புதன்கிழமை, செப்டம்பர் 10, 2025
Home Blog Page 36

என் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாது! குழந்தைகள் குறித்து ஓப்பனாக பேசிய நமீதா!

0

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவரை பார்ப்பதற்காகவே இவர் நடிக்கும் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்தவர்கள் ஏராளம். பின்னர் ஒரு பிரபல தொழிலதிபரை நமீதா திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார்.

தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது தனது இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருடைய குழந்தைகளுக்கு அவர் இதுவரை ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்க வில்லையாம். தனது குழந்தைகளிடம் எப்போதும் ஆங்கிலத்தில் பேசமாட்டாராம். தமிழ், தெலுங்கு, குஜராத்தி தான் நமிதாவின் குழந்தைகளுக்கு தெரியுமாம். இந்த மொழிகள் தான் அவர்களின் தாய் மொழி. ஆங்கிலத்தை டிவியில் பார்த்தோ அல்லது வேறு எங்காவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். என் பிள்ளைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி எல்லாம் தெரியாது. ஜெய் ஹனுமான் தான் அவர்களுக்கு தெரியும் என்று பெருமையாக சொல்வேன் என பேட்டி கொடுத்துள்ளார் நமீதா.

திட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!

0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஸ்மார்ட் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தின் upgrade வெர்சன் தான் இந்த ஸ்மார்ட் குடிநீர் திட்டம்.

திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்கும் நேரத்திலேயே அந்த பைப்பில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. பின்னர் எல்லாரும் சேர்ந்து போராடி தண்ணீர் வரவைத்து முதல்வரிடம் குடிக்க கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் அந்த குழாய் மீண்டும் பழுதடைந்துவிட்டது. இயந்திரத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற மக்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் யாரும் தண்ணீர் பிடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஸ்மார்ட் குடிநீர் திட்டம் தொடங்கி இன்னும் மூணு நாள் கூட ஆகல, அதுக்குள்ளயும் மெஷின் ரிப்பேர் ஆகிருச்சு, என்னதான் இந்த அரசாங்க அதிகாரிங்க பண்ணுறாங்களோ தெரியல என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் புலம்பி வருகின்றனர்.

ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? ரஜினியவே தூக்கி அடிச்சுட்டாரே!

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கடைசியாக நடிக்கப்போகும்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு பிறகு விஜய் இனி சினிமாவில் நடிக்கமாட்டார். முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவார். இதனால் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

விஜய் ஜனநாயகன் படத்திற்காக சுமார் 250 முதல் 300 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். பொதுவாகவே வினோத் படத்தில் மக்கள் நலன்சார்ந்த அரசியல் கருத்துக்கள் இடம்பெறும். விஜய்யின் கடைசி படம் என்பதாலும், இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு செல்வதால் படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும் என சொல்லப்படுகிறது.

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் 72 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தளபதி விஜய் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமம் 80 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியையே விஜய் மிஞ்சிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

0

தமிழக அரசு சார்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்கள் தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு இலவச பஸ் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாமல் பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 வரை தினம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த டோக்கன்கள் பெசன்ட் நகர், அடையார், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், வடபழனி, கேகே நகர், ஆதம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், எஸ்டேட் அண்ணாநகர், ஆவடி,

அயனாவரம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, பாடியநல்லூர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம், திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர், ஆகிய 40 பணிமனை பஸ் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.

இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு இரண்டு புகைப்படங்களை கொடுத்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் இதில் பயன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்; அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்!

0

தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் அட்டையின் மூலம் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பொழுது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் இரண்டு முறைகள் ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வந்தனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு அதனை சுலபமாகும் வகையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதில் ரேஷன் அட்டைகள் மற்றும் முன்னுரிமை ரேஷன் அட்டைகள் அந்தியோதயா அன்னை யோஜனா ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒருமுறை மட்டுமே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் பொருட்கள் குறைந்த நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது. ரேஷன் அட்டை பயனாளிகள் ஒருமுறை கைரேகை பதிவு செய்தால் மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0

பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண், வருமானவரித்துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் 10 இலக்க எண் தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்புச் சான்றிதழ், ஏதேனும் அடையாளச் சான்றிதழ் இருந்தாலே பான் கார்டு விண்ணப்பிக்க முடியும்.

வரியைப்பு தடுக்கும் வகையில் தற்போது புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அந்த நடைமுறையின் அடிப்படையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி தாக்கலின் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைக் கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி வருமானவரித்துறையின் போர்டலின் வழியாக ஆதார் சரி பார்ப்பின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2025 டிசம்பர் 31ம் தேதிகுள் ஆதார் அட்டை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும்.. பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்றால் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அவர்களுடைய பான் அட்டை செயல்படாது.

