சென்னை:
கனிமொழி எம்பியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப
பெற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை ஹைகோர்ட்
அனுமதி அளித்திருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி
தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின்
தமிழிசை சவுந்திர ராஜன்.
தற்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார்.
அந்த பதவிக்கு முன்பாக, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன, எனவே அந்த வெற்றியை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
ஆனால், தற்போது,
தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக
இருக்கிறார். இதையடுத்து கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு
அவர் சென்னை
ஹைகோர்ட்டில் மனு
தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது.
அதை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோர்ட் அனுமதி தந்தது. மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் 10 நாட்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.
டெல்லி:
இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள்
இணையத்தில் வைரலாகி உள்ளது.
கட்சி
தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து
முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார்.
ஆனால்
இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம்
என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்தவுடன்
இமயமலைக்கு பயணமானார்.
இந்
நிலையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. படத்தின் மற்ற பணிகள்
தீவிரமடைந்துள்ளன. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக ரஜினியின்
படத்தை சிறுத்தை சிவா இயக்க இயக்குகிறார்.
தற்போது
ஓய்வுக்கு இமயமலைக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டிருக்கும்
படம் தான் இணையத்தில் வைரல். தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அமைந்த ரிஷிகேசுக்கு அவர் சென்றார்.
அங்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். ஆனால் திராவிடர் என்பதும் திராவிடம் என்பதும் தமிழ்ச் சொல்லே இல்லை.
அது சமஸ்கிருதச் சொல். அப்புறம் தமிழர் என்று கூறினால் பிராமணர்களும் தமிழர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால், தமிழர்கள் என்றால் இவர்கள் உள்ளே வரமுடியாது என்பதால் திராவிடம் என்று சொல்லி அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள். இப்போது நடுமண்டையில் ஏறி ஓங்கி அடித்ததும், திராவிடம் என்றவர்கள் எல்லாம் தெறித்து ஓடிவிட்டார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என்றார்.
ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப் புலிகள் காரணம் எனக் கூறப்பட்டாலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுவரை அந்தக் குற்றத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சீமானின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்களை அடுத்து சீமான் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசியுள்ள சீமான் “ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் எனப் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை. 25 ஆண்டு காலமாக இதைத் தான் பேசி வருகிறேன். காங்கிரஸார் போராடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த விஷயத்துக்காக இதுவரையில் காங்கிரஸ்காரர்கள் போராடியுள்ளனர்.
இப்போது என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் போராடி வருகிறது. உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே எடுத்துவிட்டு என்னை உள்ளே தள்ளப் போராடுகிறார்கள். 28 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்திருப்பதை எப்படி பொறுத்துக் கொள்வது. இந்த விவகாரத்தில் விவாதத்துக்குத் தயாராக உள்ளேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை என்ன செய்தது என்பதை விவாதிக்க வருவார்களா அவர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை: நடிகர் விஜயின் பிகில் பட வெளியீட்டுக்கு ஆளும் அதிமுக அரசு தடை போடுகிறதா என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில்
அடுத்து வெளியாக இருக்கும் படம் பிகில். விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெருத்த
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
அதற்கான வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தை காண
விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு
உள்ளது. படத்தில்
நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து
இருக்கிறார்.
அண்மையில் ரீலிசான படப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட இசை
வெளியீட்டு விழாவில் விஜய்யின்
பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, நடிகர் விஜய்யின் பிகில் பட வெளியீட்டுக்கு அதிமுக அரசு
தடை போடுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய ஜெயக்குமார், யார்வேண்டுமென்றாலும் நடிக்கலாம் . படத்தை வெளியிடலாம். இசைவெளியீட்டு விழாவில் அவர் ஜனநாயக அடிப்படையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித்தோம் என்றார்.
டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்
டெல்லி: டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அற்புதமாக வலம் வருபவர் பிரதமர் மோடி. தாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என பல விஷயங்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார். அதனால் அதில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். தற்போது உலக அளவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடி, அதாவது 30 மில்லியனை தாண்டி இருக்கிறது. அதில் அவர் ஒரு புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்பையும், முன்னாள் அதிபர் ஒபாமாவை மோடி பின்னுக்கு தள்ளியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், உலகளவில் அதிக மக்கள் இன்ஸ்டாகிராமில் மோடியை பின் தொடர்கின்றனர். இதன்மூலம், உலகின் முதல் இடத்துக்கு அவர் வந்திருக்கிறார். ட்ரம்பை 14.9 மில்லியன் பேரும், ஒபாமைவை 24.8 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர். நடிகை கிம் கர்தாசின்னுக்குதான் இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
பரபரப்பான திருப்பத்துடன், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பின்னர் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பெயரை என்.ஸ்ரீனிவாசன் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், அனுராக் தாக்கூர் முன்மொழிந்த சௌரவ் கங்குலி பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இறுதிசெய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
“ஆம், பிரிஜேஷ் தலைவர் பதவிக்கு என் சீனிவாசன் உதவியுடன் போட்டியிட்டார். இருப்பினும், அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு இருந்தது. சவுரவ் புதிய தலைவராவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவரது குரு ஜக்மோகன் டால்மியாவைப் போலவே அதிரடியான முடிவுகளை எடுப்பார்” என்று வடகிழக்கு பிரிவின் மூத்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட், பி.சி.சி.ஐ.யின் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அப்பெக்ஸ் கவுன்சிலில் ஆண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக கீர்த்தி ஆசாத்தை தோற்கடித்தார். சாந்தா ரங்கசாமி முன்னதாக பெண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம், ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.
ஆனால், அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். புதிதாக ரூ.2,000 நோட்டுகளை வெளியிடுவது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய காரணங்களுக்கு முரணாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
இதனிடையே, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக நிகழாண்டின் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல்களை மத்திய அரசு மறுத்து விட்டது.
ஆனால், அண்மைக் காலமாக, ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து விட்டதாகவும், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த நோட்டுகள் வருவதில்லை என்று கூறப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
பதில் விவரம் பின்வருமாறு,
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 354.2991 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2017-18-ஆம் நிதியாண்டில் 11.1507 கோடி நோட்டுகளும், 2018-19-ஆம் நிதியாண்டில் 4.669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன. ஆனால், 2019-20-ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால்
மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குமா என்று மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ்
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற முறையில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அமைக்கவுள்ள 6 மருத்துவ கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கனவு இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. தில்லியில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டத்தில், நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன் இரு கட்டங்களில் மத்திய அரசு அறிவித்த 82 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்காததை சுட்டிக் காட்டிய நான், புதிதாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்திற்கு இப்போது 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம், விருதுநகர், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப்படவுள்ள இந்த கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும். தமிழகத்தில் ஏற்கனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்.பி.,பி.எஸ் இடங்கள் இருக்கும். இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும்.
தலா ரூ.325 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் வரும் 2021-22 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவக் குழுவின் தொழில்நுட்பக்குழு அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்த சில வாரங்களில் முடிவடைந்தாலும் கூட, கல்லூரிகளைத் தொடங்க அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் தான் இருக்கும். இந்த அவகாசம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். 6 மருத்துவக் கல்லூரிகளுக்குமான இடங்களை தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ள நிலையில், கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற அனுமதிகளை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்ட பிறகும் திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள், புதிதாக உருவாக்கப்படவுள்ள திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள், மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி சென்று விட்டதால் கல்லூரி இல்லாத காஞ்சிபுரம் என மொத்தம் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இம்மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைக்கவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட வட மாவட்டங்களில் இல்லாத நிலையில், தமிழக அரசு புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, நரேந்திர மோடி அரசு முதன்முறையாக பதவியேற்ற பின்னர் 2015&ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அதற்கு முன்பாக அக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிரதமர் அபியா அகமது, “அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக” 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திரு அகமது தலைமையின் குழு கடந்த ஆண்டு ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது எரித்திரியாவுடனான இராணுவப் போரை முடிவுக்கு கொண்டுவர உதவியது, கிட்டதட்ட 1998 முதல் 2000 வரை எல்லை தகராறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஒஸ்லோவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் 9 மில்லியன் க்ரோனர் (சுமார் 54 மில்லியன் ருபாய்) மதிப்புள்ள பரிசைப் பெறுவார். இந்த டிசம்பரில் நோர்வே அமைதிக்கான நோபல் பரிசு என்பது கடந்த 12 மாதங்களில் “மனிதகுலத்திற்கு அமைதியுடன் பெரும் நன்மையை உருவாக்கியவருக்கு” வழங்கப்பட இருக்கிற விருது, இந்த ஆண்டு 301 பரிந்துரைகளுடன் 223 நபர்களாகவும் 78 அமைப்புகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் திரு கிரேட்டா டன்பர், 16 வயதான ஸ்வீடிஷ் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் வழக்கறிஞர்.
