Home Blog Page 65

அதிமுக பிரிவால் லாபமடையும் திமுக.. குஷியில் ஸ்டாலின்.. செங்கோட்டையனால் திமுகவிற்கு அடித்த ஜாக்பாட்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, நாதக, பாமக, தேமுதிக போன்ற முன்னணி கட்சிகள் பலவும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தவெக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், திராவிட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதன் தலைமையிடம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுருத்தி வருகிறது.

இதனால் திமுக கூட்டணி பலம் குறைந்து வந்தது. கூட்டணி பலம் குறைந்தாலும், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை அதனை சமன் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நீக்கம் அதிமுகவிற்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு திமுகவிற்கு சாதகமாக முடியும். ஏனென்றால் செங்கோட்டையன் மேற்கு மண்டலத்தில் நல்ல செல்வாக்கு மிக்க அமைச்சர். அப்படி இருக்க அவரை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கியது, அப்பகுதி மக்களிடையே இபிஎஸ் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் திமுக அதன் செல்வாக்கை நிலை நாட்ட முயன்று வருகிறது.  மேலும் மேற்கு மண்டலம் இபிஎஸ்யின் கோட்டையாக இருந்தாலும், அதிமுக ஆட்சி காலத்தை விட, திமுக ஆட்சியில் தான் இந்த பகுதியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனின் நீக்கம் மற்றும், மேற்கு மண்டலத்தில் திமுக அதன் பணிகளை விரிவுபடுத்தியது போன்ற செயல்பாடுகள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குகளை திமுக பக்கம் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு காவல்துறை தான் விசாரிக்கும்.. அப்புறம் எப்படி எங்க மேல தப்பு வரும்!! ஓப்பனாக பேசிய கே.என்.நேரு!!

0

DMK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாகவும், தற்போது ஆளுங்கட்சியாகவும் விளங்கும் திமுக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர தயாரிப்பில் உள்ளது. தொடர்ந்து 7 வது முறையும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டுமென திட்டம் தீட்டும் திமுகவிற்கு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான அமைச்சர்களால் அது நிராசையாக முடியுமோ என்ற பயம் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், ஊழல் இல்லாத ஆட்சியையும் அரசையும் பார்ப்பது கடினம். அதிலும் திமுக ஆட்சியில் அது அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக, திமுக அமைச்சரான கே.என் நேரு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை கவனித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த துறையில் காலியாக இருந்த 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்று நிரப்பபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி அவருக்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டினார். இதனை ஆய்வு செய்ய வேண்டுமென அமலாக்கத்துறையினர் தமிழ்நாடு காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய கே.என். நேரு, என்னால் முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படாது என்றும் இது தொடர்பான விசாரணையில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம் எனவும் கூறியிருக்கிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை தமிழக காவல்துறை உரிய முறையில் விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கூற்று தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவரின் இந்த கருத்து உண்மையாகுமா இல்லையா என்பது இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து தான் தெரியவரும்.

இவங்க இருந்த போதும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்.. நால்வர் அணியின் ரகசிய ரூட்!!

0

ADMK: தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இத்தனை வருடங்களாக அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என மாறியுள்ளது. இதனால் இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி  நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை பின்னுக்கு தள்ளும் விதமாக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் நால்வரும் புதிய அணியாக உருவெடுத்துள்ளனர்.

மேலும் மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டு வருவோம், துரோகம் வீழ்த்தப்படும் என்றும் சபதம் எடுத்துள்ளனர். இந்த நால்வரின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர்கள் ஒரு புதிய வியூகத்தை கையிலெடுதுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. செங்கோட்டையன் ஏற்கனவே கூறியது போல, இபிஎஸ்யால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கபட்டவர்களை ஒன்றிணைத்து செயல்பட போவதாக தெரிகிறது.

