Home Blog Page 20

உற்று நோக்கும் அமித்ஷா.. விசிட்டிங் வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர்!! முதல் வேலை இது தானாம்!!

0

ADMK BJP: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாஜக முதலில் அதிமுகவை ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு பாஜக கூட்டணியிலும் சரி, அதன் உள் வட்டாரத்திலும் சரி மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சீரமைக்க, செங்கோட்டையன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதே, இபிஎஸ்யும், செங்கோட்டையனும் ஒருவரை அடுத்து ஒருவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச, அப்போதும் கூட இது முடிவுக்கு வரவில்லை. மேலும் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவதை உணர்ந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் வரிசையாக கூட்டணியிலிருந்து விலகினார்கள். இவர்களை மீண்டும் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது கைகூடவில்லை.

இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடருவது பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த டெல்லி தலைமை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்-யை நியமித்துள்ளது. இவர் வரும் 22 ஆம் தேதி தமிழக வருகை தர உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த வருகையின் முக்கிய நோக்கம், இபிஎஸ்யை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசுவதும், பாஜகவிற்கு அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதுமாகும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

அன்புமணியை ஓரங்கட்டிய எடப்பாடி.. விஜய்யும் கூட சேந்துட்டாரா!! அப்போ தலைவரின் நிலைமை!!

0

PMK ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவை பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் பாமகவில் கட்சி யாரிடம் உள்ளதென்றே தெரியாத நிலை உள்ளது. கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் மறுக்காத காரணத்தினால் அன்புமணி தலைவராக தொடர்கிறார்.

இதனை தொடர்ந்து அன்புமணிக்கும், ராமதாசுக்கும் மோதல் போக்கு நீடித்து கொண்டே செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு, ராமதாஸ் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பிசுபிசுத்து போன நிலையில் இன்று அன்புமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் அதற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இதற்காக திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி தரப்பு அழைப்பு வழங்கியது.  இதனால் இந்த கூட்டம் அனைத்து கட்சி கூட்டமாக மாறும் என்று யூகிக்கப்பட்ட சமயத்தில், முக்கிய கட்சிகளான அதிமுகவும், தவெகவும் இதில் பங்கேற்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி அதிமுக உடன் நெருக்கம் காட்டி வருவதால், அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அன்புமணியை ஓரங்கட்டியது விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. மேலும் தவெக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது பாமகவை அவர் தீவிரமாக எதிர்ப்பதை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் பாமகவின் வாக்கு வங்கியிலிருந்து விஜய்க்கு வாக்கு செல்லாது என்பது நிரூபணமாகியுள்ளது.

தவெகவில் இணையும் சின்னம்மா.. சஸ்பென்ஸ் வைக்கும் KAS!! வெளியான டாப் சீக்ரெட்!!

0

TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகளும் பெரிய கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உதயமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார பயணத்தையும் முடித்துள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் தவெகவில் தலைவன் தொடங்கி தொண்டன் வரை அனைவரும் முடங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், அதில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.

இந்நிலையில், நாளை ஈரோடு மாவட்டத்தில் தவெக பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் இணையும் நிகழ்வு நடைபெறும் என்று கணிக்கப்படுகிறது. அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் பலரும் தவெகவில் இணைவார்கள் என்று கூறினார். ஆனால் அது, எங்கு, எப்போது என்பது  குறித்த விவரம் சஸ்பென்ஸாகவே இருந்தது.

அந்த வகையில், ஓபிஎஸ்யின் ஆதரவாளரான வைத்தியலிங்கத்திடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இவர் நாளை தவெகவில் இணைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஜே.டி.சி பிரபாகரனும் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்களை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட சசிகலாவும் நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமாக போவதாக பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தவறான முடிவு என சசிகலா கூறிய நிலையில், அவர் தவெகவில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பாமக கூட்டணி.. ராமதாஸுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!! பொதுக்குழுவில் முக்கிய முடிவு!!

0

PMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கையில், பாமகவில் தந்தைக்கும் மகனும் உண்டான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இளைஞரணி பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் ஆரம்பித்த சிக்கல் தற்போது வரை தொடர்கிறது. இதனை தொடர்ந்து அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ் இந்த பிரச்சனையை மேலும் வலுப்படுத்தினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூற, இதனை ஏற்காத ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. தேர்தல் சமயத்தில் பாமக இரண்டாக பிளவுபட்டிருப்பதால் வேட்புனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது. இவ்வாறு மோதல் வெடித்து கொண்டே சொல்லும் நிலையில், பாமகவின் கூட்டணியும் கிடப்பிலிலேயே உள்ளது.

இந்நிலையில், பாமக கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கு உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அன்புமணி என் பெயரை சொல்லி, என் புகைப்படத்தை போட்டு, பாமகவின் கொடியை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று கூறிய அவர், கூட்டணி குறித்து பேசுவதற்கு நிர்வாக குழு எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளது. இதன் பின் செயற்குழு, பொதுக்குழு அதிகாரம் கொடுக்க வேண்டும்.

