Home Blog Page 28

நாங்க இல்லான்ன செங்கோட்டையன் வின் பண்ணிருக்க மாட்டாரு.. கடுப்பான KAS-யின் அண்ணன் மகன்!!

0

ADMK TVK: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் பிரவேசம். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறிவிட்டார். மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற எல்லாவற்றையும் மக்களிடம் தெரிவித்து விட்டார். இதனால் விஜய் கட்சியில் இணைய பல கட்சிகள் ஆர்வம் காட்டி வந்தன. இன்னும் சிலர் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் எந்த கட்சியும் இணைந்த பாடில்லை. இந்நிலையில் தான் தவெகவிற்கு ஜாக்பாட் அடித்ததை போல 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் கோபி செட்டிபாளையத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நபர் என்பதால் இது அதிமுகவிற்கு பாதகமாக அமைந்துள்ளது என பலரும் கூறினர். இவ்வாறான நிலையில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் திமுகவில் அங்கம் வகித்த நிலையில், அதிலிருந்து நீக்கப்பட்டு இன்று அதிமுகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செங்கோட்டையன், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டார். ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வளர்வதற்கு எங்கள் குடும்பம் முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் இல்லாவிட்டால் செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், இத்தனை நாட்கள் அதிமுகவில் இருந்து விட்டு இன்று, புதிதா கட்சியில் இணைந்த உடன் எடப்பாடியார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் தவறானது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரோட்டில் செங்கோட்டையன் போட்ட ரூட் மேப்.. தலையசைத்த விஜய்!! 16 யில் நடக்க போகும் சம்பவம்!!

0

TVK: நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்கு விஜய்க்கு அதிகளவில் உள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

ஆனாலும் இவையனைத்தும் ரசிகர்கள் கூட்டம், எல்லாமே ஓட்டாக மாறாது என்றும், விஜய்க்கும், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என யாருக்கும் போதிய அரசியல் அறிவு இல்லை என்ற கருத்தும் மேலோங்கி இருந்தது. இதனை கண்டுகொள்ளாத விஜய், மக்களை சந்திக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தினார். கரூரில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதனை தொடர்ந்து சில கூட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்திய தவெக இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியது. இந்த பொதுக்கூட்டத்தில் முழுக்க முழுக்க திமுகவை விமர்சித்து விட்டு அரசியல் குறித்த எந்த ஒரு ஆணித்தனமான கருத்தையும் விஜய் கூறவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் நேரடியாக மக்களை சந்திக்கும் முதல் இடம் தமிழகத்தை தாண்டி இருக்கிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

இந்நிலையில் தான் இன்று கோபி செட்டிபாளையத்தில் முகாமிட்ட செங்கோட்டையன், ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு அனுமதி வாங்கியதோடு, மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் இணைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டோல்கேட் அருகே 84 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரைக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதாக அவர் கூறினார்.

செங்கோட்டையன் புதுச்சேரி வராததற்கு காரணம் என்ன தெரியுமா.. விஜய் போட்ட உத்தரவு!!

0

TVK ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகளும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தான் கட்சிகளனைத்தும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்றவை தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுக இன்னும் 10 நாட்களுக்குள் ஒருங்கிணையாவிட்டால், என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்.

இதனால் முதலில் பதவியை இழந்த அவர், அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்ததால் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதன் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்த நாளே தவெகவில் இணைந்தார். தவெகவுக்கு தகுந்த அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் ஒருவரின் தேவை இருந்ததால் செங்கோட்டையனின் சேர்க்கை அதற்கு பக்க பலமாக அமைந்தது. மேலும் தவெகவில் சேர்ந்த கையுடன் அதிமுகவை சேர்ந்த பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என செங்கோட்டையன் சபதம் எடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் இன்று புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கோட்டையன் தவெகவின் காட் பாதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டதால், இந்த பொதுக்கூட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் புதுச்சேரிக்கு வராதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இன்று கோபிச்செட்டிபாளையத்தில் முகாமிட்டு செங்கோட்டையன், அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை அதிமுகவிலிருந்து விலக்கி தவெகவில் இணைத்து உள்ளார். செங்கோட்டையன் அவரது சபதத்தில் குறியாக உள்ள காரணத்தினால் மட்டுமே இன்று புதுச்சேரிக்கு செல்லவில்லை என்றும், கோபிச்செட்டிபாளையத்தை முழுமையாக தவெக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, விஜய் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவை பழிதீர்த்த விஜய்யின் பொதுக்கூட்டம்.. தமிழகம் போல புதுச்சேரி இல்லையாம்!!

