Home Blog Page 21

60 எங்களுக்கு 40 தினகரன் ஓபிஎஸ்க்கு.. பாஜக போட்ட மாஸ்டர் பிளான்!! ஆடிப்போன இபிஎஸ்!!

0

ADMK BJP: பீகாரில் வெற்றி பெற்ற பாஜக, இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்து, பாஜக மாநில தலைவர் நயினார் தலைமையில் சுற்றுப்பயணத்தையும் ஆரம்பித்து விட்டது. இந்த சுற்றுப்பயணம் முடிவடையும் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக இபிஎஸ்யிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச ஆரம்பித்துள்ளது. மேலும் ஆட்சி பங்கையும் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி பங்கு என்ற மரபே இல்லையென்பதால் இபிஎஸ் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலரும், டெல்லி சென்று அமிதாஷ்வை சந்தித்து வருகின்றனர். நயினாரும் டெல்லி செல்வதற்கு முன்பு இபிஎஸ்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், டெல்லி மேலிடம், அதிமுகவிடம் 100 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த 100 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள 60 தொகுதிகள் பாஜக வசமும், மீதமிருக்கும் 40 தொகுதிகள் டிடிவி தினகரன், ஓபிஎஸ் வசம் ஒப்படைக்க போவதாக பாஜக முடிவு செய்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

மொத்தமே 243 தொகுதிகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் பாஜக 100 தொகுதிகள் கேட்க முடிவு செய்திருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் அடுத்ததாக அதிமுகவில் இணையும் கட்சிகளுக்கு தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் பாஜகவிற்கு தமிழகத்தில் அதிகளவு செல்வாக்கு இல்லாத போது, இவ்வளவு தொகுதிகளை கேட்பது அதிமுகவின் உள்வட்டாரத்தில் சலசலப்பு நிலவி வருகிறது. இது அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். 

திமுகவை எதிர்க்க அஞ்சும் அதிமுக அமைச்சர்.. இடத்தை மாற்றி பயத்தை நிரூபித்த முக்கிய முகம்!!

0

ADMK DMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுகவின் போட்டியை மட்டுமே எதிர்கொண்ட அரசியல் அரங்கு, தற்போது, தவெக, நாதக போன்ற கட்சிகளும் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக மூத்த தலைவர்களின் மறைவிற்கு பிறகு, அதன் தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைவர் பொறுப்பை ஏற்றார். இதற்கு பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தான் தழுவியது. இதனால் இந்த கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தல் மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு மிக முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, முதல் ஆளாக விருப்ப மனுக்களை வழங்கும் பணியையும் செய்து வருகிறது. இவ்வாறு தனது தேர்தல் பணியில் முழு கவனத்தையும் திருப்பியுள்ள அதிமுகவிற்கு பல்வேறு சிக்கல்களும் எழுந்துள்ளன.

அந்த வகையில், அதிமுகவின் முக்கிய முகமும், ஜெயலலிதா காலத்திலிருந்து அமைச்சராக பணியாற்றி வரும் சிவி சண்முகம், 2021 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் தோல்வி அடைந்ததால் இந்த முறை அவரது தொகுதியை மாற்ற உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் பகுதி சிவி சண்முகத்தின் கோட்டையாக இருந்த சமயத்தில் அங்கு திமுக வென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் தொகுதி மாறுவது, திமுக மேலுள்ள பயத்தை காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இபிஎஸ் ஓகே சொல்ற மாதிரி தெரியல.. தவெக டோரும் குளோஸ்!! ஓபிஎஸ் தினகரன் கொடுத்த ஷாக்!!

