Home Blog Page 63

நீங்க கூட்டத்துக்கு மட்டும் வந்தா போதும்.. தனிப் போட்டிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விஜய்!!

0

TVK: தமிழக அரசியலில் புதிய அலைகளை எழுப்பி வரும் நடிகர் விஜய்யின் வருகை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த அவரது பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் பெருமளவில் மக்கள் கூட்டங்களால்  நிறைந்தன. நகரம், கிராமம் என எங்கு சென்றாலும் மக்கள் பெருமளவில் வருகை தந்து அவரது உரைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளது.  முன்னதாக, விஜய் புதிய கட்சி அமைத்து விட்டார் என்ற அறிவிப்பு வெளியான போது, அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்தது.

ஆனால் தற்போது, அவரது பொதுக் கூட்டங்களில் திரளும் மக்கள் கூட்டம் விஜய்க்கு கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. மக்கள் ஆதரவு மட்டுமே அவருக்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறி இருக்கிறது. இதன் மூலம் அதிமுக மற்றும் திமுக ஆகிய பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியையும்  விஜய் தம் பக்கம் இழுப்பதாக  அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்போர் அவருக்கு வலுவான ஆதரவாக மாறியிருக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் முறையான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டால், தனியாகவே போட்டியிட்டு வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு  அவருக்கு உள்ளது என்ற நம்பிக்கை அவரது ஆதரவாளர்களிடையே பரவியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் இது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என மதிப்பிடப்படுகிறது. விஜய்யின் இந்த அரசியல் பயணம், இவ்வாறான புதிய வீயூகமும் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருகிறது. 

நால்வர் அணியில் விருப்பமில்லை.. விலகிய ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர்!! கலக்கத்தில் ஓபிஎஸ்!!

0

ADMK DMK: நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தங்களுடைய ஈடுபாட்டை முழுமையாக செலுத்தி வருகின்றன. கூட்டணி வியூகங்களும், மக்களை சந்திக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் ஒரு அணியாக உருவாகியுள்ளனர். துரோகத்தை வீழ்த்துவோம், அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வில் இவர்களின் ஆதரவாளர்களுக்கே விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஓபிஎஸ், தினகரன், போன்றோர் அணியிலிருந்து பலரும் விலகி, அதிமுக, திமுக, தவெக போன்ற பல கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.

இவரின் இந்த விலகலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஓபிஎஸ் நால்வர் அணியில் இணைந்ததால் மனோஜ் பாண்டியனுக்கான ஆதரவு குறைந்து வருவதை அவர் உணர்ந்துள்ளார். மேலும், இந்த கூட்டணி அமைக்கபடுவதற்கு முன்பு மனோஜ் பாண்டியனின் கருத்தை ஒரு முறை கூட ஓபிஎஸ் கேட்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். மனோஜ் பாண்டியனின் தந்தை பி.ஹெச்.பாண்டியன் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் வந்த இவர், முதலில் அதிமுகவிலிருந்து விலகி, ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அந்த அணியிலிருந்தும் விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்க போவது இந்த கட்சி தான்.. வெளியான முக்கிய கருத்து கணிப்பு!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய கருத்து கணிப்பில், அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்க போகும் சக்தி தமிழக வெற்றிக் கழகம் தான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு, கடந்த சில மாதங்களில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் நிலையை ஆராய்ந்ததன் பின்னர் வெளியிடப்பட்டது.

குறிப்பாக, விஜய் தலைமையிலான தவெக கடந்த செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற பெரிய பொதுக் கூட்டத்திற்கு பிறகு கட்சி மீண்டும் வலிமை பெற தொடங்கியது.  அதன்பின் விஜய் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார். இதேவேளை, அதிமுகவில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் செங்கோட்டையன் பிரிவினைகள் இன்னும் தீராத நிலையில் இருப்பதால், அதிமுக வாக்கு வங்கி ஒரு அளவுக்கு சிதறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், தவெக எந்த அணியுடன் கூட்டணி அமைக்கிறது அல்லது தனித்து போட்டியிடுகிறதா என்பதே அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடும் என அந்த கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம், மக்கள் மனநிலை மாறிவரும் நிலையில் விஜய்யின் தாக்கமே அடுத்த தேர்தலை தீர்மானிக்கும் சக்தி என்று அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர். இதன் மூலம், அதிமுகவின் வெற்றி அல்லது தோல்வி, தவெக எடுக்கும் அடுத்த அரசியல் முடிவைச் சார்ந்தே இருக்கப் போகிறது என்பது தெளிவாகியுள்ளது.

