Home Blog Page 19

சொல்லியும் திருந்தாத அமித்ஷா.. ஒருங்கிணைப்பில் மூக்கை நுழைக்கும் பாஜக!! கடுப்பான இபிஎஸ்!!

0

ADMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, உட்கட்சி பிரச்சனை பாஜகவிற்கு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த டெல்லி தலைமை அதனை சீரமைக்க முயன்று வருகிறது. இதற்காக முதலில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என நினைக்கும் பாஜக, அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டவர்களை டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செங்கோட்டையன் நீக்கப்பட்ட போதே அதிமுக ஒருங்கிணைப்பில் பாஜக தலையிட கூடாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியதாக தகவல் கசிந்தது.

பாஜகவும் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. இவ்வாறான நிலையில், ஒருங்கிணைப்பில் பாஜக தலையீடு அதிரித்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இபிஎஸ்யால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிசம்பர் 15 குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறிய நிலையில், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின் தனது கெடுவை மாற்றினார். இதனால் இபிஎஸ் அமித்ஷா மீது அதிருப்தியில் இருந்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறின.

இந்த இக்கட்டான சூழலில் தான், அதிமுக-பாஜக இடையே மேலும் பிரிவை ஏற்படும் விதமாக பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதிமுக இணைவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பை டெல்லி மேலிடம் பார்த்து கொள்ளும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த கூற்று, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது என்பதையும், அதிமுகவில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் பாஜக முதல் ஆளாக குரல் கொடுக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென இபிஎஸ் எவ்வளவு கூறியும், அமித்ஷா கேட்காதது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

ஈரோடு பிரச்சாரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. விஷயம் டாப் சீக்ரெட்!!

0

TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் களம் ஈடுபட்டுள்ளது. இந்த சமயத்தில் தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது விஜய்யின் ஈரோடு பரப்புரை. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தமிழகத்தில் மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் இது நடந்து முடிந்துள்ளது என்றே சொல்லலாம்.

எப்போதும் போல திமுகவை வம்பிழுத்த விஜய், பாஜகவை பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார். பாஜகவை கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும், தற்போது களத்தில் இருக்கும் திமுகவை மட்டும் தான் எதிர்ப்போம் என்றும், எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இவ்வாறு பிரச்சாரம் களைகட்டிய நிலையில், அண்மையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது போல, இன்னும் சிலர் இணைய இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவர் கூறிய இந்த செய்தி அதிமுகவினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பிரச்சாரத்தில் மக்கள் முன்னிலையில் சில அமைச்சர்கள் இணைவார்கள் என்று நினைத்த நிலையில் அது ஈடேறவில்லை. இந்நிலையில் இன்னும் சிலர் சேர இருக்கிறார்கள் என்று விஜய் அவர் வாயால் கூறியது, இணைவு விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்பதை உணர்த்தி இருக்கிறது.

விஜய் பாஜக கூட சேரனும்.. இல்லன்னா திரும்ப சினிமாக்கு போகணும்!! எச்சரித்த பாஜகவின் டாப் தலை!!

0

TVK BJP: தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய் கட்சி துவங்கி அதனை தேற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ள இவர், கரூர் சம்பவத்தில் முடங்கி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று ஈரோட்டில் தவெக பரப்புரை நடத்தியது. இது கரூரை போல அல்லாமல் வெற்றிகரமாகவும், கவனமாகவும்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு இயல்பாகவே மக்கள் ஆதரவு அதிகம். அதிலும் அவர் கட்சி தொடங்கியவுடன் அவரது ரசிகர்கள் அனைவரும், எங்கள் ஒட்டு விஜய்க்கு தான் என்று முழக்கமிட தொடங்கிவிட்டன. இவருக்கான ஆதரவை கண்ட அதிமுகவும், தேசிய கட்சியான பாஜகவும் இவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க, கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதில் விஜய் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக பாஜக செயல்பட்ட போதும் கூட விஜய் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக அவரை நேரடியாக விமர்ச்சிக்க தொடங்கியது. அவரை விமர்சிப்பது ஒரு புறம் இருந்தாலும், விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான உள்ளடி வேலைகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், செய்தியாளர் சந்திப்பில் கூட விஜய் எங்கள் கூட்டணியில் சேர்ந்து தான் ஆக  வேண்டும் என்பதை மறைமுகமாக கூறி வந்தனர். ஆனால் தற்போது இதனை, பாஜகவின் மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாகவே கூறியுள்ளார். டிசம்பர் 17 ஆம் தேதி பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இவர், விஜய் எங்களுடம் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், இல்லையென்றால் அவர் சினிமாவுக்கே போகட்டும். மற்றபடி அவர் தனித்து நிற்பதால் எந்த பயனுமில்லை என்று விஜய்யை நேரடியாக கூட்டணிக்கு அழைத்துள்ளார். இதனை மற்றொரு புறம் இருந்து பார்த்தால், பாஜக விஜய்யை கூட்டணிக்கு வரவில்லை என்றால் உங்கள் அரசியல் எதிர்காலத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டுவது போல உள்ளது எனவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிமுக எங்க டார்கெட் கிடையாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு!! விஜய் சொன்ன அந்த வார்த்தை!!

