Home Blog Page 67

இனிமே நீங்க அடிமட்டத் தொண்டனும் இல்லை.. இபிஸ் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

0

ADMK: தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதிமுகவில் பிரிவினை அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும், அவ்வாறு சேர்க்காவிட்டால், ஒருங்கிணைப்புப் பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து நீக்கினார்.

இதன் மூலம் செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருக்க முடியும் என்பது தெளிவானது. இது தொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பாக செங்கோட்டையன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரின் அடுத்த அரசியல் நகர்வாக, நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற, விழாவில் ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், மூவரும் ஒன்றாக வந்தது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.

கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக  உள்ளவர்களுடன் ஒன்றிணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை கட்சியிலிருந்து நீக்க சிறிதும் தயங்காத இபிஎஸ், செங்கோட்டையனை கட்சியிலிருந்து கூடிய விரைவில் நீக்கி விடுவார் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் செங்கோட்டையனிடம், கட்சிலிருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று நிருபர்கள் கேட்ட போது, நீக்கினால் சந்தோஷப்படுவேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் செங்கோட்டையனின் நீக்கம், உறுதியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பிரேமலதாவுக்கு இவ்வளவு பெரிய பதவியா.. விஜய் போட்ட பிளான்!! கசிந்த முக்கிய தகவல்!!

0

TVK DMDK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு என வலியுறுத்தி வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியும் நிலையில் உள்ளது.

இரண்டாக பிரிந்துள்ள பாமகவில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். தேமுதிகவும், அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது என்றும், எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று தகவல் வெளிவந்தது. இந்நிலையில் புதிய திருப்பமாக, தேமுதிக, தவெகஉடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த பேச்சு வார்த்தையில், தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும், மேலும் சில கோரிக்கைகளை பிரேமலதா முன் வைத்துள்ளதால், அதனை பரிசீலிக்கும் பணியில் தவெக மும்முரமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல், பிரேமலதாவிற்கு, துணை முதல்வர் பதவியும் வழங்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, விஜயகாந்தை முன்னிறுத்தி பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். எம்ஜிஆர் போன்ற குணமுடைய மனிதருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது என்று கூறி பெருமிதம் அடைந்தார். அதனால் அப்போதே, தவெக-தேமுதிக கூட்டணி உருவாகுமென்று கூறப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இவ்வாறான தகவல் பரவி வருகிறது.

விஜய் கவர்ச்சியால் கசிந்து போகும் அதிமுக வாக்கு வாங்கி.. பலிக்கும் விஜய்யின் கனவு!!

0

ADMK TVK: அரசியல் களத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அதிமுக, தவெகவிற்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி உதயமாகியுள்ளது என்றால் அது தவெக எனலாம். கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் களத்தில் குதித்துள்ள தவெக நவம்பர் 5 ஆம் தேதி, முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக உடன் தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், தவெகவை சேர்த்த நிர்மல் குமார் இதை மறுத்திருக்கிறார்.

மேலும் திமுக தான் தனது அரசியல் எதிர் என்று கூறிய விஜய் தற்போது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை குறிவைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், விஜய் தனது முதல் பிரச்சாரத்திலேயே, 1977 யில் எம்ஜிஆர் பெற்ற வெற்றியை போல, 2026 தேர்தலிலும் மாற்றம் நிகழும் என கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆர் போன்ற மாமனிதருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அவரை போன்ற குணமுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த எம்ஜிஆர் பற்றிய தொடர் பேச்சு அதிமுக வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவை எதிரி என்று கூறிய அவர், அதிமுக பக்கம் திரும்பியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். மேலும், விஜய்யின் இந்த செயல் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுவது என்னவென்றால், எம்ஜிஆர் சினிமாவில் நடித்து மட்டும் அரசியலுக்கு வரவில்லை, கட்சியை தொடங்கும் முன் 20 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். விஜய் இன்னும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்படி இருக்க விஜய் எவ்வாறு 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் பாஜக.. வெளிவந்த முக்கிய தகவல்!!

