திங்கட்கிழமை, செப்டம்பர் 8, 2025
Home Blog Page 60

உங்களின் மலம் எந்த நிறத்தில் உள்ளது!! இதோ அல்சரின் டாப் 5 அறிகுறிகள்!!

0

ULCER: இந்த காலகட்டத்தில் மக்கள் எடுத்துக் கொள்ளும் மாறுபட்ட உணவு பழக்கம் துரித உணவுகள் என அனைத்தும் பலவித நோய்களுக்கு வழி வகுத்து விடுகிறது. அதிலும் குறிப்பாக டயாபடீஸ் பெண்கள் சந்திக்கும் பி சி ஓ எஸ், அல்சர், சிறுநீரக கோளாறு, இவை அனைத்தும் இளம் வயதினரை பெருமளவு தாக்குகிறது.

அல்சர் என்றால் என்ன?

நமது உடலில் இரைப்பை மற்றும் சிறுகுடலானது பாதிப்பை சந்தித்தால் வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அதாவது வயிற்று உட்பகுதியில் பாதிப்பை சந்திக்கும் போது இரைப்பை புண் உண்டாகிறது. தினசரி எடுத்துக் கொள்ளும் உணவை அரைக்க ஒரு அமிலம் உண்டாகும். அதன் வீரியம் அதிகரிப்பதிலிருந்து தங்களை பாதுகாக்க ஒரு வித எதிர்ப்பு சக்தியாக செயல்படும் திரவமானது அதன் செயல்பாட்டை குறைக்கும் பட்சத்தில் அல்சர் ஏற்படுகிறது.

அல்சரி முக்கிய ஐந்து அறிகுறிகள்:

முதலாவதாக அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் மந்தமாக இருப்பது போலவே காணப்படும். பசியின்மை வயிறு உப்பசம் அதுமட்டுமின்றி வயிற்று எரிச்சல் போன்றவை இருக்கும்.

இரண்டாவதாக அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். உங்களது மார்பில் நடுப்பகுதியில் எரிச்சல் காணப்படும். இந்த வயிற்று எரிச்சலானது உணவுக் குழாய் பகுதிக்கு வயிற்றின் அமிலம் செல்வதால் ஏற்படுகிறது.

மூன்றாவதாக குமட்டல் காணப்படும். எந்த உணவு சாப்பிட்டாலும் குமட்டல் போல் உணர்வு அல்லது ஒரு சிலருக்கு வாந்தி இருக்கும்.

நான்காவதாக மலத்தின் நிறத்தில் மாற்றம் உண்டாகும். உங்களுக்கு கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், அது செரிமான ரத்தம் என கூறுகின்றனர். இதை வைத்து வயிற்று அல்சர் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஐந்தாவதாக நமது உடலில் அல்சர் இருக்கும் பட்சத்தில் செரிமானத்தில் ஏற்படுத்தும் பிரச்சனையால் அதிகப்படியான எடை இழப்பு உண்டாகும்.

மீன் உடம்பை விட கண் மற்றும் தலை தான் பெஸ்ட்!! வாழ்நாள் முழுவதும்”Heart Attack”வராது!!

0

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மக்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தாலே பலவித நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் உணவு பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி தவிர்த்து கடல் சார் உணவுகளில் தான் பன்மடங்கு பலனை காண முடியும். ஏனென்றால் மீனில் தான் சாச்சுரேட் என்ற கொழுப்பு இருக்கிறது.

இதனால் மற்ற இறைச்சி சாப்பிட்டால் உடல் எடை போடக்கூடும். ஆனால் மீன் அப்படி இல்லை. இதில் சாச்சுரெட் அமிலம் உள்ளதால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளும். மேற்கொண்டு ஒமேகா 3 இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் முதல் குழந்தைகள் என பலரும் இதனை அதிகமாக உட்கொள்ளலாம். இதனையெல்லாம் தவிர்த்து, நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் மீன் உகந்தது.

எப்படி சொல்கிறேன் என்றால், மீனை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, தைராய்டு பாதிப்பு உள்ளிட்டவை குணமாகும். மேற்கொண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று எடுத்துக் கொண்டால் மூளைக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி மீன் எண்ணெயில் கூட பலவித சத்துக்கள் உள்ளது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த மீன் எண்ணெய் பயன்படுகிறது. சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க பெண்கள் மீன் எண்ணெய்யை உபயோகித்து சமைக்கலாம்.