அந்த வகையில் 2017 முதல் இன்று வரை அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் 14 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கே.சி.பழனிசாமி, வைத்தியலிங்கம், ஜே.டி.சி. பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, ஓ.பி ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வார் ராஜா, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் இவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்த நினைக்கும் நால்வர் அணி, இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட போகிறதாம்.

இதில் அண்மை காலமாக இபிஎஸ்யை கடுமையாக சாடி வரும் பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே இவர்கள் அணியில் இணைய சம்மதம் தெரிவித்து விட்டார் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பலர் கூறுகின்றனர். இவர்கள் மூலம் மட்டுமே இபிஎஸ்யை வீழ்த்த முடியுமென்று நால்வர் அணி நினைக்கிறது. மேலும், திமுகவில் இணைந்த அன்வார் ராஜாவும், மருது அழகுராஜும் இவர்களின் கூட்டணிக்கு மீண்டும் வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அந்தர் பல்டி அடுத்த செங்கோட்டையன்.. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னா!!

0

ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பதவி பறிப்பும், கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது தொடர்பான செய்தி தான் நேற்று முதல் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் ஏற்கனவே அதிமுக கட்சியிலிருந்து இபிஎஸ்யால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோருடன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்து, முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தியது பேசு பொருளானது.

இது மட்டுமல்லாமல் இவர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பேசும் போது, துரோகத்தை வீழ்த்துவோம், அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்ற முழக்கத்துடன் பேசி வந்தனர். அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் அதிமுக கட்சியிலிருப்பவர்கள் பேச்சுவார்த்தையும், எந்த உறவும் வைத்துக் கொள்ள கூடாது என்பது அதிமுகவின் விதிமுறை. இதனை மீறியதற்காக தான் செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார்.

இது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுவதாக கூறிய செங்கோட்டையன், 54 ஆண்டுகளாக கட்சியிலிருக்கும் என்னை எந்தவித கேள்வியும் இல்லாமல், எனது தரப்பு வாதத்தை கேட்காமல், ஒரு கடிதம் கூட அனுப்பாமல் கட்சியிலிருந்து நீக்கியது ஏற்றுகொள்ள படாது என்றும், இபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கு முன்பே நான் சட்டமன்ற  உறுப்பினராக இருந்தவன். இபிஎஸ்யின் இந்த செயல் என் கண்ணில் கண்ணீரை வர வைக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் பசும்பொன்னில் இது குறித்து நிருபர் ஒருவர், உங்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சந்தோஷப்படுவேன் என்று கூறிய இவர் இன்று இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளதால் செங்கோட்டையன் மாற்றி மாற்றி பேசுகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும் செங்கோட்டையனின் நிலைப்பாட்டில் மாற்றம் தென்படுகிறது என்பது மற்றொரு தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது. 

அதிமுக கூட்டணியில் அதிர்ச்சி.. விஜய்க்கு மட்டும் தான் முன்னுரிமை!! இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்!!

0

TVK ADMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவானது முதல் அதிமுக கூட்டணிக்குள் கணக்கீடுகள் மாறிவிட்டன. ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு கடும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் கூட்டணி கட்சிகளான  பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் மீண்டும் இணையும் வாய்ப்புகளைப் பற்றிய ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.

ஆனால் விஜய்யின் வருகையால் ஏற்பட்ட புதிய அரசியல் சூழல் அதிமுகவின் கணக்கை மாற்றி உள்ளது. இளைஞர்கள், நடுத்தர வாக்காளர்கள் ஆகியோரிடையே விஜய்க்கு பெரும் வரவேற்பு கிடைப்பதால், அதிமுக தனது வலுவை நிலைநிறுத்த சில முக்கிய தொகுதிகளை தானே தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்கள் கட்சிக்கான பங்கீடு குறையக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகள் கடுமையான நிலையை எட்டியுள்ளன. அதிமுக தலைமை, கூட்டணியைப் பேணிக்காக்கும் முயற்சியிலும், தன் கட்சியின் அடிப்படை வலிமையைப் பாதுகாக்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுக கூட்டணிக்குள் புதிய சலசலப்பையும், அடுத்த தேர்தலுக்கு முன் பெரிய மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் ஒருமுறை கூட்டணி கணக்கீடுகள் தலைகீழாகும் சூழலும் உருவாகியுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் நான் தான் டாப்பு.. நிரூபித்த செங்கோட்டையன்!! ஈரோடு அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள்!!

