Home Blog Page 29

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. ஆடிப்போன அமலாக்கத்துறை!!

0

DMK: அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அது தற்போது அவர் திமுகவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் சமயத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீன் பெயரில் விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவருக்கு, வாரம் இருமுறை அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என இரு தினமும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாரம் இருமுறை அமலாக்க துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு நேற்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, செந்தில் பாலாஜி தரப்பு, கடந்த 17 வாரங்களாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார். இனியும் வர வேண்டுமா என்று கேட்க, தேவைப்படும் போது மட்டும் வந்தால் போதும், இனிமேலும் வாரம் இருமுறை ஆஜராக வேண்டாம் என்று நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி-அதிமுக கூட்டணி செல்லாது.. பாமகவின் முக்கிய தலை பர பர பேட்டி!!

0

ADMK PMK: இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நெருங்க இருக்கும் சமயத்தில், பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை உள்ளது. தந்தை-மகனின் சண்டை டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளையரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி இதனை மேடையிலேயே வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் அரங்கேற, தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார் ராமதாஸ். இது அன்புமணிக்கு, ராமதாசுக்கு உண்டான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.

இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம், பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால், தேர்தல் நேரத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும். இதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு இருக்க பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும், அன்புமணி அதிமுக-பாஜக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ராமதாஸ் கூட்டணி குறித்து எந்த ஒரு முயற்சியையும் எடுக்காத நிலையில், அன்புமணி அதிமுக உடன் பேசி வருகிறார். இதையறிந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினரான அருள், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ராமதாஸ் தான் உண்மையான பாமக. வேறு யாரும் யாருடனும் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக உடன் அன்புமணி எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் ராமதாஸ் முடிவே இறுதியானது என்பதை பிரதிபலிக்கிறது. மேலும், ஏமாற வேண்டாம் என்று அவர் கூறியதால் ராமதாஸ் அதிமுகவை தவிர்த்து வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்படுகிறது. 

விஜய்யிடம் பேசும் திமுக கூட்டணி கட்சிகள் இது தான்.. நயினார் சொன்ன உண்மை தகவல்!!

0

TVK CONGRESS VCK: அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையையும் திராவிட கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன் முக்கிய கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் தான் திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜய் கட்சியான தவெகவை பயன்படுத்தி ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. விஜய்யை பகடை காயாக மட்டுமே பயன்படுத்தி வருவதால் இவர்கள் திமுகவை விட்டு, புதிய கட்சியான தவெகவில் சேர மாட்டார்கள் என்ற கருத்து பரவியது. ஆனால் உண்மையாகவே திமுகவை விட்டு விலகி தவெகவில் சேர போகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த இவர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, காங்கிரஸும், விசிகவும் தவெக உடன் கூட்டணிக்காக பேசி கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியது மற்றும் விசிகவின் தலைவர் திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவது போன்றவை இவர்கள் தவெகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்

0

 

 

கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி.

துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம். கல்லீரலை சுற்றிக் கொழுப்புகள் படிந்து விடுகிறது. இப்படி அதிகமாக படிப்பதனால் நாளடைவில் அது மஞ்சள் காமாலையாக மாறிவிடுகிறது.

கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. நிலவேம்பு பொடி

2. கீழாெல்லி பொடி

3. நாட்டு சர்க்கரை

 

செய்முறை:

 

1. முதலில் கீழா நெல்லி மற்றும் நிலவேம்பு பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து கொள்ளவும். இரண்டும் 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

2. பின் ஒரு கடாயில் பொடிகள் இரண்டு பங்கு என்றால் தண்ணீர் 4 பங்கு ஊற்றி கொள்ளவும்.

3. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பொடியை சேர்த்து கொள்ளவும்.

4. பொடி நன்றாக கொதித்த உடன் அதை வடிகட்டி மீண்டும் அதே கடாயில் ஊற்றி கொள்ளவும்.

5. பின் சம அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

6. ஒரு கம்பி பதம் அளவு இருக்க வேண்டும்.

7. இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

8. 20 நாள் வரை பயன்படுத்தலாம்.

 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம். சிறுவர்களுக்கு 2.5 ml, பெரியவர்களுக்கு 10 ml varai கொடுக்கலாம்.

