Home Blog Page 40

செங்கோட்டையன் கேம் ஸ்டார்ட்.. இபிஎஸ்க்கு கெடு முடிஞ்சது!! அதிரும் அரசியல் அரங்கு!!

0

ADMK TVK: அதிமுகவில் பல்வேறு சச்சரவுகள் நிகழ்ந்து வரும் வேளையில், அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அதிமுகவின் தலைமையால் 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட இவர், நால்வர் அணியாக உருவெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர்கள் நால்வரும், ஒரு அணியாக இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு, ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்தார். டிடிவி தினகரனும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையன் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இவருக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருப்பதால் திமுக இவரை கட்சியில் சேர்க்க முயற்சிக்கிறது என்ற தகவல் பரவியது. ஆனால் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்தால் அது அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என, செங்கோட்டையன் நினைப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறினார். இதனால் வேறு வெளியே இல்லாமல் அவர் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவியது. இது குறித்து தவெக சேர்ந்தவர்கள் செங்கோட்டையனிடம் பேசி வருகிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.

இவ்வாறு செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு மீது பல்வேறு விமர்சனங்களும், வியூகங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தனது கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆம் தேதியான நாளை செங்கோட்டையன் தவெகவில்  இணைய போகிறார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது தவெகவில் இணைவதற்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இபிஎஸ்க்கு பேரிடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியை மாட்டி விட்ட தவெக நிர்வாகிகள்.. முழிக்கும் திமுக தலைமை!!

0

TVK DMK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்படும் விஜய்யை பார்க்க கூடிய கூட்டம் காரணமாக இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. கரூருக்கு முன்பு விஜய் 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதெல்லாம் நிகழாத அசம்பாவிதம் திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நிகழ்ந்ததால், இது நிச்சயம் திமுகவின் சதி திட்டமாக இருக்கும் என தவெக நிர்வாகிகள் தொடங்கி தலைமை வரை கூறி வந்தனர்.

ஆனால் திமுகவை சேர்ந்தவர்களோ, தவெக தொண்டர்களுக்கு கூட்டத்தை சரியாக வழி நடத்த தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததால் இத்தனை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று மாறி மாறி குறை கூறி வந்தனர். இதனால் தமிழக அரசு இதனை விசாரிக்க ஒரு தனி நபர் குழுவை அமைத்தது. இதனை மறுத்த தவெக தரப்பு சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இது திமுகவின் சதி திட்டம் என்பதையும், இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என்றும் இவர்கள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில பேர் மீது ஊழல் புகார் இருக்கும் நிலையில், தற்போது இதனையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

திமுக நேரடி அரசியல் எதிரி.. அதிமுக மறைமுக எதிரி!! விஜய்யின் மாஸ்டர் மைண்ட்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதிமுக, திமுக தான். அதனை மிஞ்சும் வகையில் உதயமாகியுள்ளது தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். திராவிட கட்சிகளை நோக்கியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம் தற்போது மூன்றாவதாக விஜய் பக்கம் திரும்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

திமுகவை எதிரி என்று கூறியதால் நிச்சயமாக அவர் அதிமுக உடன் தான் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விஜய் அதிமுக உடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் விஜய் அதிமுகவை மறைமுக எதிரியாக நினைத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம், விஜய் அதிமுக கூட்டணியை உதறித் தள்ளியது. மேலும் கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்து எல்லா வகையிலும் விஜய்க்கு உதவிய அதிமுகவிற்கு விஜய் இது வரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை.

அது மட்டுமல்லாமல், சில பரப்புரையில் அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்துள்ளார். விஜய் அதிமுகவையும் எதிரியாக தான் நினைக்கிறார் என்பதற்கு முக்கியமான சான்று செங்கோட்டையனை தவெகவில் சேர்க்க நினைப்பது. செங்கோட்டையனை மட்டுமல்லாது, மேலும் சில முக்கிய தலைவர்களை தவெகவில் சேர்ப்பதற்கான பணியை விஜய் செய்து வருகிறார். திமுகவை அரசியல் எதிரி என்று நேரடியாக அறிவித்த விஜய், அதிமுகவை மறைமுகமாக எதிர்க்கிறார் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

சசிகலா தினகரனுக்கு 7 ஓபிஎஸ்க்கு 13 செங்கோட்டையனுக்கு 20.. ஒரே போடாய் போட்ட பத்திரிகையாளர்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலை நோக்கி கட்சிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் மட்டும் உட்கட்சி பிரச்சனை தலை விரித்தாடுகிறது. இந்த பிரச்சனை ஜெயலலிதா இறந்த போது ஆரம்பித்தது, தற்போது வரை ஓயவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். இதன் பின்னர் சில காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இவர் அதிமுகவின் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது மட்டுமல்லாது, இக்கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது.