யார் இந்த அகமது?
ஏப்ரல் 2018 இல் எத்தியோப்பிய பிரதமர் பதவியில் இருந்து விலகியதில் இருந்து, அகமது எத்தியோப்பியாவில் ஒரு பெரிய சுயாதீன சீர்திருத்தத்தை மேற்கொண்டார். இது கடுமையான கட்டுப்படுத்தப்பட்ட நாட்டில் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது.
ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்களை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால் அவரது மிக முக்கியமான பணி, போட்டி அண்டை நாடான எரித்திரியாவுடனான சமாதான உடன்படிக்கையின் ஆதரவாளராக இருந்தது, இது 20 ஆண்டுகால சர்வதேச மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவியது.
அகமதுவின் சீர்திருத்தம் எத்தியோப்பியாவில் உள்ள இனக்குழுக்களுக்கிடையேயான பதற்றத்தை தணித்து தங்கள் மக்கள் தாயகத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு காரணமான பிரச்சினை ஆணிவேரை பிடுங்கி எறிந்து சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை செயல்படுத்தி கொண்டே இருந்தார்.
இதனால் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார்கள் என்றால் அது மிகையாகாது. அகமது போல தலைவர்கள் நம் நாட்டிலும் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.
ஜப்பானில் மிக சக்திவாய்ந்த புயலான டைபூன் ஹகிபிஸ், 30 உயிர்களை பறித்தது மற்றும் 15 பேரைக் காணவில்லை.
சனிக்கிழமையன்று டோக்கியோவுக்கு தெற்கே நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளி டைபூன், இன்று கடலுக்குச் செல்வதற்கு முன்பு ஜப்பானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைத் தாண்டியது.
சுமார் 425,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, அதே நேரத்தில் சுமார் 8 மீ மக்களுக்கு வெளியேற்ற ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 180 பேர் காயமடைந்ததாக ஜப்பான் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பானைத் தாக்கிய புயலுக்கு முன்னதாக, நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனமும் பிற அதிகாரிகளும் வழக்கத்திற்கு மாறாக வலுவான மொழியில் எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர், ஹாகிபிஸை 1958 இல் டோக்கியோ பிராந்தியத்தில் தாக்கி 1,200 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சூறாவளியுடன் ஒப்பிட்டனர்.
இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் ஜன்னல்களைப் பாதுகாக்க உணவு மற்றும் நாடாவில் சேமிக்கத் தூண்டியது, டோக்கியோவில் உள்ள வீதிகள் வசதியான கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டதால் கிட்டத்தட்ட காலியாக இருந்தன. நரிதா மற்றும் ஹனெடா விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ரயில்கள் மற்றும் விமானங்கள் பெரும்பாலும் நேற்றே நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கியதால் டோக்கியோவின் பெரும்பகுதி இன்று அமைதியாக திரும்பியது, அதே நேரத்தில் 12 மாகாணங்களுக்கு வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கிய மிக உயர்ந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.
ஆனால் மற்ற பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரால் பெரிதும் சேதமடைந்துள்ளன, டோக்கியோவின் வடக்கே கவாகோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த 200 க்கும் மேற்பட்டோர் படகுகளில் மீட்கப்பட்டனர்.
“காலை 7.30 மணியளவில் என் வீட்டிற்குள் தண்ணீர் நுழைந்தது. நீர் நிலைகள் இவ்வளவு உயரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ”என்று 86 வயதான ஒரு பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பின்னர் என்.எச்.கேவிடம் கூறினார்.
இன்று யோகோகாமாவில் ஜப்பான் மற்றும் ஸ்காட்லாந்து இடையே ரக்பி உலகக் கோப்பை போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிடம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
புகுஷிமாவுக்கு அருகில், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் தனது புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையத்தில் ஒரே இரவில் தண்ணீரைக் கண்காணிக்கும் சென்சார்களிடமிருந்து பல ஒழுங்கற்ற வாசிப்புகளைப் பதிவுசெய்தது. கண்காணிப்பை மீண்டும் தொடங்குவதற்கான கூறுகளை மாற்றியதாக நிறுவனம் பின்னர் கூறியது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ஷின்சோ அபே அவசரக் கூட்டத்தை கூட்டி சேதத்தை மதிப்பிடுவதற்கான பணிக்குழுவை அமைத்து, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, “மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளுக்கு” முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார். Get well soon Japan என்று நாமும் பிரார்த்திப்போம்.