பாமகவின் பொதுக்குழு டிசம்பர் 29 சேலத்தில் நடைபெறும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் பாமகவின் கூட்டணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணிக்கான அதிகாரம் ராமதாஸிடம் உள்ளது என்று அவர் கூறியதால், அன்புமணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

விஜய் கோட்டை விட்டது இந்த இடத்தில் தான்.. லிஸ்ட் போட்ட செங்கோட்டையன்!!

0

TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் பெருமளவு ஆதரவை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட மக்களின் கோபம் தமிழக அரசு மீது தான் திரும்பியது.

விஜய்க்கு அனுதாபம் தான் பெருகியது. இவ்வாறு விஜய்க்கு மக்கள் ஆதரவு இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்களும், விஜய்யை எதிர்ப்பவர்களும் அவரை பல்வேறு விஷயங்களை விமர்சித்து வந்தனர். வார இறுதி நாட்களில் மக்களை சந்திப்பை நடத்துவது, இன்னமும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்காமல் இருப்பது, சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக மட்டுமே தனது கருத்துக்களை பகிர்ந்து வருவது போன்றவற்றிற்காக விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இவ்வாறு விஜய் மீது தொடர்ந்து விமர்சங்களும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற குரலும் வலுத்து வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். தவெகவில் இணைந்த கையுடன் இன்னும் சில அமைச்சர்களும் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கான பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் இந்த அளவிற்கு விமர்ச்சிக்கப்படுவதற்கான காரணத்தையும் செங்கோட்டையன் ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் மும்மொழி கொள்கை அமலாக்கம், முழுநேர டிஜிபி நியமன சர்ச்சை, நகராட்சி நிர்வாக துறையில் முறைக்கேடு குறித்த அமலாக்கத்துறை கடிதம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மற்றும் ஊழல் முறைகேடுகள் போன்ற ஆளுங்கட்சிக்கு எதிரான முக்கிய விவகாரங்கள் தவெக தரப்பில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இதனை காரணமாக வைத்தே தவெகவின் வாக்கு வாங்கி பிளவுபடும் என்று செங்கோட்டையன் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய்யிடம் செங்கோட்டையன் போட்ட பிளான் சக்சஸ்.. உறுதியான தவெக-பாஜக கூட்டணி!!

0

TVK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக, திமுகவின் ஆட்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வந்த தேர்தல் களம் தற்போது தவெகவின் தாக்கத்தையும் எதிர்கொள்ள தயராகிவிட்டது. நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அதற்கு அதிகளவு ஆதரவு குவிந்து வருகிறது. இதனை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று நினைந்த விஜய்க்கு கரூர் சம்பவம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதில் ஏற்பட்ட இழப்புகளுக்கு விஜய்யின் அரசியல் அறியாமை தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதனால் சிறிது காலம் வெளியில் தலைக்காட்டாமல் இருந்த விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டம் மூலம் வெளியே வந்தார். இதன் பிறகு, கட்சிக்கு அனுபவம் உள்ள அரசியல் தலைவர் தேவை என்று விஜய் தேடி கொண்டிருந்த சமயத்தில் தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இவர், பாஜக சொல்லி தான் தவெகவில் இணைந்தார் என்று பலரும் கூறி வந்தனர். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.

தவெக இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காத நிலையில், அதனை கூட்டணியில் சேர்க்க நினைத்த அதிமுகவிடமும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி அந்த கூட்டணிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முடிவை கைவிடுவதாக தெரியவில்லை. விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் முடிவாக இருந்ததால் இவரை பாஜக வாசம் இழுக்க செங்கோட்டையன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதை அவர் தனது பேச்சின் மூலம் நிரூபித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு தேர்தல் களம் எப்படி செல்லும் என்று யாராலும் யூகிக்க முடியாது. அரசியல் நிலவரங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் பாஜக- தவெக கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால் இந்த கூட்டணி உறுதி செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்க்க செங்கோட்டையன் உள்ளிருந்தே வேலை பார்க்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்.

சைலண்ட் மோடுக்கு போன விஜய்.. அட்டாக் செய்ய ஆரம்பித்த அண்ணாமலை!!

0

TVK BJP: 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில் இதற்கான வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கட்சி தலைவர்களே கூறி வருகின்றனர். அந்த வகையில் கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே நடிகர் விஜய் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை வார இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் நடத்தியது விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால் வீக்கெண்ட் தலைவர் என்று விஜய் விமர்சிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இது நாள் வரை விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசாததும்,விமர்சிக்கப்பட்டது. மேலும், கரூரில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்று பலரும் கூறி வந்தனர்.