0

ADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், தனது அரசியல் செல்வாக்கை சலனமின்றி காட்டி வருகிறார் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனைகள் வெளிப்படையாகத் தலைதூக்கிய நிலையில், செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக செங்கோட்டையன் மீது  ஒழுங்கு நடவடிக்கைக்கு  எடுக்கப்பட்டது.

ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும், ஈரோடு பகுதியில் அவரின் ஆதரவு குறையாமல், மாறாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் செங்கோட்டையனை வரவேற்க மக்கள் திரளாக கூடினர். இதன் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மனதில் நீக்கப்படவில்லை என அவர் நிரூபித்துள்ளார். முன்னதாக கல்வி அமைச்சராகவும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான செங்கோட்டையன், எப்போதும் தாழ்மையான நடத்தை, நேர்மையான அரசியல், மக்கள் சார்ந்த செயல்பாடுகளால் தனித்த அடையாளம் பெற்றவர்.

இதனால், தற்போது ஈரோடு மாவட்டத்தில் அவர் மீது உள்ள மக்கள் நம்பிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக, நீண்டகாலம் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த குழுவினர், அவரின் பக்கம் செல்வது உறுதியாகும். அதிமுக அணி இப்போது இதனை கவனமாக கண்காணித்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் செங்கோட்டையனின் ஆதரவு எந்த அணிக்கு பலன் தரும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வியை எழுப்பிய செங்கோட்டையனின் நீக்கம்.. தனது கெத்தை நிரூபிக்க இபிஎஸ் போட்ட பிளான்!!

0

ADMK: அதிமுகவின் மூத்த மற்றும் முன்னாள் அமைச்சராக அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இந்த பிறகு பல்வேறு பிரச்சனைகளும், பிரிவினைகளும் அதிமுகவில் தோன்றியது. அப்போது கூட அதிமுகவிலிருந்து பிரியாமல் கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இறப்பிற்கு பின் முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயர் அதிகம் பரிந்துரைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து இபிஎஸ் முதல்வராக்கபட்டார்.

ஆனால் இவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பும், மரியாதையும் குறைந்து வந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடைய ஆலோசனையும் கேட்காமல் இபிஎஸ் தனது முடிவை எடுத்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததில் கூட மூத்த தலைவர் ஜெயகுமாருக்கு உடன்பாடு இல்லை. இதனால் இவர் கட்சியின் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் ஒதுங்கியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் யாராக இருந்தாலும் யோசிக்காமல் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது பேசுபொருளாகியுள்ளது.

முதலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய அவர் தற்போது செங்கோட்டையனையும் நீக்கியிருப்பது கட்சியில் இபிஎஸ்யின் வலிமையை மென்மேலும் உயர்த்துவதாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவரின் இந்த செயல் 54  ஆண்டுகளாக கட்சியிலிருக்கும் செங்கோட்டையனை நீக்கினால் தான் யாராக இருந்தாலும் நீக்கி விடுவேன் என்று கூற முடியும் என்ற வாதத்திற்கு ஏற்றது போல் உள்ளது. அது மட்டுமல்லாமல், செங்கோட்டையனை அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது இபிஎஸ்யின் கெத்தை காட்டுவதற்காக என்றும் சிலர் கூறுகின்றனர்.

கோபிசெட்டிபாளையத்தில் தடம் பதிக்கும் திமுகவின் முக்கிய முகம்.. இபிஎஸ் முடிவால் தோல்வியை சந்திக்க போகும் அதிமுக!!

