Home Blog Page 5950

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்

0

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்

தரமான சாலை திட்டங்களுக்காக மக்கள் தானாக மனம் உவந்து அவர்களது நிலத்தை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய முதல்வர், இந்திய அளவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் தொழில் சிறக்கவும் சாலை மேம்பாடு மிகவும் முக்கியம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் இடங்களில் பாலங்கள், புறவழிச் சாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் கூறினார். மேலும் தமிழகத்தில் குடிமராத்துப் பணிகள் விவசாயிகளின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.

மக்கள் தானாக மனமுவந்து இடம் தந்ததால் தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். மேலும் ஓமலூர் – மேட்டூர் இடையேயான ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், சேலம் உருக்காலை வளாகத்தில், ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும்,போராட்டங்கள் நடத்தினாலும் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச் சாலையை அமைப்பதை உறுதி செய்வது போல அமைந்துள்ளது என்று முதலமைச்சரின் பேச்சு குறித்து கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?

0

நேற்று தேனியில் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பேசியதாவது, அதிமுக ஆட்சிைய கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள், கனவு காணவில்லை, அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

தேனி அருகே வீரபாண்டியில் அமமுக கட்சியினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தாய் கழகமான திமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கானோரை வருக, என வரவேற்கிறேன்.

இன்னும் தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற அங்குள்ள உண்மையான விசுவாசிகளை தாய் கழகமான திமுகவுக்கு அழைக்கிறேன் என்றார். தங்க தமிழ்ச்செல்வன் ஒன்றும் அறியாதவர். பலமுறை அவருக்கு, நாங்கள் தூது அனுப்பினோம். இன்றைக்கு வந்து மீண்டும் தாய் கழகத்தில் இணைத்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் படத்தை சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறார்கள். அது உள்ளன்புடன் இல்லை. லஞ்சம் வாங்கி, கொள்ளை அடிக்கவும், பதவி சுகத்திற்காகவும்தான்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் தான் முதலமைச்சரானார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஓ பி எஸ் யிடம் இருந்து பதவியை பறித்ததும் தர்மயுத்தம் என்றார். ஜெயலலிதா ஆவியுடன் பேசினேன் என்றார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று முதன்முதலில் புரளியை கிளப்பியதே ஓபிஎஸ் தான். ஆனால், அதுபற்றி விசாரிக்க ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டு, 6 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஏன் ஆஜராக வில்லை என்ன காரணம். ஏனால் கூறியது தர்ம யுத்தம் அனைத்தும் மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகம்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டது என்று கூறுகிறார்கள். நான் கேள்வி கேக்குறேன் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் அல்வா கொடுத்து ஏமாற்றியது அனைவரும் அறிவர்? ஓட்டு போட்ட தமிழக மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். அதிமுக ஆட்சி கவிழ்ந்து அடுத்து விரைவில் தேர்தல் வரும். திமுக அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியில் இடம் பிடிக்கும். இப்போதுள்ள அதிமுக ஆட்சி ‘கோமா’ நிலையில் உள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றி, தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.முயல் பிடிக்கிறவன் முகத்தை பார்த்தால் தெரியும் என்பார்கள். அப்படித்தான், திமுகவை பார்த்து, தேர்தலில் வெற்றியை தந்தார்கள். நாங்கள் சொன்னதை செய்வோம் என்று மக்கள் நம்புகிறார்கள். அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அந்த தேர்தலிலும் நாங்கள் வாக்குறுதிகள் கொடுப்போம். இதையும், மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டுவோம்.

இதற்கு முன் அதிமுக எம்பிக்கள் 37 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். தமிழக நலனுக்காக மத்திய அரசை கண்டித்து, அவர்கள் பேசியது உண்டா? குரல் எழுப்பியது உண்டா? தீர்மானம் கொண்டு வந்தது உண்டா? எதுவும் கிடையாது.தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் 37 பேர் வெற்றி பெற்று, என்ன செய்ய முடியும்? மத்தியில் பிஜேபி ஆட்சி. தமிழகத்தில் அதிமுக ஆட்சி. நாடாளுமன்றத்தில் திமுக 3வது பெரிய கட்சியாக இருந்தாலும், என்ன சாதிக்க போகிறார்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். திமுக எம்பிக்கள் கடந்த ஒரு மாதத்தில் என்ன சாதித்தார்கள் என்பதை பட்டியல் போட்டு சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் இந்தி கட்டாயமாக்கியதை திரும்ப பெற வைத்தது திமுக. ரயில்வே துறையில் இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை ஒரு மணிநேரத்தில் திரும்ப பெற வைத்தது திமுக எம்பிக்கள்.