அதிமுகவின் வெற்றிடத்தை நிரப்பும் விஜய்யின் வருகை.. எதிர்க்கும் மூத்த தலைவர்கள்!!

0

ADMK TVK: நீண்டகாலமாக அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தலைமையில் வெற்றிடம் நிலவி வருகிறது. கட்சியின் தலைவராக இபிஎஸ் பதவியேற்றாலும், கட்சியின் செயல்பாடுகள் பழைய நிலையை அடையவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அந்த இடத்தை நிரப்ப முயன்றாலும், அம்மாவை போல  மக்கள் தொடர்பு கொண்ட ஒருவரை அவர்களால் மீண்டும் உருவாக்க முடியவில்லை. இதனால், கட்சியினரிடையே ஒரு மனச்சோர்வு நிலவி வந்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியதன் பின்னர், அதிமுகவின் சில பிரிவினர்கள் அந்த வருகையை ஒரு புதிய நம்பிக்கையாக காண ஆரம்பித்துள்ளனர். இதனால் விஜய்யை நோக்கி நகர ஆரம்பித்த இவர்களுக்கு, மக்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்ற விஜய்யின் இமேஜ், சமூகப் பணி, மற்றும் இளைஞர்களிடையேயான தாக்கம், அதிமுகவின் எழுச்சிக்கு வழி காட்டக் கூடும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஏற்கனவே கட்சியில் தலைமை போட்டியும், பிரிவினையும் உருவாகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு புதிய உற்சாகம் தேவைப்படுவதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது குறித்து  சில மூத்த தலைவர்கள் அதிமுகவின் அடையாளம் ஜெயலலிதா என்பதால், புதிய தலைவரின் வருகை கட்சியில்  மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். எப்படியாயினும், விஜய்யின் அரசியல் பயணம் தொடங்குவதால் தமிழக அரசியலில் அதிமுகவுக்குள் புதிய சிந்தனை உருவாகி வருவது உறுதி. அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், அவரின் வழியிலேயே அதிமுக மீண்டும் எழும் என சிலர் நம்பிக்கை கொள்கின்றனர்.

இத மட்டும் பண்ண விஜய் தானா வருவாரு.. இபிஎஸ் போட்ட பக்கா பிளான்!!

0

ADMK TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில், மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. மேலும் புதிதாக உதயமாகியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.

ஆனால் விஜய் இதற்கு பிடி கொடுக்காமல் உள்ளார். கொள்கை எதிரி என்று கூறிய பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதும், முதல்வர் வேட்பாளராக நான் தான்  நிற்பேன் என்ற கோரிக்கையை இபிஎஸ் ஏற்காததும் தான் இதற்கு முழு முதற் காரணமாகும். இதனை தொடர்ந்து தவெகவின் முக்கிய புள்ளி ஒருவர், தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறி அதிமுக-தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கோபமாக மாறியது. இதன் காரணமாக இபிஎஸ் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். விஜய் தனது முதல் தேர்தலிலேயே தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது, மேலும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கு தமிழகத்தில் போதிய அளவு செல்வாக்கு இல்லாததால் அதனுடன் கூட்டணி வைத்தாலும் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சிகளும் திராவிட கட்சிகளை விட்டு விட்டு தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியம் குறைவு.