 

எதனுடன் கொஞ்சம் உடற்பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு நாட்களுக்கு 30 நிமிடம் வரை நடப்பது மிகவும் உகந்தது

 

ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இதனை சாப்பிட்டு வர உடனடியாக கல்லீரல் சுத்தமாகி நன்றாக வேலை செய்யும்.

 

 

 

ஒரே மாதத்தில் 7 கிலோ வெயிட் குறைக்கலாம்! 5 பொருள் போதும்!

0

ஒரே மாதத்தில் 7 கிலோ வெயிட் குறைக்கலாம்! 5 பொருள் போதும்!

 

உண்மையிலேயே இன்று பலரும் உடல் எடையை குறைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் என்ன செய்யலாம் என்ன சாப்பிடலாம் என்று யோசித்து பல பேருக்கு நாட்கள் கழிந்து போகின்றது. ஆனால் இளம் தலைமுறைகளுக்கு அதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கிறது. 

 

நமது வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நமது உடல் எடையை குறைக்கலாம். 

 

தேவையான பொருட்கள்

 

சீரகப்பொடி – 1 ஸ்பூன்

பட்டைத்தூள் – கால் ஸ்பூன்

இஞ்சி பவுடர் – அரை ஸ்பூன்

எலுமிச்சை தோல் – 2 துண்டு

தேன் – சுவைக்கேற்ப

 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அரை லிட்டர் அளவுக்கு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

3. நல்ல கொதிநிலையில் உள்ள தண்ணீரில் சீரகப்பொடி, இஞ்சிப்பொடி, பட்டைத்தூள்,எலுமிச்சை தோல் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடுங்கள்.

4. அந்தப் பொருட்களின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பின்பு, வடிகட்டி, சற்று ஆறியவுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

 

இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கட்டாயமாக ஒரு மாதத்திற்குள் 10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும்.

சின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!

0

சின்ன வெங்காயத்துடன் இந்த இலைகளை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகை தூதுவளை நமது வீட்டின் முற்றத்தில் வளரும் இது நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா?

 

இந்த குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சளி இருமல் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை ஒரு உடனடி நிவாரணமாக இருக்கின்றது மேலும் தூதுவளை குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்குவதற்கும் உதவுகின்றது.

 

தூதுவளை – வீட்டிலேயே கிடைக்கும் சக்திவாய்ந்த மருந்து!

 

நம் வீட்டுமுற்றத்தில் எளிதாக வளரும் தூதுவளை எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அரிய மூலிகை.

குளிர், சளி, இருமல் முதல் நினைவாற்றல் வரை பல நன்மைகள் தரும் இயற்கை மருந்து இது.

 

நெஞ்சுச்சளிக்கு சிறப்பு மருந்து

5 தூதுவளை இலைகளுடன் சின்ன வெங்காயம் + கல் உப்பு சேர்த்து நசுக்கி, சாறு எடுத்து

நீருடன் கொதிக்கவைத்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

தொண்டைவலி குணமாக

கைப்பிடி அளவு தூதுவளை இலைகளை மையாக அரைத்து

தோசை மாவோ கோதுமை மாவோடு கலந்து செய்யும் உணவுகள்

தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலை குறைக்கும்.

 

தூதுவளை இலைகளை துவையலாகச் செய்து சாப்பிட்டால்

தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற பிரச்சனைகள் குறையும்.

தூதுவளையால் ரசம், சூப் செய்து குடித்தாலும் நெஞ்சுச் சளி விரைவில் தணியும்.

தூதுவளை இலையை கஷாயமாக அருந்தினால் தொண்டைச்சதை கரையும்

தூதுவளை இலை + அதிமதுரம் + சித்தரத்தை + சுக்கு

(தலா 10 கிராம்) சேர்த்து கஷாயம் செய்து

தினமும் 50 மிலி அருந்தினால் தொண்டைச்சதை கரையும்.

 

நினைவாற்றல் பெருக்கும்

தூதுவளைப் பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிட்டாலோ,

நெய்யில் வதக்கி தயிருடன் சேர்த்தாலோ

மூளைத்திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

 

வாய்வுக்கோளாறு மறைய

தூதுவளை இலைகளை நெய்யில் வதக்கி துவையலாக்கி

வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறுகள் விலகும்,

உடல் வலிமையும் அதிகரிக்கும்.

 

ஆண்மைக்குறைபாட்டுக்கு உதவும்

தூதுவளைப் பூக்களை தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நலம்,

ஆண்மைக்குறைபாடு குறையும் என பரம்பரை வைத்தியத்தில் குறிப்பிடப்படுகிறது.