தபால்துறையில் இந்தியில் தேர்வு நடந்ததை ரத்து செய்ய வைத்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என உத்தரவாதம் அளிக்க வைத்தது திமுக. ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து திமுக எதிர்த்து வருகிறது. நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தான் அமைக்கிறது. அவருக்கு தைரியம், தெம்பு, திராணி, துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து வாதிட தயாரா?காவிரி நீர் பிரச்னை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக நலன் காக்க தொடர்ந்து திமுக குரல் கொடுக்கிறது. மக்களவை தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றது.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இது, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று சொன்னோம். இந்த ஆட்சியை கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள். கனவு காணவில்லை. அது, விரைவில் நனவாகி நடக்கத்தான் போகிறது. அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது,ரூ.550 கோடி செலவு செய்து, அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது. அமைச்சர் ஒருவர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்றார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் பேசினார். விரைவில் ஆட்சி மாற்றம் வருமா? அதிமுக கோமா நிலையில் தான் இருக்கிறதா தர்ம யுத்தம் அனைத்தும் பொய்யா? என்பதை அடுத்த தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நடிகர் சூர்யாவிற்கு இவரே ஆதரவு தெரிவித்து விட்டாரா?

0

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னாள் சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது,
ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது.

இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களும் உள்ளது, அச்சம் தரக்கூடிய விஷயங்களும் உள்ளது.
குறைவான ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரசின் குழு பரிந்துரை செய்திருப்பது சரி இல்லை. அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் சூர்யா.

இதை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சூர்யா எதுவும் தெரியாமல், புரியாமல் பேசுவதாக பாஜக மற்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதையும் தெரியாமல் பேசவில்லை என்று சூர்யாவும் பதில் அளித்தார்.
சூர்யாவுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவு தெரிவித்தார். மேலும் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நல்ல கருத்துகளை பேசக் கூடாது. சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் உள்ளோம். சூர்யா விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இருப்பினும் சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

வருமைகொட்டிர்க்கு கீழ் உள்ள பெற்றோர் இல்லாத படிக்க வசதி இல்லாத 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாத எளிய மாணவ, மாணவிகளை அகரம் பவுண்டேஷன் மூலம் படிக்க வைக்கும் சூர்யாவுக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி பேச முழு உரிமை உள்ளது. அவரை கேள்வி கேட்கும் சிலருக்கு தான் தாங்கள் எதை பற்றி பேசுகிறோம் என்றே தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, மும்மொழி கொள்கை பற்றி பேசிய சூர்யாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விஜய்யின் அப்பா சந்திரசேகர் ஆதரவு அளித்தது சூர்யாவிற்கு மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுகவின் ஸ்லீப்பர் செல் ஜால்ரா வைகோ! கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார் !

0

திமுகவுக்கு வைகோ ஜால்ரா கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார். நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிமுக பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வேலூர் தேர்தலை சந்திக்கும் என கூறினார்.

நிருபர்களிடம் கூறியதாவது வேலூர் மக்களவை தேர்தலில், பாஜகவோடு கூட்டணி தொடரும் எனவும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில், மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாகவும் கூறினார். எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். அது இந்த அம்மாவின் அரசால் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 37 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்றது. அத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாகவும், இனி அதுபோன்ற வெற்றி அக்கட்சிக்கு கிடைக்காது எனவும் ஜெயகுமார் விமர்சித்தார்.

