Home Blog Page 64

கெத்து காட்டிய இபிஎஸ்க்கு விழுந்த பலத்த அடி.. செங்கோட்டையனை நீக்கியது இவ்வளவு தப்பா!!

0

ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகப்படியான மக்கள் ஆதரவையும், நம்பிகையையும் கொண்டிருந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அதிமுக மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் பலர் கூறி வருகின்றனர். இவர் பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் நம்பிக்கை குறியவர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும்  கட்சியிலிருந்து நீக்கினார்.

இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. பதவியின் மேல் இருக்கும் ஆசையால் தான் எபிஎஸ் இது போன்ற செயல்களை செய்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கட்சியின் முக்கிய முகமான எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சிக்கு பணியாற்றி வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிகளவில் ஆதரவாளர்கள் இருப்பதால், இவரின் நீக்கம் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

தற்போது அது நிரூபனமாகியுள்ளது. செங்கோட்டையன் மேற்கு மண்டலத்தில் அதிகளவு மக்களின் செல்வாக்கு பெற்றிருப்பதால், இவர் இணைந்துள்ள நால்வர் அணியிலிருந்து,  இவர் மேற்கு மண்டலத்தில் முக்கிய வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையனை எதிர்த்து நின்றால் தோற்று விடுவோம் என்ற பயத்தினால் பின் வாங்குகிறார்களாம். இதுவே இபிஎஸ்யின் முதல் தோல்வியாக கருதப்படுகிறது. 

குமுறிய திமுகவின் முக்கிய முகம்.. கலக்கத்தில் ஸ்டாலின்!! தொடரும் விரிசல்!!

0

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திராவிட கட்சிகள் தங்கள் செல்வாக்கை மக்கள் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளனர். தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகளும் தேர்தலுக்காக பல்வேறு திட்டமிடுதலை செய்து வருகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சியை பிடித்திட வேண்டுமென போராடி வருகிறது.

ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறது. முதலில், திமுக ஆட்சியில், இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார், அடுத்து கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்துவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் திமுக கூட்டணியில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் இவ்வாறான பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பதென்று தெரியாமல் திணறி வரும் திமுக தலைமைக்கு, மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் SIR மேலும் சவாலாக உள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து பலரும் விலகி, அதிமுக, தவெக கூட்டணியில் இணைந்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.

திமுகவின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் வைரமணி, மாவட்ட செயலாளரை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள், திரும்ப திரும்ப இதை நான் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. இந்த பதவியை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரின் இந்த கருத்து திமுக தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சிறிதும் மதிக்கவில்லை என்பதை  நிரூபித்திருக்கிறது. மேலும் வைரமணி கூடிய விரைவில், திமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தல் வரைக்கும் தான் தளபதியின் நடிப்பு.. ரிசல்டுக்கு அப்புறம் எதிரியுடன் தான் கூட்டணி!!

0

TVK BJP: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் 4 நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு அணியாக சேர்ந்து அதிமுக தலைமையை எதிர்ப்பது  பெரும் விவாதமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய்க்கான இந்த ஆதரவும், ஆர்பரிப்பும் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டுமென அதிமுகவும், பாஜகவும் முயற்சித்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில், விஜய்யின் குரலாக அதிமுக ஒலித்தது, விஜய்க்கு உதவுவதாக கூறி பாஜக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டது போன்ற பல்வேறு விஷயங்கள் விஜய்க்கு ஆதரவாகவே இருந்தது.

ஆனால் விஜய், கொள்கை எதிரி என்று கூறிய பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தன்னுடைய எதிர்கால அரசியலுக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்து இவர்களின் கூட்டணிக்கு செவி சாய்க்காமல் உள்ளார். இதனால் விஜய் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதில் புதிய திருப்பமாக, விஜய் ஒரு மாற்று வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.

தேர்தல் நேரத்தில், தனித்தோ அல்லது தவெக கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியுடனோ கூட்டணி அமைத்து, தேர்தல் முடிந்த பின்னர், பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படலாம் என்று திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று விடலாம் என்று விஜய் யூகிப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

நால்வர் அணியுடன் இணையும் இரண்டு முக்கிய கட்சிகள்.. திராவிட கட்சிகளுக்கு பேரதிர்ச்சி!!

0

DMDK PMK: தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரபோகிறது. இந்நிலையில் திராவிட கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்லாமல், தேமுதிக, பாமக, தவெக தொடங்கி சிறிய கட்சிகள் வரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டது என்று கூறப்படும் நிலையில், தேமுதிக,  திமுக-அதிமுக என இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது.