முதலில், சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், அடுத்ததாக ஓபிஎஸ்யும் நீக்கினார். இவர்களை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனையும் 2 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் நால்வரும் அதிமுகவின் முக்கிய முகங்கள் என்பதால், இவர்களின் நீக்கம் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறினர். இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி ஒரு கருத்தை கூறியுள்ளார். மேலும் இவர்களின் நீக்கம் எத்தனை சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சசிகலா, டிடிவி தினகரனின் பிரிவு 7% வாக்குகளை பிரிக்கும் என்றும், ஓபிஎஸ் 13% வாக்குகளை பிரிப்பார் என்றும், செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதால் அவர் தவெகவில் இணைந்தால் அவர் சுமார் 20% வாக்குகளை பிரிப்பார் என்று ரவீந்திரன் கூறியுள்ளார். ஏனென்றால், சசிகலா, ஓபிஎஸ்யால் முக்குலத்தோரின் வாக்குகளும், தினகரனால் தென் மாவட்டங்களில் சில தொகுதிகளிலும், செங்கோட்டையன் ஈரோட்டில் வலுவாக இருப்பதால், இந்த இடங்களிலெல்லாம் அதிமுக வாக்கு வாங்கி அடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியை அறிவித்த பிரேமலதா.. ஷாக்கில் திராவிட கட்சிகள்!! ஹேப்பி மோடில் தளபதி!!

0

TVK DMDK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக உடன், பாஜக, தாமக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு சலசலப்புகள் நிலவி வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும், மூன்றாம் நிலை கட்சிகளாக பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாமக இரண்டாக பிரிந்துள்ளதால், அதன் முடிவு என்னவென்று தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மீதமிருக்கும் கட்சியான தேமுதிக, திராவிட கட்சிகள் மற்றும் புதிதாக உதயமான தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பலரும் பிரேமலதாவிடம் கேள்வியெழுப்பிய போது, அதனை கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிப்போம் என திடமாக கூறி வருகிறார். ஆனால் தேமுதிகவின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும், ஒவ்வொரு கட்சியில் சேரப்போவது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், அதிமுகவில் சேரப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது ஆர்.பி. உதயகுமாரின் சந்திப்பு. பின்னர் அவரது அடுத்த பரப்புரையில் திடீரென அதிமுகவிற்கு எதிராக பேசினார்.

இவ்வாறு தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்பது சஸ்பென்ஸாகவே இருந்து வரும் நிலையில், தற்போது அவர் தவெகவில் இணைவது போன்ற ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த தேமுதிக கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் என்று உறுதி கூறியுள்ளார். அதிமுக, திமுக மீது தற்போது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ள காரணத்தினால், மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும் இயக்கமாக இப்போதைக்கு இருப்பது தவெக தான் என்பதால், அவர் விஜய் கூட்டணியை தான் குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதவியை விட்டுருங்க.. மாநில தலைவரிடம் பாஜக தலைமை பேச்சு!! குஷியில் அண்ணாமலை!!

0

BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களமே பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் மோதிக் கொண்டிருக்கிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜக எவ்வளவு முயற்சித்தும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அதற்கு பாஜகவின் கொள்கை தான் காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்தில் பின் தங்கி இருக்கும் பாஜக, அண்ணாமலையின் வருகைக்கு பிறகே சற்று விரிவடைந்தது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பெற்றதிலிருந்தே தமிழக இளைஞர்கள் பலரும் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவரின் வருகைக்கு பின் தான் தமிழகத்தில் பாஜக மீதான ஊடகங்களின் வெளிச்சம் அதிகமானது என்றே கூறலாம். இதன் பின்னர் இபிஎஸ்யின் நிபந்தனையால் தனது பதவியை விட்டு விலகிய அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