இதனை அறிந்த இபிஎஸ், முதலில் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும் தேமுதிக, பாமக உடன் கூட்டணியை உறுதி செய்து விட்டால் அதிமுக சக்தி வாய்ந்த கூட்டணியாக மாறிவிடும். இதன் பிறகு விஜய் தானாக கூட்டணிக்கு வந்து விடுவார் என்று நினைக்கிறது. இபிஎஸ்யின் இந்த வியூகம் விஜய்யிடம் எடுபடுமா இல்லை விஜய் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய் காங்கிரஸுக்கு வைத்த செக்.. ரகிசய பேச்சு!! அபேஸ் ஆகும் திமுக கூட்டணி!!

0

CONGRESS TVK DMK: தமிழக அரசியல் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்ற பிரதான கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்த காலம் போய், தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றி எதிர் கட்சியாக அமரும் நிலையில் உள்ளது. விஜய் கட்சி துவங்கிய நாள் முதல் அதற்கான ஆரவாரமும், ஆர்பரிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறாறோ அந்த கட்சி ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்கட்சியாக வரும் வாய்ப்பு உள்ளது.

எனவே அதிமுக அண்மை காலமாக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதால், 2026 சட்டமன்ற தேர்தலில், எதிர்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால், விஜய் இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காமல் உள்ளளர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், விஜய் தன்னுடைய நெருங்கிய நண்பரான, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், விஜய் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கையும், பாதிக்கு பாதி தொகுதியையும் தருவதாக கூறியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு முறையான தொகுதிகள் வழங்கப்படாததால் காங்கிரஸ் தலைமையும் தவெக கூட்டணியில் இணைவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது . இந்த கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ஜனவரியில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.. உறுதி செய்த இபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர்!!

0

ADMK: அதிமுகவின் பிரதான எதிர் கட்சியாக அறியப்படும் திமுக ஆரம்ப காலத்திலிருந்தே வாரிசு அரசியல் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிமுகவிற்கு திமுக மேல் குற்றம் சாட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் வாரிசு அரசியல் பிரச்சனையை தன்னுடைய முதன்மை ஆயுதமாக வைத்து செயல்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் என்பது திமுகவில் மட்டுமல்லாது பாமகவிலும் இருந்து வந்தது. தற்போது அந்த வாரிசு அரசியல் உச்சத்தை எட்டியுள்ளது.இந்நிலையில், திராவிட கட்சியான அதிமுகவில் இந்த நிலை இல்லை என்று பலரும் நினைத்து வந்த சமயத்தில் அதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சமீப காலமாக முக்கிய தலைவர்களின் விலகலும், இபிஎஸ்க்கு எதிரான வாதமும் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில், கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்போது கட்சியிலிருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும் போது, அதிமுகவில் இபிஎஸ்யின் மகன், மைத்துனன், மாப்பிள்ளை போன்றோரின் தலையீடு அதிகரித்துள்ளது நன்றாக தெரிகிறது என்று அவர் கூறினார்.

இதற்கு இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, எடப்பாடிக்கு அவரது சொந்த மகன் உதவி செய்வதில் என்ன தவறு இருக்கிறது, இது ஒன்றும் சட்ட விரோதமான செயல் கிடையாது. இதனை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது என்று கூறினார். இவரின் இந்த  கருத்து, செங்கோட்டையனின் கூற்றை உறுதி செய்ததோடு  மட்டுமல்லாமல், அதிமுகவிலும், வாரிசு அரசியல் தலை தூக்கி விட்டது என்பதற்கு சான்றாகவே பார்க்கப்படுகிறது. 

அதிமுக என்றால் இரட்டை இலை தான்.. இபிஎஸ் அல்ல!! உண்மையை உணர்ந்த இபிஎஸ்!!