இந்நிலையில், புதிதாக செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் நால்வர் அணியாக உருவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நால்வரும், துரோகத்தை எதிர்போம், அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சபதம் எடுத்துள்ளனர். அந்த வகையில், திராவிட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் நால்வர் அணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இணைந்தால் இரட்டை இலக்கத்தில் தொகுதியும், ஆட்சி பங்கும் கிடைப்பது சந்தேகம். அதனால் இந்த நால்வர் அணியுடன் இணைந்தால், தேமுதிக, பாமக கட்சிக்கு மதிப்பும், மரியாதையும் பெருகும். மேலும், அதிமுகவில் அதிகளவில் ஆதரவை கொண்டுள்ள முக்கிய முகங்களையே கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, அக்கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ளதை அறிந்த, தேமுதிக, பாமகவும் நால்வர் அணியில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

திமுக கூட்டணியில் அதிர்வு.. புதிய கட்சியை நோக்கும் சிறு கட்சிகள்!! அச்சத்தில் ஸ்டாலின்!!

0

DMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பல சிறு கட்சிகளில் அச்சம் உருவாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும், தங்களது தனித்துவ அடையாளம் மங்கிவிட்டது என்ற உணர்வு அந்த கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவின் மிகுந்த ஆதிக்கத்தால், கூட்டணி கட்சிகளின் குரல் குறைந்து விட்டதாகவும், தொகுதி ஒதுக்கீடு மற்றும் பதவி வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் அரசியல் சூழல் மாறியிருக்கிறது. மக்கள் மத்தியில் தவெக உருவாக்கிய பெரும் தாக்கம், இளம் வாக்காளர்களிடையே பெரும் ஆதரவு பெற்றுள்ளது. இதனால், திமுக கூட்டணியில் உள்ள சில சிறு கட்சிகள் தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக தவெகவுடன் இணையும் வாய்ப்புகளை ஆராய ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முந்தைய தேர்தல்களில், திமுக கூட்டணியில் இருந்தாலும் பல கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

அந்த தோல்விகளின் பின்னணியில், தங்களது அடிப்படை வாக்கு வங்கியை மீட்டெடுப்பதற்காக, இக்கட்சிகள் தனி அடையாளத்தை நிலைநாட்ட விரும்புகின்றன. இதனால், வரும் மாதங்களில் திமுக கூட்டணியில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனவும், விஜய்யின் தவெக அதற்கான புதிய சக்தியாக மாறும் சாத்தியம் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். தமிழக அரசியலில் அடுத்த கட்ட கூட்டணி தவெகவை மையமாக கொண்டே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனை நீக்கியது விஜய்காகவா.. திடுக்கிடும் தகவல்!! இபிஎஸ்யின் பக்கா பிளான்!!

0

ADMK TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது. விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில் தவெகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர், தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லியது, செங்கோட்டையனின் நீக்கம் மற்றும் அவர் இணைந்த புதிய அணி இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால், இது இபிஎஸ் போட்ட பிளானாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறபட்டதால், இபிஎஸ் மிகவும் வேதனையில் இருந்தார்.

இதனால் விஜய்யை நேரடியாக கூட்டணியில் சேர்க்க முடியாது என்பதை அறிந்த இபிஎஸ், செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்துகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிய போது டெல்லி சென்ற அவர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை எந்த பலனையும் தரவில்லை என்று அனைவரும் நினைத்து வந்தனர்.

ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் தான் இவ்வாறான திட்டம் தீட்டப் பட்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் குறைவு. அதனால் இந்த நால்வர் அணி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் சேர்த்து விட்டால், அதன் பிறகு அவர்களை மெல்ல மெல்ல அதிமுக-பாஜக உடன் இணைத்து விடலாம் என்று இபிஎஸ் நினைக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிக்கையாளரான செந்தில்வேல், இந்த நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி உடந்தையாக இருக்கிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

விஜய் திமுக அதிமுக இரண்டுக்கும் சரணடைய மாட்டார்.. உறுதியான நிலைப்பாட்டின் பின்னணி!!

0

TVK ADMK DMK: தமிழக அரசியலில் சமீபகாலமாக நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் புதிய அலைகளை கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக திராவிட கட்சியான அதிமுக எதிர்காலத்தில் விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், விஜய்யின் அண்மை நடவடிக்கைகள் அவரது அரசியல் பாதை தனித்துவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் இணையும் வாய்ப்பு இல்லை.

கரூரில் நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு தவெகவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து வரும் நவம்பர் 5ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக விஜய் அறிவித்திருப்பது அவரது கட்சி மீண்டும் செயலில் நுழைவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதேசமயம், அதிமுக அணிகள்  விஜயுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்த நிலையில், விஜய் தனது கட்சியின் சுய நிலைமைக்கும், கொள்கை திசைக்கும் முக்கியத்துவம் தருவதாக கூறியுள்ளார். அவரை சுற்றியுள்ள நபர்கள் விஜய் எந்தக் கட்சியுடனும் சரணடைய மாட்டார்.