வைகோ சொல்வது எல்லாம் உண்மையாகி விடாது. அவர் முந்தைய தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்று ஒரு கூட்டணியை உருவாக்கி திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். திமுக ஒரு கொலைகார கட்சி ஏமாற்று கட்சி என விமர்சித்தார். ஆனால் இன்று திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வைகோ மீது தான் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதால் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாகவும் கூறினார்.

யார் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் மேடை பேச்சுக்காக நடிகர் அஜித்குமார் விமர்சனத்துக்கு உள்ளானார் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு அதிமுக ஜெய்குமார் திமுகவையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் விமர்சனம் செய்தார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமானநிலையத்தில் திமுகவை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

0

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனா சாந்தணு வாழ்க்கையில எத்தனையோ பேர் ஒளியேத்திவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. பார்த்திபன், தங்கர் பச்சான் போன்ற எத்தனையோ ஜாம்பாவான்கள் தலைகீழாக நின்று பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், தற்போது அந்த ரிஸ்க் மணிரத்னம் கைக்கு வந்திருக்கிறது.

எஸ்! மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவர் தற்போது ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘வானம் கொட்டட்டும்’ படத்தை மணிரத்னம் அவர்களின் உதவியாளர் தனசேகரன் என்பவர் இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் தற்போது புதியதாக சாந்தனு பாக்கியராஜ் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Director Maniratnam Sudden Decision-News4 Tamil News Online Cinema News in Tamil

மணிரத்னம் கதை திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் ப்ரீத்தா என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரத்குமார் – ராதிகா ஜோடி இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?

இவர் எடுத்த இந்த திடீர் முடிவால் மணிரத்னம் படத்தில் சாந்தணுவா..??? சாந்தணு வளர்ந்துட்டாரா.. இல்லை மணிரத்னம் எதுவும் சறுக்கிட்டாரா..?? என்று திரையுலகினர் குழப்பத்தில் உள்ளனர்.

பார்த்து மணி சார்.. தம்பியோட பவர் அப்படி..!

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

0

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொது மக்கள் வந்து கொண்டிருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறி வருகிறது சில தினங்களுக்கு முன்பு தான் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வர வேண்டாம்  என்று காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரே பத்திரிகைகள் மூலம் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அந்நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

ஏறத்தாழ நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டே கலெக்டர் காஞ்சிபுரம் அத்தி வரதரை  தரிசிப்பதை  ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என பத்திரிகைகள் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட ஆட்சியர் பொன்னையனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.

மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதை விட்டு விட்டு தவிர்க்க வேண்டும் என அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது என கூறிய முதலமைச்சர், இதனையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டணம் தெரிவித்தார்.

“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் பாதுகாப்பு தர உங்களால் முடியாதா…மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று பொங்கித் தீர்த்து விட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

0

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர்.

அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். பிரதமர் மோடி உலகளவில் அவர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘யூகவ்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் பொதுமக்களின் கருத்துகள், புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், பல நாடுகளில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பற்றி ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் இந்திய அளவில் விரும்பப்படும் நபர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பிரதமர் மோடி அதிகம் விரும்பப்படும் பிரமுகராக இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் வரிசையில் பிரதமர் மோடி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கடந்த ஆண்டு ஆய்வில் அவர் 8-வது இடத்தில் இருந்தார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் பிரதமர் மோடி 4.8 சதவீதம் பெற்றுள்ளார்.

இந்தியா வில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2-வது இடத்தில் இருக்கிறார்.
அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் முதல் 20 பேரில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவருக்கு அடுத்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார்.
இந்தியாவில் அதிகம் விரும் பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் பெண்களில் முதல் 20 இடங்களுக்குள் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் உள்ளனர்.

உலகளவில் அதிகம் விரும்பப் படும் பிரமுகர்களில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டி யலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஓப்ரா வின்பிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களில் முதல் 5 இடத்தில் மேரி கோம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் உள்ளனர். இவ்வாறு ‘யூகவ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகம் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சியா? கோவையா? வெற்றி பெறுவது யார்? TNPL!