0

ADMK: தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் உயிர்பெறும் சூழலில் உள்ளது.  இந்நிலையில் மக்களின் வாக்கு இரட்டை இலை சின்னத்துக்கே, இபிஎஸ்க்கு அல்ல என்ற கருத்து தற்போது தீவிரமாக பேசப்படுகிறது.  இபிஎஸ் தலைமையில் கட்சி இயங்கி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவரின் தனிப்பட்ட தாக்கம் குறைந்து விட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2021 தேர்தலில் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் மக்கள் வாக்கு குறைந்தது, பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் கூட அதிமுக முன்னிலை பெறாதது, இபிஎஸ் மீது நம்பிக்கை குறைந்ததற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரட்டை இலை என்ற சின்னம் தமிழக மக்களின் மனதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அடையாளமாக இன்னும் உறுதியாய் நிலைத்திருக்கிறது. அது தான் வாக்காளர்களின் உணர்ச்சி. இபிஎஸ் உடன் இணைந்த பல மூத்த தலைவர்கள் வெளியேறியிருப்பதும், செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தனி அணிகள் உருவாக்குவதும் கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் இபிஎஸ்க்கு வாக்களிக்கவில்லை, இரட்டை இலையை பாதுகாப்பதற்கே வாக்களிக்கிறோம் என்ற மனநிலையுடன் உள்ளனர் என்ற அரசியல் வட்டாரங்களின் கருத்து வலுப்பெறுகிறது. இதை உணர்ந்த இபிஎஸ், கட்சியின் அடையாளச் சின்னத்தை மையப்படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவரின் தனிப்பட்ட பிரபலத்தை உயர்த்துவது கட்சிக்கு அடுத்த தேர்தலில் முக்கிய சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாங்க திமுகவின் பி டீம் இல்ல.. பாஜகவின் பி டீம்!! நிரூபித்த டிடிவி தினகரன்!!

0

AMMK BJP DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர முனைப்பில் உள்ளன. அந்த வகையில் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறார். செங்கோட்டையன், ஒபீஎஸ், சசிகலா, தினகரன் ஒன்றாக இணைந்த அதிமுக தலைமையை எதிர்த்த போது, இவர்களை அதிமுகவிலிருப்பவர்கள் திமுகவின் பி டீம் என்று கூறி வந்தனர்.

ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்த்தால், இவர்கள் நால்வரும் பாஜகவின் பி டீமாக இருப்பது போல தோன்றுவதாக பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து நால்வர் அணி உருவாவதற்கு முன்பு வரை, பாஜகவை பல இடங்களில் குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்த SIR யை திமுக எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டம் கூட்டிய போது அதில் கலந்து கொள்ளாத தினகரன் அதற்குரிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது, SIR யை கண்டு திமுக ஏன்  பயப்படுகிறது, தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கிறது. அப்படி இருக்க திமுகவை மீறி என்ன சதி வேலை நடந்து விட போகிறது என்று கேள்வி எழுப்பினார். இவரின் இந்த கருத்து இவர் பாஜகவின் பி டீமாக இருப்பதை உறுதிபடுத்துகிறது.  இது இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாமக கூட்டணியில் டுவிஸ்ட்.. எம்எல்ஏ அருள் பர பர பேட்டி!! களைகட்டும் தேர்தல் களம்!!

0

PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளனைத்தும், தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் இடையில் மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, தலைவர் பதவி மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கட்சியின் முக்கிய பதிவியிலிருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கி, அன்புமணியை மேலும் கோபப்படுத்தினர். மேலும் தனது மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவியும் வழங்கினார். இது பேசுபொருளான நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், பாமக இரண்டாக பிரிந்து இருப்பதால், இவர்கள் எந்த அணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அன்புமணி ஒரு புறம் அதிமுகவுடன் கூட்டணியில் இணைவதற்கான வேலைபாடுகளை செய்து வந்த நிலையில், ராமதாஸ் திமுக உடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்த இக்கட்டான நிலையில், பாமகவை சேர்ந்த எம்எல்ஏ அருள் கூட்டணி குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அன்புமணி, ராமதாஸ் இருவருமே ஒரே கூட்டணியில் கூட இணையலாம் என்று கூறியுள்ளார். இதனால் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள மோதல் முடிவுக்கு வந்து விட்டதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. இவர்கள் இணைய போகும் கூட்டணி எது என்பது பற்றிய விவாதமும் தற்போது சூடுபிடித்துள்ளது.