இவரால் அண்ணாமலையின் இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் அண்ணாமலையால் பாஜகவிற்கு கூடிய வாக்கு வங்கி, நயினாரால் மீண்டும் பழைய நிலைக்கே வந்தது. இதன் காரணமாக அண்ணாமலை மீண்டும், மாநில தலைவராக அமர்த்தப்படலாம் என்று பாஜகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். இது குறித்து நயினாரிடம் கேட்ட போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுப்பெற வேண்டுமென்றால், அதற்கு அதிமுக கூட்டணி மட்டும் போதாது. அண்ணாமலை மீண்டும் பதவியில் அமர வேண்டுமென பாஜக தலைமை நினைக்கிறது என்ற தகவலும் பரவி வந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. தமிழகம் தலை நிமிர, தமிழனின் எழுச்சி பயணம் என்ற பெயரில் நயினார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பயணம், ஒத்தி வைக்கப்பட்டு நயினார் அவசர அவசரமாக டெல்லி சென்றுள்ளார். இவரின் இந்த திடீர் பயணம், இவரது பதவியை பறிப்பதற்கான பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீங்க தவெகவுக்கு போக போறீங்களா.. செங்கோட்டையன் கப் சிப்!! திசை மாறும் அரசியல் களம்!!

0

TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதி பங்கீட்டில் ஆர்வம் காட்டி வரும் சமயத்தில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர் இபிஎஸ்யால் நீக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான வேலைகள் அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என பலர் அறிவுறுத்தியும், தனது தலைமைக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் இபிஎஸ் இவ்வாறு செய்து வருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர்களும், பிரிந்து சென்றவர்களும் கூறி வந்தனர்.

இந்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனை, முதலில் பதவிகளிலிருந்து நீக்கிய இபிஎஸ், பிறகு கட்சி தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார் என்று கூறி கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார். இவ்வாறு இபிஎஸ்க்கும், செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் அவர் விஜய்யின் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி தீயாய் பரவியது. இந்த செய்தியை இரண்டு தரப்பும் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. இதனால் இவரின் இணைவு உறுதி என்றே கருதப்பட்டது.

பின்னர் இது குறித்து தவெகவை சேர்ந்த நிர்மல் குமாரிடம் கேட்ட போது, அதை பற்றி பின்னர் பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றார். இவரின் இந்த பதிலும், செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்பதை உறுதிப்படுத்தியது. இது குறித்து செங்கோட்டையன் தரப்பு எந்த கருத்தும் கூறாமலிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செங்கொட்டையனிடம் தவெகவில் இணைய போகிறீர்களா என்று கேட்ட போது, அதற்கு எந்த பதிலும் அளிக்கலாம் சென்றால், இந்த மௌவுனத்தை சம்மதமாக எடுத்து கொள்ளலாமா என்ற கேள்விக்கும், மௌனம் சாதித்தார். செங்கோட்டையனுக்கு தவெகவில் இணையும் எண்ணம் இல்லையென்றால் அதனை நேரடியாக கூறி இருக்கலாம், அதனை தவிர்த்து இவ்வாறு மௌனம் சாதிப்பது இவர் தவெகவில் இணைய போகிறார் என்பதற்கான சாத்திய கூறுகளாகவே பார்க்கப்படுகிறது.

கொள்ளுடன் இதை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரைந்துவிடும்!

0

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். எவ்வளவுதான் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் அதை குறைக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் தான் பலர். அப்படி கொள்ளுடன் இதை சேர்த்து செய்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை சீராக குறைந்து வரும் இயற்கை வைத்திய முறையை தான் நாம் இங்கு பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. கொள்ளு 250 கிராம்

2. ஆலிவ் விதைகள் 100 கிராம்

3. கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்.

2. அதில் அடுப்பை வைத்து கொள்ளை போட்டு நன்கு வறுக்க வேண்டும்.

3. கொள்ளு நன்கு வெடிக்கும் சத்தம் வரும் வரை வறுக்க வேண்டும்.

4. இப்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

5. இதில் 100 கிராம் ஆலிவ் விதைகளை போட வேண்டும்.

6. வாணலியில் உள்ள சூட் உடனே இதனை வறுக்க வேண்டும்.

7. பின் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட வேண்டும்.

8. மூன்றையும் வாணலியில் உள்ள சூட்டில் வறுக்க வேண்டும்.

9. இது நன்கு ஆற வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடு நீருடன் ஒரு ஸ்பூன் கலந்து சிறிது உப்பை சேர்த்து பருகி வரலாம்.