0

உள்ளூர் கோப்பை உலக கோப்பை கிரிக்கெட் போல நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் சிமெண்ட் வழங்கும் TNPL 4 சீசன் நடந்து வருகிறது. நேற்றை முன்தினம் கேதர் ஜாதவ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோவை மற்றும் காஞ்சி அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடை பெறும். திண்டுக்கல் மற்றும் சென்னை சேப்பாக் அணிகள் மோதின முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
2-வது நாளான நேற்று 2 ஆட்டங்கள் நடந்தது. காரைக்குடி காளை- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘சமம்’ ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது. இதை தொடர்ந்து நான்காவது போட்டி இன்று நடக்கிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை மற்றும் பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் முதல் வெற்றியை பெற போகும் அணி யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது

கோவை அணியில் கேப்டன் அபினவ்முகுந்த், முகமது ஆசிக், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், காஞ்சி வீரன்ஸ் அணியில் கேப்டன் பாபா அபராஜித் விஷால்வைத்யா, கவுசிக் சீனிவாஸ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் காஞ்சி வீரன்ஸ் இரண்டு முறையும், கோவை கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இன்று வெற்றி பெறும் அணி எது என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காஞ்சியா? கோவையா? அபினந்த் முகுந்தனா? பாபா அப்ராஜித்தா?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?

0

சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி..  பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?

தளபதி விஜய் – அட்லீ கூட்டணியின் ஹாட் டிரிக் படைப்பான ‘பிகில்’ படம் பெருத்த எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் படிக்க: பிகில் அடிக்க வரான் பாரு வேட்டைக்காரன்!

காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை அட்வான்ஸாக ட்ரெண்ட் செய்து வந்ததாலும் அதன்பின் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட பாடல் வெளியானதாலும், கொஞ்சம் அமைதியாக இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் இன்ப செய்தியாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்கள் சலங்கை கட்டி ஆடிவருகிறார்கள்.

இந்நிலையில் இந்த அப்டேட்டிற்காக தற்போது ஒரு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. முதன்முதலாக விஜய், பெண்கள் கால்பந்து அணியுடன் இருக்கும்படி வெளியாகியுள்ள இந்த போஸ்டரை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் பல விஷயங்களை அவதானிக்கமுடிகிறது. இதில் ஒரு வீராங்கனையின் முகம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது என நம்பமுடிகிறது.

சும்மாவே அட்லீ இந்த விஷயத்தில் கில்லி, ஆசிட் வீச்செல்லாம் வேறு இருந்தால் கேக்கவா வேண்டும்..? இதை விஜய் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் ஒருவேளை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் விஜய்க்கு வேண்டப்பட்ட பெண்ணாக இருக்கலாம்.. அந்தப் பெண்ணுக்கு ஆசிட் வீசியவனை விஜய் தண்டிக்கலாம்.. அதைத்தொடர்ந்து விஜய்க்கு வேறு வேறு பிரச்சனைகள் கிளம்பலாம்..

என்ன அட்லீ அதானே..?

மேலும் படிக்க : அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!

0

திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது
கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

சட்ட சபை கூட்டத்தொடர் முடிந்து அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்றிரவு கோவை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் குறித்த கேள்வி எழுப்பிய செய்தியாளர், மக்களை பாதுகாக்க எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனை அரசு ஆதரிக்கும் எனக் கூறிய முதலமைச்சர் . இது மக்களுக்கான ஆட்சி மக்கள் விரும்பாத எதையும் இந்த ஆட்சி செய்யாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசியதாவது, கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. நாங்கள் அப்படி எந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.

மேலும் மாணவி ஒருவர் குத்து சண்டை போட்டியில் அனுமதிக்க படாததால் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து மாணவியின் பெற்றோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். அதாவது குத்து சண்டையில் இடம் தரமறுத்த கல்லூரி நிர்வாகத்தின் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இது மக்களுக்கான ஆட்சி எனவும் இது மக்கள் விரும்பாத எதையும் செய்யாது எனவும் தெரிவித்தார். திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. அந்த வாக்குறிதகள் என்றுமே நிறைவேற்ற முடியாது என அவர் கடுமையாக குற்றம் சாட்டினர்.