0

BJP ADMK: தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் அரசியல் வட்டாரங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. பாஜக கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியல் தந்திரத்தை பின்பற்றி வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் என்.சி.பி. கட்சிகளைப் பிளவுபடுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பாஜக, அதே மாதிரி தந்திரத்தை தென்னிந்திய மாநிலங்களிலும் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அதிமுக தற்போது தலைமை மாற்றத்திற்குப் பிறகு தனது அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், கட்சியின் தனித்தன்மை குறையும் என்றும், வாக்காளர் நம்பிக்கை சிதையும் என்றும் கூறப்படுகிறது. சில அதிமுக மூத்த தலைவர்களும், கட்சியின் அடிப்படை வாக்காளர்களும் பாஜக விரோத மனநிலையில் இருப்பதால், இது கூட்டணி கட்சிக்கே பாதகமாக அமையும் என எச்சரிக்கின்றனர். மேலும், மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் போல அதிமுகவையும் மெதுவாக தளர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என சிலர் சந்தேகிக்கின்றனர்.

இதனால், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக தன் அரசியல் திசையை தெளிவாக வரையறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தால் குறுகியகால நன்மை கிடைத்தாலும், நீண்டகாலத்தில் அதிமுகவின் அடையாளத்திற்க்கும் வலிமைக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அப்செட்டில் இபிஎஸ்!!

0

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அலையின் மூலம், தமிழக அரசியலே அதிர்ந்து போயுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்பது தற்போது வரை கேள்வி குறியாக உள்ளது. தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை விஜய்யுடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றன. அதிமுகவும், பாஜகவும், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு நேரடியாக உதவி வருவதும், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதும், சட்டசபையில் தவெகவின் குரலாக ஒலிப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காங்கிரஸ் கட்சி விஜய்க்கு மறைமுகமாக உதவி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பாமக, தேமுதிகவின் கூட்டணி முடிவுகளும் விஜய்யின் முடிவை பொறுத்து தான் அமையும் என்றும் கூறப்பட்டது. கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் திராவிட கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறிவிடுவார் என்ற கருத்தும் நிலவியது. இது ஒரு புறம் இருக்க, அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இவரின் இந்த பேச்சு அதிமுக- தவெக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானது என்பது போன்ற கருத்துக்களுக்கு வழிவகுத்தது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச்செயலாளர் தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறியிருந்தார். இதனால் விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணைய விருப்பமில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார் கூறிய பதிலால் அப்செட்டாக இருந்த இபிஎஸ்யிடம் விஜய் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை, விஜய்யும் எங்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கூறி பகிர் கிளப்பினார்.

இபிஎஸ்யின் இந்த திடீர் மாற்றம், நிர்மல் குமாரின் கருத்தால் எழுந்த எதிர் வினையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது நாள் வரை அமைதியாக இருந்த இபிஎஸ், நிர்மல் குமார் பேசிய பிறகு, அதிமுக-தவெக கூட்டணி குறித்து இவ்வாறான கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தவெகவுடன் கூட்டணியா இல்லையா.. முடிவு செய்ய வேண்டியது நாங்க தான்.. விஜய் இல்ல.. சுளீரென்று கூறிய அமித்ஷா!!

0

BJP TVK: தமிழக அரசியல் களம் விஜய்யின் வருகையால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவருக்கான ஆதரவும், ஆரவாரமும் அதிகரித்துள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறியிருந்தார். ஆனால் பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை என்பது கரூர் சம்பவத்தில் தெளிவாக தென்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக தவெக மீதும், தவெக மீதும் குறை கூறி வந்தது.

இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ய்வு பெற்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக விஜய்க்கு உதவுவதாக கூறி, பாஜக எம்.எல்.ஏ. ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. இதனால் பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது என்பது தெளிவானது.

தொடர்ந்து விஜய்க்கு பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, யாரும் விஜய்யிடம் கூட்டணி குறித்து வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பினால் பாஜக கூட்டணியில் சேரலாம் என்பது போன்ற தொனியில் பதிலளித்து வந்தனர். இந்நிலையில் பாஜக- தவெக கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்களும், வதந்திகளும் பரவி வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா இது குறித்து பேசியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் விரிவுப்படுத்த விரும்புகிறோம், மேலும் தவெக உடனான கூட்டணி குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த பதிலில், விஜய்யுடன் பேசி முடிவெடுக்கபடும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஆகையால் விஜய் பாஜக கூட்டணியில் இணைவது பாஜக கையில் தான் உள்ளது என்பதை அமித்ஷா தீர்க்கமாக கூறியுள்ளார். மேலும் நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் விஜய் கூட்டணியில் இணைந்து தான் ஆக வேண்டும், அவருக்கு வேறு வழியே இல்லை என்பதையும் அமித்ஷா தெளிவுப்படுத்தியுள்ளார். 