0

DMK TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவர் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அதற்கான ஆதரவு யாரும் எதிர்பாராத வகையில் உள்ளது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளே அதிகளவில் உள்ள நிலையில் விஜய் ஏற்கனவே அதனை கவர்ந்து விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால், இந்த வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு எதிராக அமைந்துவிட்டது. இந்நிலையில் மக்களை சந்திக்கும் பணியை மேற்கொண்ட விஜய், 5 இடங்களில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

ஆனால் ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. இதன் பின்னர், சுமார் 1 மாதம் கழித்து தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு தொடர்ச்சியாக தவெக தனது தேர்தல் பணியில் வேகமெடுத்துள்ள நிலையில், இன்று புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியுள்ளார். அதிலும் அரசியல் சார்ந்த, ஆணித்தனமான கருத்துக்கள் எதுவும் இல்லை.

புதுச்சேரியில், திமுக அரசை பற்றி விமர்சிக்க மாட்டார் என்று செய்திகள் பரவிய நிலையில், அதனை விஜய் துடைத்தெறிந்துள்ளார். அவர் தமிழகத்தை தவிர்த்து புதுச்சேரி சென்று பொதுக்கூட்டம் நடத்தியது திமுகவை விமர்சித்து, தமிழகத்தில் நடந்த எந்த ஒரு சம்பாவிதமும் இங்கு நடக்கவில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், காவல் துறையினரும் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்பதை நிரூபிக்க பொதுக்கூட்டம் நடத்தியது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த போன்றோரும் இதனை மையப்படுத்தி பேசியது குறிப்பிடத்தக்கது.

தினகரன் கூட கூட்டணி சேருங்க.. இல்லன்னா தனிக்கட்சி தொடங்குங்க!! பாஜக போட்ட ஆர்டர்!!

0

ADMK AMMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி கணக்குகளை வகுத்து வருகிறது. அதிமுகவை விட பாஜக தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.

வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்க வேண்டும் என நினைக்கும் பாஜகவிற்கு அதிமுகவின் பிரிவினைகளும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வெறியும் அதனை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியிலிருந்த ஓபிஎஸ், தினகரன் விலகியது பாஜகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க முதன்மை காரணமாக இருந்த அண்ணாமலையின் பதவியும் பறிக்கப்பட்டது.

மேலும் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்து விட்டார். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடருவது, பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் இபிஎஸ்க்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி அவரை வீழ்த்தலாம் என திட்டம் தீட்டி இருக்கிறது. இதற்காக முதலில் இபிஎஸ்க்கு எதிராக உள்ள அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதன் பின்னர் தினகரனும் டெல்லி செல்வார் என்று நினைத்த சமயத்தில், அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியது, பாஜக மேலிருந்த கோபத்தை வெளிப்படுத்தியது.

இதனால் அமித்ஷா சார்பாக அண்ணாமலை தினகரனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கபட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி சென்ற அண்ணாமலையிடம் அமித்ஷா, தனிக்கட்சி தொடங்குங்க இல்லன்னா தினகரன் கூட கூட்டணி வைங்க என்று சொன்னதாக தகவல் பரவியுள்ளது. இதனை பற்றி பேச தான் அண்ணாமலையும், தினகரனும் சந்தித்திருப்பார்கள் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.. அமித்ஷா சொன்ன வார்த்தை!! கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK BJP: இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக வேறு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியையும், மேற்கொண்டு வருகிறது. மேலும் அதிமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்து வருகிறது. அதிமுக கொங்கு மண்டல பகுதிகளில் வலுவாக இருப்பதால், அந்த தொகுதிகளில் நின்று வெற்றி பெற வேண்டுமென பாஜக நினைக்கிறது.

ஆனால் பாஜகவிற்கு வட மாநிலங்களில் அதிகளவில் செல்வாக்கு இருந்தாலும் தமிழகத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இப்படி இருக்கும் நிலையில், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை அதற்கு ஒதுக்கினால் அங்கு அதிமுக தோல்வியை தழுவும் என்பது 100% உண்மை. இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, தமிழக அரசியல் மரபில் இல்லாத ஒரு கருத்தை பாஜக முன் வைத்துள்ளது. அது தான் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை. அதிமுகவை சேர்ந்த பலரும் பாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்தனர்.

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் சென்றது பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து எதுவும் கூறாமலிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். தற்சமயம் அதிமுக, பாஜக கூட்டணியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அந்த கட்சியும் இது போன்ற நிபந்தனையை முன் வைத்திருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த விஜய்யின் தந்தை.. என்னவா இருக்கும்!!