 

இவ்வாறு பல நன்மைகளை தரும் தூதுவளை இலை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக நமக்கு இருக்கிறது.

 

 

 

இதை இரண்டும் சாப்பிட்டால் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! 15 நாள் போதும்!

0

 

நமது உடலில் தொண்டை பகுதியில் கீழே தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த தைராய்டு சுரப்பியின் வேலை தைராய்டு ஹார்மோன்களை சுரக்க வைப்பது. இந்த ஹார்மோன்கள் நேரடியாக மூளைக்குச் சென்று மூளையில் உள்ள நரம்புகளுக்கு சென்று நமது அசைவுகளை நிர்ணயிக்கின்றது.

அப்படி இந்த தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதனால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. கழுத்துப் பகுதி வீக்கம்,செரிமான பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு ஆகிய பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன்

2. மிளகு- 1 ஸ்பூன்

3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடானவுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி விதையை போடவும்.

2. அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும்.

3. இரண்டையும் நன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.

4. நிறம் மாறி வந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

5. இந்தத் தூளை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

6. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

7. தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது 1 1/2 ஸ்பூன் அளவுக்கு அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்.

8. தண்ணீர் நன்கு கொதித்து ஐந்து நிமிடம் ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

9. இப்பொழுது தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகலாம்.

 

இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர தைராய்டு பிரச்சினைகள் குறைந்து விடும். சைனஸ் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தண்ணீரை குடித்து வரும்போது சைனஸ் பிரச்சினை குறைந்துவிடும். பயன்படுத்தி பாருங்கள் முற்றிலும் உண்மை.

புதுச்சேரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. விஜய் போட்ட கண்டிஷன்!!

0

TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் களம் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு பணிகளை மேற்கொண்ட விஜய்க்கு கரூர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சுமார் ஒரு மாத காலம் வெளியில் தலை காட்டாமல் இருந்தார்.

அதன் பிறகு தவெக சார்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது நிரூபணமானது. இவ்வாறான நிலையில் விஜய் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் போன்றோர் கலந்து கொள்ள வேண்டாமென தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மரம், கரண்ட் கம்பம் போன்ற மின்சாதன பொருட்கள் மீது ஏறக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த பரப்புரைக்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

அதுவும் க்யூ ஆர் கோடு கொண்ட அனுமதி பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இது புதுச்சேரியில் நடைபெறும் பிரச்சாரம் என்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பொது வெளியில் மக்களை சந்திக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இதனை கரூர் பிரச்சாரம் போல் இல்லாமல் மிகவும் கவனமான முறையில் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

NDA லிஸ்ட்லயே இல்ல.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை!! கடுப்பான அமித்ஷா!!

0

AMMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. SIR பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக அடுத்ததாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.

ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அதனுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் பாஜகவிற்கு பெரும் இழப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத முடியாது என்று கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். இவர் பாஜகவிலிருந்து வெளியேறியதிலிருந்தே அவருக்கும் பாஜகவுக்கும் பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால், NDA கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக விஜய்யின் வருகையால் அதிருப்தியில் உள்ள நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறான கருத்தை கூறியது பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத தலைவர் எடப்பாடி பழனிசாமி.. தவெகவின் டாப் தலை பர பர பேட்டி!!

0

ADMK TVK: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கபட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், இந்த கட்சி 2026 யில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. விஜய்கான ஆதரவும், ஆரவாரமும் திராவிட கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால், அவர் திமுகவை எதிரி என்று கூறியதால் அக்கட்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு எழுந்தது. இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது.

கடந்த 9 வருடங்களாவே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்தலாம் என நினைத்தது. ஆனால் விஜய் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்று திடமாக கூறி வந்தார். இதனை உடைத்தெறியும் வகையில் கரூர் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜய் அதிமுக கூட்டணிக்கு தலையசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் அதிமுக விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தது. செங்கோட்டையனை தவெக பக்கம் இழுத்ததால் மேலும் கோபமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவையும், விஜய்யையும் கடுமையாக வசைப்பாடி வந்தனர். ஆனால் இபிஎஸ் விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்காமல் இருந்தார். இந்நிலையில் தவெகவின் இணை பொது செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மக்கள் விரும்பாத தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மக்களிடம் இருந்து விலகி வருகிறது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே தலைவர் விஜய் தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக- தவெக இடையே மேலும் சலசலப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.