Home Blog Page 18

என்னால விஜய்யை விமர்சிக்க முடியாது.. சாப்ட் டோனில் ஹாண்டில் செய்த ஓபிஎஸ்!! என்னவா இருக்கும்!!

0

TVK ADMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். இதற்கு மாறாக இந்த முறை திராவிட கட்சிகளுடன் போட்டி போட தவெக களத்தில் குதித்துள்ளது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்தது. இவருக்கு இயல்பாகவே ரசிகர்கள் அதிகளவில் இருந்ததால், இவர் கட்சி தொடங்கிய உடன் அவர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டனர். இந்நிலையில் இவர் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

இவரை தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன், சசிகலா என பலரும் இணைவார்கள் நேற்று நினைத்த சமயத்தில் அது தற்சமயம் வரை ஈடேறவில்லை. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரான ஓபிஎஸ் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள், அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த பின் டிசம்பர் 24 ஆம் தேதி தனது கெடுவை மாற்றியமைத்தார்.

இதனால் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதங்கள் கிளம்பி இருக்கிறது. எப்படியாவது மீண்டும் அதிமுகவில் சேர வேண்டுமென ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த சமயத்தில், இது நிறைவேறாத காரணத்தினால், இவர் வேறு முடிவை எடுத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்த வகையில், இவர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஓபிஎஸ்யின் செயல்பாடுகள் அவர் தவெகவில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன.

அந்த வரிசையில் முதலாவதாக, விஜய்யின் ஈரோடு பரப்புரை தொடர்பாக ஓபிஎஸ்யிடம் கேட்ட போது, என்ன ஏன் வம்புக்கு இழுக்குகிறீங்க என்று பதிலளித்துள்ளார். மேலும் விஜய் பிரச்சார பயணத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து கேட்ட போது, அவை தேவையில்லாதது என்று கூறினார். இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ், விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சித்தது கிடையாது. விஜய் பற்றி கேள்வி கேட்டாலே அதனை அறவே தவிர்த்து வருகிறார். இவை அனைத்தும் ஓபிஎஸ் தவெகவில் இணைவதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு வந்த செம்ம ஆஃபர்.. திமுகவில் இணையும் மற்றொரு முக்கிய கட்சி!! கொண்டாடும் தொண்டர்கள்!!

0

DMK DVK MDMK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் அதிமுகவுடன் பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக உடன் மதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து வருகின்றன.

திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருவதால் இந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்னும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மீண்டும் திமுகவிலேயே இணைந்தார். இவரது கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த மல்லை சத்யா, வைகோ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் பிறகு வைகோ மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த இவர், திராவிட வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், திராவிட வெற்றிக் கழகம் போட்டியிட தயராக உள்ளது.

அதே போல் எங்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் திமுக கூட்டணியில் இணைவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதனால் இவர் கூடிய விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் திமுக கூட்டணியில் சேர்ந்தால் மதிமுக திமுக உடன் தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தவெகவுல என்ன கண்டுக்கவே இல்ல.. தளபதியை 10 நிமிஷம் பாக்க கூட அனுமதி தரல!! அதனால தான் இந்த முடிவு!!

0

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் புதிய கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் முதல்முறை போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்படுகிறது. இவர் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு அதிகளவில் உள்ளது. இதனால் தவெகவில் முக்கிய முகங்களாக திகழ வேண்டுமென பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அதற்காக தங்களுடைய சொந்த கட்சியை தவிர்த்து விட்டு தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். அந்த வரிசையில், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த, அண்மையில் செங்கோட்டையன் என பலரையும் சொல்லி கொண்டே போகலாம். இந்நிலையில் விஜய் அழைக்காமலேயே அவரது கட்சிக்கு குரல் கொடுத்து வந்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. கரூர் சம்பவம் நடந்த போது கூட சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், தளபதி அரசியலுக்கு புதியவர்.

அதனால் அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதனால் இவர் கூடிய விரைவில் தவெகவில் சேர்க்கப்பட்டு, முக்கிய பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை தவெகவில் யாரும் கண்டு கொள்ளபடாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தாடி பாலாஜி, லட்சிய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், எத்தனை நாள் நானும் பொறுத்திருப்பது.

மரியாதையை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வது தான் மனுஷ இயல்பு. தளபதிக்காக அவர் கூப்பிடாமலே உழைச்சேன். ஆனா அவர் கூட இருக்கவங்க என்ன கண்டுக்கவே இல்ல. ஒரு தடவ தளபதியை 10 நிமிசம் பாக்க டைம் கெடச்சி இருந்த எல்லாத்தையும் கொட்டி இருப்பேன். ஆனா அது முடியல, அப்புறம் தான் தெரிஞ்சது, விஜய் அப்பாவுக்கே இந்த நிலைமை தான்னு. இவ்வாறு பல்வேறு குற்றசாட்டுகளை அவர் அடுக்கினார். இவரின் இந்த திடீர் மாற்றம் விஜய்க்கு எதிராக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன் திமுகவின் பி டீம்.. அவங்க சொல்லி தான் தவெகவுக்கு போனாரு!! கொளுத்தி போட்ட டாப் தலை!!