பலமுறை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு பெற விரும்புவர்கள் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இந்திய கடவுச்சீட்டு போன்றவையை வைத்து விண்ணப்பிக்கலாம் ஆனால் தற்போது ஆதார் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

திருமணம் ஆகாத பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; உரிமை தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!

0

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் திருமணம் ஆகாமல் 50 வயதை கடந்த ஏழை எளிய பெண்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க இருக்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள் மாதம்தோறும் 400 ரூபாய் உதவித்தொகை பெற முடியும். அந்த தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பலரும் அறியாத நிலையில் குடும்பத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ திருமணமாகாமல் 50 வயதை கடந்த பெண்கள் இருந்தால் இந்த திட்டத்தை பற்றி உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தற்போது செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகாமல் இருப்பது அவசியம். மேலும் அந்தப் பெண்ணின் வயது 50 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

அந்த பெண் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிபவராக இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற தமிழக அரசின் மற்ற எந்த ஒரு ஓய்வூதிய திட்டத்திற்கும் விண்ணப்பித்திருக்கக் கூடாது. மேலும் அரசு ஊழியர் ஆகவோ, வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் ,பாஸ்போர்ட், பான் கார்டு ,திருமணமாகாதவர் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்..

நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பெற்ற பிறகு அதிகாரிகள் விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சரிபார்த்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். விண்ணப்பித்து 30 முதல் 45 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்..

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால். பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி 20 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 10 முதல் 15 லட்சம் பேர் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஜூலை முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க மீண்டும் முகாம்கள் நடத்தப்படும், இதற்கான நிதி ஒதுக்கீடு பெற்ற உடன் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியானது..

ஆனால் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் சிலருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி வார்டு உறுப்பினர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும். ஆனால் மற்ற அதிகார பதவிகளான கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது.

மேலும் அரசு மற்றும் கார்ப்பரேஷன் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், 3000 ரூபாய் பென்ஷன் போன்ற குறைந்த பென்ஷன் பெற்றாலும் இந்த உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது.

குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுய உதவி குழுவில் இருக்கீங்களா; பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் உடனே அப்ளை பண்ணுங்க!

0

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்கள் எதிர்பாராத அளவிற்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் நிலையில் கடன்கள் பயிற்சிகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக சிறுசேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவோ வருமானம் பெற உதவுகின்றன. கிராமப்புறங்களில் வறுமையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு சிறு கடன்கள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் உருவாகி தருகின்றது.

வறுமையை குறைக்க உதவும் நிலையில் பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கவும் உதவுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளால் மகளிர் சுய உதவி குழுக்கள் அதற்கு பல்வேறு சலுகை மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக திருவள்ளுவர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2,014 பெண்களுக்கு 131 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வங்கி கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகின்றது.

கடன்களை பெற்று அதனை முறையாக செலுத்தும் சுய உதவி குழுக்கள் இதற்கு தகுதி பெற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு மத்திய அரசு 1261 கோடி ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் மகளிருக்கு ட்ரோன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ட்ரோன் மற்றும் உபகரணங்களின் செலவில் 80 சதவீதம் அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையை தேசிய வேளாண் உள் கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க அதிக அளவு ட்ரோன் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மகளிர் வருமானத்தை பெற வாய்ப்புள்ளது. மேலும் ட்ரோன் பயன்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுவிற்கு 15 நாட்கள் பைலட் பயிற்சி மற்றும் பத்து நாட்கள் வேளாண் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

0

ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஆதாரம் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு என எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது.

ஆனால் சில சமயங்களில் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல முடியாததால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்ப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

வருங்காலங்களில் UIDAI  ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த செயலி தங்கள் போனில் இருந்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆதார் மீது எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும்.

இனி ஆதாரை ஜெராக்ஸ் எடுத்துச் செல்லும் அவசியம் இருக்காது. இந்த செயலியில் ஆதார் தகவல் க்யூஆர் கோடு வடிவில் இருக்கும் இதை ஸ்கேன் செய்தால் தங்களுடைய ஆதார் சமர்ப்பிக்கப்படும்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு ஆதார் சமர்ப்பிக்கும் பொழுது முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமோ அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதி மூலம் ஆதார் தொடர்பான செயல்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் நேரத்தை வீணடிப்பதும் தவிர்க்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது