Home Blog Page 41

என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !

0

நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.

உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் நமக்கு சீக்கிரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். ஆனால் உடல் பருமன் ஏற்படாது. அதோடு மட்டுமல்லாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதனால் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்கள் அதிக அளவில் நரம்பு மண்டலத்திற்கு சென்றடையும்.

நாம் அமர்ந்து கொண்டு சாப்பிடும் பொழுது நமது கீழ் முதுகு,வயிறு,இடுப்பு போன்ற பகுதிகள் அனைத்தும் நேராக இருப்பதனால் எந்த அசௌகரியமும் நம் உடம்பிற்கு ஏற்படாது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையக் கூடும். அத்துடன் செரிமானமும் சீராக இருக்கும்.

உட்கார்ந்து சாப்பிடும் பொழுது முழங்கால்களை மடக்கி வைத்திருத்தல் மூலமாக அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இதனால் முழங்கால்கள் வலுவடையும். உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதனால் நமக்கு இடுப்பு வலி ஏற்படாது.

நாம் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருப்பதால் இரத்த ஓட்டம் நம் இதயத்தை நோக்கி இருக்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதோடு மட்டுமல்லாமல் கணுக்கால் மற்றும் கால்களில் உள்ள தசைகளும் வலுப்படுகிறது.

இவ்வாறு நாம் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நம் உடல்களில் பெரும்பாலான பகுதிகள் நல்ல ஆரோக்கிய பலன்களை அடைகிறது. எனவே வெளிநாட்டு கலாச்சாரமான டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கத்தைத் முடிந்த அளவு தவிர்த்து நாம் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும்.

இதை மட்டும் செய்யுங்கள்! 100% சுகப்பிரசவம் தான்! தவறாமல் கடைபிடியுங்கள்

0

கர்ப்பமடைந்து 7 மாதத்திற்கு மேலே ஆனவுடன் இந்த விதிமுறைகளை கடைபிடியுங்கள்.கண்டிப்பாக சுகப்பிரசவம் நடக்கும்.

1.இரு நேரமும் கட்டாயமாக சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.முக்கியமாக இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரை இடுப்பு மற்றும் வயிறை சுற்றி ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்யும் போது சதைகள் தளர்வடைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

2.பிரசவம் சம்மதமான எந்த ஒரு அதிர்ச்சி வீடியோக்களையும் பார்க்க கூடாது.மன நிம்மதியுடன் இருக்க வேண்டும்.அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

3.குழந்தைகள் வயிற்றினுள் கொடி சுற்றி கொள்ளாமல் இருக்க தாய்மார்கள் இடது புறம் மட்டுமே படுப்பது நல்லது.

3.ஆப்பிள் பழம், தேன்,ரோஜா இதழ்,குங்கும பூ ,ஏலக்காய் ஆகியவற்றை அரைத்து 2 கிராம் அளவில் சாப்பிட்டு வர சுகப்பிரசவம் உண்டாகும்.

4.மருத்துவர்கள் சொல்லும் வண்ணத்துப்பூச்சி (buttrr fly excercise) உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கும்.

5.இடுப்பு எந்த அளவு விரிவு தன்மை அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் சுகப்பிரசவம் நடக்கும்.அதற்கு கர்ப்பிணி தாய்மார்கள் நன்றாக உடற்பயிற்சி செய்து வருவது மிகவும் நல்லது.அதுமட்டுமின்றி சத்து உள்ள ஆகாரங்களை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.பாஸ்ட் புட் வகைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

வெற்றிலையோடு இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் ஒரு முடிகூட கொட்டாது! நன்கு அடர்த்தியாக வளரும்

0

முடி கொட்டாமல் இருப்பதற்கு முடி நன்கு நீண்டு வளர்வதற்கும் எத்தனையோ இயற்கை முறைகளையோ அல்லது செயற்கை முறைகளை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இந்த முறையானது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு தேவையானவை வீட்டில் உள்ள சிறு பொருட்களே தான். இதை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது ஒரு முடி கொட்டாது. முடி நீண்டுவளரும். தலையில் ஏதாவது பேன், பொடுகு ஏதாவது இருந்தாலும் இது உங்களுக்கு முற்றிலுமாக நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

1. வெற்றிலை 4

2. செம்பருத்தி இலை 4

3. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி

4. தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

1. வெற்றிலை நான்கு இலைகளை காம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. செம்பருத்தி இலைகளை காம்பு நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஓரிதழ் பூவின் நிலையானது மிகவும் சிறந்தது.

3. ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து கொள்ளவும்.

4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 50 மில்லி அளவு தேங்காய் எண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வெற்றிலை செம்பருத்தி இலை வேப்பிலை ஆகிய அனைத்தும் எண்ணெயில் போட வேண்டும்.

5. மிதமான தீயில் ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

6. இலைகள் நன்கு வதங்கியவுடன் எண்ணெயின் நிறம் பச்சை நிறமாக மாறி இருக்கும்.

7. அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

8. இப்பொழுது இந்த எண்ணெயை சூடு ஆறிய பின் இரவில் நன்கு தலைக்கு வேர்க்கால்களில் படும்படி வைத்துக் கொண்டு காலையில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலைக்குக் குளித்து விடலாம்.

9. இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை நீங்கள் செய்து வரும் பொழுது கண்டிப்பாக உங்களது முடி கொட்டாமல் நீண்டு வளர இது உதவி செய்யும்.

முகத்தில் சுருக்கமே இல்லாமல் இளமையா இருக்கணுமா? இந்த எண்ணெய் போதும்! அதை எப்படி யூஸ் பண்றதுன்னு பாருங்க!

0

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

எவ்வளவுதான் பியூட்டி பார்லருக்கு போய் சென்று ஃபேஷியல் செய்தாலும், முகம் ஓரிரு வாரம் மட்டுமே அழகாக இருக்கும். இயற்கை முறையை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது இயற்கையாகவே உங்களுக்கு முகப்பொலிவை தரும். இப்பொழுது அந்த மாதிரியான இயற்கை முறையை தான் பார்க்க போகிறோம். கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும்.

இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தேவையான பொருட்கள்:

1. ஆமணக்கு எண்ணெய்

2. கற்றாழை ஜெல்

செய்முறை:

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும்.

3. இந்த கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணையை ஊற்றவும்.

4. இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

5. இதை எடுத்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

6. 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.

7. இதை நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

8. தொடர்ந்து இதனை செய்து வரும் பொழுது உங்களது முகம் சுருக்கம் எதுவுமின்றி இளமையுடன் காணப்படுவீர்கள்.

கொழுப்பு கட்டி கரைய மிளகுடன் இதை தேய்த்தால் கொழுப்புக்கட்டி காணாமல் போகும்!

0

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேரும் பொழுது அது கட்டியாக மாறுகின்றன. இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமே வரும் என்பது இல்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கு கூட அதிகமான கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடும் பொழுது கொழுப்புக் கட்டிகள் உருவாகின்றன.

இப்பொழுது கொழுப்புக் கட்டியை மட்டும் ரத்தக்கட்டு ஆகிய இரண்டையும் கரைய வைக்கும் அற்புதமான மருத்துவத்தில் தான் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. வேப்பங்கொழுந்து

2. மிளகு.

செய்முறை:

1. முதலில் வேப்பங்கொழுந்தை ஒரு பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகை எடுத்து கொள்ளவும்.

3. கைப்பிடி வேப்பிலை உடன் ஒரு டீ ஸ்பூன் அளவு மிளகை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

4. இதை மிளகு போன்று சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து வைக்க வேண்டும்.

5. இதை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும்.

6. இதை காலையில் மாலையில் சாப்பிட்டு வர கொழுப்புக் கட்டிகள் காணாமல் போய்விடும்.

7. இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்பொழுது மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்

கால் ஸ்பூன் இரவில் சாப்பிடுங்க! குறட்டைக்கு Bye Bye சொல்லுங்க!

0

குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை.

குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு குறட்டை எப்படி வருகிறது என்று சந்தேகமாக இருக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும்.

அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 20 நாட்களில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது.

தேவையான பொருட்கள்:

1. அதிமதுரப் பொடி

2. வெண் மிளகு பொடி

3. தேன்

4. பனங்கற்கண்டு.

செய்முறை:

1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அதிமதுர பொடி 2 சிட்டிகை எடுத்து கொள்ளவும்.

3. பின் வெண் மிளகு பொடி ஒரு சிட்டிகை எடுத்து கொள்ளவும்.

4. இரண்டு ஸ்பூன் அளவுக்கு தேன் ஊற்றி கலந்து கொள்ளவும்.

5. பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கால் டீஸ்பூன் வரும் அளவிற்கு லேகியம் போல தயார் செய்து கொள்ளவும்.

6. இதனை இரவு படுக்கும் முன் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு இதை கால் டீஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு‌ 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீர் குடித்துவர 20 நாட்களில் குறட்டை சத்தம் குறையும்.

20 நாட்களில் சர்க்கரை அடியோடு குறையும்! அனுபவ உண்மை!

0

இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினை சர்க்கரை நோய். பிறந்த குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும் ஆபத்து இன்றைய காலகட்டத்தில் உள்ளது. 40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு.

நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம்.நம்மை நாமே பார்த்து கொள்வது தான் இன்றைய சூழ்நிலையில் தகுந்ததாக இருக்கும். அப்படி டாக்டரிடம் சென்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மாத்திரைகளால் வேறு சில உபாதைகள் வருவதை தவிர்ப்பதற்காக இயற்கை வழிமுறையே எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழிமுறைகள் உங்களை நலமுடன் வாழ வழிவகை செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 நாட்கள் இந்த இயற்கை வழி முறையை சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் அதை என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்.

இதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் பன்னீர் பூ. பன்னீர் பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விலை மிகவும் குறைவுதான்.

1. பன்னீர் பூவை வாங்கி 10 பன்னீர் பூவை எடுத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.

2. அதில் தண்ணீர் ஊற்றவும்.

3. இரவு முழுவதும் இது இப்படியே ஊற வேண்டும்.

4. அடுத்த நாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் பருகி வரவேண்டும்.

5. இப்படி 20 நாட்கள் தொடர்ந்து செய்ய கண்டிப்பாக உங்களது சர்க்கரை நோய் அளவு குறைந்திருக்கும். இது அனுபவ உண்மை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

மலச்சிக்கலா? ஒரு ஸ்பூன் போதும் இதை சாப்பிடுங்க உங்க முழு வயிறு சுத்தமாகிவிடும்!

0

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்களாலும் டீஹைடிரேஷன் என்று சொல்லக்கூடிய தண்ணீர் அருந்தாமல் உடம்பில் நீர் வற்றி மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது. இந்த மலச்சிக்கல் பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுகின்றது. அதனால் மலச்சிக்கலை போக்கி உங்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை ஒரே நாளில் வெளியேற்றுவதற்கு இயற்கை வழிமுறைகளைப் பார்ப்போம்.

முறை 1:

தேவையான பொருட்கள்:

1. தயிர் 2 ஸ்பூன்

2. சீரகப் பொடி அரை ஸ்பூன்.

3. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு பவுளை எடுத்து கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

3. அரை டீஸ்பூன் அளவிற்கு நன்கு வறுத்து பொடி செய்த சீரக பொடியை எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.

4. அரை டீஸ்பூன் அளவிற்கு விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.

5. நன்றாக கலக்கி கொள்ளவும்.

இதனை எப்பொழுது சாப்பிட வேண்டுமெனில் இதனை காலையில் உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து கூட இதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளலாம். இரவில் தயிர் சாப்பிட வேண்டாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது. அதே போல் வயிற்றில் உள்ள நச்சுக்களை முழுவதும் மலம் வழியே வெளியேற்றி விடும்.

முறை 2:

தேவையான பொருட்கள்:

1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்

2. உப்பு தேவையான அளவு.

செய்முறை:

1. ஒரு டம்ளர் சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ளவும்.

3. விருப்பமுள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. அதில் ஒரு பின்ச் உப்பு போடவும்.

இதை நன்கு கலந்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடித்தால் 10 நிமிடத்தில் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து நச்சுக்களும் மலம் வெளியே அடித்துக் கொண்டு வந்துவிடும்.இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் போதுமானது.உங்களது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள  ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்.

துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!

0

வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயமாக சண்டை வரும். மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் என்பதால் துடைப்பத்தை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது.

துடைப்பத்தை ஈசானி மூலையில் வைக்க கூடாது. துடைப்பத்தை தேய தேய வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி கூட்டினால் வறுமையானது வந்து சேரும்.

துடைப்பத்தை வைப்பதற்கு பலவேறு முறை உள்ளது. பல பேர்களுக்கு இதை எப்படி? எங்கு வைக்க வேண்டும்? என்பதே தெரிவதில்லை.

