Home Blog Page 66

நால்வர் கூட்டணியின் பின்புலத்தில் இருக்கும் தலைவர் இவரா.. இபிஎஸ்யை மறைமுகமாக விமர்சித்த பாஜக தலைவர்!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பத்தை நோக்கி சுழன்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் கரூர் பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் விவகாரம் பற்றிய பேச்சுகள் தற்போது முடங்கிய நிலையில், புதிதாக நால்வர் கூட்டணி உருவாகியுள்ளது.

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன். டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர் கூட்டாக வந்து விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பின்னர் இவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம், துரோகம் வீழ்த்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இவர்கள் கூட்டணியின் பின்னால் நான் இருப்பதாக சிலர் பேசி கொள்கிறார்கள். அதிமுகவிலிருக்கும் சிலர் என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். இதனால் இவர்கள் கூட்டணியின் பின்புலத்தில் இருக்கும் கருப்பு ஆடு அண்ணாமலை என்ற வதந்தியும் பரவி வருகிறது.

ஏனென்றால் இவர்கள் நால்வரும் இபிஎஸ்க்கு எதிராக செயல்படுவது எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இபிஎஸ். இதனால் இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயல்படுவதற்கு அண்ணாமலையும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிமுகவிலிருக்கும் சிலர் என்னை திட்டுகிறார்கள் என்று அண்ணாமலை கூறியது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவர் இவ்வாறு கூறியது எடப்பாடி பழனிசாமியை தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். 

தமிழக அரசியலில் புதிய அணியால் பெரும் பரபரப்பு.. ஐந்தாவது சக்தியாக உருவெடுக்கும் கூட்டணி!!

0

AMMK: தமிழக அரசியல் சமீபகாலமாக பல்வேறு திருப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை திமுக, அதிமுக, விஜய் தலைமையிலான தவெக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகளிடையே நான்கு முனை போட்டி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்து ராமலிங்கரின் நினைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிய காட்சி, தமிழக அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது.

இது சாதாரண சந்திப்பாக தெரியவில்லை. புதிய அணியின் பிறப்பாக இருக்கிறது என்று பலர் கூறி வந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்னும் தனது அடிப்படை ஆதரவை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். தினகரனும் தனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரும் அதிமுகவை மீண்டும் இணைக்கும் முயற்சியில் உள்ளனர்.

இவர்கள் ஒரே அணியாக வந்தால், அதிமுக வாக்கு வங்கியில் பெரிய பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இந்த கூட்டணி புதிதாக உருவாகி, அதிமுக மற்றும் திமுகவின் அரசியலை புரட்டிப் போடும் சக்தியாக மாறலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். விஜய்யின் தவெக வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இந்த புதிய ஐந்தாவது அணியின் தோற்றம், தமிழகத்தின் அடுத்த தேர்தலை முற்றிலும் மாற்றி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

விஜய்யால் குமுறி அழும் எடப்பாடி.. அதிமுக-வை சுத்துப்போடும் பாஜக!!

0

ADMK TVK: அதிமுக இம்முறை கட்டாயம் விஜய்யின் கூட்டணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தது. சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. கரூர் துயர சம்பவத்திற்கு முன்பு எந்த நிலைப்பாட்டிலிருந்தோமோ அதன் வழியிலிலேயே தொடர்வதாக தவெக முக்கிய புள்ளி கூறிவிட்டது. இதனால் பாஜக மற்றும் சில அதிமுக மூத்த தலைகள் பெருத்த கோவத்தில் உள்ளனர்.

விஜய் அரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து தனது கொள்கை எதிரியாக பாஜக-வை கூறியுள்ள போது, கரூர் பிரச்சனையில் அவருக்கு ஆதரவு கொடுத்து கூட்டணி-க்கு எடப்பாடி அடிபோட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது தவெக தனது ஆரம்பக்கட்ட நிலைப்பாட்டில் தான் உள்ளது என அதன் சீனியர் கூறியது, இவரது கனவை சுக்குநூறாக்கியுள்ளது.

மேற்கொண்டு பாஜக மேல் போதிய நம்பிக்கை இல்லை,விஜய்யை வைத்து பாஜக-வை கழட்டி விட்டுவிடலாம் என்ற எடப்பாடியின் அனைத்து எண்ணமும் பழிக்காமல் போனது. அதே சமயம் எடப்பாடி தற்போது வந்த புதிய கட்சியின் மவுசை பார்த்து இணைத்துக்கொள்ள எப்படி தயாராகலாம் என்றும் பல கேள்விகளை முன் வைக்கின்றனர். வரும் நாட்களில் பாஜக மற்றும் அதிமுக-விற்கு இடையே உள்ள பந்தம் சமரசமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

மீண்டும் விஜய்-யின் கூட்டணியை எதிர்பார்த்து எடப்பாடி உட்கார்ந்திருந்தால் கட்டாயம் ஏமாற்றத்தோடு கட்சியி மேல் எடப்பாடிக்கு உள்ள நன்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழவும் அதிக வாய்ப்புள்ளது.

நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா!! 2 வது நாளே இப்படியா!!

0

ADMK: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுகவில் தலைமை போட்டி நிலவிய போது, ஜெயலலிதாவுடன் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு பலரின் ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார் சசிகலா. இதன் பிறகு, ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பின் கட்சியின் அனைத்து பதவிகளும், பொதுச்செயலாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

இதனை பயன்படுத்திய இபிஎஸ் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். இதற்கு செவி சாய்க்காத இபிஎஸ் செங்கோட்டையனை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் நால்வரும் ஓரணியாக திரண்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கூட்டணிக்கு தற்போது யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், இது குறித்து சசிகலா அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி  சீனியர் லீடர்களுக்கு தெரியும், நான் எப்படி டீல் செய்கிறேன் என்று  பொறுமையாக காத்திருந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து நால்வரின் கூட்டணியில் சசிகலா தன்னை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி கொள்ள ஆசைப்படுகிறார் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். இதன் காரணமாக இவர் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

NDA கூட்டணியை விரிவுபடுத்த நினைக்கிறோம்.. அதிமுகவை அல்ல!! ஒரே போடாய் போட்ட அமித்ஷா!!

0

BJP ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சியான பாஜகவுடன் மாநில கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் செயல்பாடுகளை பார்த்தால் பாஜக தான் இதற்கு தலைமை தாங்குவது போல உள்ளது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஜெயலலிதா காலத்திலிருந்தே முரண்பாடுகள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத அதிமுக அதனுடன் நட்பு பாராட்டுவது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, பாஜகவிற்கு அதிமுக அடிமையாக உள்ளது என்று வெளிப்படையாக கூறி வந்தது.

இந்த கருத்தை பலரும் முன்வைத்து வந்த நிலையில், அதிமுக கூட்டணி ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் அமைக்கப்படும், அதிமுக ஆட்சி அல்ல என்பதை அமித்ஷா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவின் கொள்கையை ஏற்காத சில தலைவர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர். பாஜக தமிழகத்தில் நுழைந்தால் அவர்களின் கொள்கைகள், இந்ததுவ வாதம் போன்றவை தமிழக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து அதிமுக தலைமைக்கும், இரண்டாம் கட்ட தலைவர்களும் பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுக தலைவர்கள் சிலர் இபிஎஸ்க்கு அறிவுரை கூறி பாஜக கூட்டணியிலிருந்து விலகுமாறு  கோரிக்கையை முன் வைத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதை அவர்களின் ஒவ்வொரு அசைவும் உணர்த்தி வருகிறது. இதன் காரணமாக இபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதிமுகனா செங்கோட்டையன் தான்.. வெளிப்பட்ட இபிஎஸ்யின் பலவீனம்!! ஓஓஓ காரணம் இது தானா!!

0

ADMK: எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுகவின் முகமாக அறியப்படுபவர் செங்கோட்டையன். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவியேற்றத்திலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காமல் அவருக்கான செல்வாக்கும் கட்சியில் குறைந்து கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்யால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதாக கூறி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார் இபிஎஸ். இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மிகவும் நிதானமாக செயல்பட்டார். இந்நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்தது பேசு பொருளானது. இதனை தொடர்ந்து அதிமுக தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் கட்சியை விட்டு நீக்குவது இபிஎஸ் பழக்கம்.

அந்த வகையில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் அவ்வாறே அமைந்துள்ளது. அப்படி இருக்க செங்கோட்டையனை இன்னும் கட்சியில் வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், செங்கோட்டையனை இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கினால் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விரிசல் ஏற்படும், மேலும் கோபிசெட்டிபாளையத்தின் முகமாக அறியப்படும் செங்கோட்டையனின் பதவிகளை பறித்ததற்கே அப்பகுதி மக்கள் இபிஎஸ் மீது கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினால் அது தேர்தல் நேரத்தில் இபிஎஸ்க்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். 

தவெகவின் வருகை எங்களுக்கு தாக்கம் தான்.. ஒப்புக்கொண்ட திமுக கூட்டணி கட்சி!!

0

DMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் தாக்கம் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத துக்க நிகழ்வாக மாறியுள்ளது.

வருங்காலத்தில் விஜய் முதல்வர் ஆனாலும் கரூர் விபத்து அவருக்கு பெரும் பாதகமாகவே அமையும், அதனை வைத்து விஜய்யை பின்னுக்கு தள்ளும் முயற்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும். விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்றும், திமுக-தவெகவிற்கு தான் போட்டி என்றும் கூறியிருந்தார். ஆனால் இதனை பொருட்படுத்தாத திமுக அதன் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது. மேலும் திமுக தலைமை தனது அறிக்கைகள் அனைத்திலும் தவெகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாகவே விமர்சித்து வந்தது.