0

TVK ADMK: 2026 தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு என அனைத்தும் வேகமெடுத்துள்ளன. அந்த வரிசையில் கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் இன்று ஈரோட்டில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 84 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்ட நிலையில் இவை அத்தனையும், முறையாக கடைபிடிக்கபட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இந்த மக்கள் சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை விஜய் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த சமயத்தில் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து, தவெக திமுகவை நேரடியாக எதிர்கிறது, ஆனால் அதிமுகவை மறைமுக எதிரியாக வைத்திருக்கிறது என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவை அனைத்தும் தற்போது முறியடிக்கபட்டுள்ளது. வழக்கம் போல திமுகவை வசைபாடிய விஜய், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை கோடிட்டு காட்டினார்.

மேலும் தற்சமயம், களத்தில் உள்ளவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். மற்றவர்களை எதிர்க்க நேரமில்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று விஜய் கூறியது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தவெகவின் எதிரி யாரென்று மக்களுக்கு தெரிந்தால் போதும் என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இதனால், விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பது நிரூபிக்கபட்டுள்ளது.

தினகரனுக்கு ஆப்பு வைக்கும் செங்கோட்டையன்.. ஈரோட்டில் வெடிக்க போகும் வெடி!!

0

TVK AMMK: தமிழகத்தில் நடக்க இருக்க சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி அதனை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கரூர் பரப்புரையை தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ஈரோட்டில் விஜய் மக்களை சந்தித்து பேசவுள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு உதாரணமாக பார்க்கபடுவது, அண்மையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வகித்து வருகிறார்.

இவர் தவெக சென்ற தினம், அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும், தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்தார். அந்த வகையில் சில அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், அவர்கள் இன்று ஈரோட்டில் விஜய் தலைமையில், மக்கள் முன்னணியில் தவெகவில் ஐக்கியமாவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இது குறித்த சமீப காலமாகவே செய்திகள் பரவி வருகிறது. ஆனால் யாரும் அறிந்திராத செய்தி ஒன்று, வெளியாகியுள்ளது. அமமுகவின் முக்கிய முகங்களும், நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைய போவதாக பலரும் கூறுகின்றனர். செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தினகரன், ஓபிஎஸ் உடன் தான் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

இப்படி இருந்த சமயத்தில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது இவர்களுக்கே தெரியாது என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த உடன் இவர்களை மறந்து விட்டார். இனி மேல் இவர்களை எதிர்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். தற்போது அது உறுதியாகியுள்ளது. இதனால் இவர் அதிமுக அதிருப்தியாளர்களை மட்டும் சேர்ப்பதை நோக்கமாக வைக்கவில்லை. அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் தவெகவில் சேர்ப்பதற்காக மறைமுகமாக பணியாற்றி வருகிறார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

பாஜகவை அட்டாக் செய்ய ரெடியான விஜய்.. வாயடைத்து போன அரசியல் கட்சிகள்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் தனது ஒன்றரை வயதை மட்டுமே எட்டிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் 2 மாநாடுகள், அதன் பிறகு 5 பிரச்சார பயணங்களை நடத்தி முடித்த தவெக, கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்துவிட்டது. இதனை வைத்தே அவரை முடக்கிவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டின. இதற்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், இன்று தவெகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் ஈரோட்டில் மக்களை சந்தித்து பேச உள்ளார். கரூர் சம்வத்திற்கு பிறகு, தமிழகத்தில் தவெக நடத்தும் முதல் பிரச்சாரம் என்பதால் இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும்  சரி, செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்விலும் சரி இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

வழக்கம் போல இந்த கூட்டத்திற்கும் 84 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விஜய் எல்லா இடங்களிலும் திமுகவை நேரடியாகவும், பாஜக, அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது. புதுவையில் கூட பாஜக என்று கூறாமல், ஒன்றிய அரசு என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த செயலால் இவர் அதிகளவில் விமர்சிக்கபட்டார். இதன் காரணமாக ஈரோடு பரப்புரையில், பாஜகவையும், அதிமுகவையும் விஜய் நேரடியாக விமர்சிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் தவெக, பாஜகவின் பி டீம் இல்லையென்பது நிரூபணமாகும் என்று பலர் கூறுகின்றனர்.

பாஜக திமுக தவெக எல்லோரும் வேண்டும்.. செங்கோட்டையன் சரியில்ல!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!

0

ADMK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் அரங்கு பரபரப்புடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் தொடரும் பிரிவுகள் அதன் தனி பெரும்பான்மையை இழக்க செய்கிறது. அந்த வரிசையில் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்தே சசிகலா, ஓபிஎஸ், தினகரன், அண்மையில் செங்கோட்டையன் என பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என  தினகரன் கூறி வருகிறார்.

