலீஷ், பன் வித் மேத்ஸ் வகுப்புகள் நடத்த உள்ளனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மொழி ஆய்வகம், நூலகம், கல்விசார் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளுக்கு பாடம் வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி, உடல் நல மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வாய்ப்பாடு நடனம், கலையரங்கம், ஆகியவற்றில் கல்வி சாரா செயல்பாடுகளில் பாட வகுப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பு கல்வி, மனநல மற்றும் வாழ்வியல் திறன், நீதி போதனை, உள்ளிட்ட பாட வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பாட வகுப்புகளில் எழுதுதல், கவனம் குவித்தல், ஸ்மார்ட் இலக்குகள், உன்னை அறிந்தால் என மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்கள் எடுக்கப்படும். இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை. இந்த காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜயதசமி விதிமுறைகளும் அடங்குகின்றது.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன் பிறகு டிசம்பர் 24ஆம் தேதி யிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு ஜனவரி 14 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தைப்பூச திருவிழா விடுமுறை. ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.

25ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் ஏதேனும் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை மற்றும் இயற்கை பேரிடரால் வழங்கப்படும் விடுமுறை உள்ளிட்டவை சரி செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்படலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

நான் செத்தால் தான் தலைவர் பதவி அன்புமணிக்கு போகும்.. கொந்தளிக்கும் ராமதாஸ்!!

0

PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் தலைவர்.

எனது குடும்பத்தைச் சார்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கட்சி தொடங்கியபோது கூறினேன். ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அன்புமணியை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுகிறது. கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து அதற்கு விருதும் வாங்கினார். ஆனால் ஒருபோதும் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. அவரிடத்தில் தாய் தந்தைக்கு மதிப்பு என்பதே கிடையாது. மைக்கை தூக்கி அடிப்பதும், அம்மா நோக்கி பாட்டிலை எறிவதுமாக உள்ளார்.

நான் இன்னும் நூறாண்டுகள் இருப்பேன் என அன்புமணி கூறுகிறார். அதேசமயம் மார்பிலும் முதுகிலும் ஈட்டியா குத்துகிறார். இதனால் எனக்கு தூக்கம் மாத்திரை போட்டால் கூட தூக்கம் என்பதில்லை. அன்புமணியால் அதிகப்படியான துன்பம் தான், இது பாசத்தினால் ஏற்படுவது அல்ல. பாசம் எல்லாம் எனக்கு எப்போதும் போய்விட்டது. கட்சி ரீதியாக அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் செயல் தலைவராக இருந்து நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் முடிவு எட்டப்ப்படுமாறு கூறியுள்ளார்.

நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

0

நகை என்பது ஒரு சொத்தாக பார்க்கப்படும் நிலையில் பணத்தேவையின் பொழுது நகையை வங்கிகளில் அடமானம் வைத்து பண தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. நகையை அடகு வைக்கும் பொழுது அதனை சரியான காலகட்டத்தில் திருப்ப வேண்டும்.

ஆனால் மீண்டும் மீண்டும் மறு அடகு வைத்தால் வட்டியாக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்களை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. சிலர் நகையை திருப்ப செல்லும் பொழுது நகையை வங்கிகள் ஏலமே விட்டிருக்கும். நகை அடகு வைக்கும் பொழுது வங்கி கொடுக்கும் ரசீதியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த ரசீது இருந்தால் மட்டுமே நகையை திரும்ப பெற முடியும். நகை வைக்கும் பொழுது கொடுக்கப்படும் ரசீது தொலைந்து விட்டால் நகையை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆனால் அதனை காரணம் காட்டி வங்கி நிர்வாகம் தங்களது நகையை ஏலம் விடும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து தற்போதைய சந்தை நிலவரப்படி நகையின் மதிப்பீட்டிற்கு ஏற்ற பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் நகை அடமானம் வைக்க தற்போது புதுப்புது நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முன்பே 100 சதவீதம் நகைக்கு 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 85 சதவீதம் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

0

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதியே பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்தெந்த மாதங்களில் பொது விடுமுறை வரப் போகும் என்பதை மாணவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஜூன் மாதத்தில் பொது விடுமுறை என பக்ரீத் பண்டிகை மட்டுமே வந்த நிலையில் அதுவும் சனிக்கிழமை வந்ததால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகை மட்டுமே வர உள்ளது.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை நாள் வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் தள்ளி உள்ளது. சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது. ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கவலையடைந்துள்ளனர். 

பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

0

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கின்றன.ர் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்ற ஊக்குவிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் ரூபாய் நிலையான வாய்ப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்யப்படுகின்றது. பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வு தொகை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆக கிடைக்கும்.

மேலும் அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிபதனையாக அவர்கள் கூறியிருப்பதாவது குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் 1,20,000 மேல் இருக்கக் கூடாது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது அவசியம். மேலும் பெண் குழந்தைகள் 2011 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்திருப்பது அவசியம் விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், கரு தடை அறுவை சிகிச்சை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கு வட்டாட்சியர் உறுதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

0

அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை நியமிக்கப்பட்ட அதிகாரி பயோமெட்ரிக் வருகை பதிவின் மூலம் அரசு ஊழியர்களின் வருகை பதிவை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுதும், அலுவலகத்தில் இருந்து வெளியேறும் பொழுதும் பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.

அலுவலகம் விட்டு வெளியேறும் நேரத்தை ஊழியர்கள் பதிவு செய்ய தவறினால் அன்றைய தினம் விடுப்பாக கருதப்படும். மேலும் சுழற்சி முறையில் வேலை செய்யும் அலுவலகங்களில் தலைமை அதிகாரி ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு 30 நிமிடம் தாமதமாக வரும் பட்சத்தில் மூன்று நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை லீவ் எடுக்கப்படும். மேலும் அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கள், மாலை நேர பணி செய்பவர்கள், உரிய அதிகாரியின் அனுமதி பெற்று தாமதமாக வரும் ஊழியர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

மேலும் அரசு வேலை காரணமாக வெளியூர் அல்லது அலுவலகத்திற்கு வெளியே சென்றாலோ இவர்களுக்கு அபராதம் கிடையாது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!

0

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, புத்தகம், காலை உணவு திட்டம், கல்வி உதவித்தொகை , இடைநிற்றலை குறைப்பதற்காக ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம், மற்றும் மடி கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிக்கு ஏற்ப உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்காக மூன்று புதிய பள்ளி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கல்வியை அடுத்த கட்டத்திற்கு தரம் உயர்த்த சென்னை மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இலவச பேருந்து சேவை ஜூன் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சேவையால் மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இலவச பேருந்து சேவை தற்போது முதல் கட்டமாக கொண்டு வரப்பட்ட உள்ள நிலையில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் பேருந்து சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

0

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகை புரிந்த போது இது ரீதியாக பேசியிருந்தார்.

அச்சமயம் அதிமுக தொண்டர் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் குழப்பம் எழ ஆரம்பித்தது. இதனை தவிர்க்கும் வகையில் மீண்டும் எடப்பாடி அதிமுக ஆட்சி தான் என்று பாஜக கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். ஆனால் இந்நிலையில் மீண்டும் பாஜக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தற்போது வரை செய்து காட்டுகிறது. இதுவே திமுக வந்து நான்காண்டுகள் ஆகிறது.

குறைந்தபட்சம் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் சொன்ன சிலிண்டருக்கு ரூ 100 மானியம் எனத் தொடங்கி பெட்ரோல் டீசல் வரை எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் மோடி சொன்னதை தாண்டி செய்து வருகிறார். அதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறவில்லை, மாறாக குறைத்துள்ளார். அண்ணாமலை மோடிக்கு அதிமுக விடும் அதிக தொகுதி வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் பரவியது.

அதற்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல 2026 யில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் அது பாஜக ஆட்சி தான் எனக்கு கூறியுள்ளார். தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவரும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாஜகவில் இருக்கும் நான் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தான் என்னுடைய கட்சி வளர்க்க தான் எனது எண்ணம் இருக்குமே தவிர இதர கட்சிகளை வளர்ப்பதில் இல்லை என்று சூசகமாக சொல்லி முடித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

0

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதனால் ஆர்வம் உள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in என்ற இணையதளத்தின் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவர்கள் மத்திய மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலையை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.