ஒரு சிலர் வீட்டில் துடைப்பத்தை படுக்க வைப்பார்கள். அப்படி படுக்க வைத்தால் குடும்பம் படுத்து விடும் என சாஸ்திரம் சொல்லுகிறது.

பழைய காலத்தில் வீட்டிலேயே பாட்டிகள் துடைப்பத்தை செய்வார்கள். இன்று 200 முதல் 300 வரை கொடுத்து அந்த துடைப்பத்தை வாங்குகிறார்கள்.

அப்படி வாங்கி நீங்கள் கதவுக்குப் பின்னால் தொங்க விடுவது அல்லது படுக்க வைப்பதோ கண்டிப்பாக கூடாது.

அதேபோல் துடைப்பத்தின் நுனிப்பகுதி வான்நோக்கி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது முக்கியமான ஒன்று.

ஒரு சிலர் வீட்டில் ஆணி அடித்து துடைப்பத்தை மாட்டுவார்கள். பலரும் கேட்கும் கேள்விகள் துடைப்பத்தை ஆணியில் மாட்டலாமா? என்று தான்.மாட்டலாம், ஆனால் கதவுக்கு பின்னால் மட்டும் மாட்டக் கூடாது.

ஒரு சிலர் நினைப்பார்கள் துடைப்பத்தை எல்லோரும் பார்க்கும்படி எப்படி ஆணியில் மாட்டுவது என்று, அதனால் கதவுக்கு பின்னாலேயே ஆணியடித்து மாட்டுவார்கள் அது மிக மிகத் தவறு.

ஒரு சிலர் வீட்டில் இரண்டு துடைப்பம் வைத்திருப்பார்கள். இரண்டையும் ஒரே இடத்தில் வைத்து இருப்பார்கள். அப்படி வைக்கக்கூடாது. நமது முன்னோர்கள் கூட சொல்லியிருப்பார்கள் 2 துடைப்பம் வைத்திருக்கிறீர்கள், பிரித்து வையுங்கள் என்று.

அப்படி 2 துடைப்பத்தை ஒன்றாக வைத்திருந்தீர்கள் என்றால் அன்றைக்கு கணவன் மனைவிக்கிடையே அல்லது உறவினர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டார்களுக்கிடையோ கண்டிப்பாக சண்டை வரும்.

அப்படி துடைப்பத்தை வைக்கும் முறையை சரியாக பயன்படுத்தி வந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் வீட்டில் பெருகும்.

அளவுக்கதிகமான உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

0

அளவுக்கதிகமான உடல் பருமனால் உங்களை குண்டு குண்டு என அனைவரும் கேலி செய்கிறார்களா! இத மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் யாரும் உங்களை கிண்டல் பண்ணவே முடியாது!

இந்த உலகில் மக்கள் அதிக அளவு பல நோய்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனை சரிசெய்ய இந்த காலத்தில் மருத்துவரை நாடி ஓடுகின்றனர்.அதிலும் முக்கியமாக உடல் பருமனால் அதிகப்படியானோர் உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அதற்காக ஜிம் மாறும் உடல்குறைக்கும் மருந்துகள் என அனைத்திலும் அதிக அளவு பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

உடல் பருமனை குறைக்க எளிய டிப்ஸ்:

முதலில் உடல் அதிக அளவு மெலிவு பெற இயற்கையாக கிடைக்கும் பப்பாளியை அப்படியே உண்ணாமல் அதை சமைத்து உண்ணலாம்.

உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்க சீரகநீர் பருகலாம்.அதுமட்டுமின்றி பூண்டு வெங்காயம் என அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடம்பு அதிக அளவு குறைய வாழத்தண்டு சாறு,அருகம்புல் சாற்றை குடித்து வரலாம்.அதுமட்டுமின்றி சுரைக்காயை வாரத்தில் இரு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் உடல் அதிக அளவு ஏறாமல் இருக்க எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேனை கலந்து குடித்து வர வேண்டும்.

அதுமட்டுமின்றி அமுக்கிராவேர் பெருசீரகத்தை பாலில் கலந்து குடித்து வர அதிக அளவு உடல் பருமனை குறைக்க முடியும்.இதையெல்லாம் தொடர்ந்து செய்து வர உடல் பருமனை அதிக அளவு குறைத்து நீங்கள் குறைந்த நாட்களிலேயே ஸ்லிம் ஆகிருவிங்க.