0

AMMK ADMK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில் கூட்டணி குறித்தும் விவாதித்து வருகின்றனர். மேலும் எப்போதும் போல தனித்து போட்டியிடும் நாதக கிட்டத்தட்ட 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்து விட்டது. முதல் முறை தேர்தலை சந்திக்க இருக்கும் தவெகவும் திராவிட கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணியில் வேகமெடுத்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசியல் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை அதற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. இபிஎஸ்யால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், ஓபிஎஸ், தினகரன், சசிகலாவின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை.  செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடன் இவர்கள் மூவருடன் நெருக்கமாக இருந்ததால், தவெகவில் இணைந்த கையுடன் இவர்களும் விஜய் கட்சியில் ஐக்கியமாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறாததால், இவர்கள் தவெகவில் இணைவதில் விஜய்க்கு விருப்பமில்லை என்று பலரும் கூறினார்கள். மேலும் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் நீக்கப்பட்டவர்களை சேர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சி சேர வேண்டுமென்ற முடிவை எடப்பாடி பழனிச்சாமி தான் எடுப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக இவர்கள் பாஜக கூட்டணியில் இணைவதற்கு கூட இபிஎஸ் சம்மதிக்க மாட்டார் என்பது தெளிவானது.

இதனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்பது நிரூபணமானது. தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில் இவர்கள் மூவரும் தனித்து நின்றால் இவர்களின் அரசியல் எதிர்காலம் காணாமல் போய் விடும் என்பதால், இவர்கள் திமுகவில் இணைய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் மூவரும் அம்மாவின் தொண்டர்கள் என்று கூறி வரும் நிலையில், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திமுகவில் இணைவது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய் ஒரு போதும் எம்ஜிஆர் ஆக முடியாது.. ஓப்பனாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்!!

0

TVK CONGRESS: விஜய் கட்சி துவங்கி இரண்டரை வருடங்கள் ஆன நிலையில் அக்கட்சிகான ஆதரவு அதிகளவில் உள்ளது. முதல் முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் தவெக, விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற அறிவிப்பை தனது முதல் மாநாட்டிலேயே அறிவித்துவிட்டது. மேலும், பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என்று கூறியதால், இவர்களை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கபட்டது.

தற்போது வரை, தவெக உடன் எந்த கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. விஜய் காங்கிரசுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருவதால், அவர்களுடன் கூட்டணி அமைப்பார் என்று நினைத்த சமயத்தில், காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச ஐவர் குழு அமைத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணி கிடப்பிலேயே இருந்தது.

இவ்வாறான நிலையில், விஜய் அடுத்த எம்ஜிஆர் என்று பலரும் கூறி வருவது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்ட போது, சிவாஜியும், விஜயகாந்தும் கூட தான் கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு கூடாத கூட்டமா? னால் இவர்களால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை. அதே போல் தமிழகத்தில் ஒரே ஒரு எம்ஜிஆர் தான். விஜய் ஒரு போதும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தவெக கூட்டணியில் சேர்வதில் விருப்பமில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

அறிவாலயம் வந்த திமுக கூட்டணி கட்சிகள்.. திடீர் விசிட்டால் அதிர்ந்து போன ஸ்டாலின்!!

0

DMK MDMK COMMUNIST: 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்சமயம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது. அதற்காக நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தோல்வியுற்ற பகுதிகளை இந்த முறை கைப்பற்ற வேண்டுமென அந்த தொகுதிகளில் முக்கிய அமைச்சர்களை நியமித்து, திமுக வசம் இழுக்க முயன்று வருகிறது.

மேலும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். அதனால் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இணக்கமான முறையில் திமுக தலைமை இருந்து வருகிறது. இவ்வாறு வெற்றி  பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளால் பின்னடைவு ஏற்படும் என்று பலரும் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல சில நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. முதலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அதிக தொகுதிகள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தது.

ஆனால் காங்கிரஸ் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை காரணமாக வைத்து இவர்களின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களை தொடர்ந்து காங்கிரசை விட தமிழகத்தில் எங்களுக்கு செல்வாக்கு அதிகம், இப்படி இருக்க எங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என்று விசிக கேட்க ஆரம்பித்தது. மேலும் இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்போம் என்று விசிகவின் நிர்வாகிகள் கூறி வந்தனர். இவ்வாறு தொகுதி பங்கீடு குறித்த பிரச்சனை திமுகவிற்கு தலை வழியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இப்படி இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். இவர்கள் கட்சி நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்க வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அறிவாலயத்திற்கு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்தது தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி பங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தான் இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

பாமக ஒன்றிணைய வாய்ப்பில்லை.. பகீர் கிளப்பிய வழக்கறிஞர் பாலு!! முழிக்கும் தொண்டர்கள்!!