மீன் கண் மற்றும் மீன் தலை பயன்கள்:

பலரும் மீன் சாப்பிட்டாலும் அதனின் கண் மற்றும் தலைப்பகுதியை விட்டு விடுகின்றனர். ஆனால் இதில் தான் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக மீன் கண் மற்றும் அதன் தலையை சாப்பிடுபவர்களுக்கு இதய சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராதாம். மாரடைப்பைக் கூட தடுக்க வழி வகுக்குமாம். மேலும் கண்பார்வையும் மேம்படும் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை ஒரு சில ஆய்வுகளில் உண்மை என்றும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

பெரியவர்கள்,குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இது கோடை காலத்தில் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.மல்கோவா,அல்போன்சா,பங்கனப்பள்ளி என்று பல ரக மாம்பழங்கள் இருக்கின்றது.

மாம்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்:

**இரும்புச்சத்து
**நார்ச்சத்து
**காரோட்டினாய்டு
**வைட்டமின் ஏ
**வைட்டமின் பி
**வைட்டமின் சி
**பொட்டாசியம்
**புரதம்
**சர்க்கரை சத்து

குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா?

சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில குழந்தைகளுக்கு இருக்கின்றது.நன்கு பழுத்த மாம்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

மாம்பழம் சாப்பிடும் குழந்தைகளுக்கு சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.அதேபோல் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த மாம்பழம் சாப்பிடலாம்.

மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

மாம்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.இரத்த சோகை வராமல் இருக்க மாம்பழம் சாப்பிடலாம்.ஆறு மாதமான குழந்தைகளுக்கு மாம்பழம் சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பழுக்காத மாம்பழம் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.மாம்பழத் தோல் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை பாதிக்கச் செய்துவிடும்.

சில குழந்தைகளுக்கு மாம்பழம் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தும்.ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் பாமக மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீட்டு போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக திமுக அரசு பல திசைகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

பாமகவில் உள்கட்சி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாமக தயாராகியுள்ளது.

பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா?

தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களே. சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் மேடையேற்ற முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. அவர் அதிமுகவுடனான கூட்டணியை மட்டுமே உறுதி செய்துவிட்டு புறப்பட்டார்.

இந்நிலையில், இதற்கு முன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்ட பாமக, தற்போது எந்த கூட்டணியில் இணையப்போகும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதாலேயே, பாமக NDAவா, இல்லையெனில் தனியே தானா என்பது குறித்து யூகங்கள் எழுகின்றன.

இந்நிலையில் ராமதாஸ் அதிமுகவுடன் செல்ல விருப்பமுள்ளதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாமக எப்போது வேண்டுமானாலும் அதனை உறுதிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 – தனி அணியா! ராமதாஸ் திட்டம் என்ன?

ஆனால் பாமகவில் இருந்து வரும் தகவல்களின்படி, ராமதாஸ் தனித்து போட்டியிடும் பிளானில் இருப்பதாக கூறப்படுகிறது. 2021 ல் தனித்து போட்டியிட்ட பாமக 4 சட்டமன்ற இடங்களை பெற்றது. ஆனால் கூட்டணியில் சென்றபோது 5 இடங்களையே பெற்றது. எனவே தனியே போட்டியிட்டு கணிசமான வெற்றியை காணலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வன்னியர் உள் இடஒதுக்கீட்டு போராட்டம் மீண்டும்?

2021 தேர்தலுக்கு முன்பு பாமக வன்னியர்களுக்காக 10.5% உள்இடஒதுக்கீட்டை கோரி போராட்டம் நடத்தியது. அப்போது சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் ஆளும் அதிமுகவுக்கு இது பலத்த நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் அதிமுக அரசு உடனடியாக அந்த இடஒதுக்கீட்டை அறிவித்தது.

2021 தேர்தலில் இதனால் அதிமுக-பாமக கூட்டணிக்கு வன்னியர் வாக்குகள் திரண்டன. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. 2026 தேர்தலை முன்னிட்டு பாமக மீண்டும் இந்த விவகாரத்தை எடுத்து திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை அவ்வப்போது பாமகவினர் விமர்சித்து வந்துள்ளனர்.