இபிஎஸ்க்கு எதிராக நடவடிக்கையை தொடங்கிய செங்கோட்டையன்.. ஆடி போன இபிஎஸ்!!

0

ADMK: சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாளுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென்றால் என்னைப் போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

ஆனாலும், என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் கூறினார். செங்கோட்டையனின் இந்த செயலுக்கு பிரிந்த தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில், அவருக்கான ஆதரவும் பெருகி வந்தது. பதவிகள் பறிக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் களம் உற்று நோக்கி கொண்டிருந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் அவரது அடுத்த கட்ட நடவடிக்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், தேவர் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலை அனைத்து மரியாதையை செலுத்தி  வருகின்றனர். அந்த வரிசையில், அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக வந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதையை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரின் ஒருங்கிணைந்த வருகை, செங்கோட்டையன் கூறிய ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இருக்குமோ என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. 

பாஜக மக்கள் கவனத்தை மாற்ற பரபரப்பை உருவாக்குகிறது.. இபிஸ் ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது.. காங்கிரஸ் தலைவர் கருத்து!!

0

BJP CONGRESS: விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, நடிகர் விஜய் மாமல்லபுரம் அழைத்து ஆறுதல் கூறியதை பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். விஜய் ஏற்கனவே தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளார். அவர் அழைத்ததன் பேரில் அவர்கள் மாமல்லபுரம் சென்றுள்ளனர். இது இருவருக்குள் உள்ள விஷயம்.

இதில் நாம் தலையிட தேவையில்லை, என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் என்பது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் வழக்கமான செயல்முறை. இதை வேறு விவகாரங்களுடன் குழப்ப வேண்டாம். தற்போது சிலர் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்த முயல்கின்றனர் என குறிப்பிட்டார். ஊடகங்களை நோக்கி, மைக்கை பிடித்து கேள்வி கேட்பவர்கள் முதல் கீழ்தட்டு மக்கள் வரை எல்லோரையும் பாஜக குழப்ப முயற்சி செய்கிறது என்றும் விமர்சித்தார்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, மக்களின் அன்றாட திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தை மாற்ற பாஜக பரபரப்பை உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டினார். இந்த  நேரத்தில், விவசாய குடும்பத்தை சேர்ந்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஆதரிப்பது வருத்தத்திற்குரியது எனவும், ஜி.கே. வாசன், பண்ணையார் என்பதால் அவர் ஆதரிப்பது புரிந்துகொள்ளலாம். ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பாஜகவை ஆதரிப்பது ஏற்க முடியாதது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவோம்.. தவெக நாதக தமாகா தலைவர்களுக்கும் திமுக அழைப்பு!!

0

DMK TVK NTK: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சீரமைப்பு அவசியமென்றாலும், அதை அவசரமாக மேற்கொள்வது சரியல்ல. ஏப்ரல் மாத தேர்தலை முன்னிட்டு இப்போது தொடங்குவது தவறானது.

இது எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பீகாரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியதை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் இதுபோன்ற சதி வேலைகள்  எதையும் அனுமதிக்க மாட்டோம் என திமுக கூட்டணி தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோட்டல் அகார்ட் மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க திமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே. வாசனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுகவின் அழைப்பிற்கு இந்த மூன்று கட்சிகளும் இது வரை எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால், அவர்கள் மூவரும் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

எங்களுக்கு கிடைக்க வேண்டிய சீட்டை கேட்டு பெறுவோம்.. திருமா உறுதி.. பின்னணியில் விஜய்யா.. அச்சத்தில் திமுக!!

0

DMK VSK: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் தீவிரமடைந்துள்ளன. திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகள் தேர்தல் நெருங்கும் நேரம் பார்த்து, திமுக தலைமையிடம் நிறைய கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக ஆட்சியில் பங்கு என்ற குரல் தான் அதிகளவில் ஒழித்து வருகிறது.

அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தரவில்லை என்றால் தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என்ற கழக குரலும் திமுக கூட்டணியில் ஒழித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு சென்ற தேர்தலில் 2  சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இந்த தேர்தலில் திமுகவிடம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகளை முறையாக கேட்டு பெறுவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்று திமுக தலைமை அஞ்சிக்கிறது என்றும் கூறினார். இதற்கு முன் விசிகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர், ஆட்சி பங்கிற்காக எந்த சதி வேலைகளையும் செய்ய தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தலின் பின்னணியில் விஜய் உடனான கூட்டணி கணக்கு மறைந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.