0

PMK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மக்களை சந்திக்கும் பணியும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு எல்லா கட்சிகளும் தேர்தல் பணியில் மூழ்கியுள்ள நிலையில், பாமகவில் மட்டும் கட்சி யாரிடத்தில் உள்ளது என்ற குழப்பம் நிலவி வருகிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது ஆரம்பித்த மோதல் இப்போது வரை தீரவில்லை. இதற்கு பின் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார்.

இதனை எதிர்த்து அன்புமணி தேர்தல் ஆணையம் செல்ல, கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உறுதியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பு வந்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், டெல்லி உயர்  நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் தலைமை போட்டி நிலவுவதால், தேர்தல் சமயத்தில், வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் பெரிதாக, சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளை அன்புமணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய அன்புமணி ஆதரவாளர் பாலு, போராட்டத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அன்புமணியும், ராமதாசும் இணைய வேண்டுமென நாங்களும் விரும்பினோம். ஆனால் தற்போது அதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளது என்று பாலு கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக ஒன்றுபட்டால் மட்டுமே வாக்கு வாங்கி சிதறாமல் இருக்கும் என பாமக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

திமுகவை வீழ்த்த விஜய் இத செஞ்சி தான் ஆகணும்.. பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த டாப் தலை!!

0

BJP TVK: அடுத்த வருடம் நடக்கும் சட்டசபை தேர்தலுக்காக தமிழக கட்சிகளும், தேசிய கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், புதிதாக உதயமான கட்சியான தவெக தனது முதல் தேர்தலிலேயே முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. மேலும் 70 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த கட்சியான திமுகவையும், இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியான பாஜகவையும் எதிரி என்று கூறியுள்ளது. இவ்வாறு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கும் தவெகவின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தவெக உடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியும் இதுவரை எந்த கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. விஜய் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவரும் கூற, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்த்தால், இதனை சமப்படுத்தி விடலாம் என பாஜக நினைத்தது. இதற்காக தம்மை கொள்கை எதிரி என்று விஜய் கூறினாலும், விஜய்யை கூட்டணியில் சேர்க்க கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது. ஆனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருந்தார்.

எவ்வளவு முயற்சித்து விஜய் பச்சை கொடி காட்டாத ஆத்திரத்தில் இருந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது. இவ்வாறு, சென்று கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது மீண்டும் விஜய் பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமென பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், விஜய் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் இருந்தால், வலிமையான கூட்டணியான அதிமுக-பாஜகவில் இணைய வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று, விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை பாஜக இன்னும் கைவிடவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

விஜய்க்கு அடுத்தது செங்கோட்டையன் தான்.. சரணடைந்த புஸ்ஸி ஆனந்த்!! தவெகவில் நடந்த அதிசயம்!!

0

TVK: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்து வருகிறது. தவெக ஆரம்பிக்கபட்டதிலிருந்தே புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் போன்றோர் அக்கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்களின் வெளிச்சம் குறைய தொடங்கியுள்ளது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், மக்களை சந்திக்கும் பணியை மேற்கொண்ட விஜய், 5 இடங்களில் அதனை மிகவும் சிறப்பாக செய்து முடித்தார்.

ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இதனால் தவெகவிற்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அதன் உத்வேகத்தை கூட்டினார். கரூர் சம்பவத்திற்கு பின்பு புஸ்ஸி ஆனந்த் மீது அதிருப்தியில் இருந்த விஜய், செங்கோட்டையன் வருகைக்கு பின், அவரை அடியோடு மறந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இது பல்வேறு நிகழ்வுகளில் உறுதியாகியுள்ளது.