இவ்வாறு தவெக மீதும், விஜய் மீதும் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, விஜய் அமைதியாக இருப்பதை பற்றி அவரது கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பேச வேண்டிய இடத்தில் பேசுங்க விஜய், அரசியலில் கம்முன்னு இருக்க முடியாது என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜகவிற்கு விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளது போன்று தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் தினகரன்.. முன்னாள் அமைச்சர் சொன்ன புது தகவல்!!

0

ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நிலை கட்சிகளைத்தும் தங்களது கூட்டணிகளை ஜனவரியில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையிலும் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக இந்த முறை அதனை கைப்பற்ற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, அடுத்ததாக தவெகவை கட்சியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வராததால், இந்த கூட்டணி கிடப்பிலேயே உள்ளது.

இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. 4 அணிகளாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றுபட்டால் தான் தேர்தல் வெற்றி பெற முடியும்மென்பது அதிமுக தொண்டனுக்கு கூட புரிகிறது. ஆனால் இபிஎஸ் அதனை ஏற்க மறுக்கிறார் என பலரும் கூறுகின்றனர். முதலில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் இறுதியில் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனையும் நீக்கினார். செங்கோட்டையன் தவெகவில் இணைய, இவர்கள் மூவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கிறது.

இந்த சமயத்தில் தான் டிசம்பர் 15 க்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டுமென கூறிய ஓபிஎஸ், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின், தனது முடிவை ஒத்தி வைத்தார். NDA கூட்டணியிலிருந்து விலகிய தினகரன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் வரை பாஜகவில் சேர முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் அதிமுகவில் இணைவர்களா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்ட போது, எல்லா கேள்விகளுக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று என்று கூறி முடித்தார். இவரின் இந்த பதில், ஒபிஸ்யும், தினகரனும் கூடிய விரைவில் அதிமுகவில் சேர்க்கப்படுவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. 

இளைஞர்கள் உதயநிதி கையில்.. பெண்கள் கனிமொழி கையில்!! 29 ஆம் தேதி நடக்க போகும் சம்பவம்!!

0

DMK: அடுத்த வருடம் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள, திமுக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. கூட்டணி கட்சிகளிடம் இணக்கமாக செல்வது, கடந்த முறை தோல்வியுற்ற தொகுதிகளில் வெற்றி பெற அங்கு வலுவான அமைச்சர்களை நியமித்திருக்கிறது, நான்கரை ஆண்டுகளாக திமுக மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக பல்வேறு நிகழ்சிகளை நடத்துவது போன்ற முயற்சிகள் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, விஜய் அரசியலில் குதித்துள்ளார்.

இவருக்கு இயல்பாகவே இளைஞர்கள் மற்றும் பெண்களின் செல்வாக்கு அதிகளவில் இருப்பதால், அந்த வாக்குகள் அத்தனையும் தவெகவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் பெண்கள் மற்றும் இளைர்களின் வாக்கையே நம்பியுள்ள நிலையில் அவை அனைத்தும் விஜய் பக்கம் செய்வதை அறிந்த திமுக அவர்களை தங்கள் பக்கம்  ஈர்க்கும் பணியில் மும்முரம் காட்ட ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.

இதில் சுமார் 13 லட்சம் இளைரணி நிர்வாகிகள் கூடினர். இவ்வளவு கூட்டம் விஜய்க்கு கூடும் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கில் அமைந்ததாக கருதப்பட்டது. இவ்வாறு, இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைக்கும் திமுக அடுத்ததாக வரும் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் எம்.பி. கனிமொழி தலைமையில் மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த மாநாடு முழுக்க முழுக்க விஜய்க்கு எதிராக கூடும் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கிலே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தவெக ஒரு ஜோக்கர் கட்சி.. இது மக்கள் மத்தியில் நிலைக்காது!! கொதித்தெழுந்த மூத்த பத்திரிகையாளர்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. இம்முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுக, நாதக, தவெக என இந்த கட்சிகளனைத்தும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, உள்ளரங்கு மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை தவெக நடத்தி வருகிறது. தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் பட்சத்தில், விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற முக்கிய அறிவிப்புகளை அறிவித்துவிட்டது. இதனை பலரும் விமர்ச்சித்து வந்தனர். முதல் தேர்தலிலேயே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவது தவறு என்றும், விஜய்யிக்கு கூடும் கூட்டம் அத்தனையும் வாக்காக மாறாது என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், விஜய்யை பொறுத்தவரை அவரது கட்சி மக்கள் மனதில் நிலைக்காது. சிந்தனையை தூண்டும் அளவிற்கோ, செயல்சக்தி என்று கூறும் அளவிற்கோ தவெக எந்த செயலையும் செய்யவில்லை. அது ஒரு டுபாக்கூர் பார்ட்டி. நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் என்ன இருக்கிறதென்று கூட விஜய்க்கு தெரியவில்லை. பிட்டை வைத்து பேசுகிறார். என்று கடுமையாக சாடியுள்ளார். இவரின் இந்த கருத்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.