அல்லது சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை போட்டு நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

அல்லது சாலட் வகைகளை சாப்பிடும் பொழுது இந்த பொடியை மேலே தூவியும் சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து நீங்கள் செய்துவர உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை விரைவாக குறையும்.

5 நாட்கள் போதும்! சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்! இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

0

இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினை சர்க்கரை நோய். பிறந்த குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும் ஆபத்து இன்றைய காலகட்டத்தில் உள்ளது. நம்மை நாமே பார்த்து கொள்வது தான் இன்றைய சூழ்நிலையில் தகுந்ததாக இருக்கும். அப்படி டாக்டரிடம் சென்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மாத்திரைகளால் வேறு சில உபாதைகள் வருவதை தவிர்ப்பதற்காக இயற்கை வழிமுறையே எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழிமுறைகள் உங்களை நலமுடன் வாழ வழிவகை செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் இந்த இயற்கை வழி முறையை ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் அதை என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பச்சை சுண்டைக்காய் 100 கிராம்

2. வெந்தயம் 1 ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் பச்சை சுண்டைக்காயை எடுத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2. அதை இரண்டு நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும்.

4. அதில் இந்த சுண்டைக்காயைப் போட்டு நன்கு வறுக்கவும்.

5. பத்து நிமிடம் நன்கு வறுத்ததும் சுண்டைக் காயில் உள்ள ஈரப்பதம் நீங்கி நன்கு மொறுமொறுவென்று ஆகியிருக்கும்.

6. கடையில் கிடைக்கும் சுண்டைக்காயை வாங்க வேண்டாம்.

7. வறுத்து வைத்த சுண்டைக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

8. இந்த பொடியை நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் மூன்று மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

9. இப்பொழுது இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து இரண்டு நிமிடம் அப்படியே விட்டு கலந்து குடிக்கலாம்.

10. அல்லது சூடான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

11. அதிகமாக கசப்பாக உள்ளது என்று நினைத்தால் சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து ஐந்து நாட்கள் நீங்கள் எடுத்து வர உங்களது சர்க்கரை கட்டுக்குள் வரும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் மங்குதல் சரிசெய்ய அற்புதமான வீட்டு வைத்தியம்!

0

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண் குறைபாடுகள் இப்பொழுது அதிகமாக காணப்படுகின்றது. அதிக நேரம் டிவி பார்ப்பதனாலும், அதிக நேரம் செல்போன்களில் விளையாடுவது மற்றும் செல்போன்களில் பொழுது போக்குவதை போன்ற விஷயங்களால் கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதுவும் இரவில் அதிகநேரம் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அதில் வரும் ஒளிக்கதிர்கள் கண்களை பாதிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

இதனால் சிறுவயதிலேயே கண்ணாடி அணியும் பழக்கம் குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண் மங்குதல் போன்ற பிரச்சனைகள் செல்போனினாலும் அதே போல் நமது உணவுப் பழக்கங்களாலும் ஏற்பட்டு விடுகின்றன. செல்போன் மற்றும் கணினி பார்ப்பதனால் ஒரு சில மன அழுத்தத்தை உண்டாக்கி கண்கள் பாதிக்கப்படுகின்றன. அதனை சரிசெய்ய இயற்கை வழி முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. குங்குமப்பூ

2. தேன்.

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஐந்து குங்குமப்பூவை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

2. தண்ணீர் 10 நிமிடம் நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து பருகலாம்.

3. குங்குமப்பூவில் உள்ள விட்டமின் சத்துகள் கண் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. அதனால் இந்த இயற்கை முறையை தொடர்ந்து நீங்கள் ஒரு வாரம் வரை குடித்து வரலாம்.

இதனுடன் சில குறிப்புகள்:

1. பாதாம் பருப்பில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் கண்ணின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் பாதாம்பருப்பை நான்கு அல்லது ஐந்து எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் அதனை தோலை நீக்கி சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் குறையும்.

2. அதேபோல் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரவேண்டும்.

3. முருங்கை இலை பூவை ஒரு கைப்பிடி எடுத்து பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வர கண்ணின் குறைபாடுகள் நிச்சயமாகக் குறையும்.

4. பொன்னாங்கண்ணிக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்டு வரலாம்.