இந்த உள்இட ஒதுக்கீட்டை எதிர்த்து தென் மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்துக்கு எதிராகவும், வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக அனுபவித்து கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர்கள் பேசியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு மூலம் உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட பின்புலமாக திமுக வழக்கறிஞர்கள் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்றால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்ட திமுகவுக்கு பெருத்த அடி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை சிக்கலில் திமுக?

இந்நிலையில் பாமக போராட்டத்தை அறிவித்தால் அதை  திமுக அரசு எப்படி கையாளும் என்பது முக்கியம். போராட்டத்தால் சாலை மறியல் உள்ளிட்டவைகளால் பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அது திமுகவுக்கு எதிராகப் போகலாம்; அதேபோல் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் திமுக அரசு வன்னியர்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை பாமக ஏற்படுத்தும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழுக்கள் எதிர்ப்பு?

மேலும், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகங்களின் எதிர்ப்பு உருவாகும். எனவே, எந்தவிதமாக பார்த்தாலும் இந்த விவகாரத்தில் பாமக, திமுக அரசுக்கு கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது என்பது தெளிவாகிறது.

அதே நேரத்தில் இதற்கு திமுக அரசு எவ்வாறு பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்குமா?

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.பி. இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆறு எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி, ஜூலை மாதத்துடன் திமுக எம்.பி.க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இந்த ஆறு இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19 அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போதைய எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் அதிமுகவுக்கு கிடைக்கும் இரண்டு இடங்களுக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்த வட்டாரங்களில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் நிலவுகின்றன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இதில் ஒரு இடம் வழங்கப்படலாம் என்ற கருத்துக்கள் எழுகின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊடகங்களில் கட்சியின் முக்கிய பேச்சாளராக ஜெயக்குமார் செயல்பட்டிருந்தார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால் மாநிலங்களவை இடம் கேட்டும் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை.

2022 ஆம் ஆண்டிலும் அவர் முயற்சி செய்தாலும், ஓபிஎஸ் ஆதிக்கத்தால் அவரது ஆதரவாளர் மட்டும் எம்.பி. ஆனார். இதனையடுத்து, ஒற்றைத்தலைமை ஆதரிக்க தொடங்கி அதிமுக பங்கில் புதிய நிலைப்பாடுகளை எடுத்தவர் ஜெயக்குமார். தற்போது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கும் அவர், பாஜகவுடன் கூட்டணி நிலைப்பட்டால் ஏற்பட்ட பாதிப்பால் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுடனான கூட்டணி காரணமாக தான் ராயபுரத்தில் தோல்வியடைந்ததாகவும், அதனால் ஊடகங்களை தவிர்த்து வந்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் மாநிலங்களவையில் அவருக்கு ஒரு இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயக்குமாரின் எதிர்கால அரசியல் வடசென்னை மையமாகவே தொடரும் என்றும், அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்பதால், மாநிலங்களவை இடத்தில் நீண்ட காலம் இருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். எனவே, அவருக்கு எம்.பி. சீட் அளிக்க வாய்ப்பு என்பது 50–50 என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

கூட்டணி சிக்கலை பொதுவெளியில் போட்டுடைத்த நயினார்! பாயிண்டை பிடித்த திருமாவளவன் 

முன்னதாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவாகியிருந்தாலும், இரு கட்சிகளும் மனமுழுதாக ஒருமித்த நிலைமைக்கு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதை அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று உள்ளன.

மறுபுறம், பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதாகவும், கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்த நிலையில் அதை தொடர்ந்து மறுத்திருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச்சில் திடீரென டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததைக் கொண்டே அதிமுக – பாஜக கூட்டணி April 11 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கும் பாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த கூட்டணியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் “மிரட்டலால் உருவான கூட்டணி” என்று விமர்சித்துள்ளன. ஆனால், “திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்ற குறைந்தபட்ச ஒப்பந்தத்தின்படி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என அதற்கு எடப்பாடி விளக்கம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், திருச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக எதிரணி வலுவாக உள்ளதாகவே நயினார் நாகேந்திரனும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், திமுகவை எதிர்கொள்ள முரண்பாடுகளை மறந்து விருப்பமுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு குழுவாக சேர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதிலிருந்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்தம் இல்லாதது தெளிவாகிறது” என்றார்.

மேலும், “அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததாகச் சொன்னாலும், அதற்குள் உண்மையான பிணைப்பு ஏற்படவில்லை. அமித்ஷா மற்றும் எடப்பாடி சந்திப்புக்குப் பிறகும், இரு கட்சிகள் ஒரே மனதுடன் செயல்படவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதும், அதனை மறுத்த எடப்பாடியின் பின்விளக்கமும் இதற்கு சாட்சி” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நேரத்தில், “தமிழ் என்பது திராவிட மொழிகளின் மூலமொழி” எனும் கருத்தைப் பற்றி எழுந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தேவநேய பாவானர் போன்ற மொழியியல் நிபுணர்கள் தமிழ் மொழியின் பாரம்பரியம் குறித்து தெளிவாகக் கூறியுள்ளனர். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழின் வழியாகவே உருவானவை என்பதே வரலாற்று உண்மை” என்றார்.

500 ரூபாய் நோட்டுக்கு வரப்போகும் தடை.. முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம்.

தற்போது மத்திய அரசு எடுக்கக் கூடிய பல்வேறு முடிவுகளில் நம்முடைய மாநிலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக ஆந்திரா விளங்கி வரும் நிலையில் மேம்பாடு, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியாக இவற்றை தாரக மந்திரமாக கொண்டு நாம் செயல்படுகிறோம். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும்படி கடந்த காலத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது.

புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் கிடையாது. நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றது. எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் ஏற்படுவதில்லை அதனால் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் இது அரசியலுக்கு நிச்சயம் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். மேலும் கருப்பு பணத்தை ஊக்குவிப்பதை நாங்கள் எப்பொழுதும் ஆதரிக்கவில்லை எனவும் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

0

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் ஜூன் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ள நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி இருக்கின்றார். இந்த வழக்கில் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்டனை விவரம் குறித்து ஞானசேகரன் நீதிபதியிடம், தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தன்னுடைய தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் அதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கு விசாரிக்கப்பட்டது உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தனர் . ஞானசேகரனுக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஜனவரி 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீசார் சுமத்தியுள்ளார் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து ஞானசேகரன் கோரிக்கை வைத்து வந்தார். இந்நிலையில் குற்றவாளி மீது 35 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் பல வழக்குகளில் தண்டனையும் சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகள் பேங்க் அக்கவுண்ட்டை உடனே செக் பண்ணுங்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0

தமிழ்நாட்டில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. அதில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என செயல்பட்டு வரும் நிலையில் 24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை, 16 தனியார் என 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 காலகட்டத்தில் 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்தது.

அரவை மேற்கொண்ட சுமார் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தாங்கள் கொள்முதல் செய்து அரவை செய்த 10.30 லட்சம் மெட்ரிக் டன் கரும்பிற்கு 329.34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அந்த பணத்தை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்புத் தொகையை வழங்கி உள்ளனர். மேலும் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை கடனாக 97.77 கோடி ரூபாய் தர அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணமும் நிலுவை இல்லாமல் முழுமையாக வழங்கி உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக கவிஞர் சல்மா தேர்வு – யார் இந்த கவிஞர் சல்மா?

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்கள்.

தற்போது பதவியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா (திமுக) மற்றும் வைகோ (மதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 முதல் தொடங்கி முடிவுகள் ஜூன் 19 அன்று அறிவிக்கப்படும்.

கவிஞர் சல்மா – ஒரு பார்வை:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிஞர் சல்மா. இவரது இயற்பெயர் ரொக்கையா மாலிக். சிறுவயதில் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் விட்டுவிட்டு திருமணமான இவர், எழுத்து வழியாக தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். இவரது கணவர் திமுக பின்புலத்தை கொண்டவர் என்பதால், சல்மாவும் அரசியல் சாசனத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இலக்கியத்திலும் அரசியலிலும்:

சல்மாவின் கவிதைகள், குறிப்பாக “இரண்டாம் ஜாமங்களின் கதை”, “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்”, மற்றும் “பச்சை தேவதை” போன்ற நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2018-ல், திமுக சார்பில் தந்தை பெரியார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதற்குபின், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக பணியாற்றிய சல்மா, 2006 சட்டமன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை.

தற்போது:

பின்னர், தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவியாக நியமிக்கப்பட்ட இவர், தொடர்ந்து திமுக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளராகவும் செயல்பட்டார். தற்போது, திமுக செய்தி தொடர்பு பிரிவில் இணைச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், அவர் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு என்பதாலும் மிக முக்கியமானதாகும்.