0

DMK ADMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அதிமுகவும் திமுகவும் அயராது உழைத்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படத்திலிருந்து மிகப்பெரிய திராவிட கட்சியாக  அறியப்பட்டு வரும் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் இல்லாமல் இபிஎஸ்யின் தலைமையில் அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. அவர் அதிமுகவின் தலைவர் பதவியை வகித்ததிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் மேலும் தோல்வியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவியை பறித்தது மட்டுமல்லாமல் நேற்று கட்சியிலிருந்து அடியோடு நீக்கி விட்டார். செங்கோட்டையன் வேறு அணியில் இணைந்தது அதிமுகவிற்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லையென்று கூறும் இபிஎஸ், இதனால் திமுகவிற்கு பலம் என்பதை மறந்து விட்டார். சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அந்த பகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மேற்கு மண்டல பொறுப்பாளராக திமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜி நியமிக்கபட்டுள்ளார். மேற்கு மண்டலத்தில் 39 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் அதனை மெல்ல மெல்ல செந்தில் பாலாஜி அவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த 39 தொகுதிகளிலும் செந்தில் பாலாஜி யாரை தேர்வு செய்கிறாரோ அவர் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக கூட இல்லாத பட்சத்தில் அப்பகுதி மக்களின் கோபம் முழுமையாக இபிஎஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய திமுக செந்தில் பாலாஜியின் மூலம் மேற்கு மண்டலத்தை முக்கியமாக கோபிசெட்டிபாளையத்தை தன் வசம் ஈர்த்து விடும் என்ற கருத்து பரவி வருகிறது.

இபிஎஸ்க்கு எதிராக திரும்பிய நயினார்.. பேட்டியால் ஏற்பட போகும் பிரிவினை!! பிரிவின் தொடக்கத்தில் அதிமுக கூட்டணி!!

0

ADMK BJP: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மூவரும் ஒரே மேடையில் தோன்றிய நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால பிரிவுக்கு  பிறகு இவர்கள் மூவரும் ஒன்றாக காட்சியளித்தது, அதிமுகவில் புதிய அரசியல் மாற்றத்திற்கான சைகையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும்  நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றது அவர்களுடைய முடிவு. இது யாருக்கு பலமோ, யாருக்கு பலவீனமோ என்பதை அவர்கள் விடும் அறிக்கையைப் பொறுத்துதான் தெரியும். தற்போதைக்கு இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டாலும், கட்சியின் முன்னாள் தலைவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில், நயினார் நாகேந்திரனின் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கூற்று, இவர்கள் மூவரையும் கட்சியில் சேர்க்கவே கூடாது என்று முடிவாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எதிராக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டு நிகழ்வு எதிர்கால அதிமுக அரசியலில் புதிய சமநிலையை உருவாக்குமா என்பது வரவிருக்கும் நாட்களில் தெளிவாகும்.

கோபிசெட்டிபாளையத்தின் வேட்பாளர் இவர் தானாம்.. வெளியான டாப் சீக்ரெட்!!

0

ADMK: அதிமுகவின் மூத்த தலைவராகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து அவர்களின் நம்பிக்கையாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனை பொருட்படுத்தாத ஏபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இவருக்கு பின் புதிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தன்னுடைய இளமை காலம் முதல் அதிமுகவின் விசுவாசியாக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக  மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வீட்டு புறநகர் மற்றும் வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன் பிறகு 2021 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்யிட்டு வெற்றி பெற்ற இவர், அதே மாவட்டத்தில் அதிமுகவின் பொறுப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்ட செங்கோட்டையனின் இடத்தில் யார் அமர்த்தப்படுவார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு அந்த இடத்தில் பதவி வகித்த ஏ.கே.செல்வராஜ் அவருடைய பணியை சிறப்பாக செய்து அப்பகுதி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்திருப்பதாக கூறப்படுவதால் கோபிசெட்டிபாளையத்தின் வேட்பாளராக ஏ.கே. செல்வராஜ் நிறுத்தப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.