இது நாள் வரை விஜய்யின் சுற்றுப்பயணத்தை புஸ்ஸி ஆனந்த் தான் வரையறுத்து கொடுத்தார். ஆனால் தற்போது அது செங்கோட்டையன் கைக்கு சென்றிருக்கிறது. அந்த வகையில் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும், தவெக பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன் படி நாங்கள் செயல்பட தயார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து புஸ்ஸி ஆனந்த இடத்தை செங்கோட்டையன் பிடித்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியதை போல உள்ளது என்று பலரும் கூறுகின்றனர். மேலும், தவெகவில் விஜய்க்கு அடுத்த படியாக இனி செங்கோட்டையன் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்சி வெற்றி பெறாது.. தவெகவை தாக்கி பேசிய பாஜகவின் டாப் தலை!!

0

TVK BJP: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இறங்கி விட்டன. அந்த படி அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் மிக சிறப்பாக செய்து வருகிறது. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சுமார் 1 வருடத்திற்கு முன்பு, அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் முக்கியமானது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே ஆகும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் என்பதை அறிந்த அமித்ஷா அதனை சரி செய்ய பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இவ்வாறான நிலையில் தான் பாஜகவிற்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவை அரசியல் எதிரி என்று கூறி அதனை எல்லா இடங்களிலும் விமர்சித்து வருகிறது.

ஆனால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க, கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார் விஜய். இதனால் பாஜக, விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான், ஓபிஎஸ், அண்ணாமலையை தொடர்ந்து நயினாரும் டெல்லி சென்றார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், புதிதாக கட்சி தொடங்கிய யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லையென்று விஜய்யை விமர்ச்சித்துள்ளார்.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட, மூட்டுவலி இடுப்பு வலி சரியாகும்!

0

40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.தேவையான பொருட்கள்:1. வெற்றிலை2. திப்பிலி 53. ரோஜா மலர் ஒன்று4. பனங்கற்கண்டு 2 ஸ்பூன் 5. விளக்கெண்ணெய்6. பிரண்டை ஒரு துண்டு.7. வில்வ இலை 4.செய்முறை:1. முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளவும்.2. அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் எடுத்து தேய்த்து விடவும்.3. அதை தனியே வைத்துவிட்டு ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.4. அதில் 5 திப்பிலியை போடவும்.5. பின் ஒரு ரோஜாவை எடுத்து ரோஜா இதழ்களை போடவும்.6. வில்வ இலைகள் நான்கை போடவும். வில்வ இலை இல்லாதவர்கள் நாட்டு மருந்துக்கடையில் வில்வ இலை பொடி கால் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.7. ‌ இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்.8. அனைத்தையும் ஒன்றாகப் போட்டு இடித்து கொள்ளவும்.9. இந்த கலவையை எண்ணெய் தேய்த்து வைத்த வெற்றிலையின் மீது வைக்கவும்.10. இப்பொழுது பிரண்டையை எடுத்து விளக்கெண்ணையை தடவி கொள்ள வேண்டும்.11. நல்லெண்ணையில் விளக்கேற்றி இந்த பிரண்டையை தீயில் காண்பித்து சுட்டு எடுக்க வேண்டும்.12. இப்பொழுது வெற்றிலையின் மேல் உள்ள கலவையில் பிரண்டையை பிழிந்தால் அதிலிருந்து தண்ணீர் வரும். அந்த தண்ணீர் 4 அல்லது 5 சொட்டு இருந்தால் கூட போதும்.13. அதை அப்படியே மடித்து சாப்பிட வேண்டும்.இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர ஜவ்வு விலகல் இடுப்புவலி தீர்மானம் எதுவும் இருக்காது.ஏற்கனவே ஜவ்வு விலகியிருந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தால், இந்த முறையை 15 நாட்கள் செய்து வரும் பொழுது ஜவ்வு விலகல் எலும்பு தேய்மானம் ஆகியவை சரியாகும்.