இவர்களை தொடர்ந்து டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஓபிஎஸ், இபிஎஸ்யை எச்சரித்திருந்தார். இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று  நினைத்த சமயத்தில், ஒருங்கிணைப்பு பற்றி இபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது அதற்கு சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. இதன் அடுத்த கட்டமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ் அவரது கெடுவை டிசம்பர் 25 ஆம் தேதி ஒதுக்கி வைத்தார்.

மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தனது அமைப்பது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றி அதிருப்தியை ஏற்படுத்தினார். இது இவரின் புதிய கட்சியின் பெயர் என்று விவாதங்கள் பரப்பபட்டது. இவ்வாறு ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து விவாதிக்கபட்ட சமயத்தில், இவரின் ஒரு கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு என்னிடம் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியது பாஜக, திமுக, தவெக என அனைவருக்கும் அவர் நடுநிலையாக இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்ட நிலையில், இவர் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்வதற்காக தீவிர ஆலோசனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த கட்சிக்கும் எதிராக கருத்து சொல்ல அவர் யோசிக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாஸ் காட்டிய ராஜேந்திர பாலாஜி.. உறைந்து போன ஸ்டாலின்!! கூண்டோடு ஐக்கியமான திமுகவின் டாப் தலை!!

0

ADMK DMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்காக தனது பிரச்சார பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, நான்கரை ஆண்டுகளாக திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அவர்களுக்கு நியாபகப்படுத்தும் நிகழ்ச்சியும், சென்ற தேர்தலில் தோல்வியுற்ற பகுதிகளில் இந்த முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்திருப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக தான் இதில் முதலிடம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். இதனை மிஞ்சும் வகையில் அதிமுகவும் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டது. அந்த வகையில், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. கணேஷ் பாண்டி அவருடைய ஆதரவாளர்கள் 200 பேருடன், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

இவரின் இந்த சேர்க்கை விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுகவிலிருந்து முக்கிய முகங்கள் பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில், இவரின் இந்த இணைவு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுகவும், தவெகவும், திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் இல்லனா திமுக இல்ல.. வாய்விட்ட முக்கிய புள்ளி!! கொதித்தெழுந்த ஸ்டாலின்!!

0

DMK CONGRESS: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தங்களது பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. பீகார் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ் தற்சமயம் தமிழக தேர்தலை மட்டும் தான் நம்பி இருக்கிறது. இதற்காக திமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு வலியுறுத்தி வருகிறது. தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில், திமுகவும் ஒரு குழு அமைத்த உடன் பங்கீடு குறித்து பேசப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதன் முதலில், திமுகவிடம் ஆட்சியில் பங்கை கேட்ட காங்கிரஸ் இதனை பெருவதற்காக, விஜய்யை பகடை காயாக பயன்படுத்தி வந்தது. ஆனால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை முன்னிலைப்படுத்திய ஸ்டாலின், இந்த கோரிக்கையை மறுத்து வந்தார்.

இவ்வாறு தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவது கூட்டணியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், காங்கிரஸ் திமுகவை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் இருந்தால் மட்டும் தான் திமுக ஆட்சியில் இருக்க முடியும். இல்லையென்றால் திமுக வெறும் எதிர்க்கட்சி தான். இதை நான் திமுகவை பார்த்தே சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மேலும் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

அன்புமணி செல்லா காசு.. நீங்க மட்டும் போதும்!! எடப்பாடியின் நெக்ஸ்ட் மூவ்!!

0

ADMK PMK: இன்னும் 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் விரைந்து நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அதிமுகவிலும், பாமகவிலும் உட்கட்சி பிரச்சனை தலை தூக்கியுள்ளது. அதிமுகவில் பல அணிகள் உருவான நிலையில், மீதமிருக்கும் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சி இப்படி பிளவுபட்டிருப்பது வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்று அனைவரும் இபிஎஸ்யிடம் கூற, அவரோ தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கை சாத்தியமில்லை என்று கூறி வருகிறார்.

மற்றொரு புறம் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தலைமை மோதல் தற்சமயம் வரை தீர்ந்த பாடில்லை. இவ்வாறு சென்று கொண்டிருக்க கூட்டணி குறித்த பேச்சும் இரு தரப்பிடமும் பேசப்பட்டு வருகிறது. அன்புமணி அதிமுக பக்கம் ஆர்வம் காட்டி வரும் வேளையில், ராமதாஸ் திமுக பக்கம் ஆதரவளித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று அன்புமணி தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக, தவெக இதில் பங்கேற்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இந்த செயல் அன்புமணியை புறக்கணித்து விட்டு, பாமகவின் மொத்த அடையாளமாக ராமதாஸ் இருப்பதால் அவருடைய தரப்பு மட்டும் போதும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக அன்புமணியை ஒதுக்கி விட்ட இந்த சமயத்தில், தவெக பக்கமும் செல்ல முடியாத அன்புமணி ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.