0

DMK TVK BJP: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும் அவர்களுடன் கூட்டணி சேர மறுப்பு தெரிவித்தார். ஆனால் பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை கைவிடவில்லை.

இவ்வாறான நிலையில் தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார். இவர் பாஜக உடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்த நபர் என்பதால் விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வர, பாஜக மூலம் இவர் அனுப்பப்பட்டிருக்கிறார் என்று பலரும் கூறுகினர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களும், செங்கோட்டையனும் இதனை அறவே மறுத்து வந்தனர். செங்கோட்டையன் தவெகவில் சேர்வதற்கு முன்பு, திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசினார். இதனால் இவர் விஜய்யை வீழ்த்த திமுகவின் ஸீலீப்பர் செல்லாக சென்றிருக்கிறார் என்றும் வதந்திகள் பரவியது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். தவெக பாஜகவின் பி டீமா? என்று பரவும் தகவல் குறித்து அவரிடம் கேட்ட போது, ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வது திமுகவின் வழக்கம். செங்கோட்டையன் தவெகவில் சேர்வதற்கு முன்பு அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து விட்டு தான் சென்றார். இதனால் தவெக, திமுகவின் பி டீமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவர் இதற்கு முன்பு ஒரு முறை இதனை கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த கருத்தை பலரும் முன் வைத்து வருவது விவாதமாக்கப்பட்டுள்ளது.

ராமதாஸின் ரைட் ஹேண்ட்க்கு குடைச்சல் கொடுக்கும் அன்புமணி.. அடுத்த நீக்கம் இவர் தானாம்!!

0

PMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கட்சி யாரிடம் உள்ளது என்பதே கேள்வி குறியாக உள்ளது. முதலில் தனது மகன் என்று கூட பாராமல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.

ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி தான் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற ராமதாஸ், அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கியுள்ளதால், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைப்பதாக உத்தரவிட்டது.

இவ்வாறு அன்புமணிக்கும், ராமதாசுக்கு இடையே பல்வேறு மோதல் போக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறி வருவதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான ஜி.கே. மணி அண்மை காலமாகவே உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசிவந்தார். மேலும், பாமகவின் பிரிவுக்கு நான் தான் காரணம் என்று அன்புமணி கூறுகிறார்.

அது நிரூபிக்கப்பட்டால் நான் எனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலக தயார் என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில், அன்புமணி, ஜி.கே. மணிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் தலைமைக்கு எதிராக பொதுவெளியில் பேசியதாகவும், ஒரு வாரத்திற்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை ஜி.கே. மணி இதற்கு பதிலளிக்காமல் இருந்தால் அன்புமணியால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்.. அப்செட் ஆன செங்கோட்டையன்!! கலைகட்டும் அரசியல் களம்!!

0

ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடு, மக்களை சந்திக்கும் பணி என அனைத்தும் பரபரப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து, அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியையும் செய்து வருகிறது.

இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு அக்கட்சி சிதறுண்டு கிடக்கிறது. இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்றவுடன் அக்கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை நீக்கிய அவர், இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய இருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் நேற்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் கூட விஜய் இதனை உறுதிப்படுத்தி இருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை பதட்டத்திலேயே வைத்திருந்த செங்கோட்டையனுக்கு தற்போது அந்த நிலை ஏற்பட்டிருப்பது போல தெரிகிறது. அந்த வகையில் இபிஎஸ் ஒரு காரியத்தை செய்துள்ளார். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் தவெகவிற்கு வரவிருக்கிறார்கள் என்று செங்கோட்டையன் அனைத்து  இடத்திலும் கூறி வந்த நிலையில், தற்சமயம் அதை இபிஎஸ் செய்துள்ளது தேர்தல் களத்தை சூடுபடுத்தியுள்ளது. 

திமுக பெயரை விஜய் பயன்படுத்துவது இதுக்காக தான்.. சுளீரென்று பேசிய கரூர் அமைச்சர்!!

0

DMK TVK: 2021 தேர்தலில் கோட்டை விட்ட அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனவும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்களை கையிலெடுத்து வருகிறது. அந்த வகையில், நான்கரை ஆண்டுகளில் திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அவர்களுக்கு  நியாபகபடுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, சென்ற முறை தோல்வி அடைந்த பகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்திருப்பது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் தான் திமுகவை எதிர்க்க மற்றொரு சக்தி அரசியலில் குதித்தருப்பது புதிய புயலை கிளப்பியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே திமுகவை எதிரி என்று கூறி அதனை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் மிகவும் பிரபல நடிகர் என்பதால், அவருக்கு இயல்பாகவே மக்கள் ஆதரவு அதிகம். இதில் இவர் கட்சி துவங்கிய உடன் ரசிகர் கூட்டம் அனைத்தும் தொண்டர்கள் கூட்டமாக மாற ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் விஜய் திமுகவை எதிர்ப்பதால், அவரது இளம் தொண்டர்களும் திமுகவை வசைபாட ஆரம்பித்து விட்டனர். மேலும் திமுகவிற்கு மாற்று நாங்கள் தான் என்று அதிமுகவும், தவெகவும் மாற்றி மாற்றி கூறி வந்தன. இது திமுகவிற்கு பாதகமாக இருந்தாலும், ஒரு வகையில் திமுகவின் பலத்தை அதிகரித்தது.

திமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் தான் அனைவரும் அதனை எதிர்க்கிறார்கள் என்ற கருத்தும் நிலவியது. இவ்வாறு திமுக குறித்து விஜய் பேசி வரும் சமயத்தில், இன்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்திலும் விஜய் திமுகவை விமர்சித்தார். இதற்கு பதிலடியாக பேசிய, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் மக்களிடம் தங்களது இருப்பை காட்டி கொள்ள திமுகவை பயன்படுத்தி கொள்கிறார்கள். வேறு யாரையும் போட்டியாக சொல்வதில்லை, அந்த அளவிற்கு திமுக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

பாஜகவின் முக்கிய புள்ளியை கைது செய்த காவல்துறை.. டெல்லியை கட்டம் கட்டும் திமுக!!

0

DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக உடன், பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற முக்கிய கட்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்று வெற்றி கணக்குகளை தீட்டி வரும் நிலையில், அதற்கு திமுக அரசு பல்வேறு வகைகளில் சிக்கலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  அந்த வகையில், அண்மையில் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக அரசு அதனை எதிர்த்து. ஆனால் பாஜக அரசு, திமுகவின் நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்து வந்தது. இதனை எதிர்த்து திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் போராட்டம் நடத்திய நிலையில், அவரை காவல் துறையிடம் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பர் சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி முடிவெடுத்த நிலையில், இதனை அந்த பகுதி மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தும், இதனை நடத்தியதால், பங்கேற்பாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாஜக மாநில தலைவராக இருந்த ஒருவரை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 9-யில் வரும் அமித்ஷா.. 5 ஆம் தேதியே ஷாக் கொடுக்க போகும் தினகரன்!! வடிவம் பெரும் கூட்டணி!!

0

AMMK BJP: சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கும் சமயத்தில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. அதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு அதிமுகவே அதன் தோல்விக்கு காரணமாகி விடுமோ என்ற பயம் உள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு, உட்கட்சி பிரச்சனை போன்றவை பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே பாஜகவின் இந்துத்துவவாதத்தை தமிழக மக்கள் ஏற்காததால், அதனால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை.

இந்நிலையில் தான் அதிமுகவின் பிரிவினையை சரி செய்து திமுகவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டுமென பாஜக திட்டம் தீட்டியது. ஆனால் தனது தலைமை பதவியின் மேலுள்ள பயத்தினால் இபிஎஸ் ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகியது பாஜகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஓபிஎஸ் டெல்லி சென்ற போது கூட, அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் டெல்லி செல்ல மாட்டேன்.

அவரும் என்னை அழைக்க மாட்டார் என்று தினகரன் கூறினார். இதனால் பாஜகவிற்கு, தினகரனுக்கும் இடையில் சச்சரவு நிலவி வந்தது வெளிச்சமானது. இவ்வாறான நிலையில் தான், ஜனவரி 9 ஆம் தேதி அமித்ஷா தமிழக வருகை தர உள்ளார். ஆனால் இதற்கு முன்பே தினகரன் ஜனவரி 5 ஆம் தேதி அமமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அமித்ஷா தமிழகம் வரும் போது, அதிமுக-பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று கூறப்பட்ட காரணத்தினால், டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரனையும் விட்டு வைக்காத செங்கோட்டையன்.. அதிமுகவை தொடர்ந்து அமமுக பக்கம் திரும்பிய தவெக!!

0

TVK AMMK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து, தேர்தல் களமும், மாநில கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சிறிய கட்சிகளும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் தங்களை இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.  இதனால் விஜய் மீதும் அவரது கட்சி மற்றும் தொண்டர்கள் மீதும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து வலுப்பெற்று வந்த நிலையில், அவருக்கு அரசியல் வழிகாட்டியாகவும், தவெகவின் காட் பாதர்-ஆகவும் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்து இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர் கட்சியில் இணைந்தவுடன் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் இணைப்பேன் என்று உறுதி கூறினார். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கையில், மறைமுகமாக டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவின் முக்கிய முகங்களையும் தவெக பக்கம் இழுப்பதற்கான பணியை செங்கோட்டையன் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் சில முக்கிய அமைச்சர்கள் இணைவார்கள் என்று கூறப்பட்ட சமயத்தில் அது நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து அமமுகவின் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நாகு மற்றும் அவரது தலைமையிலான அமமுகவினர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.