மக்கள் நலனே முதன்மை, அதற்காகவே தனியாக போராட விரும்புகிறார் என்று தெரிவிக்கின்றன. அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால் தவெக இதுவரை கவர்ந்துள்ள இளைஞர்களின் வாக்குகள் குறையும் என அவர் கருதுவதாகவும் தகவல் வெளியாகின்றன. இதனால், வரவிருக்கும் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனியாக களமிறங்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் மூன்றாவது முக்கிய சக்தியாக உருவெடுக்க முயலும் விஜய்யின் அரசியல் பயணம் புதிய பரிமாணத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனக்கு வருத்தம்பா.. இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் முக்கிய அமைச்சர்!! தொடரும் பிரிவினை!!

0

ADMK: பல வருடங்களாக அதிமுகவின் முன்னாள் மற்றும் மூத்த அமைச்சராக அறியப்பட்டு வருபவர் செல்லூர் ராஜு. இவர் சந்தித்த முதல் தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போது கூட்டுறவு அமைச்சராக உள்ளார். செல்லூர் ராஜு அண்மையில் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்றும் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தான் அதிமுகவில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும், இந்த நேரத்தில் தனிப்பட்ட ஈகோகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கும் எனக்கும் கூட தான் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை எல்லாம் நான் ஊடகங்களிடம் சொல்ல முடியுமா? அதனை தனிப்பட்ட முறையில் தலைமையிடம் சொல்லி தீர்க்க வேண்டும் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவரின் இந்த கருத்து, இபிஎஸ்க்கும், செல்லூர் ராஜுவுக்கும் இடையில் உள்ள கருத்து மோதலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதன் காரணமாக செல்லூர் ராஜுவும் கூடிய விரைவில் அதிமுகவிலிருந்து பிரியலாம் என்ற கருத்து வலுபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு அணிகள் உள்ள நிலையில், செல்லூர் ராஜுவும் அதிமுகவிலிருந்து பிரிந்து விட்டால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக யாரும் எதிர் பார்த்திடாத அளவு தோல்வியை சந்திக்க நேரிடும். 

நால்வர் கூட்டணியின் பின்னணியில் தேசிய கட்சி.. அத்தனையும் தவெக கூட்டணிக்காக தான்!!

0

BJP TVK: தமிழக அரசியலில் அண்மைய காலமாக பல்வேறு முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றியுள்ளது. இக்கட்சியின் பிரச்சாரத்தில் 41 உயிரிழப்புகள் நிகழ்ந்த போது விஜய் கொள்கை எதிரி என்று கூறிய பாஜக தானாக முன் வந்து விஜய்க்கு உதவியது, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

இது மட்டுமல்லாமல் 3 தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவுடன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வந்த செங்கோட்டையன் சேர்ந்து பயணித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்பது கட்சியின் விதி. இதனை மீறியதற்காக செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கபட்டார்.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் சமயத்தில், இவர்கள் கூட்டணியின் பின்புலத்தில், பாஜக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று கூறியதாக தவெக வட்டாரங்கள் கூறி வந்தன. இதனால் பாஜக ஒரு சதி திட்டம் தீட்டி இருக்கிறது.

டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் நால்வருடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இவர்களை ஒரு அணியாக சேர சொல்லி, இவர்களுடன் விஜய்யை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாஜக நினைத்தது போல நால்வர் அணியுடன் விஜய் இணைந்து விட்டால் தேர்தலுக்கு பின் விஜய்யை பாஜகவுடன் சேர்த்து விடலாம் என்ற புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், இது குறித்து விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திமுக கூட்டணி பலன் அளிக்காது.. அடையாளத்தை நிலைநிறுத்த ராகுல் காந்தி புதிய வியூகம்!!

0

TVK CONGRESS: திமுகவுடனான தொடர் கூட்டணி தேசிய அரசியலுக்கு பெரிதாக பலன் அளிக்காது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த போதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனி அடையாளத்தை நிலைநிறுத்த முடியாதது குறித்து பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் புதிய அரசியல் முகமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி புதிய தலைமுறை, புதிய சிந்தனை என்ற கோஷத்துடன் மாநில அளவிலான இளம் தலைவர்களுடன் நெருக்கம் பேண முயற்சித்து வருகிறார். அதேபோல், விஜயும் சமீபத்தில் தன்னுடைய கட்சியின் நோக்கங்களை மக்கள் ஆட்சியாகவும், ஊழலற்ற ஆட்சியாகவும் வலியுறுத்தி வருகிறார்.

கரூரில் நடந்த விபத்துக்குப் பிறகு விஜய் காட்டிய உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகள், மக்களிடம் அவருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து, அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவுடனான கூட்டணிக்கு பதிலாக, காங்கிரஸ்-தவெக கூட்டணி உருவாகும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இத்தகைய கூட்டணி உருவானால், அது தமிழக அரசியலுக்கு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் புதிய சக்தியாக உருமாறும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும் திமுகவுக்கு இது ஒரு பெரிய சவாலாகவும், காங்கிரசுக்கு புதிய  ஊட்டமாகவும் அமையலாம் என்ற மதிப்பீடும் நிலவுகிறது.