0

TVK CONGRESS: பீகாரில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தங்களது பலத்தை காட்ட வேண்டுமென ஆலோசித்து வருகிறது. சில காலமாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் அதன் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்தன் காரணமாகவும், காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்ற காரணத்தினாலும் அதன் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

இவர்கள் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில், திமுகவும் ஒரு தனி குழு அமைத்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுன் கோரிக்கைகளை நிறைவேற்ற  திமுகவிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த, காங்கிரசின் தலைவர்கள் விஜய்யை பகடை காயாக பயன்படுத்த நினைத்தனர். மற்றும் ஒரு தரப்பு விஜய் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தன. விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவருக்கும் காங்கிரசுக்கும் நல்ல நட்புறவு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை அந்த கட்சியை சேர்ந்த ஜோதிமணியும் கூறியுள்ளார்.

மேலும் ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரசின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்த நிலையில், நேற்று நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் தமிழக காங்கிரசின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமியும், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரும் நேரில் சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக காரில் பயணித்தால், அப்போது தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக தவெக தலைவர் விஜயும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விரைவில் சந்திப்பார்கள் என்று பலரும் கூறுகின்றனர். 

10 ஆம் வகுப்பு போதும் ! உதவியாளர் வேலை! சம்பளம் 18,000 -56,000 வரை!

0

தமிழகத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையத்தில் உதவியாளர் மற்றும் பல பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person Quota) ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 08.12.2025 முதல் 07.01.2026 தேதிக்குள் https://gstchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்து ஆன்லைனிலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

 

பணி: 

 

Tax Assistant (வரி உதவியாளர்) – ஏதாவது ஒரு பட்டம் (Any Degree)

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) -12-ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Pass)

Havaldar (ஹவால்தார்) -10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)

 

வயது:

 

Tax Assistant (வரி உதவியாளர்) 18 முதல் 27 வயது வரை

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) 18 முதல் 27 வயது வரை

Havaldar (ஹவால்தார்) 18 முதல் 27 வயது வரை

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 18 முதல் 25 வயது வரை

 

சம்பளம்: 

பதவியின் பெயர் சம்பள விகிதம்

Tax Assistant (வரி உதவியாளர்) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-

Havaldar (ஹவால்தார்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-

 

ஆன்லைன் லிங்க் : https://gstchennai.gov.in/sportsrecruitment/index.html

 

அதிகாரம் பூர்வமான அறிவிப்பு: https://drive.google.com/file/d/1EW4kLlwOOpezSzFpsGPiTrVI0NsfGCfT/view

அவர் பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்த கணவர்!

0

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது. சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

 

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது.

 

நடிகை சமந்தாவின் இரண்டாம் திருமணம் தி ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரு அவருக்கும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அவருக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தனது காதல் மனைவியான சமந்தாவிற்கு இயக்குனர் ராசு மீது ஒரு கோடிக்கணக்கிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

 

மேலும் மும்பையில் ஒரு வீடும் மற்றும் ஜூப்ளி ஹில் பகுதியில் 65 கோடிக்கு ஒரு வீடும் வாங்கி தந்துள்ளார்.

 

அதே ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தான் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் வீடும் அங்கே தான் உள்ளது.

 

இதே கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சமந்தாவிற்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அதேபோல் அவர்கள் முன்னாலேயே நீங்கள் மிகவும் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

 

சமந்தா நிறைய கஷ்டங்களை பட்டிருக்கிறார்கள் இப்பொழுது ராஜ் நிடிமோரு அவர்கள் ஒரு நல்ல கணவராக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமந்தா கணவரை பாராட்டி வருகின்றனர்.

கோபியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்.. செங்கோட்டையனுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்!!

0

ADMK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுகளும், தொகுதி பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு பின் அதிமுக தலைமைக்கு எதிராக இருப்பவர்களுடன், ஒன்று சேர்ந்ததால் கட்சியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். இதனையடுத்து இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்த நிலையில், திடீரென விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவர் அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் என்பதால் அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருந்த இவருக்கு பதிலாக அதிமுக சார்பில் யாரை நிறுத்தலாம் என இபிஎஸ் தீவிர ஆலோசனையில் இருந்த நிலையில், தற்போது அதற்கான முக்கிய முகம் கிடைத்துள்ளது.

செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே.கே செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையனை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது அண்ணன் மகனை நிறுத்த இபிஎஸ் யூகித்துள்ளாராம். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டி வலுவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.