இதனால் அரசியல் விமர்சகர்கள் தவெகவை கண்டு திமுக அஞ்சுகிறது என்று கூறி வந்தனர். திமுக விஜய்யை நேரடியாக விமர்சித்தால் அவர் மேலும் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் மறைமுக விமர்சனங்களை முன் வைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில், திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன், விஜய்யின் வருகையால் திமுகவிற்கு தாக்கம் உள்ளது. அதனை விட அதிமுகவிற்கே அதிகளவில் தாக்கம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். தவெக-வால் திமுகவிற்கு எந்த வகையிலும் பாதகம் இல்லை என்று திமுக கூறி வர, திருமாவளவனின் இந்த கருத்து கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

செங்கோட்டையன் பதவி பறிப்பிற்க்கு பின்னால் இருக்கும் அதிமுக அமைச்சர் இவர் தானா.. வெளியான சீக்ரெட்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் அதிமுகவில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வருவது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. அதிமுக தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுவதை விட உட்கட்சி பிரச்சனையில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்த முன்னாள் தலைவர்களான செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளனர்.

நேற்று பசும்பொன்னில் நடந்த விழாவில் நால்வரும் ஒருங்கே வந்து முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தியது, பின்னர் ஒன்றாக பேட்டியளித்தது போன்ற நிகழ்வுகள் தற்போது வரை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் சூடு கூட தணியாத நேரத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் என்ற கருத்து பரவி வருகிறது.

மேலும் தற்போது அதிமுக தலைமைக்கு எதிராக  உள்ளவர்களுடன் கட்சியின் அடிமட்ட தொண்டனான செங்கோட்டையன் பயணித்து வருவதால் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்குமாறு, இபிஎஸ்யிடம் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் செங்கோட்டையன் இடத்தை ஆர், பி உதயகுமார் பிடிக்க முயல்கிறார் என்ற சந்தேகமும், இபிஎஸ்க்கு தான் நெருக்கமானவர் என்பதை காட்டி கொள்வதற்காகவும் இவர் இவ்வாறு செய்து வருகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

முடிவுக்கு வரும் பாமக யுத்தம்.. சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்புமணி!!

0

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் சச்சரவு நிலவி வருவது, அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால்  தேர்தல் ஆணையமோ, கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று, ராமதாஸ் தரப்பு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ்.

இது தொடர்பாக அன்புமணியிடம் கேட்ட போது இது எங்களின் உட்கட்சி பிரச்சனை இதனை பற்றி வெளியே சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், அன்புமணி ராமதாஸுடன் சுமுகமான முறையில் செல்ல முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து செய்தியாளர் ஒருவர், வெளியில் சண்டை போடுவதை போல நடித்து விட்டு, கட்சிக்குள் ஒற்றுமையாக இருப்பது மாஸ்டர் பிளேனா? என்று கேட்ட போது, ஆள விடுங்க என்று கூறி கையெடுத்து கும்பிட்டு சென்றார் அன்புமணி.

இந்நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம் மீண்டும் இது குறித்து கேட்ட போது, பாமகவின் உட்கட்சி பிரச்சனை சுமுகமான முறையிலும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் 6 மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் அன்புமணி ராமதாஸுடன் சுமுகமான முறையில், எந்த விதமான மனஸ்தாபமும் இல்லாமல் கட்சியில் பழையபடி இணைய போகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. 

விஜய்யை குறி வைக்கும் நால்வர் அணி.. சசிகலா கூறிய சர்ப்ரைஸ் இது தானா!! தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்!!

0

TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் என சச்சரவுகள் நிலவுகிறது. பாமகவிலும் தந்தைக்கும் மகனுக்கும், தலைமை போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிமுகவிலும் இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே நிகழ்ந்த தொடர் தோல்விகள், முக்கிய நிர்வாகிகளின் பிரிவு, போன்ற பல செயல்பாடுகளால் கட்சியின் மீது தொண்டர்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த வரிசையில் தற்போது புதிதாக, செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் நால்வரும் ஒரு கூட்டணியாக உருவெடுத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இதற்கு மேல் தான் நிறைய சர்பிரைஸ் இருக்கிறது. எங்களின் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி நிலை நிறுத்தப்படும் என்று நால்வரும் தெரிவித்தனர். இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் நால்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இவர்கள் நால்வரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் விஜய் உடன் கூட்டணி வைக்கப்படும் என்று மறைமுகமாக கூறியிருந்தார். மேலும் ஓபிஎஸ்யும் அரசியல் பரப்புரைக்கு தவெக கட்சிக்கு விதிக்கப்படும் விதிமுறைகள் அனாவசியமானது என்று கூறியிருந்தார். செங்கோட்டையனும், சசிகலாவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது சசிகலா கூறியுள்ள, கருத்து விஜய் உடனான நால்வரின் கூட்டணியாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.